வந்துகொண்டிருக்கும் செய்தி, மேக்கேதாட்டு அணை: கர்நாடகா, தமிழ்நாடு இடையே சமூக உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே அனுமதி - மத்திய அரசு
கர்நாடகாவின் மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட அம்மாநில அரசு திட்டமிடும் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தமிழக அரசுடன் கர்நாடகா சுமூக உடன்பாடு எட்டினால் மட்டுமே அதற்கான அனுமதி வழங்கப்படும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு இந்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் அளித்துள்ள பதிலில், “இந்திய அரசுக்கு கிடைக்கப் பெற்ற சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில் மொத்தம் 4,996 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கும். சங்கமா, மடவாளா, பொம்மை சந்திரா உள்ளிட்ட கிராமங்களும் நீரில் மூழ்கும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கும் விவகாரத்தில் மத்திய நீர் வள அமைச்சகமும், காவிரி மேலாண்மை ஆணையமும் திட்ட அறிக்கையை ஏற்ற பிறகே முன்மொழிவை சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்யும். மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாடு - கர்நாடகா இடையே சுமூக முடிவு எட்டப்பட்டால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று 5,104 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,104 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்றைய நாளில் மட்டும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 21,027 பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 1,05,892 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் 1,151 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளது
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
டெல்லியில் ஒரு நாள் கொரோனா பதிவு 1,151 ஆக பதிவாகியுள்ளது.
டெல்லியில் ஒரு நாளில் மட்டும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 2,120 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்று ஒரு நாள் மட்டும் மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது டெல்லியில் மொத்தம் 7,885 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று டெல்லி மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில காலங்களாக டெல்லியில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவசங்கர் பாபாவின் உடல்நிலை: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
பட மூலாதாரம், @SIVASHANKARBABA
சென்னை புழல் சிறையில்
அடைக்கப்பட்டுள்ள சாமியார் சிவசங்கர் பாபாவின் உடல்நிலை தொடர்பாக பதில்
அளிக்குமாறு சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம்
கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்குப் பாலியல் ரீதியாக
தொல்லை கொடுத்ததாக அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது புகார் எழுந்தது.
இதையடுத்து, கடந்த ஆண்டு சிவசங்கர் பாபாவை
சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர்.
பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சிவசங்கர் பாபா மீது தற்போது வரையில் பெண் வன்கொடுமை வழக்கு,
போக்சோ வழக்குகள் என எட்டு வழக்குகள்
பதிவாகியுள்ளன. அவர் புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில்,
சிவசங்கர் பாபாவின் உடல்நிலை குறித்து
மருத்துவ அறிக்கையை தரக் கோரி அவரது சகோதரி ஜெயலட்சுமி,
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில், `சிவசங்கர் பாபாவுக்கு பக்கவாதம், நீரிழிவு, இதய நோய் உள்பட பல்வேறு நோய்களால்அவதிப்பட்டு
வருகிறார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு அரசு
மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை.
இது தொடர்பாக,
சி.பி.சி.ஐ.டி காவல்துறையிடமும் புழல்
சிறை நிர்வாகத்திடமும் தான் அளித்த மனுவில், `சிவசங்கர் பாபாவின் தற்போதைய உடல்நிலை குறித்து தனது அறிக்கை
அளிக்கப்பட வேண்டும். மேலும், அடையாறில் உள்ள
தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில் சிகிச்சையளிக்க அனுமதிக்க வேண்டும்'
எனக் கூறி கடந்த ஜனவரி 23
ஆம் தேதி மனு அளித்தும் கவனத்தில்
எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனவே, தனது கோரிக்கை
மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா
முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக காவல்துறையும் சிறைத்துறையும் விளக்கம் அளிக்க
உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை பிப்ரவரி 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல் கள நிலவரம் என்ன? - பிபிசி தமிழ் நேரலை
