ஒமிக்ரான் ஐரோப்பிய சுகாதார கட்டமைப்பை நெருக்கடியின் விளிம்புக்கு தள்ளும்: உலக சுகாதார நிறுவனம்

ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து ஐரோப்பாவின் சுகாதார கட்டமைப்பு நெருக்கடியின் விளிம்புக்கு செல்லும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவரான ஹான்ஸ் குளூக் எச்சரித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு நன்றி!

    இன்றைய நேரலை இத்துடன் முடிவடைகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. இந்தி, கன்னட மொழிகளில் தொல்காப்பியம் - இந்திய அரசு வெளியீடு

    தொல்காப்பியம்

    பட மூலாதாரம், PIB INDIA

    படக்குறிப்பு, டெல்லியில் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் இந்தி, கன்னட மொழிகள் வெளியீட்டு நிகழ்வில் தமிழாய்வு நிறுவனத்தின் பேராசிரியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடும் நடத்தும் துறையின் இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார்.

    சிஐசிடி தயாரித்துள்ள தொல்காப்பியம் நூலின் இந்தி மொழிபெயர்ப்பு மற்றும் கன்னடத்தில் தொல்காப்பியம் மற்றும் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களின் மொழிபெயர்ப்பு நூல்கள் டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த நிகழ்ச்சியில் இந்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர். சுபாஸ் சர்க்கார், இந்தி, கன்னட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தொல்காப்பியத்தின் ஹிந்தி, கன்னட நூல்களையும் தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தின் செழுமையான பாரம்பரியத்தைப் போற்றும் பதினெண் கீழ்க்கணக்கின் கன்னட மொழி நூல்களையும் வெளியிட்டார்.

    தொல்காப்பியம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை தமிழாய்வு நிறுவனம் தேர்வு செய்ய என்ன காரணம், இது குறித்து அந்த நிறுவன பேராசிரியர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  3. மதுரை கட்டட விபத்தில் உயிரிழந்த காவலருக்கு டிஜிபி சைலேந்திர பாபு மரியாதை

    மதுரையில் கட்டட விபத்தில் உயிரிழந்த காவலருக்கு டி.ஜி.பி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
    படக்குறிப்பு, மதுரையில் கட்டட விபத்தில் உயிரிழந்த காவலருக்கு டி.ஜி.பி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

    மதுரையில் கட்டட விபத்தில் உயிரிழந்த காவலரின் உடலுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு மரியாதை செலுத்தினர்.

    மதுரை கீழவெளி வீதி பகுதியில் உள்ள பழமையான கட்டடம் இடிந்ததில், இரவு ரோந்து பணியில் இருந்த மதுரை விளக்குத்தூண் காவல்நிலைய தலைமைக் காவலர்கள் சரவணன், கண்ணன் இருவரும் இடிபாடுகளில் சிக்கினர். இதில், சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த காவலர் கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    உயிரிழந்த காவலர் சரவணனின் உடல் மதுரை காவலர் குடியிருப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தென்மண்டல ஐ.ஜி அன்பு, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

    மதுரை நகரில் பழமையான கட்டடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இது போன்ற விபத்து நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கட்டடம் இடிந்தது குறித்து வழக்குபதிவு விசாரணை நடைபெற்றுவருகிறது என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

    உயிரிழந்த காவலர் சரவணனின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி, அரசு பணியும் , காயமடந்துள்ள கண்ணனுக்கு ரூ. 5 லட்சமும் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  4. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - சசிகலாவின் அண்ணன் மகனிடம் விசாரணை

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து விவேக் ஜெயராமனிடம் போலீசார் விசாரணை
    படக்குறிப்பு, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து விவேக் ஜெயராமனிடம் போலீசார் விசாரணை

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார் சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

    முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமாக இருந்த ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வரும் வழக்கில், சயான், மனோஜ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாக வழக்கு விசாரணை தீவிரமாகியுள்ளது.

