தமிழ்நாடு புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்: குடியரசு தலைவர் உத்தரவு

தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் பன்வாரி லால் புரோஹித், சமீபத்தில் கூடுதல் பொறுப்பாக பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் தமிழக பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    பிபிசி நேயர்களுக்கு வணக்கம்

    செப்டம்பர் 9ஆம் தேதி நேரலை இத்துடன் நிறைவடைகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் மீண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி காலை தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாடு புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்

    இந்திய அரசு

    பட மூலாதாரம், Nagaland Raj Bhavan

    படக்குறிப்பு, ஆர்.என்.ரவி

    தமிழ்நாடுபுதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர் தற்போது நாகாலாந்து ஆளுநராக இருந்து வருகிறார்.

    தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் வசம் சமீபத்தில் கூடுதல் பொறுப்பாக பஞ்சாப் மாநில ஆளுநர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இனி அவர் தொடர்ந்து அந்த மாநில பொறுப்பில் தொடருவார் என்றும் தமிழக பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குடியரசு தலைவர் மாளிகை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

    இது தவிர ஓய்வு பெற்ற ராணுவ லெப்டிணன்ட் ஜெனரல் குர்மித் சிங்கை உத்தராகண்ட் மாநில ஆளுநராக குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.

    அசாம் மாநில ஆளுநராக உள்ள ஜக்தீஷ் முகி, நாகாலாந்து மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் குடியரசு தலைவர் தமது உத்தரவில் கூறியுள்ளார். உத்தராகண்ட் மாநில ஆளுநராக இருந்த பேபி ராணி மெளரியா சமீபத்தில் தமது பதவியை ராஜிநாமா செய்தார். இந்த நிலையில், அவரது ராஜிநாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

  3. ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசியால் அரிய வகை நரம்பியல் பக்கவிளைவுக்கு வாய்ப்பு - ஐரோப்பிய மருத்துவ அமைப்பு எச்சரிக்கை

    கொரோனா தடுப்பூசி

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா வைரஸ் பாதிப்புக்கு போடப்படும் ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி போடுவதால் குயில்லன் பார்ரே என்ற அரிய வகை நரம்பு மண்டல பக்க விளைவு சாத்தியமாகலாம் என்றாலும் அந்த ஆபத்து வெகு குறைவு என்று ஐரோப்பிய மருத்துவ அமைப்பான இஎம்ஏ கூறியிருக்கிறது

    ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி மருந்துக்கும் இந்த அரிதான நரம்பியல் பாதிப்புக்கும் ஒரு சதவீத தொடர்பு உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    ஆனால், இந்த வகை பக்கவிளைவு 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கே ஏற்படலாம் என்று இஎம்ஏ கூறுகிறது. இந்த சாத்தியமிக்க ஆபத்துகளுடன் தடுப்பூசியின் ஆற்றலை ஒப்பிட்டால் அது பல மடங்கு பயன் தரவல்லது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    இதே இஎம்ஏ அமைப்பு, கடந்த ஜூலை மாதம் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போடுவதால் குயில்லன் பர்ரே குறைபாடு ஏற்படலாம் என்று கூறியது.

    அஸ்ட்ரா செனிகா போலவே அந்த நிறுவன தடுப்பூசி மருந்தில் அடினோ வைரஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

    குயில்லன் பர்ரே குறைபாடு என்றால் என்ன?

    GBS என்பது ஒரு சுய தடுப்பாற்றல் குறைபாடு ஆகும். இதில் ஒருவரின் நோய்த்தடுப்பாற்றல் மண்டலம் புற நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான திசுக்களைத் தாக்குகிறது.

    தசை அசைவுகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளையும், வலி, வெப்பம், தொடு உணர்வுகளைக் கடத்தும் நரம்புகளையும் இந்நோய்த் தாக்கம் பாதிக்கிறது.

    இதன் விளைவாகத் தசை பலவீனம், உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் சில வேளைகளில் முடக்குவாதமும் ஏற்படும்.

