இலங்கையில் ஆளும் கட்சி தலைவர்களின் வீடுகளை இலக்கு வைக்கும் போராட்டக்காரர்கள்

இலங்கை பிரதமர் ராஜபக்ஷ பதவி விலக கூடாது என்று வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் கொழும்புவில் திடீர் போராட்டம் நடத்தினர். காலி முகத்திடலில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களின் கூடாரங்கள் எரிக்கப்பட்டன. வன்முறையைக் கட்டுப்படுத்த கண்ணீர்புகை குண்டு பிரயோகிக்கப்பட்டது. இதை அரசுடன் தொடர்புடைய தீவிரவாதிகளின் தாக்குதல் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இலங்கையில் பொருளாதார நெருக்கடி வந்தது ஏன் - முழு விளக்கம்

  2. இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது

    வணக்கம் இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான முக்கிய நிகழ்வுகள்.

    • இலங்கை பிரதமர் ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார்.
    • இலங்கை கொழும்பு புறநகர் பகுதியான நிட்டம்புவ பகுதியில், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல உயிரிழந்துள்ளார்.
    • இலங்கை தலைநகர் கொழும்புவில் போராட்டம் நடத்திவர்களை நோக்கி காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
    • சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த முதியவர் உயிரிழந்தார்.
    • டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
    • இலங்கை பிரதமர் ராஜபக்ஷ பதவி விலக கூடாது என்று வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் கொழும்புவில் திடீர் போராட்டம் நடத்தினர். காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்களின் கூடாரங்கள் எரிக்கப்பட்டன.
    • புதுச்சேரி ஜிப்மரில் இந்தித் திணிப்பு இல்லை என்றும் இயக்குநரின் சுற்றறிக்கை தவறாக முன் வைக்கப்படுவதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
    • இலங்கை கொழும்புவில் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் காலிமுகத்திடலில் புகுந்து கூடாரங்களுக்கு தீ வைப்பு. போராட்டக்காரர்கள், செஞ்சிலுவை சங்க மருத்துவமனை, ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல். கண்ணீர் புகைகுண்டு பிரயோகம்.
    • இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எஸ்ஜேபி எம்.பி.க்கள் குழுவுடன் காலி முகத்திடலுக்குள் நுழைந்தபோது அவரை நோக்கி சிலர் கட்டை, தண்ணீர் பாட்டில்களை வீசினார்கள்.
    • இலங்கை வன்முறை: அரசுடன் தொடர்புடைய தீவிரவாதிகளின் தாக்குதல் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.
    • புதுச்சேரி ஜிப்மரில் அலுவல் மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக சுதன்ஷு துலியா மற்றும் ஜம்ஷெட் பர்ஜோர் பர்திவாலா ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
    • சென்னை ராஜா அண்ணாமலைபுரம், இளங்கோ தெருவில் வீடுகளை இடிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
    • இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் நெருக்கடிக்கு வன்முறை தீர்வாகாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
    • இலங்கையில் மறு அறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
    • இலங்கையில் இல் உணர்ச்சிமயமான நிலைமை அதிகமாக இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நமது பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • இந்தியாவின் பிற பகுதிகளிலும் கடல் கடந்து வெற்றி கொண்ட பிற நாடுகளிலும் தொல்லியல்துறையின் அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    • ஆதீன மடங்களின் சமய, சம்பிரதாயங்களை பாதுகாக்க வேண்டும். எல்லோரையும் அனுசரித்து போக வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
    • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய கோரியும், பறிமுதல் செய்த படகுகளை விற்பனை செய்வதை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல்ராஜனை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25 இடங்களுக்கு மேல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தமிழ்நாடு பாஜகவின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களிடம் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால், 2 பேரையும் தூக்கிவிடுவோம் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
    • எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி என்று சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழின் இணையதளம், ட்விட்டர், முகநூல், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி

  3. ஜிப்மரில் இந்தி திணிப்பு சர்ச்சை: என்ன சொல்கிறார் தமிழிசை?

  4. இலங்கையில் ஆளும் கட்சி தலைவர்களின் வீடுகளை இலக்கு வைக்கும் அரசு எதிர்ப்பாளர்கள்

    இலங்கையில் தற்போது வன்முறைகள் வலுப்பெற்றுள்ள நிலையில், ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் வீடுகளின் மற்றும் அலுவலகங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.