சமூக நீதி கூட்டமைப்பு: வீரப்பமொய்லியை நியமித்த சோனியா! - சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகளும் ஆதரவு
பட மூலாதாரம், T R Balu
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ள சமூகநீதிக் கூட்டமைப்புக்கு காங்கிரஸ் கட்சி, சி.பி.எம், சி.பி.ஐ ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவேகெளடா, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி என பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஸ்டாலின் அனுப்பியிருந்தார். தமிழ்நாட்டிலும், அ.தி.மு.க, ம.தி.மு.க, வி.சி.க, பா.ம.க, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கும் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், தி.மு.க பொருளாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து, சமூக நீதி கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்து, தி.மு.க தலைவர் எழுதிய கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின்போது ராகுல்காந்தி எம்.பி உடனிருந்ததாக தி.மு.க வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் திமுக தலைவர் தொடங்கவுள்ள சமூக நீதி கூட்டமைப்பில் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக வீரப்பமொய்லியை நியமித்து காங்கிரஸ் தரப்பில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவும், 'ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்க தானும், தான் சார்ந்த இயக்கமும் ஜனநாயக, மதச்சார்பற்ற முற்போக்குச் சக்திகளுடன் இணைவதாகவும், இதுகுறித்து நேரில் கலந்தாலோசிப்பதாகத்' தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி எழுதியுள்ள கடிதத்தில், சமூகநீதிக் கருத்தியலை தேசிய அளவில் முன்னெடுப்பதற்காக வாழ்த்து தெரிவித்து, இந்த அமைப்பினை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து நாம் கலந்தாலோசிக்க வேண்டும் என எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த முன்னெடுப்புக்கு தமது கட்சி முழு ஒத்துழைப்பினை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டமைப்பில் சேரப் போவதில்லை என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பதில் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, காங்கிரஸ் கட்சியை மக்கள் தொடர்ந்து நிராகரித்து வருகிறார்கள் - நரேந்திர மோதி
பட மூலாதாரம், SANSAD TV
படக்குறிப்பு, நரேந்திர மோதி, இந்திய பிரதமர்
கொரோனா பெருந்தொற்று பாதிப்பை அரசியல் ஆதாயங்களுக்காக சில அரசியல் கட்சிகள் தவறாகப் பயன்படுத்தியதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்டியிருக்கிறார்.
நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இந்திய குடியரசு தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பதிலளித்து பிரதமர் நரேந்திர மோதி மக்களவையில் இன்று பதிலளித்தார். அதில் இருந்து சில முக்கிய அம்சங்கள்:
நமது சிறு விவசாயிகளை பலப்படுத்த வேண்டும். எங்கள் கவனம் அவர்கள் மீதுதான் உள்ளது. ஆனால் சிறு விவசாயிகளின் வலியை அறியாதவர்களுக்கு, விவசாயிகளின் பெயரில் அரசியல் செய்ய எந்த தகுதியும் இல்லை.
தொற்றுநோய்க்கு மத்தியில் 80 கோடிக்கும் அதிகமான சக இந்தியர்கள் இலவச ரேஷன் பொருட்கள் பெறுவதை இந்திய அரசாங்கம் உறுதி செய்தது. எந்தவொரு இந்தியனும் பட்டினி கிடக்கக் கூடாது என்பதில் நாங்கள் ஈடுபாடு காட்டி வருகிறோம்.
நீங்கள் (காங்கிரஸ்) அடுத்த 100 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வரக்கூடாது என்று தீர்மானித்துள்ளீர்கள். கொரோனா முதல் அலையின்போது, மக்கள் பொதுமுடக்கத்தை பின்பற்றும்போது, அவர்கள் வெளியே செல்லாமல் தவிர்க்குமாறு வழிகாட்டுதல்கள் பரிந்துரைத்தன.
பல தேர்தல்களில் தோல்வியடைந்த பிறகும் நீங்கள் (காங்கிரஸ்) அகங்காரத்துடன் உள்ளீர்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை.
மேலும், “24 ஆண்டுகளுக்கு முன்பு நாகாலாந்து காங்கிரஸுக்கு வாக்களித்தது, ஒடிசா 27 ஆண்டுகளுக்கு முன்பு உங்களுக்கு வாக்களித்தது. 28 ஆண்டுகளுக்கு முன்பு கோவாவில் முழுப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றீர்கள்.
1988இல் திரிபுரா காங்கிரசுக்கு வாக்களித்தது. 1972ல் மேற்கு வங்கம் காங்கிரசுக்கு வாக்களித்தது.
தெலங்கானாவை உருவாக்கியதற்காக நீங்கள் பெருமை கொள்கிறீர்கள் ஆனால் பொதுமக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
இன்று நாட்டின் ஏழை மக்கள் எரிவாயு மற்றும் இணைப்பு, வீடு மற்றும் கழிவறை வசதிகளைப் பெறுகிறார்கள். அவர்களுக்கு என சொந்த வங்கி கணக்கு உள்ளது என்றார் நரேந்திர மோதி.