    சிலர் முற்றிலுமாக இந்நோயில் இருந்து குணம் பெறுவர். ஆனால் சிலருக்கோ நீடித்த நரம்புச் சிதைவு ஏற்படும்.இந் நோய் சிக்கல்களால் 3% - 5% நோயாளிகள் இறக்க நேரிடலாம். மூச்சைக் கட்டுப்படுத்தும் தசைகளில் வாதம், ரத்த தொற்று,நுரையீரலில் ரத்த உறைவு, இதயம் செயலிழப்பு ஆகியவை இந்த சிக்கல்களில் அடங்கும்.

    இந்நோய்க்கான காரணம் தெரியவில்லை.ஆனால்,இரைப்பைக் குடல் தொற்று அல்லது நுரையீரல் தொற்று போன்ற ஒரு தொற்று நோயினால் இது குறிப்பாகத் தூண்டபடுகிறது.

    ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில நாடுகள்,குடும்பங்களில் இந்நோய் ஏற்படுவதாக அறிக்கை தந்துள்ளன

    உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி 100000 பேரில் 0.4 – 4.0 பேருக்கு GBS உண்டாகிறது. இதனால் அனைத்து வயதினரும் பாதிக்கப்படலாம். பெரியவர்களுக்கு அதிலும் ஆண்களுக்குப் பரவலாகக் காணப்படுகிறது.

  4. ஐடா சூறாவளி

    பட மூலாதாரம், SALIM RIZVI/BBC

    அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சியில் பலத்த சேதத்தை ஏற்படுத்திச் சென்ற ஐடா சூறாவளியின் தாக்கத்தில் ஏராளமான இந்திய வம்சாவளியினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் சூறாவளி ஏற்பட்டபோது வெளியே சென்றிருந்தவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது குறித்து செய்தியை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  5. ஆப்கானிஸ்தானில் இருந்து கத்தாருக்கு புறப்பட்ட பயணிகள் விமானம்

    ஆப்கானிஸ்தானில் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அங்கு இன்று பிற்பகல் கத்தார் நாட்டில் இருந்து மனிதாபிமான பொருட்களை பயணிகள் விமானம் சுமந்து வந்தது.

    அந்த விமானத்தில் இருந்த சரக்குகள் இறக்கி வைக்கப்பட்ட பிறகு, காபூலில் இருந்து கத்தாருக்கு புறப்பட தகுதி பெற்ற பயணிகளுடன் அந்த விமானம் சற்று முன்பு கத்தாருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

  6. 623 பொருட்களின் இறக்குமதி உத்தரவாத தொகையை 100% உயர்த்திய இலங்கை மத்திய வங்கி, ரஞ்சன் அருண் பிரசாத்

    இலங்கையில் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற தெரிவு செய்யப்பட்ட 623 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 100 வீத உத்தரவாதத் தொகையை வைப்பிலிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறையை உடன் அமலுக்கு வரும் வகையில் செயற்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி இன்று (09) அறிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை நேற்றைய தினம் (08) கூடி, கலந்துரையாடல்களை நடத்திய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.ஊக வியாபாரத் தன்மையிலான மிதமிஞ்சிய இறக்குமதிகளை ஊக்கமிழக்கச் செய்வதன் ஊடாக, செலாவணி வீத உறுதிப்பாட்டினையும், வெளிநாட்டு நாணயச் சந்தை திரவத் தன்மையினையும் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு உறுதியாக இருக்கும் என இதனை தாம் நம்புவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

    இலங்கை

    பட மூலாதாரம், GOVT OF SRI LANKA

  7. வளரும் பொருளாதாரங்களின் வலுவான குரல் இந்தியா: பிரதமர் நரேந்திர மோதி

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    வளரும் பொருளாதார நாடுகளின் வலுவான குரலாக இந்தியா விளங்கி வருகிறது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

    பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் எனப்படும் அமைப்பின் 13ஆவது உச்சிமாநாடு இன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.

    இதில் உரையாற்றிய இந்திய பிரதமர் மோதி, "கடந்த 15 ஆண்டுகளில் பிரிக்ஸ் அமைப்பு பல சாதனைகளை படைத்துள்ளது. இன்று நாம் உலகின் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கான செல்வாக்கு மிக்க குரலாக விளங்கி வருகிறோம்.

