ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவிய தமிழக கிராம மக்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய விமானப்படை

குன்னூர் அருகில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை மீட்க உடனடியாக களத்தில் இறங்கிய நஞ்சப்ப சத்திரம் கிராம மக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி விமானப்படை அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு வணக்கம்!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. இலங்கையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

    இலங்கையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 93 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.இதன்படி, வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவினால் கடந்த மாதம் 12ம் தேதி வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.இதேவேளை, அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய எதிர்கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான நஷீர் அஹமட், ஹாரிஸ், தௌபீக், பைசல் காசிம் ஆகியோர் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்த அதேவேளை, அந்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிராக வாக்களித்திருந்தார்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் மற்றும் முஷாரப் ஆகியோர் வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுடன், அந்த கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளார்.இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார், வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.

  3. விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவிய கிராம மக்களுக்கு பாராட்டு சான்றிதழ், மதன் பிரசாத், குன்னூரிலிருந்து

    மக்களுக்கு சான்றிதழ் வழங்கும் ராணுவம்
    மக்களுக்கு சான்றிதழ்

    குன்னூர் அருகில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை மீட்க உடனடியாக களத்தில் இறங்கிய நஞ்சப்ப சத்திரம் கிராம மக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி விமானப்படை அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.

    கடந்த 8ஆம் தேதி குன்னூர் அருகே உள்ள காட்டேரி அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

    ஹெலிகாப்டர் விழுந்த இடத்தின் அருகே இருந்த மக்கள் உடனடியாக விரைந்து சென்று ஹெலிகாப்டரில் இருந்த மூன்று பேரை உயிருடன் மீட்டனர். இதையடுத்து மீட்பு பணிக்காக வந்த இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோருடன் இணைந்து மீட்பு பணிகளில் தொய்வில்லாமல் ஈடுபட்டனர்.

    இதையடுத்து இன்று காலை அம்மக்களுக்கு கம்பளிகள் வழங்கி தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு பாராட்டி இருந்தார். இதையடுத்து இன்று மாலை வெலிங்டன் ராணுவ பள்ளியின் சார்பில் அரிசி பருப்பு சர்க்கரை உப்பு ஆகிய நான்கு மளிகைப் பொருட்களை ஒவ்வொரு வீட்டிற்கும் விங் கமாண்டர் ராஜன் தலைமையிலான விமானப்படையினர் வழங்கினார்.

    தொடர்ந்து ஒவ்வொரு வீட்டிற்கும் அவர்கள் பெயரிட்ட ஒரு பாராட்டு கடிதத்தையும் வழங்கி நன்றி தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்ற போது உடனடியாக மீட்புப் பணியில் இறங்கியது மட்டுமே தங்களுக்கு மன நிறைவை அளிப்பதாகவும், தற்போது அதனை அங்கீகரிக்கும் வகையிலும், பாராட்டும் வகையிலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

  4. இலங்கையில் பொது இடங்களில் கட்டாய தடுப்பூசி அட்டை

    sri lanka

    பட மூலாதாரம், Getty Images

    இலங்கையில் பொது இடங்களுக்கு செல்லும் போது கோவிட் தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டை வைத்திருப்பதை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

    இதன்படி, கோவிட் தடுப்பூசியை பெறாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதனை தடுப்பதற்கான சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.

    எதிர்காலத்தில் பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டையைக் கொண்டு செல்வதைக் கட்டாயமாக்குவதற்கு கோவிட் குழு இன்று தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

    எனினும், இந்த சட்டம் என்று முதல் அமலாகும் என்பது குறித்து, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெளிவுப்படுத்தாத நிலையில், அது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்கவிடம் பிபிசி தமிழ் வினவியது.

    இந்த சட்ட அமலாக்கம் தொடர்பிலான அறிவிப்பு, விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் பதிலளித்தார்.

    இவ்வாறு வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலில், முழுமையான விபரங்கள் உள்ளடக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

    இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 60 வீதத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

  5. விரைவில் மாநிலக் கல்விக் கொள்கை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

    அரசு மாதிரிப் பள்ளிகளில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 80 பேருக்கு மடிக் கணினி வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தற்போதுள்ள கல்வி முறையில் நிறைய குறைகள் உள்ளன. இதை சரி செய்ய, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்த கருத்து குறித்து கேட்டதற்கு, “அடிக்கடி அவர்கள் இதை கூறி வருகின்றனர். ஆனால், கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்தபடி, மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை வேகப்படுத்தி, 2, 3 மாதங்களில் பணிகள் முடிவடையும். இதன், நிறைவில், நமக்கான கல்விக் கொள்கை ஏற்படுத்தப்படும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் படி, 3ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு என்பது ஏற்படையதல்ல. நடைமுறையில் உள்ள குறைகளைப் போக்க, செயல் வழிக் கல்வி நடைமுறைப்படுத்தப்படும்.” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

  6. பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத்தின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்

    இந்திய முப்படை தளபதி ஜென்ரல் பிபின் ராவத்தின் உடல் மற்றும் அவரின் மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் உடல் டெல்லி காண்டில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

    photo
  7. பாகிஸ்தான், சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகள் பிபின் ராவத் மரணமடைந்தது குறித்து என்ன சொல்கிறார்கள்?