முன்னதாக, மக்களவையில் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் போது பிரதமர் நரேந்திர மோதி உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அப்போது அவர் தேசத்தின் குரலை நாம் இழந்துவிட்டோம் என்று கூறினார். தன் இசையால் இந்திய தேசத்தை ஒருங்கிணைத்தவர் லதா மங்கேஷ்கர் என்று மோதி குறிப்பிட்டார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மனு திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு முடிவடைந்தது
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 4ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மனுவை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு இன்று நிறைவடைந்தது.
இந்த தேர்தலில் போட்டியிட 74,416 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை பேர் போட்டியிடுவார்கள் என்ற அதிகாரபூர்வ தகவலை மாநில தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது .
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், தேர்தல் நடைபெற உள்ளது.
லதா மங்கேஷ்கர் உடல் மீது ஷாரூக் கான் துப்பினாரா? சமூக ஊடகங்களில் வைரலாகும் புகைப்படம் - என்ன நடந்தது?
பட மூலாதாரம், ANI
இந்திய திரையுலகில் புகழ்பெற்ற முதுபெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதிச்சடங்கின்போது, தமது மத வழக்கப்படி பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் பிரார்த்தனை (துவா) செய்த செயலை, சிலர் சர்ச்சையாக பதிவிட்டு வருவதால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஷாரூக் கானின் இந்த செயல், இந்தியாவின் மதசார்பின்மையை நிரூபிப்பதாக ஒரு சிலர் வரவேற்ற அதே சமயம், வேறு சிலர் ஷாரூக்கின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
"உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம், மக்கள் அகிலேஷுக்கு ஆதரவளித்து அவர் வெற்றி பெற வாய்ப்புள்ளது," என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி கொல்கத்தாவில் பேசியுள்ளார்.
ஆந்திர எம்எல்ஏ ஆர்.கே.ரோஜா தமிழக முதல்வருடன் சந்திப்பு
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற உறுப்பினரான ஆர்.கே.ரோஜா
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்.
இது சம்பந்தமாக அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், ஆந்திரா-தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள தன்னுடைய சட்டமன்ற தொகுதி கோரிக்கை சம்பந்தமாக சந்தித்ததாகவும், குறிப்பாக நகரி சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள தமிழ் பள்ளிகளுக்கு தேவையான தமிழக புத்தகங்களை வழங்க வேண்டுமென்றும் கூறினார்.
தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் இருக்கக்கூடிய தமிழ் பேசும் மக்கள் மருத்துவ தேவைக்காக சென்னைக்கு வருகிறார்கள் என்றும், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ திட்டங்களை அவர்களும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்ததாக அவர் தெரிவித்தார்.
அனைத்து கோரிக்கைகளையும் சம்பந்தப்பட்ட துறை மூலம் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்ததாகவும் ரோஜா தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் குற்றவாளிகள் தாங்களாகவே முன்வந்து சிறையில் அடைத்து வைக்குமாறு கோருகின்றனர்: பிரதமர் நரேந்திர மோதி
அசாதுதின் ஓவைசி கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: நாடாளுமன்றத்தில் அமித் ஷா விளக்கம்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற போது, நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதின் ஓவைசி கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று விளக்கம் அளித்தார்.
"அசாதுதீன் ஒவைசிக்கு இருந்த அச்சுறுத்தல் முன்பே ஊகிக்கப்பட்டு அவருக்கு குண்டு துளைக்காத வாகனம் மற்றும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரே அதை நிராகரித்தார். மத்திய அரசு அளித்த பாதுகாப்பை ஏற்குமாறு அவரை கேட்டுக்கொள்கிறோம்," என்று துறை அமித்ஷா தெரிவித்தார்.
மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பை வழங்க உத்தரவிட்டபோதும் அதை ஏற்க அவரே விரும்பவில்லை. இத்தகைய சூழலில் அவருக்கு பாதுகாப்பு அளிக்க டெல்லி மற்றும் தெலங்கானா மாநில காவல்துறைகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதாகவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
புல்லட்டில் புத்தகம் விற்கும் தமிழக இளைஞர்கள் - கரம் கொடுக்கும் வாசகர்கள்
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
புல்லட்டில் புத்தகங்களை விற்கும் தமிழ்நாட்டின் இளைஞர்கள். தாங்கள் எழுதிய புத்தகங்களை மட்டுமே விற்கத் தொடங்கியவர்கள், இப்போது பல பதிப்பாளர்களின் புத்தகங்களையும் விற்கிறார்கள்.
ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் படையினர் 5 பேர் உயிரிழப்பு
பட மூலாதாரம், get
பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்தூங்வா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள ஆயுததாரிகள் குழு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி அமைத்த பிறகு இதுபோன்று தாக்குதல் நடத்தப்படுவது இது இரண்டாவது முறை என்று பாகிஸ்தான் ராணுவம் கூறுகிறது.
இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் குர்ரம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதற்கு படையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் ஏராளமான ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். குர்ராமில் உள்ள எல்லை சோதனை சாவடியை தீவிரவாதிகள் இலக்கு வைத்தனர்.
குர்ராமில் உள்ள ஷோர்கோ தாலுகாவுக்கு உட்பட்ட கமர் கேல் பகுதியில் உள்ள எல்லை சோதனைச் சாவடியை தீவிரவாதிகள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த பகுதியில் தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) குழுவின் செயல்பாடு தீவிரமாக காணப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் மாகாணமான கோஸ்டின் எல்லையில் இந்த சாவடி உள்ளது. பாகிஸ்தான் அரசுக்கும், டிடிபி குழுவுக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோஸ்ட் நகரில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சம்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு பின்னர் ரத்தானது.
உள்ளூர் வட்டார தகவலின்படி, இந்த பகுதியில் எல்லை வேலிகள் அமைக்கப்படவில்லை, அதே நேரத்தில் குர்ரம் மாவட்டத்தின் ஒரு பகுதி ஆப்கானிஸ்தான் மாகாணமான நங்கர்ஹருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாத குழுவின் கோட்டையாக கருதப்படுகிறது.
இலங்கை வெளியுறவு அமைச்சருடன் ஆக்கபூர்வ பேச்சுவார்த்தை: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
பட மூலாதாரம், S Jaishankar
படக்குறிப்பு, டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ்
இந்தியாவுக்கு மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், டெல்லியில் இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்துப் பேசினார்.
பிரதமர் அலுவலகம் அருகே உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு ஆக்கபூர்வமாக நடந்தது என்று தமது ட்விட்ர் பக்கத்தில் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இரு தரப்பு சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் இந்த பேச்சுவா்த்தையை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் இலங்கையை வலுப்படுத்தக் கூடிய பொருளாதாரம் மற்றும் திட்ட முதலீடுகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக அவர் கூறியுள்ளார்.
இரு நாட்டு மீனவர்கள் விவகாரத்தில் விரைவில் தீர்வு காணக்கூடிய வழிமுறைகளை மேற்கொள்வதென இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க மிகப்பெரிய அளவில் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் தருவதன் அவசியம் குறித்தும் இருவரும் பேசியதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
கச்சத்தீவு திருவிழா: 'இந்தியர்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்', ரஞ்சன் அருண் பிரசாத்
கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்திய பக்தர்கள் பங்கேற்பதற்கான அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனைக்கு அமைய, திமுகவின் மூத்த தலைவர் ஒருவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இந்த கலந்துரையாடல்களின் போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவிக்கின்றது.
வருடாந்த திருவிழாவில் கலந்துக்கொள்ளும் இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தி, கடற்றொழிலாளர்களின் ஆராக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு வருடாந்த திருவிழா, எதிர்வரும் மார்ச் மாதம் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, கச்சத்தீவு திருவிழாவிற்கு, இந்திய பக்தர்களை அழைப்பதில்லை என திருவிழா ஏற்பாட்டு குழு தீர்மானித்துள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திமுக அரசு ஒரு சர்வாதிகார அரசு; தமிழகத்தை ஒரு பொம்மை முதலமைச்சர் ஆள்கிறார்" - எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
"திமுக அரசு ஒரு சர்வாதிகார அரசு; தமிழகத்தை ஒரு பொம்மை முதலமைச்சர் ஆள்கிறார்"- என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
"அடுத்த 25 ஆண்டுகளில், நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, உத்திர பிரதேச மாநிலம் தனது வளர்ச்சிப் பாதையில் ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும், என்று நாங்கள் விரும்புகிறோம். இங்குள்ள தொழிலதிபர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு அனைத்து உதவிகளும் கிடைக்க எங்கள் அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது", என்று பிரதமர் நரேந்திர மோதி காணொளி வழியாக,
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார்.