    இந்நிலையில், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவின், அண்ணன் ஜெயராமனின் மகன் விவேக்கிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

  5. திருச்சி மறுவாழ்வு மையத்தில் மேலும் 2 யானைகள்

    திருச்சி எம்.ஆர்.பாளையம் யானை மறுவாழ்வு மையத்திற்கு வந்துள்ள 2 யானைகள்
    படக்குறிப்பு, திருச்சி எம்.ஆர்.பாளையம் யானை மறுவாழ்வு மையத்திற்கு வந்துள்ள 2 யானைகள்

    திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம்ஆர்பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள 2 யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வனச் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியாரால் வளர்க்கப்பட்ட ரோகினி என்கிற 25 வயதான பெண் யானை. கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி வனத்துறை மூலம் மீட்கப்பட்டு, கோவை மாவட்டம், டாப்சிலிப் பகுதியில் அமைந்துள்ள யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்தது. நாளடைவில் 400 கிலோவுக்கு மேல் உடல் எடை குறைந்து உடல் மெலிந்தது. பல் வலி காரணமாக உணவு உண்ணமுடியாமல் சிரமம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    இதேபோல், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் இந்திரா என்கிற 60 வயதான பெண் யானை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டது. இந்த இரு யானைகளும் எம்.ஆர்.பாளையத்திலுள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டன.

    இரு யானைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து பராமரித்து வருகின்றனர். இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஏற்கெனவே மலாத்தி, சந்தியா, இந்து ,கோமதி, ஜெயந்தி, ஜமிலா ஆகிய 6 யானைகள் உள்ளன.

  6. மொரப்பூர் மேடையில் தகராறு: திமுக புகார், நாம் தமிழர் புகாரில்லை - காவல்துறை

    மொரப்பூரில் நாம் தமிழர் கட்சி மேடையில் நடைபெற்ற தகராறின் வீடியோ காட்சி

    பட மூலாதாரம், @NAAMTAMILARORG

    படக்குறிப்பு, மொரப்பூரில் நாம் தமிழர் கட்சி மேடையில் நடைபெற்ற தகராறின் வீடியோ காட்சி

    தமிழகத்தின் தருமபுரியில் உள்ள மொரப்பூரில் மேடையில் திமுகவினரின் தகராறு என்று சமூக வலைதளங்களில் வரும் வீடியோ குறித்து நாம் தமிழர் கட்சியினரிடமிருந்து தங்களுக்கு புகார் வரவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசும்போது, திமுக ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் உள்ளிட்டோர் மேடையேறி, மைக் செட்டை கீழே தள்ளி விட்டு வாக்குவாதம் செய்யும் வீடியோ சமுக வலைதளங்களில் பரவியது.

    இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது? விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  7. அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாட்டினர் 10, 635 பேர் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இந்திய குடியுரிமை கேட்டு 10,635 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    கடந்த 14ம் தேதி வரை பாகிஸ்தானில் இருந்து 7,306 பேர் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து 1, 152 விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவில் இருந்து 223, இலங்கையில் இருந்து 223, நேபாளத்தில் இருந்து 189, வங்கதேசத்தில் இருந்து 161 பேரும், சீனாவில் இருந்து 10 பேரும் விண்ணப்பித்துள்ளனர். நாடற்றவர்கள் என்று 428 பேர் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

    இந்திய குடியுரிமை விண்ணப்பங்கள் நிலை குறித்து, எம்.பி அப்துல் வகாத் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் பதிலளிக்கையில் இந்த விபரங்களை தெரிவித்துள்ளார்.

    இந்த விண்ணப்பங்களை சரிபார்த்து, பரிசீலனை செய்து இந்திய உள்துறை அமைச்சகம் குடியுரிமை வழங்குவது குறித்து முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  8. பிரியங்கா காந்தியின் இன்ஸ்டா ஹேக்கிங் புகார் குறித்து விசாரணை

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் இன்ஸ்டாகிராம் ஹேக்கிங் குற்றச்சாட்டு குறித்து கவனத்திற்கு வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    போன் ஒட்டுக் கேட்பது மட்டுமல்ல, எனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்கையும் ஹேக் செய்துள்ளார்கள் என்று பிரியங்கா காந்தி நேற்று தெரிவித்திருந்தார். இது பரவலான விவாதத்தை ஏற்படுத்தியது.

