வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது
தமிழ்நாட்டை ஒட்டிய தெற்கு வங்கக்
கடலின் மத்தியப் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது வடக்கு
- வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளதாக
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இப்போது இந்தக் காற்றழுத்தத் தாழ்வு
மண்டலமானது சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 430
கி.மீ. தூரத்திலும்
புதுச்சேரியிலிருந்து கிழக்கு - தென்கிழக்கு திசையில் 420
கி.மீ தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு - வடமேற்கு திசையில்
தொடர்ந்து நகர்ந்து 11ஆம் தேதி அதிகாலை
தமிழக கரையை நெருங்கும். மேலும் இதுமேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு மற்றும் அதனை
ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைப் பகுதிகளுக்கு இடையில்,
குறிப்பாக காரைக்காலுக்கும்ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையில்
புதுச்சேரிக்கு வடக்கே நாளை மாலை கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டின் வட
மாட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்யுமென வானிலை ஆய்வு
மையம் எச்சரித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு நாளை அதிதீவிர கன
மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
திருச்சி: மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்கள் தண்ணீரில் மூழ்கி காணப்படுகின்றன.
பெரும்பாலான இடங்களில் மழைநீர் ஓடுவதற்கான வலிகள் இல்லாததால்,
வீட்டிற்குள் நீர் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் மரங்கள் மின்கம்பங்கள் போன்றவை அறுந்து மழைத் தண்ணீரில் விழுந்து விடுகின்றன.
இதனால் இரவில் பயணிக்கும் மக்களுக்கு விபத்து ஏற்படுகிறது.
வகையில் இன்று திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோப்பு கிராமத்தில்,
வசந்தா எனும் 70 வயது மூதாட்டி தனது வீட்டிற்கு வெளியே நடந்து வந்த போது எதிர்பாராதவிதமாக கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல், மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தைகள் பெரியவர்கள் மழைக்காலங்களில் வீட்டை விட்டு வெளியே வரும்போது மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என்று காவல்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் மழைக்கு 22 பேர் பலி
இலங்கையில் மழையுடனான சீரற்ற வானிலையினால், இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மண்சரிவு, வெள்ளப் பெருக்கு என பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு ஏற்பட்டுள்ள அனர்த்தங்களினால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
6 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளார்.
17 மாவட்டங்களைச் சேர்ந்த 17,481 குடும்பங்களின் 62,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செல்லூர் ராஜூ உள்ளிட்ட 998பேர் மீது வழக்குப்பதிவு
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் திமுகவை கண்டித்து மதுரையில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட 998பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் அத்துமீறலை கண்டித்தும், திமுக அரசு அலட்சியமாக செயல்படுவதாக கண்டனம் தெரிவித்தும் இந்த அணையால் பயன்பெறும் ஐந்து மாவட்டங்களில் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை முனிச்சாலை பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் 144 தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அவரது ஆதர்வாளர்கள் 998 பேர் மீது தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கனமழை பெய்யும்போது மக்கள் என்ன செய்ய வேண்டும்?
கனமழை பெய்யும்போது மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலத்திர பாபு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அது குறித்த காணொளி இங்கே.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
'நவம்பர் 10, 11இல் சூறாவளிக் காற்று வீசும்'
நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்றுமணிக்கு 45 - 55 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு விவரங்களை கீழே உள்ள ஃபேஸ்புக் நேரலையில் காணலாம்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையைக் கடக்க வாய்ப்பு
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கடலூர் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இப்போதைய நிலவரப்படி இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் என்ன நிலவரம்?
தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
''மழையால் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் பாதிப்பை சந்தித்தாலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய இதுவரை மாவட்டங்களில் பெரியளவில் பாதிப்புகள் இல்லை'' என்கின்றனர் அப்பகுதி மக்கள். என்ன நடக்கிறது?
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறிவிட்டன.
நாகப்பட்டினத்தில் கடல் போல் காட்சியளிக்கும் விளைநிலம், கோவி.மணிவண்ணன், பிபிசி தமிழுக்காக
கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டம் வடகுடி தெத்தி ,பாலையூர் ,செல்லூர் ,திருக்குவளை , திருமருகல்,கீழ்வேளூர்,திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
பாலையூர் பகுதியில் விவசாய நிலம் கடல் போல் காட்சி அளிக்கின்றது. தாளடி நடவுக்கு தயாராக இருந்த நாற்றுகள் மழையில் முழ்கி மிதந்து வருகின்றன.
