ஜார்கண்டில் இளைஞர் உயிரோடு எரித்துக் கொலை - போலீஸ் விசாரணை, ரவி பிரகாஷ், ஜார்கண்ட்
பட மூலாதாரம், RAVI PRAKASH
படக்குறிப்பு, இளைஞர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட பகுதி.
ஜார்கண்ட் மாநிலம் சிம்தேகா மாவட்டத்தில், கிராம மக்கள் ஒரு இளைஞரை தாக்கி உயிருடன் எரித்தனர்.
இது ஒரு கும்பல் கொலை போன்ற சம்பவம் என்று காவல்துறை கூறுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளதுடன், சிலரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நேரில் கண்ட சாட்சிகளின்படி, சம்பவத்தின் போது கொல்லப்பட்ட இளைஞரின் மனைவி அவரது உயிரைக் காப்பாற்றுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்தார், ஆனால் கிராம மக்கள் அவரது வேண்டுகோளை புறக்கணித்தனர்.
இச்சம்பவம் கொலேபிரா காவல் நிலையத்திற்குட்பட்ட பெசராஜரா கிராமத்தில் நடந்துள்ளது.
கொல்லப்பட்டவரின் பெயர் சஞ்சு பிரதான்.
ஜார்கண்ட் காவல்துறை அதிகாரி டேவிட் ஏ டோட்ராய் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், "இந்த சம்பவம் கும்பல் கொலை போன்றது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இளைஞரை கொன்றவர்கள் வேறு கிராமத்தில் இருந்து வந்தவர்கள்" என்றார்.
சஞ்சு பிரதான் கிராமத்தில் மரங்களை வெட்டி ரகசியமாக விற்பதாக உள்ளூர்வாசிகள் கூறினர். இவை அனைத்தும் பழங்குடியினரின் குந்தக்தி அமைப்பின் கீழ் வரும் மரங்கள்.
நேரில் கண்ட சாட்சி வெளியிட்ட தகவல்
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், "பக்கத்து பம்பால்கேரா கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200 கிராம மக்கள் கொண்ட கும்பல் பெசராஜரா கிராமத்தை அடைந்தது. முதலில் சஞ்சு பிரதானை அவரது வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் அவரை அடிக்கத் தொடங்கினர். அந்த நேரத்தில் பிரதானின் மனைவி சப்னா தேவியும் அங்கு இருந்தார், கணவரை விட்டுவிடுமாறு கெஞ்சினார், ஆனால் யாரும் அவரது பேச்சைக் கேட்கவில்லை," என்று கூறினார்.
அடிப்பதற்கு முன், அங்கு பஞ்சாயத்தும் நடந்ததாகவும், அதில் சஞ்சு மரத்தை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த விறகுக்கு தீ வைத்த கும்பல் சஞ்சுவை அதில் தள்ளியதில் அவர் உயிருடன் கருகி உயிரிழந்தார்.
இதற்கிடையில், இதுபற்றி ஒருவர் கொலேபிரா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ஆனால் போலீசார் வருவதற்குள் சஞ்சு இறந்துவிட்டார்.
தீயணைப்பு படையினர் உதவியுடன் தீயை அணைத்த போலீசார், சடலத்தை கைப்பற்றினர்.
இந்த சம்பவத்தையடுத்து கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குந்தக்தி அமைப்பு என்றால் என்ன?பழங்குடியினரின் பாரம்பரிய குந்தக்தி அமைப்பின் கீழ், கிராமத் தலைவரின் அனுமதியின்றி கிராமத்தில் மரங்களை வெட்ட தடை உள்ளது.
மரங்களை வெட்டும் இளைஞர்கள் பற்றி வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். ஆனால், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்களே அங்கு வந்தனர்.
இந்நிலையில், இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
வந்துகொண்டிருக்கும் செய்தி, கொரோனா: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு
இந்தியாவில் முக்கியத்துவம் பெற்ற ரஞ்சி ட்ராபி கிரிக்கெட் போட்டிகள் வரும் 13ம் தேதி தொடங்கி மார்ச் 20ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக அந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
87வது ரஞ்சி போட்டியில் பங்கேற்க அணிகள் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீரர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.இது மட்டுமின்றி சீனியர் பெண்கள் டி20 மற்றும் சி.கே.நாயுடு ட்ராபி போட்டியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சில் தலைவர் நியமனம்
அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சில் (யு.எஸ்.ஐ.பி.சி) தலைவராக, தூதர் அதுல் கேஷாப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை முதல் இந்த பொறுப்பிற்கு வருவதாக அமெரிக்க வர்த்தக சபை அறிவித்துள்ளது.