  9. அதிக ஜிஎஸ்டி கொடுத்துள்ளோம்; அதிகம் கேட்க உரிமையுள்ளது - சு.வெங்கடேசன் ட்விட்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க கோரி சு.வெங்கடேசன், மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட எம்.பிக்கள் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியாவிடம் மனு அளித்துள்ளனர்

    . இந்நிலையில், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

    "பல வடமாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம் தான் இருக்கிறது. தமிழகத்திற்கு நான்காவதாக மதுரைக்கு கேட்பது என்ன நியாயம்? தர முடியாது” என்கிறார் விமானத்துறை அமைச்சர்.

    ஆனால், "கடந்த ஆண்டு மட்டும் தமிழகம் செலுத்திய GST வரி, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செலுத்திய மொத்த வரியை விட அதிகம். நாங்கள், 4 அல்ல… 14 கேட்க உரிமையும், தகுதியும் படைத்தவர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

  10. சென்னை வழியாக திருப்பதி சென்றவருக்கு ஒமிக்ரான்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    ஆந்திராவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி கென்யாவில் இருந்து, சென்னை வழியாக திருப்பதிக்கு சென்ற பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    காய்ச்சல் அறிகுறி இருந்த அவருக்கு கடந்த 12ம் தேதி ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஆந்திர பொது சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் தில்லியில் 57 பேர், ஆந்திராவில் இருவர் உட்பட மொத்தம் 214 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  11. நாடாளுமன்ற கூட்டத் தொடர் இரு அவைகளும் ஒத்திவைக்கட்டன

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்திய நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இந்திய நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் நாளை வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை இரண்டும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த கூட்டத்தொடரில், தேர்தல் சீர்திருத்த மசோதா, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத்திருத்தம் உள்ளிட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பாக, தேர்தல் சீர்திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் அமளி, எதிர்ப்புகளுக்கிடையே இரு அவைகளிலும் குரல் வாக்கெடுப்பு மூலம், நிறைவேற்றப்பட்டது.

    நீட் விலக்கு கோரி திமுக எம்.பிக்கள் தொடர் முழக்கமிட்டனர். லக்கீம்பூர் வன்முறை உள்ளிட்டவை குறித்தும் எம்.பிக்கள் ஒத்தி வைப்பு தீர்மானங்கள் கொண்டு வந்தனர். மேலும், விவாதமின்றி, எதிர்க்கட்சிகளின் கருத்தைக் கேட்காமல் சட்டங்களை நிறைவேற்றும் போக்கு தொடர்வதாக தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர்.

  12. மதுரையில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் காவலர் உயிரிழப்பு.

    மதுரையில் கட்டடம் இடிந்து விழுந்து காவலர் உயிரிழப்பு
    படக்குறிப்பு, மதுரையில் கட்டடம் இடிந்து விழுந்து காவலர் உயிரிழப்பு

    மதுரையில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில், இரவுப் பணியில் இருந்த காவலர் உயிரிழந்தார்.

    மதுரை விளக்குத்தூண் காவல்நிலைய காவலர்களான சரவணன், கண்ணன் இருவரும் இரவு ரோந்துப் பணியில் இருந்ததனர். அப்போது மதுரை கீழவெளி பகுதியில் உள்ள பழமையான கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி காவலர் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    அவருடன் பணியில் இருந்த மற்றொரு காவலரான கண்ணன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  13. தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

    மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம்
    படக்குறிப்பு, மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களை உடனே விடுதலை செய்யக்கோரி இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மீனவர்களை உடனே விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 55 பேர், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 13 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து 3 நாட்களாக மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    போரட்டத்தில் பங்கேற்றுள்ள ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா பிபிசி தமிழிடம் கூறுகையில், "மீனவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கும் இலங்கை அரசை கண்டிக்கிறோம். இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, கைது நடவடிக்கை தொடரும், படகுகள் அரசுடமையாக்கபடும் என்று கூறியுள்ளதற்கு வன்மையான கண்டிக்கத்தை பதிவு செய்வதாகவும் தெரிவித்தார்.

    இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. அவர்களை விரைந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  14. இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை 213ஆக உயர்வு

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றாளர்கள் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் 57, மகராஷ்ட்ராவில் 54 பேர் புதிய வகை கொரோனா திரிபு ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தெலங்கானாவில் 24, கர்நாடகத்தில் 19, ராஜஸ்தானில் 18, கேரளாவில் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கம், சண்டிகர், லடாக் ஆகிய மாநிலங்களி்ல் தலா ஒருவருக்கு மட்டும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்றவர்களில் தற்போது வரை 90 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும், கடந்த 24 மணி நேரத்தில், கோவிட் தொற்று 6,317 பேருக்கு புதிதாக ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்றவர்களில் 6,906 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 318 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மொத்தம் 78,190 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  15. "இந்து - இந்துத்வா இரண்டும் ஒன்றே" - ஆர் எஸ் எஸ் பொதுச் செயலாளர்

    இந்து மற்றும் இந்துத்வா இரண்டும் வெவ்வேறு கருத்துக்கள் அல்ல. இரண்டும் ஒன்றே. தவறான புரிதலை உருவாக்க தேவையில்லாத சர்ச்சைகள் இது தொடர்பாக எழுகின்றன என்று ஏ என் ஐ முகமையிடம் கூறியுள்ளார் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் அமைப்பின் பொதுச் செயலர் சுரேஷ் பையாஜி ஜோஷி. சமீபத்தில் ராகுல் காந்தி, இந்து மற்றும் இந்துத்வா இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது என ஒரு கூட்டத்தில் பேசியது இங்கு நினைவு கூரத்தக்கது.

  16. லக்னெள விலங்கியல் பூங்காவில் ஹீட்டர் பொருத்தம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் நிலவுவதால், லக்னெள நகரத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில், விலங்குகளுக்கு கூடுதல் சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது. இத்தோடு, ஹீட்டர் வசதிகளும் செய்துள்ளதாக விலங்கியல் பூங்காவின் துணை இயக்குநர் உத்கர்ஷ் சுக்லா ஏ என் ஐ முகமையிடம் கூறியுள்ளார்.

  17. ஒமிக்ரான் திரிபால் ஐரோப்பிய சுகாதாரக் கட்டமைப்பு நெருக்கடியின் விளிம்புக்கு செல்லும் - WHO

    ஒமிக்ரான்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, வரைகலை

    கொரோனா வைரசின் ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து ஐரோப்பாவின் சுகாதார கட்டமைப்பு பெரும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் என உலக சுகாதார நிறுவனத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவரான ஹான்ஸ் குளூக் எச்சரித்துள்ளார்.

    உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்தியத்தில் 53 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் 38 நாடுகளில் ஒமிக்ரான் திரிபு பரவியுள்ளது. அதிலும் பல நாடுகளில் ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைதான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு கொரோனா அலை வந்து கொண்டிருக்கிறது, கணிசமான அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும், அரசாங்கங்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார் ஹான்ஸ்.

    ஏற்கனவே ஐரோப்பாவின் பல நாடுகளில் சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் திரிபு தற்போது உலகம் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது.

  18. வணக்கம் நேயர்களே!

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், பொழுதுபோக்கு, விளையாட்டு ஆகிய பல துறைகள் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குவோர் அ.தா.பாலசுப்ரமணியன், கௌதமன் முராரி, ஜோ மகேஸ்வரன்.எங்களோடு இணைந்திருங்கள். இந்த நாள் இனிதாகட்டும்.