    பிரதமரின் அதிகாரபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு அண்மித்த பகுதியில் தற்போது தீ பரவியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அலரி மாளிகைக்கு அருகிலுள்ள நுழைவாயிலில் இந்த தீ பரவியுள்ளது.

    குறித்த பகுதியில் தொடர்ந்தும் அமைதியின்மை நிலவி வருகின்றது. இதேவேளை, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.

    அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

    இதேவேளை, மொறட்டுவை நகர சபை தவிசாளர் சமல்லால் பெர்ணான்டோவின் வீட்டிற்கு, ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

    ஆர்ப்பாட்டக்காரர்கள், வீட்டின் மீது தாக்குதல் நடத்தி, பின்னர் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு பிரிவினர் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

    இதேவேளை, அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் வீட்டின் மீதும் மக்கள் தீ வைத்துள்ளனர். அத்துடன், குருநாகல் நகர சபை தவிசாளர் துஷார சஞ்ஜீவவின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

  5. தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் பயன்பாடு - மு.க.ஸ்டாலின்

  6. இலங்கை: கோட்டாபயவுக்கு மஹிந்த அனுப்பிய ராஜிநாமா கடிதம் - இனி என்ன நடக்கும்?

  7. தமிழ்நாட்டில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

    எல்.முருகன்

    திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லும் தமிழ்நாட்டில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் மீன்வளத்துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதையடுத்து, பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறுகையில், "புதுச்சேரி மாநில மீனவர்களுக்கான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் புதுச்சேரியில் மீன்வள மேம்பாட்டிற்காக ரூபாய் 210 கோடி முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. என்றார்.

    தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி ஓராண்டு மாற்றங்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், "தமிழ்நாட்டில் கூறிய தேர்தல் வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதியாக இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கி கணக்கிற்கு நேரடியாக சென்றடையும் என்றனர். ஆனால் இது பற்றி முதலமைச்சர் எதுவும் பேசவில்லை.

    தமிழ்நாட்டில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. பல ஊர்களில் தமிழ்நாட்டில் தனித்தனி சுடுகாடுகள் இருக்கின்றன. இதுதான் திராவிட மாடலா? சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கமாக இருக்கிறது. திராவிட மாடல் என்று சொல்கின்றனர். இங்கே என்ன சமத்துவம் இருக்கிறது," என்றார்.

    ஆளுநர் அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு வருவது குறித்து கேள்விக்கு, "ஆளுநர் பணி செய்வது இவர்களுக்கு பிடிக்கவில்லை. இவர்களது இஷ்டப்படி ஆளுநர் செயல்படவேண்டும் என்று நினைத்தால், ஆளுநருக்கென்று வரைமுறை உள்ளது. அதன்படி அவர் வேலை செய்கிறார்.

    இவர்கள் இஷ்டத்திற்கும், ஆளுநர் வேலை செய்ய முடியாது. அப்படி செய்யவில்லை என்றால் ஆளுநர் சரியில்லை என்று சொல்வதா?," என்று கேள்வி எழுப்பினார்.

  8. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை வன்முறை: ஆளும் கட்சி எம்.பி உயிரிழப்பு

    இலங்கை எம்.பி - அமரகீர்த்தி அத்துகோரல

    பட மூலாதாரம், Amarakeerthi Athukorala MP

    படக்குறிப்பு, அமரகீர்த்தி அத்துகோரல

    இலங்கை கொழும்பு புறநகர் பகுதியான நிட்டம்புவ பகுதியில், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல உயிரிழந்துள்ளார்.

    இலங்கை நிட்டம்புவ பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் வாகனத்தையும் அவரையும் ஒரு கும்பல் தாக்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அருகே உள்ள கட்டடத்துக்குள் தஞ்சம் அடைய அமரகீர்த்தி ஓடியதாகவும் அப்போது அவரை வன்முறை கும்பல் சூழ்ந்து கொண்டதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில், சம்பவ பகுதியில் அமரகீர்த்தி அத்துகோரல சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரே தமது உயிரை துப்பாக்கியால் சுட்டு மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

    ஆனால், பிபிசி தமிழால் இந்த கூற்றை தன்னிச்சையாக உறுதிப்படுத்த முடியவில்லை.

    இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

  9. இலங்கை வன்முறை: காலிமுகத் திடலில் அரங்கேறிய வன்முறை - படத்தொகுப்பு

  10. தமிழ்நாடு நிதியமைச்சரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: அரசு ஊழியர் சங்கத்தினர்

    அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல்ராஜனை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25 இடங்களுக்கு மேல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு நிதியமைச்சர் பழனிவேல்ராஜன், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தார்.

    இதைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஸ்ரீபெரும்புதூர் , குன்றத்தூர், வாலாஜாபாத், உத்தரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய ஒன்றியங்களில் 25க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அப்போது, 'தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலவரையற்ற ஊதியம் வழங்க வேண்டும்.' என்று வலியுறுத்தினர்.

    மேலும், சட்டப்பேரவை கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்'' என்றும் தெரிவித்தனர்.

  11. இலங்கை போராட்ட களத்தில் வன்முறை - என்ன நடந்தது ? விளக்கும் காணொளி

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆதவாளர்கள் என்று கூறப்படுவோர் பலர் இன்று காலை, அலரி மாளிகை முன்பு திரண்டனர்.

    காலிமுகத் திடலில் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்ற சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். என்ன நடந்தது ? என்பதை இந்த காணொளியில் விரிவாக காணலாம்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  12. வேலூர்: முருகனின் அவசரகால விடுப்பு கோரிக்கை நிராகரிப்பு

    இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் தனக்கு 6 நாள் அவசரகால விடுப்பு வழங்க கோரி சிறைத் துறைக்கு மனு அளித்திருந்தார்.

    சிறையில் உள்ள முருகன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் கேட்ட அவசர கால விடுப்பு வழங்கப்படாது என கூறி அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

    வெளிநாட்டில் உள்ள தனது மகளுடன் வீடியோ காலில் பேச, தற்போது சிறை விடுப்பில் உள்ள தனது மனைவி நளினியை பார்க்கவும் 6 நாட்கள் அவசர கால விடுப்பு கேட்டு மனு அளித்திருந்தார் முருகன்

  13. பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் இருவர் திமுகவுடன் தொடர்பில் - எம்.பி செந்தில்குமார் தகவல்

    தமிழ்நாடு பாஜகவின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களிடம் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால், இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் பாஜகவிற்கு ஒரு தகவல் என்று செந்தில்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    திமுக எம்.பி செந்தில்குமார்
  14. சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் - கைவிடக் கோரி விவசாயிகள் போராட்டம்

    எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி என்று சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி, எட்டு வழிச்சாலை பாதிப்பு விவசாயிகள் கூட்டு இயக்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தில், எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி, வீரபாண்டி, ராமலிங்கபுரம், அயோத்தியபட்டினம், பூலாவரி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எட்டு வழிச்சாலை திட்டம் கைவிடப்படும் என நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதியாக அளித்தனர்.

    ஆனால், இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று தற்போது தகவல் வெளியாகி வருகிறது. எனவே, மீண்டும் எட்டு வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட மாட்டாது என முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிக்க வேண்டும்.' என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

    சேலம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை வன்முறை: போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு

    இலங்கை தலைநகர் கொழும்புவில் போராட்டம் நடத்திவர்களை நோக்கி காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில், மூன்று பேர் காயமடைந்தனர்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆதவாளர்கள் என்று கூறப்படுவோர் பலர் இன்று காலை, அலரி மாளிகை முன்பு திரண்டனர்.

    காலிமுகத் திடலில் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்றனர். அங்கு சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். கூடாரங்களுக்கு தீ வைக்கப்பட்டன. செஞ்சிலுவை சங்க மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள் தாக்கப்பட்டன. வன்முறையைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகை பிரயோகப்படுத்தப்பட்டது.

    அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களும் மீண்டும் அங்கு திரண்டனர். அங்கு அமைதியின்மை சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், போராட்டக்காரர்களை கலைக்க காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

  16. இலங்கை வன்முறை: அரசுடன் தொடர்புள்ளவர்களின் தீவிரவாத தாக்குதல் - சஜித் பிரேமதாஸ் குற்றச்சாட்டு

    சஜித் பிரேமதாஸ

    இலங்கையில் இன்று ஏற்பட்ட வன்முறைக்கு பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார்.

    அப்போது, 'இலங்கை அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஜனநாயகம், சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதை பிரார்த்தனையாக கொண்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அரசுடன் தொடர்புடைய வெறி பிடித்த, தீவிரவாத கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான, வன்முறை தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.

    அத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டு, உரிய கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.ஒரு மாத காலத்திற்கு மேலாக அகிம்சை வழியில், மிக கண்ணியமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களினால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டத்தை மீறும் வகையில் அல்லது பண்பாடற்ற முறையில் நடவடிக்கைகளும் பதியப்படவில்லை. அவர்கள் வன்முறைக்கு பதிலாக அகிம்சையே கை கொண்டார்கள். அவ்வாறான அகிம்சைவாத போராளிகள் மீது அரசானது எல்லா சந்தர்ப்பங்களிலும் தமது தீவிரவாத பாணியிலான அடக்குமுறையையும் அச்சுறுத்தல்களையுமே மேற்கொண்டு வந்தது.' என்றார்.

    மேலும், 'தன்னுடைய ஆதரவாளர்கள் மற்றும் அதிகார பலத்தால் வெறி கொண்டுள்ள கூட்டம், ஆட்சி செய்வதாகவும் அழுக்குப்படிந்து துர்நாற்றம் வீசக்கூடிய அரசை தாம் எச்சரிப்பதாக.' கூறினார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில், 'இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு ராஜபக்ஷ ஜனாதிபதி மற்றும் ராஜபக்ஷ் பிரதமர் உள்ளடங்களாக அனைவரும் தொடர்புபடுவதாகவும் இந்ததீவிரவாத பாணியிலான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.' எனவும் தெரிவித்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் வீடுகளை இடிப்பதை எதிர்த்து மக்கள் போராட்டம் - 10 தகவல்கள்

  18. மதுரை சுங்குடி சேலைக்கு முழு வரிவிலக்கு - எம்.பி வெங்கடேசன் வலியுறுத்தல்

    மதுரையின் பாரம்பரியமிக்க சுங்குடி சேலைக்கு முழுமையாக ஜிஎஸ்டி வரி விலக்கு வேண்டும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க "ஒரு நிலையம் ஒரு பொருள்" என்ற திட்டத்தின் கீழ் மதுரை ரயில் நிலையத்தில் சுங்கடி சேலை விற்பனையை எம்.பி வெங்கடேசன் துவக்கி வைத்தார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'சமீபத்தில் பாரம்பரியமிக்க மதுரை சுங்கடி சேலைக்கு ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக உயர்த்த ஒன்றிய அரசு முயற்சி செய்தது. இதையடுத்து நிதியமைச்சரை சந்தித்து 5 சதவீதமாக இருக்க நடவடிக்கை எடுக்கபட்டது. தொடர்ந்து சுங்குடி சேலைக்கு முழுவதும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைபாடு.

    புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அப்பட்டமான சட்டமீறல் ஆக தெரிகிறது. இந்தியில் மட்டுமே அனைத்து கோப்புகளும் இருக்கும் என்று நாடாளுமன்ற மொழியியல் குழுவிற்கு உறுதியளிக்கிற உரிமையை ஜிப்மர் நிர்வாகத்திற்கு யார் வழங்கியது? என்ற கேள்வி எழுகிறது.

    வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியை திணிக்கும் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள் விழிப்புடன் இருக்கும்.' என்றார். மேலும், 'முதன்முறையாக ஒன்றிய அமைச்சர், கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 2026 அக்டோபரில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எழுத்துபூர்வமான வாக்குறுதி அளித்துள்ளார்,' என்றார்.

    மதுரை சுங்குடி சேலை
  19. மியான்மர் ராணுவம்: சொந்த மக்களையே வேட்டையாடும் கொடூரம் - இத்தனை பலம் பெற்றது எப்படி?

  20. தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? அறிகுறிகள் - தற்காப்பு என்ன?