பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சித்து விலகல்

பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலை பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் எதிர்கொள்ளும் என்று அக்கட்சியின் பஞ்சாப் மாநில பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமது மாநில தலைவர் பதவியை துறந்திருக்கிறார் நவ்ஜோத் சித்து.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. செப்டம்பர் 28-ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. ஐரோப்பா ராணுவ வலிமையை அதிகரிக்க வேண்டும் - பிரான்ஸ் அதிபர்

    மக்ரோங்

    பட மூலாதாரம், Reuters

    ஐரோப்பா தனது ராணுவ வலிமையை அதிகரிக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

    கிரீஸ் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அந்த நாட்டுடன் 3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.

    பிரான்ஸ் நாட்டின் ராணுவத் தளவாடத்தின் மீதான நம்பிக்கையை இந்த உடன்பாடு காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

    அண்மையில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் செய்து கொண்ட ஆக்கஸ் உடன்பாடு காரணமாக ஆஸ்திரேலியாவுடன் பிரான்ஸ் செய்து கொண்டிருந்த நீர்மூழ்கி உடன்பாடு ரத்தானது.

  3. செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிப்பு

    ஸ்டாலின்

    பட மூலாதாரம், @mkstalin, Twitter

    2010 முதல் 2019ம் ஆண்டு வரை செம்மொழி தமிழ் விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

    பேராசிரியர் கு.சிவமணி, ஈரோடு தமிழன்பன், ஜெர்மனி பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ் உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடந்த செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் கூட்டத்தில் விருதாளர்கள் முடிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. சமூக வலைத்தள பிரபலங்களுக்கு சவுதி அரேபியா சம்மன்

    அரேபியா

    பட மூலாதாரம், AFP

    விதிமுறைகளை மீறியதாக 5 சமூக வலைத்தள பிரபலங்களுக்கு சவுதி அரேபிய ஊடக ஒழுங்குமுறை அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது.

    தவறான விளம்பரங்களையும் பதிவுகளையும் வெளியிட்டதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருப்பதாக சவுதி அரேபியாவின் அரசு செய்தி நிறுவனமான எஸ்பிஏ கூறியுள்ளது.

    இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சமூக வலைத்தளங்களில் விதிமுறைகளை மீறியதாக 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்கள் மூலம் பொருள்களைச் சந்தைப்படுத்தும் வழக்கம் சவுதி அரேபியாவில் அதிகரித்துள்ளது.

    சமூக வலைத்தளங்களில் விதிமுறைகளை யாராவது மீறினால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் சட்டங்கள் இருக்கின்றன.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அக்டோபர் 31வரை நீட்டித்தது இந்திய அரசு

    நாடு முழுவதும் அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதிவரை இந்திய அரசு நீட்டித்துள்ளது.

    இது தொடர்பாக மாநில தலைமை செயலாளர்களுக்கு இந்திய உள்துறைசெயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில், "கொரோனா காலத்தில் பாதிப்பு அளவு குறைந்து வந்தாலும், எதிர்வரும் திருவிழா காலங்களில் மக்கள் பொது இடங்களில் கூடும்போது வைரஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே இயன்றவரை அத்தகைய கூட்டங்களை தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்," என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நடவடிக்கைகளில் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 144வது பிரிவை பயன்படுத்துமாறு மத்திய அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களை யாராவது மீறினால் அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் மத்திய உள்துறை செயலாளர் மாநில தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சித்து விலகல்

    பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து விலகியிருக்கிறார்.

    அவர் கட்சியில் நீடிப்பார் என்று தெளிவாக கூறியிருந்தாலும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய இந்த ராஜிநாமா கடிதத்தில், "சமரசம் செய்வதன் மூலம் ஒரு நபரின் மனசாட்சி சரிந்துவிடும். பஞ்சாபின் எதிர்காலம் மற்றும் பஞ்சாப் மக்களின் நலன் குறித்து நான் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது. அதனால் தான் நான் பஞ்சாபில் இருக்கிறேன். நான் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ராஜிநாமா செய்கிறேன். நான் தொடர்ந்து காங்கிரசுக்கு சேவை செய்வேன்" என்று கூறியுள்ளார்.