    ஜெனரல் பிபின் ராவத்தின் மறைவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் பலர் தங்களின் இரங்கலை தெரிவித்திருந்தனர்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  8. "ஊருக்கு வரும்போதெல்லாம கர்வாலி மொழியில்தான் பேசுவார்"

    Bipin Rawat

    பட மூலாதாரம், Getty images

    "ஜெனரல் பிபின் ராவத் தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டவர். ஆனால், அவர் தன் கிராமத்தின் ஆன்மாவிலிருந்து விலகவில்லை. இந்த கிராமம் வளர்ச்சி அடைய வேண்டும் என அவர் விரும்பினார். இப்போது அவர் அங்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவருடைய சொந்த கிராமத்தில் பிபின் ராவத் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இங்கு ராவத் பெயரில் ராணுவப் பள்ளி அல்லது மருத்துவமனையை அரசு அமைக்க வேண்டும்".

    உத்தரகண்ட் மாநிலம் பவ்ரி கார்வால் மாவட்டத்தில் உள்ள துவாரிகல் வட்டத்தில் அமைந்துள்ள ஜாவத் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் சிங் தோமர் இவ்வாறு தெரிவித்தார்.

    பிரகாஷ் சிங் தொழில்ரீதியாக ஒப்பந்ததாரராக உள்ளார். பிபின் ராவத்தின் சொந்த கிராமத்தைச் சேர்ந்தவர்.

    அதே கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான சத்ய பிரகாஷ் கண்ட்வாலும், பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவியின் மரணத்தால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளார்.

  9. பிபின் ராவத்தின் உடல் இன்னும் சற்று நேரத்தில் ராணுவ மரியாதையுடன் அடக்கம்

    ஜென்ரல் பிபின் ராவத்தின் உடல் இன்னும் சற்று நேரத்தில் டெல்லி காண்ட் பகுதியில் அடக்கம் செய்யப்படுகிறது.

    அவரின் இறுதி ஊர்வலம் தற்போது நடைபெற்று வருகிறது.

    டிசம்பர் 8ஆம் தேதி தமிழ்நாட்டின் நிலகரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 12 பேர் சென்ற ஹெலிகாப்ட விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்தார்.

    தற்போது அவர் பெங்களூரில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

    இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த பிற ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்று வருகின்றன.

  10. டெல்லியிலிருந்து நேரலை

    பிபின் ராவத் இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்திலிருந்து நேரலை

  11. பாஜக மாவட்டத் தலைவர் சரவணன் மீது வழக்கு

    மதுரையில் நேற்று யூட்யூபர் மாரிதாஸை கைது செய்ய சென்ற காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி அனுமதியின்றி தொண்டர்களை திரட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாஜக மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் மீது வழக்கு பதிவுதுள்ளனர் போலீசார். அவருடன் வந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஐம்பதுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் மீதும் மதுரை திருப்பாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  12. 17 குண்டுகள் முழங்க பிபின் ராவத்துக்கு ராணுவ மரியாதை

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி (சிடிஎஸ்) பிபின் ராவத்துக்கு 17 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செய்யப்பட்டது. மற்ற படைகளின் ராணுவ மரியாதைகள் எல்லாம் நிறைவடைந்த பின் இறுதியாக அவரது குடும்ப உறுப்பினர்களால், அவரது உடல் எரியூட்டப்படும் என ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    பிபின் ராவத்தின் இறுதி நிகழ்ச்சிகளை அவர் பணியாற்றிய 5/11 கோர்க்கா ரைஃபிஸ்ல் படைப்பிரிவே கவனித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  13. மும்பை நகர சிவில் நீதிமன்றத்தை நாடியுள்ள சமீர் வான்கடே

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    சமூக வலைதளங்களில் தங்களைக் குறித்து தவறான செய்திகள் பிரசுரிக்கவும், பிரசுரமான பதிவுகளை மற்றவர்கள் பார்க்கும் விதத்தில் இருப்பதையும் தவிர்க்க, கூகுள், ஃபேஸ்புக் (மெடா), ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்குக் வழிகாட்டி உத்தரவிடுமாறு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பிராந்திய இயக்குநர் சமீர் வான்கடே மற்றும் அவரது மனைவி கிராந்தி ரெட்கர் மும்பை நகரத்தில் உள்ள நகர சிவில் நீதிமன்றதை நாடியுள்ளனர்.

