தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், குடும்பத்தினரின் ரூ. 6 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

தமிழ்நாட்டில் 2001-2006 ஆண்டில் நடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பின்னர் வந்த திமுக ஆட்சியில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடரப்பட்டது. அமலாக்கத்துறையும் இந்த விவகாரத்தை தனியாக விசாரித்து வருகிறது. 2009இல் திமுகவில் சேர்ந்த அவர், தொடர்ந்து எம்எல்ஏ ஆகவும் இப்போது அமைச்சராகவும் இருக்கிறார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. ராகுல் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய அண்ணாமலை

    ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உரைக்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை எதிர்வினையாற்றியிருக்கிறார்.

    இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றத்தில் திடீரென்று பொங்கி எழுந்து பேசியதை பார்த்து எப்போதும் போலவே வியந்தோம். அவர் பொருத்தமற்ற வகையில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியால் ஒருபோதும் ஆள முடியாது என பேசியிருக்கிறார். இந்த மாபெரும் தமிழ் மண்ணின் மகனாக, விரைவில் என்ன நடக்கும் என ராகுல் காந்திக்கு நான் வழிகாட்டுவேன்," என கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினரின் ரூ. 6.5 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை

    தமிழ்நாடு

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்

    சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி உள்ளதாக இந்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் 2001 முதல் 2006ஆம் ஆண்டுவரை நடைபெற்ற ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் அனிதா ராதாகிருஷ்ணன் கால்நடை மற்றும் வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார்.

    அப்போது, ரூ. 4.9 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2006இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில் பல கோடி ரூபாய் அளவில் பண பரிவர்த்தனை நடந்ததால் ஊழல் தடுப்புச் சட்டம்,1988இன் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கை இந்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் தனியாக விசாரித்து வந்தது.

    இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள அனிதாகிருஷ்ணன், 14.5.2001 முதல் 31.03.2006 வரையிலான காலத்தில் வாங்கிய சொத்துக்கள், அவரது குடும்பத்தினர் வாங்கிய சொத்துக்கள் என சுமார் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறது.

    முன்னதாக, 2009ஆம் ஆண்டில் அதிமுகவில் இருந்து விலகிய அனிதா ராதாகிருஷ்ணன் தமது எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்தார். பிறகு திமுகவில் சேர்ந்த அவர் அதே தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றார். 2011ஆம் ஆண்டிலும் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று தமிழக அமைச்சராக இருக்கிறார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. நீட் விலக்கு விவகாரம்: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க பேசிய ராகுல், ஆளுநரை குற்றம்சாட்டிய டி.ஆர்.பாலு

    நீட் தமிழ்நாடு

    பட மூலாதாரம், SANSAD TV

    தமிழ்நாட்டில் கூட்டாட்சியை மதிக்காமல் மன்னர் போல மோதி அரசு செயல்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். நீட் விவகாரத்தில் திரும்பத்திரும்ப வந்தும் தமிழ்நாட்டின் குரலை கேட்காமல் மத்திய அரசு அவமதிப்பதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு புகார் தெரிவித்தார்.

    மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது ராகுல் காந்தி, டி.ஆர். பாலு இன்று இரவு பேசினார்கள்.

    அப்போது ராகுல் காந்தி, தமிழ்நாட்டில் நீட் விவகாரம் குறித்தும் தமிழர்களின் வரலாறு குறித்து அறியாமல் பேசுவதாக கூறினார்.

    மக்களவையில் பதிவான இந்த இரு தலைவர்களின் பேச்சு விவரத்தை முழுமையாக அறிய இங்கே சொடுக்கவும்.

  5. தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,013

    தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 013 ஆக பதிவாகியிருக்கிறது.

    இன்று மட்டும் 37 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியிருப்பதாக மாநில பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் இன்றைய நிலவரப்படி ஆக்டிவ் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து எழுபத்து ஏழாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பதாக உள்ளது.

    அதிகபட்சமாக சென்னையில் 4,413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டடிருக்கிறார்கள் என்றும் 10 உயிரிழப்புகள் பதிவாயிருப்பதாகவும் பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் கூறியுள்ளது.

