நன்றி நேயர்களே!
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.
பிபிசி தமிழின் பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டுக்கும் மேலாக தீவிரமாக போராடிய பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 22 விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து, புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.
பிபிசி தமிழின் பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
12 முதல் 18 வரை உள்ள குழந்தைகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பு மருந்தை செலுத்த இந்திய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது
கேரளாவில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபால் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்று அந்த மாநில சுகாதார அதிகாரிகள் கூறுவதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
இத்துடன் கேரளாவில் ஒமிக்ரான் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 38 ஆகியுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
உலகெங்கிலும் தற்போது நடந்து வரும் துயரங்கள் மற்றும் நெருக்கடிகள் பெரிதாக கண்டுகொள்ளப்படாத நிலையில் அவற்றுக்காக இந்த உலகம் மிகவும் உணர்வற்றதாக மாறி வருகிறது என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
அவருடைய வருடாந்திர கிறிஸ்துமஸ் தின உரையின்போது சிரியா, ஏமன், இராக் ஆகிய நாடுகளிலும் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களில் சில பகுதிகளிலும் தற்போது நிலவும் நெருக்கடியான சூழலையும் குறிப்பிட்டுப் பேசினார் போப்.
பெருந்தொற்றின் விளைவுகள் சர்வதேச அளவிலுள்ள மோதல்களைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் மீது தாக்கம் செலுத்துகிறது என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டைப் போல் அல்லாமல் போப் பிரான்சிஸ் இந்த ஆண்டு திறந்த வெளியில் தமது கிறிஸ்துமஸ் தின உரையை வாட்டிகனில் நிகழ்த்தினார்.
மிகத் தீவிரமான பிரச்னைகளை அமைதியாகக் கடந்து செல்லும் அளவுக்கு நாம் அவற்றுக்குப் பழகிவிட்டோம் என்று அவர் கவலை தெரிவித்தார்.
முகக் கவசம் அணிந்து கொண்டு, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடித்த பல்லாயிரம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இவரது உரையைக் கேட்டனர்.

பட மூலாதாரம், Reuters
நோக்கி பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.
இது தமது சுற்றுவட்டப் பாதையை அடைந்த பின்பு அதன் ஏவல் வெற்றிகரமாக நடந்ததைக் காட்டும் சமிக்கள் கென்யாவில் உள்ள ஆண்டனா ஒன்றால் பெறப்பட்டது.
ஏவப்பட்ட பின்னர் அரைமணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் ஜேம்ஸ் வெப் பூமிக்கு இந்த சமிக்ஞையை அனுப்பியது.
பிரெஞ்சு கயானாவில் உள்ள கோவ்ரு விண்வெளி நிலையத்திலிருந்து 'அரியேன்' செயற்கைக்கோள் ஏவல் நிறுவனத்தின் ராக்கெட் ஒன்றின் மூலம் ஜேம்ஸ் வெப் ஏவப்பட்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், Getty Images
அசாம் மாநிலத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வரவுள்ளது.
அதன்படி, இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், ஆனால், இந்த கட்டுப்பாடு டிசம்பர் 31-ம் தேதிக்குப் பொருந்தாது என, அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது.
உணவகங்கள், காய்கறி - பழக்கடைகள், பால் விற்பனைக் கடைகள் உள்ளிட்டவை இரவு 10.30 மணி வரை மட்டுமே செயல்படும் என, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டுக்கும் மேலாக தீவிரமாக போராடிய பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 22 விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து, புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர்.
2022-ம் ஆண்டில் நடைபெற உள்ள பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த 22 விவசாய சங்கங்களும் சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற அமைப்பின் ஒரு அங்கமாக இருந்தன.
இது தொடர்பாக, பிடிஐ செய்தி முகமை தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், ANI
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்தியாவில் 415 பேருக்கு கொரோனாவின் ஒமிக்ரான் தொற்று உண்டாகியுள்ளது என்று இன்று காலை இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் குறைந்தது 115 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 பேருக்கும், டெல்லியில் 79 பெருகும் ஒமிக்ரான் திரிபு தொற்றியுள்ளது.