முக்கியத்துவம் உள்ள இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள, அதுல் கேஷாப் அண்மையில் டெல்லியில், அமெரிக்க தூதரக அதிகாரியாக பணியாற்றினார். அமெரிக்க தூதரகத்தை வழி நடத்திச் செல்லும் குழுவிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
முஸ்லிம் சிறுமிகளை ஏலத்தில் விடும் சர்ச்சை செயலி - டேராடூனில் பெண் கைது - சந்தேக நபருக்கு திங்கள்கிழமை வரை போலீஸ் காவல்
பட மூலாதாரம், Getty Images
புல்லி பாய் என்ற செயலியில் முஸ்லிம் சிறுமிகளை ஆன்லைனில் ஏலம் எடுத்ததாகக் பதிவு செய்யப்பட்ட வழக்கில் விஷால் குமார் என்ற நபரை ஜனவரி 10ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மும்பை பாந்த்ரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட அந்த நபர் 21 வயதான விஷால் குமார், பொறியியல் மாணவர். மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் போலீஸ் காவலுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரது வழக்கறிஞர் டி.பிரஜாபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது கட்சிக்காரர் பொய் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். காவல்துறை தரப்பில் அவரது வீட்டை தேடும் வாரன்டுக்கு மனு போடப்பட்டுள்ளது," என்று கூறினார். இதற்கிடையே, இந்த முழு விவகாரத்திலும் மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மும்பை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை காவல்துறையின் சைபர் பிரிவு உத்தராகண்டில் வைத்து அந்த பெண்ணை கைது செய்துள்ளது.
இந்த பெண் உத்தரகாண்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு மும்பைக்கு அழைத்து வரப்படுவார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 1
விஷால் ஜா கைது
கைது செய்யப்பட்டுள்ள விஷால் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தனது பெயரை மாற்றி ‘சீக்’ என்ற அடையாளப்படுத்தி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, 'புல்லி பாய்' செயலியின் டெவலப்பர்கள் மற்றும் அதன் உள்ளடக்கத்தைப் பகிர்ந்த ட்விட்டர் பயனருக்கு எதிராக மேற்கு மும்பை சைபர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இந்திய தண்டனைச் சட்டம் 153 (a) (மதத்தின் அடிப்படையில் வெறுப்புணர்வை ஊக்குவித்தல்), 153 (b) (தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்கு சேதம் விளைவித்தல்), 295 (a) (வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்) ஆகிய பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரிய குற்றவாளிகள் என்ற வகையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இத்துடன், 354டி (துரத்துதல்), 509 (பெண்ணை மதிக்காதது), 500 (குற்றவியல் அவதூறு) ஆகிய பிரிவுகளின் கீழும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67 (ஆபாசமான விஷயங்களைப் பரப்புதல்) பிரிவின்கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 2
டெல்லி காவல்துறையிலும் வழக்குமறுபுறம் டெல்லி காவல்துறையும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது. டெல்லி காவல்துறையின் கூடுதல் ஆணையரும் செய்தித்தொடர்பாளருமான சின்மோய் பிஸ்வால் செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில், ஜனவரி 1 ஆம் தேதி பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளோம். நாங்கள் செல்பேசி செயலியை இணையத்தில் பதிவேற்ற அனுமதித்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு தற்போது அதன் பதிலுக்காக காத்திருக்கிறோம். அந்த நிறுவனத்தின் பதில் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும். என்று கூறினார்.அந்த நிறுவனம் வெளிநாட்டில் இருப்பதாக சின்மோய் பிஸ்வால் கூறினார். எம்எல்ஏடி (குற்ற விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் - குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவி) வசதியை கோரும் அனுமதியை டெல்லி காவல்துறை ஏற்கெனவே பெற்றுள்ளது.
கர்நாடகாவில் சுறுசுறுப்பாக இருந்த புலி திடீர் இறப்பு
கர்நாடகா மாநிலம் மங்களூரு புறநகர்ப் பகுதியில் உள்ள பிலிகுலா உயிரியல் பூங்காவில் 9 வயது ஆலிவர் என்கிற புலி நேற்று உயிரிழந்தது.
இது குறித்து உயிரியல் பூங்காவின் இயக்குநர் எச் ஜெயபிரகாஷ் பண்டாரி கூறுகையில்,
"ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்த புலி திடீரென சுருண்டு விழுந்து இறந்து விட்டது." என்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழந்த சிறுவனுக்கு அமைச்சர் அஞ்சலி
படக்குறிப்பு, அமைச்சர் மெய்யநாதன்
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே போலீஸ் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் பயிற்சியின் போது அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் புகழேந்தி தலையில் தோட்டா பாய்ந்தது. தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று உயிரிழந்தார்.