  14. பிபின் ராவத் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்தை விசாரிக்க முப்படைகளைக் கொண்ட 'கோர்ட் ஆஃப் என்கொயரி' அமைக்கப்பட்டுள்ளது

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    கடந்த புதன்கிழமை ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உட்பட 12 ராணுவத்தினர் உயிரிழந்தனர். இந்த விபத்து எப்படி நிகழந்தது என்பதைக் குறித்து விசாரிக்க, இந்தியாவின் முப்படைகளைக் கொண்ட 'கோர்ட் ஆஃப் என்கொயரி' எனப்படும் விசாரணை ஆயம் அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை கூறியுள்ளதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    இந்த விசாரணை ஆயம் விரைவாக செயல்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படும். அதுவரை உயிரிழந்தவர்களுக்கு மதிப்பளித்து வதந்திகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோரியுள்ளது இந்திய விமானப்படை.

  15. பிபின் ராவத் இறுதி அஞ்சலி நிகழ்வில் பல சமய வழிபாடு - பல நாட்டு ராணுவ அதிகாரிகள் அஞ்சலி

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    பல்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்ட மத பெரியவர்கள், பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத் இறுதி அஞ்சலியில் பல சமய வழிபாடு நடத்தியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா பிபின் ராவத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  16. அர்விந்த் கேஜ்ரிவால், ராகுல் காந்தி, கனிமொழி, ராசா போன்ற முக்கிய பிரமுகர்கள் பிபின் ராவத்துக்கு அஞ்சலி

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    டெல்லியின் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹரீஷ் சிங் ராவத், டெல்லியின் துணைநிலை ஆளுநர் அனில் பாய்ஜால், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்க்கே, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ கே ஆண்டனி ஆகியோர் பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத்துக்கு இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர்.

    தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆ ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத்தின் மகள்களான கிரித்திகா மற்றும் தரணி ஆகியோரும் தங்கள் பெற்றோருக்கு அஞ்சலி செலுத்தினர்.

  17. ராணுவத்தினர் குடும்பங்களுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் கடிதம்

    கடந்த 8ம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் , இந்திய ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட13 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், பிபின் ராவத் உள்ளிட்ட 12 பேரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல், வருத்தம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் அனுப்பியுள்ளார். இதில், "இந்த கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்கிறார்கள். இந்த ஈடு செய்ய முடியாத இழப்பில் இருந்து மீண்டு வர தைரியத்தையும் பலத்தையும் நீங்கள் பெற வேண்டும்." என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விபத்து குறித்த தகவல் அறிந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மீட்பு பணிகள், உடல்களை அனுப்பி வைக்கும் பணியையும் துரிதப்படுத்தினார்.

  18. பிபின் ராவத்துடன் உயிரிழந்த பிரிகேடியருக்கு அஞ்சலி

    கடந்த 8ம் தேதி குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தலைமைத தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இதில், பிபின் ராவத்துடன் பயணித்த அவரது ஆலோசகர் பிரிகேடியர் லக்ஸ்பிந்தர் சிங் லிடெர் உடல் தில்லி கண்டோன்மென்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    அவரது உடலுக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதிகள் எம்.எம்.நரவனே, ஹரிகுமார், வி.ஆர்.சவுத்திரி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும், ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  19. பிபின் ராவத் உட்பட 12 ராணுவத்தினருக்கு இன்று இறுதி அஞ்சலி

    கடந்த புதன்கிழமை தமிழ்நாட்டில் ஏற்பட்ட எம் ஐ 17 வி5 ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முப்படைத் தளபதி (சிடிஎஸ்) பிபின் ராவத் உட்பட 12 ராணுவ வீரர்களுக்கு இன்று முழு ராணுவ மரியாதையோடு இறுதி அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    டெல்லியில் உள்ள ப்ரார் சதுக்கத்தில், டிசம்பர் 10ஆம் தேதி சனிக்கிழமை மாலை சுமார் 5 மணிக்கு இறுதிச் சடங்கு நடக்கும் என ஏ.என்.ஐ. குறிப்பிட்டுள்ளது. இறுதி ஊர்வலம் இன்று மதியம் 2 மணிக்கு மேல் காமராஜ் சாலையில் இருந்து புறப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் 12.30 மணி வரை பொதுமக்கள் மற்றும் பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராணுவ வீரர்களும், காமராஜ் சாலையில் பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தலாம் என்றும் ராணுவ தரப்பில் கூறியுள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. வணக்கம் நேயர்களே!

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்புடைய முக்கிய நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலையில் தொகுத்து வழங்குகிறோம்.

    எங்களோடு இணைந்திருங்கள்.