    கொரோனா

    பட மூலாதாரம், TNDIPR

  6. ராமநாதபுரத்தில் சிலை கடத்தல் வழக்கில் பாஜக பிரமுகர், காவலர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது

    சிலைக் கடத்தல்

    பட மூலாதாரம், TN POLICE IDOL WING

    ராமநாதபுரத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள உலோக சிலைகளை கடத்தியதாக பாஜக சிறுபான்மை அணி மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர், இரண்டு காவலர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 7 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூரைச் சேர்ந்தவர் அலெக்ஸ் என்கிற அலெக்சாண்டர். இவர் பாஜக மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலாளராக உள்ளார். இவர் தொன்மையான சுவாமி சிலைகளைக் கடத்தி, விற்பனை செய்ய உள்ளதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு தனிபிரிவு போலீசார் அலெக்ஸாண்டரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் படி காவலர்கள் இளங்குமரன், நாகநரேந்திரன், விருதுநகரைச் கருப்பசாமி, ஆகியோரையும் கைது செய்து, கால்வாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொன்மையான 7 சிலைகளையும் மீட்டனர். தொடர் விசாரணைக்கு பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    மேலும், காவலர்கள் இருவரும் கடந்டத 4 ஆண்டுகளுக்கு முன்பு, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் என்று சொல்லி, சேலத்தில் விற்பனைக்கு இருந்த சிலைகளை கொண்டு சென்றதும் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

  7. தனியார் கிரிப்டோ கரன்சிக்கு அரசு அங்கீகாரம் இல்லை - நிதித்துறைச் செயலாளர்

    தனியார் கிரிப்டோவில் முதலீடு செய்வதற்கு, அரசு அங்கீகாரம் இல்லை என்று இந்திய நிதித்துறைச் செயலாளர் டி.வி.சோமநாதன் தெரிவித்துள்ளார்.

    இந்திய நிதித்துறைச் செயலாளர் சோமநாதன் தெரிவித்திருப்பதாவது, ‘’டிஜிட்டல் கரன்சியை இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கும். இது நிலையாக இருக்காது. பணம், ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் ஆனால் நடைமுறை டிஜிட்டல் மயமாக இருக்கும். ரிசர்வ் வங்கி வழங்கும் டிஜிட்டல் கரன்சி சட்டபூர்வமானதாக இருக்கும். மற்றவை சட்டபூர்வமானவை அல்ல'' என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், ‘’பிட்காயின், எத்திரியம் அல்லது என்எப்டி ஒருபோதும் சட்டபூர்வ டெண்டர் ஆகாது. க்ரிப்டோ சொத்துக்கள் என்பது இரண்டு நபர்களிடையே தீர்மானிக்கப்படும் சொத்துக்கள். தங்கம், வைரம், கிரிப்டோ ஆகியவற்றை வாங்கலாம். ஆனால் அதற்கு அரசின் மதிப்பு, அங்கீகாரம் இருக்காது.

    தனியார் கிரிப்டோவில் முதலீடு செய்வதற்கு, அரசு அங்கீகாரம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் முதலீடு வெற்றிகரமாகுமா? ஆகாதா ? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இழப்பைச் சந்திக்க நேரிடும். இதற்கு அரசு பொறுப்பாகாது’’ என்கிறார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. போலிச் செய்திகள்: அமெரிக்காவில் இயங்கும் சமூக ஊடகங்கள் மீது புகார் தெரிவித்த இந்திய அதிகாரிகள்

    சமூக ஊடகங்கள்

    பட மூலாதாரம், Reuters

    அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் கூகுள், ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவை தங்களின் தளங்களில் போலிச் செய்திகள் இடம்பெற அனுமதிப்பது தொடர்பாக அதன் இந்திய பிரதிநிதிகளுடன் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அதிகாரிகள் இன்று விவாதித்தனர்.

    இந்த அமைச்சகத்தின் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனங்களை கடுமையாக விமர்சித்ததோடு, போலிச் செய்திகள் மீது அந்நிறுவனங்கள் செயலற்ற தன்மையுடன் நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படாததால் அவற்றின் தளங்களில் உள்ள உள்ளீடுகளை நீக்க உத்தரவிடும் கட்டாயம் அமைச்சகத்துக்கு ஏற்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால், மத்திய அரசு சர்ச்சை உள்ளீடுகளை நீக்கியபோது, அது சமூக ஊடக பயனர்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதாக சர்வதேச விமர்சனத்தை தூண்டியது.