    முன்னதாக, பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலை பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் எதிர்கொள்ளும் என்று அக்கட்சியின் பஞ்சாப் மாநில பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் தெரிவித்திருந்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. காங்கிரஸில் முறைப்படி இணைந்த கனையா குமார், ஜிக்னேஷ் மேக்வானி

    காங்கிரஸ்

    பட மூலாதாரம், KANAIAH KUMAR

    படக்குறிப்பு, கனையா குமார், ஜிக்னேஷ் மேக்வானி

    ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவருமான கனையா குமார் மற்றும் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

    இவர்கள் இருவரும் செப்டம்பர் 27ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் சேர திட்டமிட்டிருந்தனர். ஆனால், விவசாயிகள் சங்கங்கள் ஒரே நாளில் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததால் இவர்களின் கட்சியில் சேரும் நிகழ்வு ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டது.

    முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் கனையா குமார் ராகுல் காந்தியை சந்தித்தார், அவர் கட்சியில் சேருவதாக வதந்திகள் கிளம்பின. அதைத்தொடர்ந்து, குஜராத் சுயேச்சை எம்எல்ஏவான ஜிக்னேஷ் மேவானி கடந்த வாரம் கன்ஹையா குமாருடன் காங்கிரசில் சேரும் அறிவிப்பை வெளியிட்டார். 2017இல் நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வட்கம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றார்.

  8. இந்திய எல்லையில் லஷ்கர் குழுவைச் சேர்ந்த சந்தேக நபர் சுட்டுக்கொலை, ஒருவர் சரண்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்திய எல்லையில், 19 வயதான லஷ்கர்-இ-தாய்பா பயங்கரவாதி பிடிபட்டுள்ளாதாகவும் மற்றொருவர் நேற்று மாலை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் யூரியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக கடக்க முயன்றபோது கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மேஜர் ஜெனரல் வீரேந்திர வட்ஸ், "எல்லையில் ராணுவத்திடம் சரணடைந்த நபர் தன்னை பாகிஸ்தானின் பஞ்சாபைச் சேர்ந்த அலி பாபர் பத்ரா என அடையாளம் கூறியதாகவும் அவர் லஷ்கர் இ தாய்பா உறுப்பினர் என்பதை ஒப்புக் கொண்டதாகவும் கூறினார்.

    கடந்த ஏழு நாட்களில் ஏழு பயங்கரவாதிகள் முறியடிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

    "இவ்வளவு பெரிய குழுவினரின் நடமாட்டம் பாகிஸ்தான் ராணுவத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்க முடியாது. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி முழுவதும் இதுபோன்ற நடமாட்டங்களை காண முடிகிறது" என்று மேஜர் வட்ஸ் கூறினார்.

    கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்திற்குப் பிறகு எல்லை கட்டுப்பாட்டு கோடு இருந்த பகுதியில் இந்தியா தொடங்கிய மிகப்பெரிய எதிர்ப்பு கிளர்ச்சி நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்றைய நடவடிக்கை இருந்ததாக ராணுவம் கூறுகிறது.

    யூரி மற்றும் ராம்பூர் செக்டார்களில் செப்டம்பர் 18ஆம் தேதி முதல், ரோந்துப் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட மூன்று ஊடுருவல் முயற்சிகளை இதுவரை இந்திய ராணுவம் தடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் நடந்த நடவடிக்கையில் இந்தியா தரப்பில் 4 வீரர்கள் காயமடைந்தனர்.

  9. பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் மீது முட்டை வீச்சு

    பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் மீது முட்டை வீசப்பட்டது. திங்களன்று லயான் நகரில் பிரெஞ்சு உணவுகள் மற்றும் பண்பாடு ஆகியவற்றை பிரபலமாக்குவது குறித்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவர் மீது முட்டை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    லயான் மேக் ஊடகம் வெளியிட்டுள்ள காணொளியில், எமானுவேல் மக்ரோங்கை நோக்கி எறியப்பட்ட முட்டை அவரது தோளில் வந்து விழுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அந்த முட்டை உடையவில்லை.

    egg attack on french president Emmanuvel macron

    பட மூலாதாரம், EPA

  10. ஜெர்மனி சான்சலர் ஏங்கலா மெர்க்கல் சாதித்தது என்ன? - விமர்சனங்கள் & பாராட்டுகள்

    கடந்த 16 ஆண்டுகளாக ஜெர்மனியின் சான்சலராக பதவியிலிருந்த ஏங்கலா மெர்கெல் சாதித்தது என்ன? அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகள் என்ன?

    அவர் இல்லாத தலைமையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று சமீபத்தில் நடந்த ஜெர்மனி தேர்தலில் வாக்குரிமை செலுத்தியவர்கள் கூறுகிறார்கள்.

