சீனாவில் டிராபிக் லைட் சிஸ்டம் மூலமாக பத்திரிகையாளர்கள் கண்காணிப்பு

டிராபிக் லைட் சிஸ்டம் மூலமாக சீனாவில் பத்திரிகையாளர்கள், முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று சீன அரசு கருதும் பிரிவினர் கண்காணிக்கப்படுகிறார்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. சீனாவில் டிராபிக் லைட் அமைப்பு மூலம் கண்காணிக்கப்படும் பத்திரிகையாளர்கள்

    சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் பிற ‘’கவனிக்கத்தக்க நபர்களை’’ முக ஸ்கேனிங் தொழில் நுட்பத்தின் மூலம் கண்காணிக்கும் அமைப்பை கட்டமைத்து வருகின்றனர்.

    பிபிசிக்கு கிடைத்த ஆவணங்களின்படி, ட்ராபிக் லைட் அமைப்பு மூலமாக கண்காணிக்கப்படும் இவர்கள், பச்சை, ஆம்பர், சிகப்பு ஆகிய வண்ணங்களில் வகைப்படுத்தப்படுகிறார்கள். சிவப்பு பட்டியலில் வரும் பத்திரிகையாளர்கள்,அதற்கேற்ப நடத்தப்படுவார்கள். இது குறித்து கருத்து கேட்டதற்கு,ஹெனான் பொது பாதுகாப்பு பிரிவு பதில் தரவில்லை.

    வெளிநாட்டு மாணவர்கள், புலம்பெயர்ந்த பெண்கள் உள்ளிட்டோரை ‘’கவனிக்கத்தக்க நபர்கள்’’ என்கிற வரையறைக்குள் கண்காணிப்பு பகுப்பாய்வு அமைப்பான ஐபிவிஎம் வைத்துள்ளது.

  2. வணக்கம் நேயர்களே!

    இன்றைய இந்த நேரலைக்கு நேயர்களை வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலக நாடுகள் தொடர்புடைய செய்திகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொடர்ந்து வழங்குகிறோம். எங்களோடு இணைந்திருங்கள்.