நன்றி நேயர்களே!
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மேலும் ராஜ்கிரண் உடலின் புகைப்படத்தை பார்க்கும் பொழுது அவர் அடித்துக் கொல்லப்பட்டது போல் உள்ளது. ஆகவே இந்திய குற்றவியல் சட்டத்தின் படி மூன்று மருத்துவர்களை வைத்து மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என வழக்கறிஞர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
பரமக்குடியில் மகளின் காதல் திருமணத்திற்கு காரணமாக இருந்த மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்றதாக கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே அணிகுருந்தன் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம்,பூங்கோதை தம்பதியினர். முருகானந்தம் வெளி நாட்டில் வேலை செய்து வருகிறார்.
இதனால் முருகானந்தம் மனைவி பூங்கோதை பரமக்குடி அருகே சோமநாதபுரத்தில் மகள் அபிநயாவுடன் வசித்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த முருகானந்தம் ஊருக்கு வந்த போது இவரது மகள் அபிநயா,ரவிகிருஷ்ணன் என்பவருடன் காதல் திருமணம் செய்தது தெரிய வந்துள்ளது.
இதற்கு மனைவி பூங்கோதைதான் காரணம் என கருதி இன்று அவரது வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்ற மனைவியை முருகானந்தம் அரிவாளால் வெட்டி படுகொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலப்பரப்புகளை மீட்டெடுக்கவும் உணவு அமைப்புகளை மாற்றவும் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப் போவதாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அறிவித்துள்ளார்.
தனது பெசோஸ் எர்த் ஃபண்ட் மூலமாக இது நிறைவேற்றப்படும் என்று அவர் கூறியுள்ளார். கிளாஸ்கோவில் COP26 பருநிலை மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர் விண்வெளிக்குச் சென்றபோது இயற்கை பலவீனமடைந்திருப்பதை உணர்ந்ததாகக் கூறினார்.
பூமியில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக விண்வெளிக்குச் செல்வதற்காக பணத்தை செலவழிப்பதாக பெசோஸ் உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள் விமர்சனங்களுக்கு உள்ளானார்கள்.
உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான அமேசானின் சுற்றுச்சூழல் நடைமுறைகள் குறித்து அதன் தொழிலாளர்களாலும் அந்த நிறுவனம் விமர்சிக்கப்பட்டது.
"உலகின் பல பகுதிகளில் ஏற்கெனவே கார்பன் உறிஞ்சும் நிலையில் இருந்து கார்பன் உமிழும் நிலைக்கு இயற்கை மாறியிருக்கிறது" என்று கிளாஸ்கோ மாநாட்டில் பெசோஸ் பேசினார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யவும்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மகளின் காதல் திருமணத்திற்கு காரணமாக இருந்த மனைவியை சரமாரியாக வெடிக்கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே அணிகுருந்தன் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம்,பூங்கோதை தம்பதியினர். முருகானந்தம் வெளி நாட்டில் வேலை செய்து வருகிறார்.
இதனால் முருகானந்தம் மனைவி பூங்கோதை பரமக்குடி அருகே சோமநாதபுரத்தில் மகள் அபிநயாவுடன் வசித்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த முருகானந்தம் ஊருக்கு வந்த போது இவரது மகள் அபிநயா,ரவிகிருஷ்ணன் என்பவருடன் காதல் திருமணம் செய்தது தெரிய வந்துள்ளது.
இதற்கு மனைவி பூங்கோதைதான் காரணம் என கருதி இன்று அவரது வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்ற மனைவியை முருகானந்தம், தலை, கழுத்து, கை உள்ளிட் பகுதிகளில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார்.
தகவலறிந்த பரமக்குடி நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூங்கோதையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமககுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகானந்தத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்
இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக்கோப்பை தொடரில் அடுத்தடுத்த தோல்விக்களைச் சந்தித்துள்ளது சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இதில் கேப்டன் விராட் கோலியின், ஒரு வயது கூட ஆகாத மகளுக்கு, ஒரு நபர் ட்விட்டர் பதிவில் பாலியல் ரீதியாக அச்சுறுத்தல் விடுத்தது பெரும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.
மிகவும் கேவலமான அந்தப் பதிவை பகிர்ந்த நபர் மீது எடுக்கப்பட்ட நபர் நடவடிக்கை என்ன என்று கேட்டு டெல்லி மகளிர் ஆணையம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கோலிக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார்.