    காணொளிக் குறிப்பு, ஏங்கலா மெர்க்கல் சாதித்தது என்ன? அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் & பாராட்டுகள் என்ன?
  11. காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் நியமனம்

    மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் சௌமித்ர குமார் ஹல்தாரை காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு மத்திய அரசு நியமித்திருக்கிறது.

    இது தொடர்பான ஆணையை நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு தெரிவித்துள்ளது. இவர் இப்பதவியில் ஐந்து ஆண்டுகள் இருப்பார்.

  12. இந்தியாவில் குறையும் கொரோனா தினசரி எண்ணிக்கை

    மார்ச் 11-ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் ஒரே நாளில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 18,795 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 26,041 எனும் நேற்றைய எண்ணிக்கையை விட இது கணிசமாக குறைவாகும்.

    கோவிட் காரணமாக ஒரே நாளில் 179 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 276-ஆக இந்த எண்ணிக்கை நேற்று இருந்தது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. சிதையும் நிலையில் ஆப்கானிஸ்தான் வங்கி கட்டமைப்பு

    ஆப்கானிஸ்தான் வங்கி கட்டமைப்பே கிட்டத்தட்ட சிதையும் நிலையில் உள்ளது என்று அந்த நாட்டின் மிகப்பெரிய வங்கி ஒன்றின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

    ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய வங்கியின் தலைமை செயல் அதிகாரி சையது மூசா கலீம் அல்-ஃபலாகி வாடிக்கையாளர்கள் இடையே நிலவும் அச்ச உணர்வு காரணமாக ஆப்கானிஸ்தானின் நீதித்துறையை இருப்புக்காக போராட வேண்டிய நெருக்கடியில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

    காபூலில் தற்போது நிலவும் குழப்பமான சூழ்நிலை காரணமாக அவர் தற்போது துபாயில் இருக்கிறார்.

    வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்துள்ளவர்கள் பெருமளவில் தற்போது பணத்தை திரும்ப எடுத்து வருகிறார்கள் என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

    தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள வங்கிகளில் பணத்தை திரும்ப எடுப்பது மட்டுமே நடக்கிறது என்றும் பிற வங்கி சேவைகள் எதுவும் நிகழவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

    ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தாலிபன்கள் கைப்பற்றிய ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பே அந்நாடு ஏற்கனவே பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு இருந்தது,

    காபூலில் உள்ள ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய வங்கியின் தலைமை அலுவலகம்

    பட மூலாதாரம், IBA

    படக்குறிப்பு, காபூலில் உள்ள ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய வங்கியின் தலைமை அலுவலகம்
  14. வடகொரியா ஏவுகணை சோதனை

    குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை ஒன்றை அதன் கிழக்கு கடலோரப் பகுதியில் வட கொரியா செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏவியுள்ளது என்று தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

    தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான மற்றும் ஆயுதங்களை சோதனை செய்வதற்கான வடகொரியாவின் உரிமையை யாராலும் தடுக்க முடியாது என்று வடகொரியாவின் தூதர் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் தெரிவித்துள்ள சூழ்நிலையில் இந்த ஆயுத சோதனை நடந்துள்ளது.

    இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மாற்று க்ரூஸ் ஏவுகணை ஆகியவற்றை வட கொரிய அரசு சோதனை செய்திருந்தது.

    சில நாட்களுக்கு முன்பு தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாங்கள் விரும்புவதாகவும் வடகொரியா அரசு தரப்பில் சென்ற வாரம் கூறப்பட்டிருந்தது.

    இந்த ஏவுகணை சோதனை நடந்துள்ளது தங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ள அமெரிக்க ராணுவம், அமெரிக்கப் படையினருக்கோ அதன் கூட்டாளி நாடுகளைச் சேர்ந்த சேர்ந்தவர்களுக்கோ வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளது.

    North Korea fires missile, says South's military

    பட மூலாதாரம், Getty Images

  15. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா, மற்றும் உலக நாடுகள் குறித்த செய்திகளை அறிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.

    இன்று நேரலைப் பக்கத்தில் உங்களுக்காகச் செய்திகளைத் தொகுத்து வழங்குவோர் விக்னேஷ்.அ மற்றும் பரணிதரன்.

    நேற்றைய நேரலைப் பக்கத்துக்குச் செல்ல இங்கே க்ளிக் செய்யவும்.