  9. இலங்கையில் யுத்த லத்தில் காணாமல் போனவர்களுக்கான இழப்பீடு: அந்நாட்டு அரசு திட்டம்

    இலங்கை யுத்தம் - இழப்பீடு

    பட மூலாதாரம், Getty Images

    இலங்கையில் மூன்று தசாப்த காலம் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக காணாமல் போனோரின் உறவுகளுக்கு, இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

    இலங்கை நீதி அமைச்சர் அலி சப்ரி, தலைமையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

  10. அஜித்குமாரின் வலிமை பிப்ரவரி 24இல் தமிழ், இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியீடு

    வலிமை ரிலீஸ்

    பட மூலாதாரம், Boney kapoor

    நடிகர் அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''வரும் 24ம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு - அதிமுக உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

    மு.க.ஸ்டாலின் கடிதம்

    பட மூலாதாரம், M.K.Stalin

    அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பில் சேர இந்தியாவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    தமிழ்நாட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

    திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று நாளன்று காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுத்து, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு தொடங்கப்படும் அறிவித்தார்.

    இந்நிலையில், இந்த கூட்டமைப்பில் சேருமாறு, இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்குக்கு மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் அனுப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதன்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சீதாராம் யெச்சூரி, முன்னாள் பிரதமர் எச்.டி. தேவேகவுடா, தெலுங்கு தேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முதலமைச்சர்கள் ஒடிசா நவீன் பட்நாயக், மேற்கு வங்கம் மமதா பானர்ஜி, மகராஷ்ட்ரா உத்தவ் தாக்கரே, டெல்லி அரவிந்த் கேஜ்ரிவால், தெலங்கானா சந்திரசேகர ராவ், ஜெகன்மோகன் ரெட்டி, ஹேமந்த் சோரன், புதுச்சேரி என். ரங்கசாமி மற்றும் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் லோக் கான்கிரஸ் அமரீந்தர் சிங், சுக்பீர் சிங் பாதல், சிராக் பாஸ்வான், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

    குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மட்டுமின்றி பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. இந்திய ராணுவ செயலாளராக பிஜிகே மேனன் நியமனம்

    இந்திய ராணுவ செயலாளராக லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய ராணுவ தலைமையகத்தின் புதிய செயலாளராக பிஜிகே மேனன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் லே பகுதி ராணுவப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. தமிழ்நாட்டில் கிறித்தவ கல்வி நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் - ரவிக்குமார் எம்.பி நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்

    விசிக - ரவிக்குமார்

    பட மூலாதாரம், Dr.D.Ravikumar MP

    தமிழ்நாட்டில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று விசிக எம்.பி ரவிக்குமார், இந்திய நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

    இந்திய நாடாளுமன்றத்தில் விசிக எம்.பி ரவிக்குமார் இன்று கொடுத்துள்ள கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸில்,

    “ SC, ST மற்றும் OBC மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகப் பாடுபடும் கிறித்தவ கல்வி நிறுவனங்களை அச்சுறுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள உதிரிக் குழுக்களால் "கட்டாய மதமாற்றம்" என்ற பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒரு ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்குப் பின்னால் கல்வி வியாபாரத்தில் திளைக்கும் கல்வி மாஃபியாக்களின் சதி இருக்கலாம். இது குறித்து விசாரிக்க தேசிய சிறுபான்மையினர் ஆணையம் ஒரு விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து விசிக எம்.பி ரவிக்குமார் கூறுகையில், ''மதமாற்ற முயற்சி நடக்கிறது என்ற பொய்க்குற்றச்சாட்டின் அடிப்படையில், தமிழ்நாட்டில் கிறித்தவ கல்வி நிறுவனங்களை அச்சுறுத்துகின்றனர். இது தொடர்பாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் விசாரிக்க வலியுறுத்தி இன்று நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளேன்.'' என்றார்.

    விசிக - ரவிக்குமார்

    பட மூலாதாரம், Dr.D.Ravikumar MP

  14. ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு உதவ அமெரிக்கா போர்க்கப்பல் அனுப்புகிறது

    அமெரிக்கா போர்க்கப்பல்

    பட மூலாதாரம், Getty Images

    ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு உதவ போர் விமானம் மற்றும் ஏவுகணை அழிக்கும் போர்க்கப்பலை அமெரிக்கா அனுப்புகிறது.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கும், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாய்ட் ஆஸ்டினுக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. இதையடுத்து, யேமன் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு உதவ அமெரிக்கா போர்க்கப்பல்களையும் போர் விமானங்களையும் அனுப்பும் முடிவை எடுத்துள்ளது.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்கள் சிலரைக் கொன்ற ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் குறித்து, இருவரும் விவாதித்ததாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் அமெரிக்க மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளதாக பென்டகன் கூறுகிறது.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான கூட்டாண்மைக்கு அமெரிக்கா உறுதியுடன் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறியுள்ளார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக தகவல்படி, யுஎஸ்எஸ் கோல் என்ற ஏவுகணை அழிக்கும் கப்பலை அமெரிக்கா ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அனுப்புகிறது. இது அங்குள்ள கடற்படையுடன் இணைந்து செயல்படும். கடந்த மாதம், ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர், அதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