உடல்கூறு ஆய்வுக்குப் பிறகு புதுக்கோட்டை கொத்தமங்கலபட்டி மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. பதற்றமான சூழல் ஏற்பட்டதால் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
சிறுவனின் உடலுக்கு அமைச்சர்கள் ரகுபதி மெய்யநாதன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பெற்றோரிடம் அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 10 லட்சத்திற்கான வங்கி வரைவோலை வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ரகுபதி "தமிழ்நாடு காவல்துறை உரிய விசாரணை செய்து வருகிறது தேவைப்பட்டால் சிபிசிஐடி விசாரணை குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.
அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமானவை தான் - அமைச்சர் மா சுப்ரமணியன்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமானவை தான். அதில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள், தமிழ்நாடு மாநில சுகாதாரத் துறையின் பணிகளில், கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள களமிறக்கப்படுவார்கள் என தமிழ்நாட்டின் சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் ஏ என் ஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் - அமைச்சர் மூர்த்தி உறுதி
பட மூலாதாரம், ㅤ
படக்குறிப்பு, மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக அமைச்சர் மூர்த்தி.
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கட்டுப்பாடுகளுடன் நிச்சயம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை கிழக்கு செட்டிகுளம் கிராமத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி , "மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தேவையான கட்டுப்பாடுகளுடன் நிச்சயம் நடைபெறும்," என்று கூறினார்.
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையைப் பொறுத்தவரை 2006-2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி தேவையான கட்டமைப்புகளை செய்திருந்தார்.
அதிமுக ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக சர்க்கரை ஆலையின் பணிகள் முடங்கின.
தற்போது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அந்த ஆலைகள் சீர் செய்யப்படும் என்றார் அமைச்சர் மூர்த்தி.
நல்லா இருந்த காவிரி பாலம் அதிமுக ஆட்சியில் உடைப்பு - குற்றம்சாட்டும் தமிழக அமைச்சர் நேரு
பட மூலாதாரம், ㅤ
திருச்சியில் நல்ல நிலையில் இருந்த காவிரி ஆற்றுப் பாலத்தை முந்தைய அதிமுக ஆட்சியில் உடைத்து விட்டனர் என்று குற்றம்சாட்டியிருக்கிறார் தமிழக அமைச்சர் கே.என். நேரு.
திருச்சியில்
சேதமடைந்துள்ள காவிரி பாலத்தை, அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"கடந்த 1976ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் திருச்சி காவிரி பாலம் கட்டப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் பராமரிப்பு என்ற பெயரில் நல்ல நிலையில் இருந்த பாலத்தை அடித்து உடைத்து விட்டனர்," என்று கூறினார்.
"இந்த பாலத்தை சம்மட்டியால் அடித்து உடைத்து, பலமிழக்க வைத்துவிட்டனர்.
சேதமடைந்துள்ள காவிரிப் பாலம், 4 மாதங்களில் சரி செய்யப்படும்," என்றும் அவர் தெரிவித்தார்.
"காவிரியில் புதிய பாலம் ரூபாய் 138 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளது. அந்தப் ஓராண்டு காலத்தில் பணிகள் நிறைவு பெறவுள்ளது. புதிய பாலம் கட்டப்பட்டாலும், பழைய பாலத்தை கைவிட மாட்டோம்," என்றார் அமைச்சர் நேரு.
திருச்சி மாநகரத்துடன் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே இந்த பாலம் கட்டப்பட்டது.
பேருந்து நிறுத்தத்தில் நிற்காததால் பேருந்தில் இருந்து குதித்த பிளஸ் டூ மாணவி உயிரிழப்பு, ஏ.எம். சுதாகர், சேலம்
பட மூலாதாரம், ㅤ
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேருந்து நிறுத்தத்தில் நிற்காததால் பேருந்தில் இருந்து குதித்த பிளஸ் டூ மாணவி உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சீனி கிரி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகள் நவ்யா ஸ்ரீ கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை வழக்கம்போல பள்ளிக்குச் சென்றார். மாலையில் பள்ளி முடிந்ததும் திருமங்கலத்தில் இருந்து தருமபுரி நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஏறி தனது சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளார்.
