சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து: நான்காண்டு காதல் திருமணம் முடிவு
நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் அக்கினேனி நாக சைதன்யா ஆகிய இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.
சமந்தா- நாக சைதன்யா விவாவகரத்து செய்திகள் வெளிவரத் தொடங்கிய போது, இது குறித்து இருவருமே எதுவும் சொல்லவில்லை. வதந்தி என மட்டுமே இதற்கான பதிலாக சமூக வலைத்தளங்களிலும், சமீபத்திய சில பேட்டிகளிலும் தெரிவித்து இருந்தார்கள்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
பெபிகொலம்பு அனுப்பிய புதனின் படம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் பெபிகொலம்பு (BepiColombo) விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் முதல் படம் கிடைத்துள்ளது.
சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளான புதன் கோளை எடுத்த முதல் படத்தை பெபிகொலம்பு விண்கலம் அனுப்பி வைத்துள்ளது.
புதனின் மேற்பரப்பிலிருந்து சுமார் 200 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய படம் குறைவான துல்லியமே கொண்டுள்ளது.
அதிக துல்லியம் மிக்க தமது கேமராக்களை பயன்படுத்தும் நிலையில் இப்போது அந்த விண்கலம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெபிகொலம்பு விண்கலத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன.
அவற்றில் ஒன்று ஐரோப்பிய விண்வெளி முகமையாலும் இன்னொன்று ஜப்பானிய விண்வெளி முகமையாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், @BEPICOLOMBO
தாலிபன்களிடம் கத்தார் கோபம்
தாலிபன்களுடன் பிற நாடுகளின் அரசுகள் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதில் கத்தார் முக்கிய பங்கு வகித்துள்ளது.
ஆனால் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு தாலிபன்களின் நிலைப்பாடு தொடர்பாக கத்தார் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
மகளிர் தொடர்பாக தாலிபன்கள் மேற்கொண்டுள்ள முடிவுகள் மிகவும் ஏமாற்றமளிப்பதாக கத்தார் தெரிவித்துள்ளது.
படக்குறிப்பு, வீரபாண்டி ராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகன் வீரபாண்டி ராஜா உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான ராஜா சேலத்தில் சனிக்கிழமை உயிரிழந்தார். அவருக்கு வயது 58.
அவரது உடல்
சேலம் பூலாவரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று அவருக்கு பிறந்தநாள். எப்போதும் பிறந்த நாளில் அவர்
கட்சிகாரர்களையும் , பொது மக்களையும் சந்திப்பது வழக்கம் .அதற்காக தயாராகிக் கொண்டிருந்த போது திடீரென வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார். சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கிராமசபைக் கூட்டம் ஒன்றில் பங்கேற்கச் சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலம் சேலம் வந்து வீரபாண்டி ராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மகாத்மா காந்திக்கு நெருக்கமான எட்டு பெண்கள் யார்?
இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாள். அவரது வாழ்வில் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த பெண்கள் குறித்த பிபிசி தமிழின் சிறப்புக் காணொளி.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
கிழக்கு லடாக் பகுதியில் படைகளைக் குவிக்கும் சீனா
கிழக்கு லடாக் பகுதி மற்றும் இந்திய ராணுவத்தின் கிழக்கு காமாண்டின் வடக்கு படைவரிசை இருக்கும் பகுதி ஆகிய இடங்களில் சீன துருப்புகள் கணிசமான எண்ணிக்கையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன என்று இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்து நரவனே ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
எல்லையில் உள்ள முன்வரிசை பகுதிகளில் சீன படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நமக்கு கவலை தரும் ஒன்றாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீன துருப்புகள் என்ன செய்கின்றன என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். தற்போது எதையும் சந்திக்கும் சூழ்நிலையில் இந்திய ராணுவம் உள்ளது என்று ஜெனரல் மனோஜ் முகுந்து நரவனே தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
'பாதுகாப்பு மண்டலத்தில் நுழைந்த விமானங்கள்' - சீனா மீது தைவான் புகார்
தங்கள் வான் பாதுகாப்பு மண்டலத்தில், வெள்ளிக்கிழமை அன்று சீனாவின் 38 படை விமானங்கள் அத்துமீறிப் பறந்ததாகத் தைவான் கூறியுள்ளது. இதுவரை சீனா மேற்கொண்டவற்றிலேயே மிகப்பெரிய ஊடுவல் இது என்றும் குறிப்பிட்டுள்ளது தைவான்.
அணு ஆயுதங்களை ஏவும் திறன் கொண்ட விமானங்கள் உள்ளிட்ட சீனப் பாதுகாப்புப் படை விமானங்கள் தைவான் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் (ADIZ) இரு அலைகளாக பறந்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகனும் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினருமான வீரபாண்டி ராஜா இன்று மாரடைப்பால் காலமானார்.
இவர் திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவராகவும் இருந்து வந்தார்.
இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடவிருந்த நிலையில் ராஜா இறந்தார்.
கினி அதிபராக பதவியேற்றார் ஆட்சியைக் கவிழ்த்த ராணுவ அதிகாரி
பட மூலாதாரம், AFP
படக்குறிப்பு, புதிய அதிபர் மமடி.
மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கினி நாட்டின் முன்னாள் அதிபர் ஆல்ஃபா காண்டேவுக்கு எதிராக ஆட்சியைக் கவிழ்த்த ராணுவ கர்னல் மமடி டோம்பொயா, இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார்.
41 வயதான மமடி, தற்போது அதிபராக பொறுப்பேற்றுள்ளதால், ஆப்பிரிக்காவின் இரண்டாவது இளம் தலைவராக அறியப்படுகிறார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற கினி ஆட்சிக் கவிழ்ப்பை சர்வதேச அரங்கில் பலரும் பரவலாக கண்டித்தனர்.
மேற்கு ஆப்பிரிக்காவின் இரண்டு பன்னாட்டு அமைப்புகளான எகொவாஸ், ஆப்பிரிக்க ஒன்றியம் இரண்டுமே கினி நாட்டின் உறுப்புரிமையை இடைநீக்கம் செய்தன.
மேலும் எகோவாஸ் அமைப்பு மமடிக்கு எதிராக தடைகளை விதித்தது. புதிய அரசமைப்பு சட்டத்தை எழுதுவது, ஊழலை சமாளிப்பது , தேர்தல் முறையை மாற்றுவது, நம்பத்தகுந்த, வெளிப்படையான தேர்தலை நடைமுறைபடுத்துவது போன்ற பணிகள் மூலம் நாட்டை மறுகட்டுமானம் செய்வதே தன் நோக்கம் என புதிய அதிபர் கூறியதாக ஏ.எஃப்.பி முகமை குறிப்பிட்டுள்ளது.
பெட்ரோல் விநியோகிக்கும் பிரிட்டன் ராணுவம்
பிரிட்டனில் ஓட்டுநர் பற்றாக்குறை ஏற்பட்டதால் பெட்ரோல் பங்குகளில் போதிய அளவுக்கு எரிபொருள் இல்லை. எனவே மக்கள் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இப்பிரச்சனையை சரி செய்ய, பிரிட்டன் அரசு ராணுவத்தை களமிறக்கியுள்ளது.
திங்கட்கிழமை முதல் பிரிட்டன் ராணுவத்தினர் கராஜ்களுக்கு எரிபொருளை விநியோகிப்பர் என அரசு தரப்பு கூறியுள்ளது.
எரிபொருள் விநியோகப் பிரச்சனையை எதிர்கொள்ளும் பணியில் சுமார் 200 ராணுவத்தினர் (அதில் 100 பேர் ஓட்டுநர்கள்) ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து 300 எரிபொருள் டேங்கர் லாரி ஓட்டுநர்களை வரவழைத்து, அவர்கள் வரும் மார்ச் மாதம் வரை பணியாற்ற வழிவகை செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
பிரிட்டனில் 1,100 பெட்ரோல் நிரப்பும் பங்குகளிடம், பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கம் நடத்திய கருத்துக் கணிப்பில் 26 சதவீத பங்குகளில் பெட்ரோல் அல்லது டீசல் கையிருப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.
வணக்கம் நேயர்களே!
இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குவோர் அ.தா.பாலசுப்ரமணியன், கெளதமன் முராரி.