  15. அமெரிக்கா, பிரேசில் நாட்டினர் சாம்பியன் - தலையணை சண்டைப் போட்டியில்

    காணொளிக் குறிப்பு, தலையணை சண்டைக்கு சாம்பியன்ஷிப் போட்டி

    இதுவரை செல்ல விளையாட்டுகளில் ஒன்றாக இருந்த தலையணை சண்டை, தற்போது குத்துச்சண்டைக்கு இணையான முழுமையான விளையாட்டாக மாறியுள்ளது. முதல்முறையாக தலையணை சண்டையில் அதிகாரப்பூர்வ சாம்பியன்கள் உருவாகியுள்ளனர்.

    அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற போட்டியில், பாக்சிங் மட்டுமன்றி பல்வேறு தற்காப்புக் கலைகளை பயன்படுத்தி, வீரர்கள் தலையணை சண்டையிட்டனர்.

    இதில், பிரேசிலைச் சேர்ந்த இஸ்டெலா நூனிஸ் பெண்கள் பிரிவுக்கான சாம்பியன் பட்டத்தை வென்றார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலே டில்மேன் ஆண்களுக்கான பட்டத்தைத் தட்டிச் சென்றார். இது குறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் காணலாம்.

  16. அருணாச்சல பிரதேச இளைஞருக்கு சீன ராணுவம் கரண்ட் ஷாக், துன்புறுத்தல் - பாஜக எம்.பி தாபீர்

    மிராம் தரோம்

    பட மூலாதாரம், Tapir Gao

    அருணாசல பிரதேச இளைஞர் மிராம் தரோம் சீன ராணுவத்தால் தாக்கப்பட்டு, மின்சார ஷாக் கொடுத்து துன்புறுத்தப்பட்டுள்ளார் என்று பாஜக எம்.பி தாபிர் காவோ தெரிவித்துள்ளார்.

    இந்திய எல்லையில் காணாமல் போன அருணாச்சல பிரதேச இளைஞர் மிராம் தரோம், சீன ராணுவத்தினரால் இந்தியாவிடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், ''மிராம் தரோம் சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளார். கரண்ட் ஷாக் கொடுக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டுள்ளார். இது ஒரு தீவிரமான விஷயம். இதை, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று அருணாச்சல பிரதேச பாஜக எம்.பி தாபிர் காவோ தெரிவித்துள்ளார்.

    மேலும், ''அருணாச்சல பிரதேசத்தின் லாங்டிங் மாவட்டத்தில் இருந்து மூன்று தொழிலாளர்கள் கடத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். போர் நிறுத்த காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.இந்த பிரச்னை மிராம் தரோமிற்கு மட்டுமல்ல.

    எல்லைப் பகுதிகளில் அடர்ந்த காடுகள் உள்ளன, அங்கு ஊடுருவும் சீன ராணுவத்தினர், வேட்டையாடவும், மூலிகைகள் சேகரிக்கவும் செல்லும் எங்கள் மக்களைக் கடத்திச் செல்கின்றனர். எல்லைப் பிரச்னையைத் தீர்க்கும் வரை இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும்''என்றும் தெரிவித்துள்ளார்.

    அருணாச்சல பிரதேசம் ஜிதோ கிராமத்தைச் சேர்ந்த மிராம் தரோம் கடந்த மாதம் சீன எல்லைப் பகுதிக்கு சென்ற பிறகு காணாமல் போனார். இந்தியாவின் எல்லைகுட்பட்ட ''அருணாச்சல பிரதேசத்திற்குள் நுழைந்து இந்த இந்திய இளைஞரைச் சீன ராணுவம் (பிஎல்ஏ) கடத்திச் சென்று விட்டது.'' என்று அருணாச்சலப் பிரதேசத்தின் பாஜக எம்பி தாபிர் காவோகுற்றம் சாட்டியிருந்தார்.

