நன்றி நேயர்களே...
இன்றைய இந்த நேரலையில் இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி.
மீண்டும் நாளை வேறொரு நேரலையில் சந்திப்போம்.
இந்த இரவு இனியதாகட்டும்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தீ விபத்து உண்டாவதற்கு முன்பு அங்கு ஒரு பெரிய வெடிப்பு சத்தத்தைக் கேட்டதாக அப்பகுதியில் குடியிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய இந்த நேரலையில் இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி.
மீண்டும் நாளை வேறொரு நேரலையில் சந்திப்போம்.
இந்த இரவு இனியதாகட்டும்.
மும்பை கடலோர பகுதியில், ஒரு சொகுசு கப்பலில் நடந்த கொண்டாட்டத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு இன்று பிணை கிடைக்கவில்லை.
ஆர்யன் கான் மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் பிணை கோரியது தொடர்பான முடிவை புதன்கிழமை வரை ஒத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக ஆர்யன் கான் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இன்று இரண்டாவது நாளாக நடந்த அவரது பிணை மனு மீதான விசாரணையில் ஆரியன் கான் தொடர்ந்து போதைப் பொருள் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் என்று அவரை கைது செய்த நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இயக்குநர் 'சிறுத்த' சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி என பலரும் நடித்திருக்கும் படம் 'அண்ணாத்த'.
அடுத்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் படம் வெளிவர இருக்கும் நிலையில் படத்தின் டீசரை, அதன் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. படத்தின் முதல் பாடலான 'அண்ணாத்த' கடந்த வாரத்தில் வெளியான நிலையில் சில தினங்களுக்கு முன்பு படத்தின் இரண்டாம் பாடலான 'சாரக்காற்றே' வெளியானது.
இதில் முதல் பாடலான 'அண்ணாத்த' எஸ்.பி. பாலசுப்ரமணியம் இறப்பதற்கு முன்பு பாடிய கடைசி பாடல்.
படத்தின் இசையமைப்பாளர் டி. இமான்.
படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடைபெற்றது. ரஜினி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'அண்ணாத்த' படத்தின் டீசரில் ரஜினி படங்களுக்கே உரிய மாஸ் வசனங்கள், அதிரடி சண்டைக்காட்சிகள், திருவிழா கொண்டாட்டம் என அனைத்தும் உள்ளன.
படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது.
தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தைவானில் உள்ள கௌஷியாங் நகரில் இருக்கும் 13 மாடி கட்டடம் ஒன்றில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து நடந்த இந்த கட்டடம் அடுக்குமாடி குடியிருப்பாகவும் வர்த்தக வளாகமாகவும் இயங்கியது என்று உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில் உண்டான தீயை அணைக்க 4 மணி நேரத்திற்கும் மேல் ஆனது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 79 பேரில் 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தீ விபத்து உண்டாவதற்கு முன்பு அங்கு ஒரு பெரிய வெடிப்பு சத்தத்தைக் கேட்டதாக அப்பகுதியில் குடியிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டபோது அவருடன் செல்ஃபி எடுத்து வைரலான நபரான கே.பி. கோஸ்வாமிக்கு எதிராக புனே மாநகர காவல்துறை லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
2018இல் பதிவான ஒரு பண மோசடி வழக்கில் இது வெளியிடப்பட்டுள்ளது என்கிறது புனே காவல்துறை.
கே.பி. கோஸ்வாமி ஆர்யன் கான் உள்ளிட்டவர்கள் கைதான வழக்கில் சாட்சி என்று நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ தெரிவித்திருந்தது.
வில் மற்றும் அம்பை வைத்து ஒரு நபர் தாக்குதல் நடத்தியதில் நார்வேயில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்; இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் இருந்து தென்மேற்கே உள்ள கொங்ஸ்பெர்க் நகரில் இந்த தாக்குதல் நடப்பதாக உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 6:13 தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதலை நடத்தியதாக 37 வயதாகும், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் குழுவாக இயங்கினாரா அல்லது தனியாகத் தாக்குதல் நடத்தினாரா, இது தீவிரவாதத் தாக்குதலா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் முதல் தடவையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் கிழக்கு கடற்பரப்பில் வைத்து, இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.
வெற்றிலைகேணி கடற்பரப்பில் 2 மீன்பிடி படகுகளில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கோவிட் தொற்றின் 3வது அலை கடந்த ஏப்ரல் மாதம் பரவ ஆரம்பித்திருந்தது.
இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பில் இறுதியாக கடந்த மார்ச் மாதமே இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
நீண்ட கால நண்பர் மற்றும் சகாவான சுப்ரமணியன் சுவாமியுடன் ஓர் இனிய மாலைப்பொழுதில் நவராத்திரி திருநாளைக் கொண்டாடியதாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார்.
அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகளையும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் மூலாதாரத்தைக் கண்டறிவதற்கான புதிய நிபுணர் குழுவை உலக சுகாதார அமைப்பு அமைத்துள்ளது.
கொரோனா எங்கு தோன்றியது என்பதைக் கண்டறிவதற்கான கடைசி முயற்சியாக இது இருக்கலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய நோய்க்கிருமிகளின் மூலத்திற்கான அறிவியல் ஆலோசனைக் குழுவில் (Scientific Advisory Group on the Origins of Novel Pathogens) 26 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வூஹான் நகரில் உள்ள இறைச்சி சந்தை அல்லது ஆய்வகத்தில் இருந்து இது பரவியதா அன்று இந்தக் குழு ஆராயும்.
ஆய்வகத்தில் இருந்து பரவியதாகக் கூறப்படும் கூற்றை சீனா கடுமையாக மறுத்து வருகிறது.
பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.
இன்றைய நேரலைப் பக்கத்தைத் தொகுத்து உங்களுக்காக வழங்குவது விக்னேஷ்.அ.