உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை
தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ளது.
இதற்கான
அறிவிப்பை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா
வெளியிட்டு வருகிறார்.
உத்தரகாண்ட்
மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும்,
கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும்,
உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும்,
மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும்
சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
கொரோனா
சமயத்தில் தேர்தலை நடத்துவது சவலான ஒன்று என்றும் பாதுகாப்பான தேர்தலை நடத்துவதே முன்னுரிமை
என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
முதல்கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 10
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 14
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 20
நான்காம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 23
ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 27
ஆறாம் கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 3
7-ம் கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 7
மணிப்பூர் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
முதல்கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 27
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 3
பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா ஆகிய 3 மாநிலங்களுக்கு பிப்ரவரி 14 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்: மார்ச் 10