நன்றி நேயர்களே!
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தான் பிரதமர் ஆனால் முதலில் எடுக்கும் நடவடிக்கை பெண்கள் இட ஒதுக்கீடு என்று குமரி பள்ளியில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகளிடம் கூறினார் ராகுல்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
புதுச்சேரியில் கொரோனா தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வந்த சூழலில், 9ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை நாளை(நவம்பர் 8) முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
இதனிடையே புதுச்சேரியில் கனமழை நீடித்து வருவதன் காரணமாக தற்காலிகமாக பள்ளிகள் திறப்பை பள்ளிக்கல்வித் துறை ஒத்தி வைத்துள்ளது.மேலும் பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனப் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். இதேபோல் கன மழை காரணமாக 9-ம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுமார் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வெளியூர் மக்கள் சென்னை வருவதை அடுத்த இரண்டு மூன்று நாள்களுக்கு தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
"தெருக்களில் அதிகம் ஆதரவற்ற குழந்தைகள் இருப்பதாகவும் பட்டினிச் சாவுகள் நிகழ்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன" என்கிறார் டெய்லி என்.கே என்ற நாளிதழின் ஆசிரியர் லீ சாங் யாங். இவருக்கு வடகொரியாவில் செய்தித் தொடர்புகள் உள்ளன.
"வட கொரியாவில் உள்ள அடித்தட்டு மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். எதிர்பார்த்ததை விட உணவுத் தட்டுப்பாடு மோசமாக இருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.
வட கொரியாவிலிருந்து செய்தியைப் பெறுவது நாளுக்கு நாள் கடினமாகிக் கொண்டிருக்கிறது. சீனாவிலிருந்து கோவிட்-19 பரவிவிடக்கூடாது என்பதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே எல்லை மூடப்பட்டிருக்கிறது. கொரியப் பிரிவினையின்போது தென்கொரியாவுக்குச் சென்ற நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு செய்தி அனுப்புவதுகூட ஆபத்தான வேலையாக மாறியிருக்கிறது.
இராக் தலைநகர் பாக்தாத்தில் பிரதமர் முஸ்தஃபா அல் கதிமி வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் தாம் எவ்வித காயமுமின்றி தப்பியதாக கூறியுள்ளார் பிரதமர் அல் கதிமி. இராக் ராணுவம் இது ஒரு 'கொலை முயற்சி' என குறிப்பிட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி கூறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 7ம் தேதி) காலை நேரத்தில் ஆயுதமேந்திய டிரோன், பச்சை மண்டலத்திலுள்ள பிரதமரின் வீட்டை இலக்கு வைத்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு என்ற இடத்தைச் சேர்ந்த செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் இருந்து வந்த நண்பர்களுடன் உரையாடல். அவர்களுடைய வருகை தீபாவளியை மேலும் சிறப்பானதாக ஆக்கியது.
பண்பாடுகளின் சங்கமமே நம் நாட்டின் மிகப் பெரிய பலம். அதை நாம் பாதுகாக்கவேண்டும் என்று கூறி ஒரு ராகுல் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் ஒரு வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த உரையாடல் தொடர்பாக அந்த ட்வீட்டில் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார் ராகுல். அதில் ஒருவர் அவரிடம் நீங்கள் பிரதமரானால், முதலில் எடுக்கும் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று கேட்கிறார். அதற்கு ராகுல், முதலில் எடுக்கும் நடவடிக்கை பெண்கள் இட ஒதுக்கீடு என்று பதில் சொல்கிறார்.
சியாரா லியோன் தலைநகர் ஃப்ரீடவுனில், எரிபொருள் டேங்கரும் - லாரி ஒன்றும் மோதிக்கொண்டதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
அதில் குறைந்தபட்சம் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு (கிரீன்விச் சராசரி நேரம்), சொயித்ரம் சூப்பர் மார்கெட் பகுதிக்கு வெளியில் நடந்ததாக நம்பப்படுகிறது.
எரிபொருள் டேங்கர், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருளை நிரப்ப நுழைந்து கொண்டிருந்த போது, இந்த விபத்து நடந்ததாக சியாரா லியோன் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை கூறியது.இரு வண்டிகள் மோதிக்கொண்டதில், முதலில் எரிபொருள் டேங்கரிலிருந்து எரிபொருள் கசியத் தொடங்கியது, அதன் பிறகு தீப்பிடித்து எரியத் தொடங்கி, பெரும் விபத்து ஏற்பட்டது. பெரிய அளவில் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தைப் பார்வையிட்ட அந்நாட்டு துணை அதிபர் மொஹம்மத் ஜுல்டே ஜலோ இது ஒரு தேசியப் பேரிடர் என்று கூறினார்.
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்புடைய முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குவோர் அ.தா.பாலசுப்ரமணியன், கெளதமன் முராரி.