சீனி கிரி பள்ளி பேருந்து நிறுத்தம் வந்தபோது அவர் இறங்க முற்பட்டுள்ளார். ஆனால் பேருந்து நிற்காமல் சென்றதால் அதிர்ச்சியடைந்த மாணவி யோசிக்காமல் ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.
கீழே விழுந்த மாணவியின் மீது பேருந்தின் சக்கரம் ஏறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த மாணவியை சக பயணிகள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு அவரது உயிர் இன்று காலையில் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து உத்தனப்பள்ளி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணனிடம் பேசியபோது, இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் வெங்கடேஷ் மீது விபத்து வழக்கு பதிவு செய்து உள்ளோம் என்று கூறினார்.
அமெரிக்க வெளியுறவு செயலாளருடன் ஆலோசனை நடத்திய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆன்டனி ஃபிளிங்டனுடன் நேற்றிரவு விரிவாக பேசியாதக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் "இரு நாட்டு விவகாரங்கள், இந்திய, பசிஃபிக் மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்து ஆன்டனி ஃபிளிங்கனுடன் பேசினேன்" என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பல்கலைக்கழக வேந்தர் பதவியை வகிக்க நான் விரும்பவில்லை: கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்
பல்கலைக்கழக வேந்தராக நான் தொடர விரும்பவில்லை என்று கேரள ஆளுநரும் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவை நான் எடுக்க ஏதோ நடந்துள்ளது. ஆனால், இதை நான் விவாதிக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கம், கேரள மாநில பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டில் ஆளுநர்கள் தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், கேரள ஆளுநரின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பிரத்யேக செல்பேசி செயலி மூலம் புலிகள் கணக்கெடுப்பு சிறப்பு பயிற்சி., பிரபுராவ் ஆனந்தன்
பட மூலாதாரம், ㅤ
தமிழகத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் நெல்லை மாவட்டத்தில்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தான் மிகப்பெரியது. இங்கு உள்ள மேற்கு
தொடர்ச்சி மலையில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் புலிகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று
வருகிறது.
தற்போது முதல் முறையாக பிரத்யேக செல்பேசி செயலி மூலம் கணக்கெடுப்பு
எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் மொபைல்
ஆப் மூலம் புலிகள்கணக்கெடுப்பு
எடுப்பது எப்படி என்பதற்காக பயிற்சி முகாம் நடைபெற்றது.
அம்பாசமுத்திரம்
கோட்ட வனத்துறை துணை இயக்குநர் செண்பகபிரியா தலைமையில் இந்த பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியாளர் லோகேஷ் மொபைல் ஆப் மூலம் கணக்கெடுப்பு எடுப்பது எப்படி என காணொளி
மூலம் விளக்கினார். இதைத்தொடர்ந்து
இந்த கணக்கெடுப்புக்காக 29 செல்போன்கள்
வழங்கப்பட்டது.
மேலும் முண்டந்துறை அருகே வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்தும்
பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் வனச்சரகர்கள்,
வனவர்கள், வனக்காப்பாளர்கள்,
வேட்டை தடுப்ப காவலர்கள் என சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து
அம்பாசமுத்திரம் கோட்ட வனத்துறை துணை இயக்குநர் செண்பக பிரியா பிபிசி தமிழிடம்
பேசுகையில், இதற்கு முன்பு கையால்
அளவெடுத்து, காகிதத்தில் பதிவு
செய்யும் முறையில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. தற்போது பிரத்யேக செல்பேசி செயலி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதுகுறித்த சிறப்பு பயிற்சி இன்று
அளிக்கப்பட்டது என்றார்.
இதன் மூலம்
வன விலங்குகளின் நடமாட்டம், அவற்றின் எச்சம், அடையாளங்கள் என அனைத்தையும் அறிய முடியும்,
நாள்தோறும் வனப்பகுதியில் நடக்கும் வன உயிரினங்கள்,
தாவரங்கள் குறித்த தகவல்களை கண்காணிக்க முடியும்
என செண்பக பிரியா தெரிவித்தார்.
நாளை தமிழக சட்டப்பேரவை கூடுகிறது - கொரோனா பரிசோதனையில் இரு எம்எல்ஏக்களுக்கு வைரஸ் பாதிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில், இரண்டு எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நாளை தொடங்குகிறது. இதையடுத்து அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், அறந்தாங்கி காங்கிரஸ் எம்.எல்.ஏ தி.ராமச்சந்திரன், பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
செந்தில்பாலாஜி வீடு முன்பாக போராட்டம் நடத்திய 45 பேர் மீது வழக்குப் பதிவு
தமிழ்நாடு அரசு மதுபானக் கூட (பார்) ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாக குற்றம்சாட்டி அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய 45 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்ததைத் தொடர்ந்து தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது "பார் ஒதுக்கீட்டில் எந்தவித முறைகேடும் இல்லை. வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுகிறது. அரசியல் உள்நோக்கத்தோடு, களங்கம் கற்பிக்கும் வகையில் போராட்டம் நடத்தியுள்ளனர்," என்று கூறினார்.