  17. யுக்ரேன் பதற்றம்: போருக்கு தள்ள முயற்சிக்கும் அமெரிக்க - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

    ரஷ்யா - யுக்ரேன்

    பட மூலாதாரம், Russian Defence Ministry

    யுக்ரேனில் போர் புரியும் சூழலுக்குள் ரஷ்யாவை தள்ள, அமெரிக்கா முயற்சிப்பதாக புதின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

    பல வாரங்களாக நிலவும் யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடி குறித்த தனது முதல் கருத்தைத் தெரிவித்துள்ள புதின், ரஷ்யா மீது அதிக தடைகளை விதிக்க ஒரு சந்தர்ப்பமாக, இந்த நெருக்கடியை பயன்படுத்துவதே அமெரிக்காவின் குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார்.

    ஐரோப்பாவில் நேட்டோ கூட்டணிப் படைகள் குறித்த ரஷ்யாவின் கவலைகளை அமெரிக்கா புறக்கணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    யுக்ரேன் எல்லைப் பகுதிகளுக்கு அருகில் ரஷ்யப் படைகள் குவிந்துள்ளதால் பதற்றம் அதிகமாக உள்ளது.

  18. பட்ஜெட் 2022: 'இந்தியாவின் அடித்தட்டு மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் பட்ஜெட் இது' - பிரதமர் மோதி

    பிரதமர் மோதி - பட்ஜெட் 2022

    பட மூலாதாரம், BJP

    இந்தியாவின் அடித்தட்டு மக்களுக்கும் வளர்ச்சியை கொண்டு சென்று, அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது என்று பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

    இந்திய நாடாளுமன்றத்தில் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து பாஜகவினரிடம் பிரதமர் நரேந்திர மோதி காணொளிக் காட்சியில் தற்போது பேசி வருகிறார்.

    அவரது பேச்சில், ''நாட்டின் பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் இரவும் பகலும், தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு, எல்லையோர கிராமங்களும் கோட்டையாக செயல்படுகின்றன. எனவே, அந்த எல்லைக் கிராமங்களின் தேசபக்தியும் அற்புதமானது. தேசிய பாதுகாப்பு தொடர்பான மற்றொரு முக்கிய அம்சம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இமயமலைப் பகுதிகளில் நவீன இணைப்பு மற்றும் நவீன உள்கட்டமைப்பை விரிவுபடுத்தப்படவுள்ளது.

    நாட்டில் உள்ள ஏழைகளுக்கு 80 லட்சம் வீடுகள் கட்ட, 48,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏழைகளின் வறுமையை போக்கி முன்னேற்றத்திற்கு உதவும். நாட்டின் அடித்தட்டில் உள்ள சமூகத்திற்கும் வளர்ச்சிப் பணிகளைப் பணிகளை கொண்டு சென்று, அவர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் உள்ளது ''என்று தெரிவித்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  19. பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு நோட்டீஸ் - கம்யூனிஸ்ட் எம்.பிக்கள்

    நாடாளுமன்றம்

    பட மூலாதாரம், ANI

    பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க இந்திய நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

    இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து அவையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எலமரம் கரீம் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இஸ்ரேலிய நிறுவனத்தின் பெகாசஸ் உளவு விவகாரத்தில் இந்திய அரசுக்கு உள்ள தொடர்புகள் குறித்து அண்மைக்கால செய்திகளையடுத்து, விதி 267ன் கீழ் விவாதிக்க நோட்டீஸ் அளித்துள்ளார்.

    இதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பினாய் விஸ்வம் விதி எண் 267ன் கீழ் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. நேற்றைய தினம் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    இந்த கூட்டத்தொடரில் பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் ஒத்தி வைப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

  20. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று 1.61 லட்சம்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,61,386 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    இந்தியாவில் ஒரு நாளில் மொத்தம் 2,81,109 பேர் சிகிச்சை முடிந்து நலம் பெற்றுள்ளனர். நாடு முழுவதும் தற்போது 16, 21, 603 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி தொற்று விகிதம் 9.26 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் இருந்த நிலையில், தற்போது 10 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

    இந்தியாவில் தற்போது வரை மொத்தம் 167.29 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு:

    தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்து 092 ஆக பதிவாகியது. அதிகபட்சமாக சென்னையில் 5,127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 1, 88, 599 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிநாட்டு பயணிகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், இலங்கை ஆகிய நாடுகளில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று மாநில பொது சுகாதார இயக்குநரகம் அறிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு