நேயர்களுக்கு நன்றி!
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
“ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பிபின் ராவத்தின் மறைவு மிகப்பெரிய இழப்பு. அவர் உறுதி மிக்கவர். கடினமாக உழைத்து நாட்டின் ஆயுதப்படையை தன்னிறைவாக மாற்றினார்.” என்றார் பிரதமர் மோதி.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியதில் காவல் நிலைய கண்ணாடிகள் சேதம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் நாட்டு பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும்.இந்த சட்ட விரோத விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நாட்டு பட்டாசுகளை பறிமுதல் செய்ததுடன் விற்பனை செய்பவர்களையும் வழக்கு பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களாகதக்கலை பகுதியில்சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட நாட்டு பட்டாசுகளை பறிமுதல் செய்த தக்கலை போலீசார் அந்த பட்டாசுகளை காவல் நிலைய மேல் மாடியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது இதில் காவல் நிலைய முன்பக்க கண்ணாடிகள் மற்றும் சுவர்கள் மற்றும் பிளாஸ்டிக் கூரை எரிந்து நாசமானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை தீயணைப்பு துறையினர் தீ பரவாமல் அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது
காவல் நிலையத்தில் அதிக சத்தத்துடன் நிகழ்ந்த வெடி விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 13ஆம் தேதி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.
இதுகுறித்து கோவில் இணை ஆணையர் செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "கொரோனா நோய் தொற்றின் 3ஆவது அலை தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்படி கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் (டோஸ்) செலுத்தியவர்கள் மட்டுமே 13.12.2021-ந் தேதி முதல் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் திருக்கோயிலின் நான்கு கோபுர வாசல்களிலும் கீழ்க்கண்ட ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பித்தால் மட்டுமே கண்டிப்பாக திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
1) கோவிட் தடுப்பூசி சான்றிதழ் நகல் வைத்திருப்பது.
2) கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ்.
3) பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் குறுந்தகவல் வைத்திருப்பது
4) Whatsapp செயலி மூலம் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல்.
5) கைபேசி எண் மூலமாக கோவின் இணையதளத்தில் உறுதி செய்வது
என கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலக எல்லைப் பிரிவுக்குட்பட்ட தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பிரதேசத்தில் இன்று அதிகாலை புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டமைக்கு அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
பொத்துவில் முகுதுமகா விகாரையின் விகாரதிபதி தலைமையில், அதிகாலை வேளையில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டதாக, பொத்துவில் பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ரி. சுபோஸ்கரன் பிபிசி தமிழுயிடம் தெரிவித்தார்.
தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பிரதேசத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு, இதற்கு முன்னரும் இரு தடவை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு மக்கள் வெளியிட்ட எதிர்ப்பினை அடுத்து, அந்த முயற்சிகள் கைவிடப்பட்டதாகவும் சுபோஸ்கரன் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் சங்கமன்கண்டி பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டமையினால் ஏற்பட்ட பதட்டநிலையை அடுத்து, அங்கு பொலிஸார், பொத்துவில் பிரதேச செயலாளர், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் வருகை தந்தனர்.
இதன்போது குறித்த சிலையை வைப்பதற்காக பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களில் உரிய அனுமதி பெறப்படவில்லை என, அங்கு வந்திருந்த அரசு அதிகாரிகளிடம் கூறியதாகவும் பிரதேச சபை உறுப்பினர் சுபோகரன் தெரிவித்தார்.
இதேவேளை, பொத்துவில் பிரதேச சபையிடம் உரிய அனுமதி பெறாமல் சங்கமன்கண்டியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு எதிராகவும், குறித்த சிலையை அங்கிருந்து அகற்றுமாறும் கோரி, பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை தாம் பதிவு செய்துள்ளதாக பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் ரி. விஜயசேகரன், பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் சிங்கள மக்களைக் குடியேற்றுவற்காகவே, நூறு வீதம் தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டியில் இவ்வாறு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அப்பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர் என்கிறார் பொத்துவில் பிரதேச சபையின் உதவித் தவிசார் பி. பார்த்திபன்.
முதலில் சிலையை வைப்பது, பிறகு பௌத்த விகாரையை அமைப்பது, அதன் பின்னர் விகாரையைச் சுற்றி சிங்களக் குடியேற்றத்தை ஆரம்பிப்பதுதான் - இந்த சிலை வைப்பின் நோக்கம் என மக்கள் கூறுகின்றனர் என்றும் பார்த்திபன் தெரிவித்தார்.
இவ்வாறு தீவிர எதிர்ப்பினை மக்களும், மக்கள் பிரதிநிதிகளம்ட வெளியிட்டமையினை அடுத்து, குறித்த சிலையை இரண்டு நாட்களுக்குள் அங்கிருந்து அகற்றுவதாக - பொலிஸ் உயர் அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிக்கு இணங்க, மக்கள் தமது எதிர்ப்பை தற்காலிகமாகக் கைவிட்டுள்ளதாகவும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாது விட்டால், தமது எதிர்ப்பு தொடரும் எனவும் பொத்துவில் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் பார்த்திபன் மேலும் தெரிவித்தார்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்தியா இன்னும் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவிக்கிறார்.
சில நாள்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்த அவர் பிபிசி தமிழுக்க அளித்த நேர்க்காணலில் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவரது நேர்க்காணலில் இருந்து:
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை எவ்வாறு இருக்கிறது?
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருவது பணவீக்கத்தை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, மின்சாரத் தடை, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் என அரசாங்கத்தின் மீதான விரக்தி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பு 8 பில்லியன் டாலராக இருக்க வேண்டும், அது தற்போது பூஜ்ஜியமாக உள்ளது.
நிலங்களை விற்று, இலங்கையின் சொத்துக்களை வேறு நாடுகளுக்கு வழங்கி தான் தன்னுடைய இருப்பை தக்கவைக்க முடியும் என இலங்கை அரசு கருதுகிறது. இலங்கையில் நேர்மையான பொருளாதார வல்லுநர்கள் இல்லாததும் அரசாங்கம் இனவாத ரீதியில் செயல்படுவதுமே இதற்கு அடிப்படையான காரணம்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்குள் சென்ற பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன் கோயிலைவிட்டுத் துரத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.
பரத நாட்டியக் கலைஞரான ஜாகிர் ஹுசைன் டிசம்பர் பத்தாம் தேதி திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பெரும் சத்தமிட்டு, தன்னை கோவிலைவிட்டுத் துரத்தியதாக ஜாகிர் ஹுசைன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கும் பதிவில், "நான் என் தாய்வீடாக கருதும், தினம் என் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை என்னரங்கனாக கணப்பொழுதும் மறவாது கருதிக் கொண்டிருக்கும் திருவரவங்கத்திலிருந்து ஒரு மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டேன் . காரணம் என் பெயர். முதன்முறையாக நான் இம்மதத்திற்கு தொடர்புடையவன் அல்ல என ஒரு மிகப்பெரும் சமூகமே பார்த்துக் கொண்டிருக்க அரங்கனைக் காண தடைசெய்யப்பட்டு, பல அவமானங்களுக்கிடையே துரத்தப்பட்டேன்.
இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனாலும் என் பற்று அரங்கனையும் ஆண்டாளையும் விட்டு அணு அளவும் அகலாது. காலம், திருப்பாணனை உள்ளழைத்தது போல் என்னையும் என் நம்பிக்கையையும் ஒருநாள் ஏற்கும். அரங்கன் என்றும் எமக்குத் துணை" என்று கூறியிருந்தார்.
டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் விவசாயிகள் தங்களின் தற்காலிக கூடாரத்தை கலைக்கும் காட்சி.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பல்ராம்பூரில் சர்யூ கால்வாய் தேசிய திட்டத்தை இன்று இந்திய பிரதமர் மோதி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் மறைய இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் பிற வீரர்கள் குறித்து நினைவுகூர்ந்தார்.
“ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பிபின் ராவத்தின் மறைவு மிகப்பெரிய இழப்பு. அவர் உறுதி மிக்கவர். கடினமாக உழைத்து நாட்டின் ஆயுதப்படையை தன்னிறைவாக மாற்றினார்.” என்றார்.
“இந்தியா தற்போது மிகப்பெரிய துயரத்தில் உள்ளது. இருந்தாலும் ஓரிடத்தில் தேங்கிவிடப்போவதில்லை. நமது வளர்ச்சியின் வேகத்தையும் குறைத்துவிடப்போவதில்லை. இந்தியர்கள் ஒன்றுசேர்ந்து கடினமாக உழைப்போம். நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள சவால்களை எதிர்கொள்வோம்”
குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் குருப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்தார். அவரின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக போராடி வருவதாக மோதி தெரிவித்தார்.
“குரூப் கேப்டன் வருண் சிங்கின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். அவரின் உயிரை காப்பாற்ற நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். இந்த நாடு அவரின் குடும்பத்திற்கு உறுதியாக நிற்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்த வீரர்களுடனும் இந்த நாடு துணை நிற்கிறது.” என்றார்.
“இந்தியா புதிய தீர்மானங்களோடு முன்னேறி செல்வதை எங்கிருந்தாலும் பிபின் ராவத் பார்த்துக் கொண்டிருப்பார்,”
"இந்தியாவை மேலும் வலுவாக, வளம்பெற்ற நாடாக நாம் மாற்றுவோம்,"
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
கடந்த ஓராண்டு காலத்துக்கும் மேலாக மூன்று புதிய வேளாண் மசோதாக்களை ரத்து செய்யுக் கோரி போராடிய விவசாயிகள், அச்சட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தங்களது போராட்ட களத்திலிருந்து கலைந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.
டெல்லி ஹரியாணா மாநில எல்லையில் உள்ள சிங்கு பகுதியிலிருந்து விவசாயிகள் கலைந்து செல்வதாக, காணொளியோடு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது ஏ என் ஐ செய்தி முகமை.
தைவான் நாட்டுடனான ராஜீய உறவை நிகரகுவா துண்டித்துக்கொண்டது. தங்கள் நாட்டில் இருந்து பிரிந்து சென்ற பிராந்தியமாக தைவானை சீனா கருதுகிறது. எப்போதாவது ஒருநாள், தைவான் சீனாவுடன் மீண்டும் இணையும் என சீனா எதிர்பார்க்கிறது. ஆனால், ஜனநாயக ரீதியில் ஆட்சி செய்யும், சுதந்திரமான, இறையாண்மை மிக்க நாடாக தைவான் தன்னைக் கருதுகிறது.
இந்நிலையில், சில நாடுகள் சீனாவுக்கு ஆதரவாக, தைவானுடனான உறவை முறித்துக்கொண்டுள்ளன. அந்த பட்டியலில் சமீபத்தில் நிகரகுவா இணைந்துள்ளது. “தைவானுடனான ராஜீய உறவை நிகரகுவா முறித்துக்கொண்டது. இதன்மூலம், தைவானுடனான அதிகாரப்பூர்வ உறவு அல்லது தொடர்பை துண்டித்துள்ளது” என, நிகரகுவா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், “ஒரேயொரு சீனா மட்டுமே இருக்கிறது என அங்கீகரித்துள்ளதாக”, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருநாடுகளின் பல ஆண்டு நட்பு இதன்மூலம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஆழ்ந்த கவலையில் இருப்பதாகவும் தைவான் தெரிவித்துள்ளது.
2016-ல் தைவான் அதிபராக சாய் இங்-வென் பதவியேற்றதிலிருந்து தைவானின் சர்வதேச நட்பு நாடுகளின் எண்ணிக்கை 21-ல் இருந்து 14 ஆக சரிந்துள்ளது. தங்களுடன் ராஜீய உறவை வைத்துக்கொள்ள விரும்பும் நாடுகள், தைவானுடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என சீனா ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அந்த வகையில், நிகரகுவா நாட்டின் முடிவை சீனா வரவேற்றுள்ளது. “தைவானுடனான தொடர்பை விரிவுபடுத்த வேண்டும்” என, நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய இந்த நேரலையில் தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
எங்களோடு இணைந்திருங்கள்.