கடன் வாங்கி சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
மேலும் நாகை மாவட்டத்தில் கனமழை அதிகபட்சமாக திருப்பூண்டியில் 30 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று வானிலை மையம் நாகைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருந்தாலும் ரெட் அலர்ட் அளவைப் போல நேற்று மதியம் பெய்த மழை இரவிலும் தொடர்ந்தது. தற்போது பகலிலும் மழை பெய்து வருகிறது.
குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது வீட்டிற்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் வீட்டில் தங்க முடியாமல் அருகில் உள் புயல் பாதுகாப்பு கட்டடம், பள்ளிகள் மற்றும் மண்டபங்களில் தஞ்சமடைந்தனர். அங்கு அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக குடிநீர், உணவுகள் மற்றும் மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம், காரைக்காலில் அதிக மழை
நேற்று காலை 8.30 மணியில் இருந்து இன்று காலை 8.30 மணிவரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் உள்ள கடலோர மாவட்டங்களில் மிகவும் கணிசமான அளவு மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 31 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவிக்கிறது.
அடுத்தபடியாக காரைக்காலில் 28.7 செ.மீ மழை பெய்துள்ளது.
குறிப்பிட்ட 24 மணிநேரத்தில் சென்னையில் 1.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
மலாலா யூசஃப்சாய் திருமணம்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற செயல்பாட்டாளர் மலாலா யூசஃப்சாய் திருமணம் பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் நகரில் நடந்து முடிந்துள்ளது.
அசர் மாலிக் என்பவரை மலாலா யூசஃப்சாய் மணம் முடித்துள்ளார். தங்கள் திருமண நாள் தமது வாழ்வின் ஒரு மதிப்புமிக்க நாள் என்று 24 வயதாகும் மலாலா யூசஃப்சாய் கூறியுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, தமது பள்ளிக் காலத்திலிருந்தே பெண்கள் கல்விக்கான செயல்பாட்டாளராக இருந்த மலாலா 2012ஆம் ஆண்டு தாலிபான் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார்.
அதன்பின்பு பாகிஸ்தானில் இருந்து வெளியேறி பிரிட்டனின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் பிராந்தியத்தில் வசித்து வருகிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
“கேப்பிட்டல் தாக்குதல் குறித்து முன்பே ட்விட்டர் தலைவரை எச்சரித்தேன்” இளவரசர் ஹேரி
சஸெக்ஸின் கோமகன் ஹேரி, அமெரிக்காவில் நிலவும் அரசியல் அமைதியற்ற சூழலைக் குறித்து ஜனவரி 6ம் தேதி ட்விட்டர் தலைவர் ஜேக் டார்ஸியை எச்சரித்ததாகக் கூறியுள்ளார்.
அதற்கு அடுத்த நாள்தான் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.
“ட்விட்டர் தளம் ஓர் அரசியல் குழப்ப நிலையை அரங்கேற்ற அனுமதிக்கிறது என நான் அவரை எச்சரித்தேன்” என கோமகன் ஹேரி அமெரிக்காவில் நடந்த ரீ:வொயர்ட் என்கிற தொழில்நுட்ப குழுவில் பேசினார்.
சமூக வலைத்தளங்கள் பொய் செய்திகள் மற்றும் வெறுப்புக்கு பங்களிக்கிறதா என்கிற தலைப்பில் விவாதம் நடந்தது.
“நாடாளுமன்ற தாக்குதலுக்கு முந்தைய நாள்தான் நான் மின்னஞ்சலை அனுப்பினேன். அதற்கு அடுத்த நாள் அந்த சம்பவம் நடந்தது, அவரிடமிருந்து எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை” என ஹேரி கூறினார்.
இது குறித்து ட்விட்டர் முதன்மைச் செயல் அதிகாரி ஜாக் டார்ஸி பொதுவெளியில் எந்த வித கருத்தையும் கூறவில்லை.
பட மூலாதாரம், Reuters
நேரலைக்கு வரவேற்கிறோம்!
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.
இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் விக்னேஷ் அ, கெளதமன் முராரி.