இந்த நிலையில், அமைச்சர் வீட்டிற்கு முன்பாக போராட்டம் நடத்திய பார் உரிமையாளர்கள் 45 பேர் மீது, கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மீறி கூடியது, நோய்த் தொற்று பரவ காரணமாக இருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதில், சேகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்டா கடலோர பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்புத் திட்டங்கள் கூடாது - அன்புமணி ராமதாஸ் எம்.பி கோரிக்கை
பட மூலாதாரம், ㅤ ㅤ
படக்குறிப்பு, அன்புமணி ராமதாஸ்
டெல்டா கடலோர பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்புத் திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரியுள்ளார். இது குறித்து அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் காவிரி பாசன பகுதியில் விழுப்புரம்-கடலூர் மாவட்டத்தையொட்டிய ஆழ்கடல் பகுதியில் 8108 சதுர கி.மீ பரப்பளவிலான ஹைட்ரோ கார்பன் திட்டம் உட்பட மொத்தம் 8 திட்டங்களுக்கு மத்திய அரசு ஏலப்புள்ளிகளை கோரியுள்ளது. இவற்றில் தமிழகத்திற்கான திட்டம் தேவையற்றது.
அத்திட்டம் ஆழ்கடலில் செயல்படுத்தப்பட்டாலும் அதன் தாக்கம் நிலப்பரப்பிலும் இருக்கும். அது காவிரி படுகையில் விவசாயத்தை பாதிக்கும். அதனால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி பேசின் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஏலப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே 7, 264 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த 5 உரிமங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை காவிரி பாசன மாவட்டங்களில் உள்ளன என்றும் அவற்றை செயல்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
வந்துகொண்டிருக்கும் செய்தி, டெல்லியில் வார இறுதியில் முழு ஊரடங்கு
ஒமிக்ரான் திரிபால் உண்டாகும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு வரும் வார இறுதியில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
வெள்ளி இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை இது அமலில் இருக்கும்.
அத்தியாவசித் துறைகளைத் தவிர பிற துறைகளின் அரசு ஊழியர்களுக்கும் இனி வீட்டில் இருந்தே வேலை செய்ய வைக்கப்படுவார்கள் என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
அம்மா உணவகங்களும் மூடப்படுமோ என்று கவலை - டிடிவி தினகரன்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
அம்மா உணவகங்களும் மூடப்படுமோ என்று கவலை ஏற்படுகிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், "அம்மா மினி
கிளினிக்குகள் மூடப்பட்டிருப்பதாக கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. அரசியல்
காழ்ப்புணர்ச்சியால் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள
முடியாதவை.
கடந்த ஆட்சியில்
அவசர கதியில் சரியான ஏற்பாடுகளின்றி அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டபோதே
அவற்றிலுள்ள குறைகளை சரிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியிருந்தேன்.
அந்த
கிளினிக்குகள் ஓராண்டு திட்டமாக ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் கூறியிருப்பது
உண்மையாக இருந்தாலும்கூட மக்கள் நலன் கருதி அவற்றை நீட்டித்து செயல்படுத்தக்
கூடாதா? அப்படி செய்வதுதானே ஓர் அரசாங்கத்தின்
சரியான பணியாக இருக்க முடியும்?!
அம்மா பெயரிலான
திட்டங்களை எல்லாம் மூடுவதிலேயே தி.மு.க. அரசு குறியாக இருப்பது தவறானது. அம்மா
மினி கிளினிக்கை தொடர்ந்து, ஏழை, எளிய மக்களின் பசியாற்றி வரும் அம்மா
உணவகங்களும் மூடப்படுமோ? என்ற கவலை
ஏற்படுகிறது." என்று பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
அகில இந்திய
மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) தங்களின் மருத்துவர்களுக்கு மீதமுள்ள குளிர்கால விடுமுறையை ரத்து செய்துள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள் உடனே பணிக்கு வரவும் எய்ம்ஸ் நிர்வாகம்
அறிவுறுத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு
வருகின்றன. மேலும், கூடுதல் முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்
எய்ம்ஸ் மருத்துவர்கள் உடனே பணிக்கு திரும்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.