பட மூலாதாரம், Mukhtar Zahoor
ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக மூடப்பட்டிருந்த, ஸ்ரீநகரின் புச்வாராவில் உள்ள செயின்ட் லூக்ஸ் தேவாலயத்தில், கிறிஸ்தவர்கள் சிலர் மீண்டும் அங்கு வழிபாடு செய்து, பாடல்களை பாடியதால் அப்பகுதி மக்கள் உற்சாகம் அடைந்தனர்.
1990-களில் இப்பகுதியில் ஆயுதக்குழுவின் தாக்கம் அதிகரித்ததால், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக காஷ்மீரின் சிறிய கிறிஸ்தவ சமூகத்தின் மையப் புள்ளியாக இருந்த இந்த தேவாலயம் கைவிடப்பட்டு, கேட்பாரற்றுக் கிடந்தது.
இந்நிலையில், இந்த தேவாலயம் சமீபத்தில் புனரமைக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை, டிசம்பர் 24 ஆம் தேதி, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இந்த தேவாலயத்தில் ஒரு சிறிய ஆனால் உற்சாகமான குழு ஒன்று வழிபாட்டுப் பாடல்களைப் பாடியது.
சிறிது நேரத்திற்குள், அப்பகுதி மக்கள் தங்கள் மதநம்பிக்கையைப் பொருட்படுத்தாமல், தங்கள் கிறிஸ்தவ சகோதரர்களைப் பாராட்டவும் ஊக்குவிக்கவும் தேவாலயத்திற்குள் குவிந்தனர்.

பட மூலாதாரம், MA. SUBRAMANIAN/ TWITTER
தமிழகம் வரும் அனைத்து வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் 7 நாட்கள் தனிமை கட்டாயம் என, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகம் வரும் அனைத்து வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் 7 நாட்கள் தனிமை கட்டாயம்.
ஒமிக்ரான் திரிபு பரவலிலிருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி அவசியம். நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில், இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்களும், இரண்டாவது தவணை செலுத்த வேண்டியவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.
விழா காலங்களில் அதிகமானோர் கூடி உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். புத்தக கண்காட்சியிலும் வரிசையில் நின்று புத்தகங்களை வாங்குவதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும். கூட்டமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம்.
தமிழகத்தில் 39 பேருக்கு ஒமிக்ரானுக்கு முந்தைய அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட 34 பேரில் 12 பேர் குணமடைந்துள்ளனர்" என்றார்.
இங்கிலாந்தின் கோட்ஸ்வோல்ட்ஸில் உள்ள 5,700 ஆண்டுகள் பழைமையான கல்லறையில் புதைக்கப்பட்ட மனித எலும்புகளில் இருந்து, உலகின் பழைமையான மரபுவழி குடும்ப மரத்தை விஞ்ஞானிகள் தொகுத்துள்ளனர்.
கல்லறையில் இருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மரபணு பகுப்பாய்வு மூலம், அங்குப் புதைக்கப்பட்டவர்கள் ஒரு பெரிய குடும்பத்தின் ஐந்து தொடர்ச்சியான தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

பட மூலாதாரம், Getty Images
கோவில்பட்டியில் மலேசியாவில் இருந்து வந்த 2 பேர் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விநாயகர் பகுதிக்கு கடந்த 20-ம் தேதி மலேசியாவில் இருந்து கணவன், மனைவி மற்றும் 7 வயது குழந்தை வந்துள்ளனர்.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வந்த 3 பேருக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து, வெளிநாட்டில் இருந்து வந்த 3 பேர் மற்றும் வீட்டில் இருந்த 6 பேர் என மொத்தம் 9 பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அதில், வெளிநாட்டில் இருந்து வந்த 7 வயது சிறுமியை தவிர மற்ற 8 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து 2 பேர் தூத்துக்குடி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 6 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள 33 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த வெங்கட சுப்ரமணியன் மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை சமூகவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இடது கை குறைபாட்டுடன் பிறந்த வெங்கட சுப்பிரமணியன் தனது தன்னம்பிக்கை மற்றும் தொடர் முயற்சியின் காரணமாக கல்வி, இசை, கராத்தே, நீச்சல், சமூகப் பணி, விளையாட்டு, யோகா, சாரணியர் இயக்கப் பணி என பல துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்.
வெங்கட சுப்ரமணியன் குறித்து பிபிசி தமிழ் வெளியிட்ட காணொலி தொகுப்பை காணுங்கள்.

பட மூலாதாரம், NEELAM PANPATTU MAIYAM HANDOUT
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல் சினிமாவில் சாதி, மதம் பாகுபாடுகள் கிடையாது என கூறியிருந்தார். இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் பிபிசி தமிழுக்கு நேர்காணால் அளித்துள்ளார். அதில், இது தொடர்பாக, பா.ரஞ்சித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில்:
"என்னுடைய வாழ்வில் எனக்கு நடந்த நிகழ்வுகள் அடிப்படையில்தான் சில விஷயங்கள் பேசினேன். சினிமாவில் சாதி பார்க்கிறார்கள் என்று நான் பேசியது உண்மைதான். அது இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கிறது. படம் வெளிவரும்போது தியேட்டர் தரப்பு என சாதி இங்கு நவீன வடிவில் எதிராக நிற்கிறது.
சாதி என்பது கிராமப்புறங்களில் வெளிப்படையாகவும் நகர்ப்புறங்களில் நவீனமாகவும் இருக்கும். அதேபோலதான், திரைத்துறையினரிடமும் சாதி நவீனமாகவும் அதன் அணுகுமுறை மாறியும் இருக்கிறது. அதை நடைமுறையில் எதிர்கொள்பவர்களுக்கு தான் பிரச்சனை. அதை நான் அனுபவித்து இருக்கிறேன் என்பதால் அதை பேசுவேன்" என்றார்.
இது தொடர்பாக, பா.ரஞ்சித் பிபிசி தமிழுக்கு அளித்த முழு பேட்டியை வாசிக்க

பட மூலாதாரம், FACEBOOK
பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்கை காவல்துறை முடக்கியது.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்த 17-ம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை அமைத்து 9-வது நாளாக தேடி வருகிறது
கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது.
வெவ்வேறு கார்களில் மாறி மாறிச்சென்று தலைமறைவாக உள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் முன்னதாக அறிவித்திருந்தார்.
தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி விமானம் மூலமாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க அவருக்கு எதிராக கடந்த 23-ம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், பண பரிவர்த்தனை மூலம் அவரது நகர்வுகளை தடுக்கும் வகையில், ராஜேந்திரபாலாஜியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது பெயரில் உள்ள 6 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், SPECIAL ARRANGEMENT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இன்று மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டது.
குடியாத்தம் அருகே பேரணாம்பட்டு பகுதியில் இன்று சனிக்கிழமை காலை நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே ஓடி வந்தனர். 5 நிமிட இடைவெளியில் இருமுறை நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 23 ஆம் தேதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. எனவே, ஒரே மாதத்தில் அப்பகுதியில் நில அதிர்வு ஏற்படுவது இது மூன்றாவது முறையாகும்.

பட மூலாதாரம், CMOMAHARASHTRA
மகாராஷ்டிராவில் ஒமிக்ரான் கொரோனா திரிபு பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இரவு நேர ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இது இன்று முதலே அமலுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக, நேற்று வெள்ளிக்கிழமை அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, மும்பையில் ஒரு உணவகத்தில் 200 பேருக்கு மேல் கூட வேண்டுமென்றால், அதற்கு காவல் உதவி ஆணையரின் அனுமதி தேவை என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஜுன் முதல் அக்டோபர் வரையிலான 5 மாதங்களில் 1076 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாநில சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார் மாநில அமைச்சர் விஜய் வதேத்திவார் என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

இலங்கையின் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலியாகியுள்ளனர்.
குறித்த போலீஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த சார்ஜன் தரத்திலுள்ள போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
நேற்று (டிசம்பர் 24) இரவு 11.40 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக அங்குள்ள போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளனர். போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் இரண்டு போலீஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர், போலீஸ் நிலையத்திலிருந்து துப்பாக்கிகளுடன் தப்பிச் சென்று வேறோரு போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் எனத் தெரிய வருகிறது.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட பல துறைகள் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இந்தப் பக்கத்தில் தொகுத்து வழங்குவது அ.தா.பாலசுப்ரமணியன்.எங்களோடு இணைந்திருங்கள். இந்த நாள் இனியதாகட்டும்...