"அன்புள்ள விராட், இந்த நபர்கள் வெறுப்பால் நிறைந்துள்ளனர். ஏனெனில் யாரும் அவர்களுக்கு அன்பை வழங்குவதில்லை. அவர்களை மன்னித்து விடுங்கள். அணியை காப்பாற்றுங்கள்." என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நடுக்கடலில் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் உயிரிழந்ததாக கூறப்படும் மீனவர் ராஜ்கிரணின் உடலை மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என அவரது மனைவி பிருந்தா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் இன்று மனு அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த மாதம் 18ஆம் தேதி சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற சுகந்தன், சேவியர், ராஜ்கிரண் ஆகியோர் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடித்தால் அவர்களை கைது செய்ய முற்பட்ட போது விசைப்படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் மீன்பிடி படகு நடுக்கடலில் மூழ்கியது என்று மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
படகில் இருந்த சுகந்தன் மற்றும் சேவியர் இருவரையும் உயிருடன் மீட்ட இலங்கை கடற்படையினர் ராஜ்கிரண் உடல் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. பின்னர் ராஜ்கிரணின் உடல் இலங்கை யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இந்திய தூதரகத்தின் மூலம் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் கோட்டைபட்டிணத்தில் உள்ள உறவினரிடம் ஒப்படைக்கபட்டு மயானத்தில் புதைக்கப்பட்டது. முன்னதாக ராஜ்கிரண் உடலை பார்க்க வேண்டும் என உறவினர்கள் கேட்டனர் ஆனால் உடல் கடலில் இருந்து எடுக்கபட்டதால் உடல் மிகவும் மோசமாக உள்ளது எனவே உடலை பெட்டியில் இருந்து திறந்து காட்ட முடியாது என அரசு அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இன்று மீனவர் ராஜ்கிரண் மனைவி பிருந்தா மற்றும் சமூக அமைப்புகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை சந்தித்த தனது கணவர் உடலை தன்னிடம் காண்பிக்காமல் புதைத்துவிட்டனர்; எனது கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளது எனவே புதைத்த உடலை மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என மனு அளித்தார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பிருந்தா, எனது கணவரின் உடலை என்னிடம் காண்பிக்கவில்லை. அது எனது கணவரின் உடல்தானா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. எனவே புதைத்த உடலை தோண்டி எடுத்து மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்றார். எனது கணவரை கடலில் இருந்து மீட்டதாக இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள புகைப்படத்தில் எனது கணவரை இலங்கை கடற்படையினர் அடித்து துன்புறுத்தி துப்பாக்கியால் சுட்டதைப் போல் இருந்தது. கடலில் மூழ்கி இறந்தவர்கள் படம் இது போல் இருக்காது என்றார்.
இது குறித்து மதுரையை சேர்ந்த பிருந்தாவின் வழக்கறிஞர் பாண்டியராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், மீனவர் ராஜ்கிரண் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் கோட்டைபட்டினம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்திய மீனவர் கொல்லப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை எனவே உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றார்.
மேலும் ராஜ்கிரண் உடலின் புகைப்படத்தை பார்க்கும் பொழுது அவர் அடித்துக் கொல்லப்பட்டது போல் உள்ளது. ஆகவே இந்திய குற்றவியல் சட்டத்தின் படி மூன்று மருத்துவர்களை வைத்து மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என வழக்கறிஞர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
பிரிட்டன் நகரின் க்ளாஸ்கோவில் நடைபெற்று வரும் COP26 காலநிலை மாற்ற மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரும் உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்சை சந்தித்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதுமுள்ள நீர்நிலைகள் நிரம்பிவருகின்றன.
கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியை அடையக்கூடும்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாலும் தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.
மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமான 1000 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் அஜித் பவார். தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவாரின் நெருங்கிய உறவினர்.
அஜித் பவார் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிறுவனங்கள் அனைத்தும் முறையாக வருமான வரியை செலுத்தியுள்ளதாக அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் இந்தியாவின் 14 மாநிலங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணி இன்று நடந்து வருகிறது. ஏ.என்.ஐ முகமை, இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரத்தை வெளியிட்டுள்ளது.விவரங்கள் பின்வருமாறு:
மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடந்த நான்கு தொகுதிகளிலும், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. மேகாலயாவில் என்.பி.பி என்றழைக்கப்படும் தேசிய மக்கள் கட்சி மற்றும் யூ.டி.பி என்றழைக்கப்படும் யுனைடெட் டெமாக்ரடிக் கட்சி தலா ஒரு இடத்தில் முன்னிலை வகித்து வருகின்றன.
மிசோரத்தில் மிசோ நேஷனல் ஃப்ரண்ட் ஓரிடத்திலும், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியும், தெலங்கானாவில் பாரதிய ஜனதா கட்சி ஓரிடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன.
ஆந்திர பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும், அசாமில் இடைத்தேர்தல் நடந்த ஐந்து இடங்களில் பாஜக மூன்று இடங்களிலும், யூ.பி.பி.எல் என்றழைக்கப்படும் யுனைடெட் பீபிள்ஸ் பார்ட்டி லிபரல் இரு இடங்களிலும், பீகாரில் ஜனதா தளம் (யூ) மற்றும் ராஸ்ட்ரிய ஜனதா தளம் தலா ஓரிடத்தில் முன்னிலையில் உள்ளனர். ஹரியாணாவில் ஐ.என்.எல்.டி என்றழைக்கப்படும் இந்தியன் நேஷனல் லோக் தள் தேர்தல் நடந்த ஒரே ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரத்தில் உள்ள டிஸ்னி லேண்டில் வந்து சென்ற பார்வையாளர் ஒருவர், வீடு திரும்பிய பின் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்ததால், ஒட்டுமொத்த டிஸ்னி லேண்ட் அடுத்த சில தினங்களுக்கு மூடப்பட்டுள்ளது.
திங்கள் மற்றும் செவ்வாய் இருநாட்கள் டிஸ்னி லேண்ட் மூடப்பட்டு, அனைத்து பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
சீனா வரும் பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த உள்ளது. எனவே அதற்குள் தன் நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கையை பூஜ்ஜியமாக்க நம்பிக் கொண்டிருக்கிறது.
திங்கட்கிழமை கணக்குப் படி, சீனாவில் 92 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் விக்னேஷ் அ, கெளதமன் முராரி.