நன்றி நேயர்களே...
இன்றைய நேரலைப் பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. மீண்டும் புதிய நேரலை பக்கம் நாளை காலை தொடங்கும்.
இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- 132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் மற்றும் விபத்தில் உயிரிழந்தோர் குறித்த விவரங்கள் தெளிவாக தெரியவரவில்லை.
- யுக்ரேன் தலைநகர் கீயவின் பொடில்ஸ்கி மாவட்டத்தில் ஷாப்பிங் மையம் மற்றும் சில வீடுகள் மீது ஷெல் தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- கீயவ் நகரில் உள்ளூர் நேரம் 20:00முதல்புதன்கிழமை 07:00 மணிவரை ஊரடங்கு உத்தரவை அந்நகர மேயர் அறிவித்துள்ளார்.
- ரஷ்ய படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட மேரியோபோல் நகரத்தில் ரஷ்யா போர் குற்றங்களில் ஈடுபடுவதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். அந்நகரத்தின் மையப்பகுதி வரை தீவிர சண்டை நடைபெற்று வருகிறது.
- மேரியோபோல் நகரத்தில் மோசமான சூழ்நிலை தொடர்ந்து வருகிறது. தீவிரமான குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு மத்தியில், மின்சாரம், உணவு, தண்ணீர் இன்றி 3,00,000 பேர் சிக்கியுள்ளனர். மேலும், 90 சதவீத கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
- மேரியோபோல் நகர மக்கள் சரணடைந்தால், துறைமுகத்தைவிட்டு பாதுகாப்பான பாதையில் செல்லலாம் என, ரஷ்யா இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதனை ஏற்க யுக்ரேன் மறுத்துவிட்டது.
- யுக்ரேனில் ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இன்று மீண்டும் ரஷ்ய பங்குசந்தை திறக்கப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதார தடைகள் காரணமாக, உணவு பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வசிப்போர் எதிர்கொண்டுள்ளனர்.
- கடந்த வாரம் பிரிட்டன் அமைச்சர்களுக்கு வந்த வதந்தி தொலைபேசி அழைப்புகளுக்குப் பின் ரஷ்ய அதிபர் மாளிகை இருப்பதாக நம்பப்படுவதாக, பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.