    நமது முன்னுரிமைகளில் கவனம் செலுத்த இந்த தளம் பயனுள்ளதாக இருந்தது," என்று குறிப்பிட்டார்.

    இன்றைய உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரேசில் அதிபர் ஸேர் போல்சனாரோ, தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமஃபோசா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  8. ஆப்கன் பெண்கள் அணிக்கு தடை விதித்தால் ஆண்கள் அணியுடன் மேட்ச் ரத்து: ஆஸ்திரேலியா

    தாலிபன் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி விளையாட அனுமதி இல்லை என்ற செய்தி உண்மையாக இருந்தால், ஆப்கானிஸ்தான் ஆண்கள் அணியுடனான தங்கள் போட்டியை ரத்து செய்ய இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமான 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' தெரிவித்துள்ளது.

    ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனமான எஸ்.பி.எஸ். நியூசிடம் பேசிய தாலிபன் பண்பாட்டு ஆணைய துணைத் தலைவர் அஹ்மதுல்லா வாசிக், "பெண்கள் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை" என்று கூறியிருந்தார்.

    இந்த கருத்தினால் கவலை அடைந்திருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதன்கிழமை தெரிவித்திருந்தது.

    எல்லா நிலைகளிலும் கிரிக்கெட் விளையாட்டை பெண்கள் விளையாடுவதற்கு நிபந்தனையற்று தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா கருத்துத் தெரிவித்தது.

    "பெண்கள் கிரிக்கெட் விளையாட அனுமதி இருக்காது என்ற ஊடக செய்திகள் உண்மையாக இருக்குமானால், ஹோபர்ட் நகரில் நடக்கவுள்ள ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் மேட்சை ரத்து செய்வதைத் தவிரகிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு வேறு வழி ஏதுமில்லை," என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் விளையாடுவதற்கு முடிவு செய்யப்பட்டு, போட்டி 26ம் தேதி தொடங்குவதாக உள்ளது.

    ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு தாலிபன்கள் அனுமதி அளித்துள்ளனர்.

    ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளின்படி அதன் 12 முழு உறுப்பினர்களும் தேசிய பெண்கள் அணியையும் கொண்டிருக்கவேண்டும். அதைப்போல முழு உறுப்பினர்கள் மட்டுமே சர்வதேச டெஸ்ட் போட்டிகளை விளையாட முடியும்.

  9. சர்வதேச விண்வெளி நிலையத்தில் கரும்புகை - அபாய எழுப்பிய லி எழுப்பிய விண்வெளி வீரர்கள்

    நாசா

    பட மூலாதாரம், NASA

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் பிளாஸ்டிக் கருகும் வாசனை வருவதாக அதன் ரஷ்ய பகுதியில் இருந்த வீரர்கள் கூறியதையடுத்து, அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. இது தொடர்பாக ரஷ்ய கலனில் இருந்து அமெரிக்காவின் நாசா கலனில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    சில மணி நேரத்தில் இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டதாக ரஷ்ய விண்வெளி அமைப்பான ராஸ்கோமாஸ் தெரிவித்துள்ளது.

    கருகும் வாசனை வந்தபோது விண்வெளி நிலையத்தின் பேட்டரிகள் சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்ததாகவும் அப்போது புகை எழுந்ததாகவும் ரஷ்ய விண்வெளி நிலையமான ராஸ்கோமாஸ் தெரிவித்துள்ளது.

    அந்த பிரச்னை சரி செய்யப்பட்டு தற்போது இயல்புநிலை திரும்பி விட்டதாகவும் ராஸ்கோமாஸ் கூறியுள்ளது.

    ஏழு வீரர்கள் மட்டுமே உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏன் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது? முழு விவரம் அறிய இந்த செய்தியை படிக்கவும்.

  10. இந்திய சிறுபான்மையினர் ஆணைய தலைவராக இக்பால் சிங் லால்புரா நியமனம்

    இக்பால் சிங் லால்புரா

    பட மூலாதாரம், Iqbal Singh Lalpura

    படக்குறிப்பு, இக்பால் சிங் லால்புரா

    தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தன் தலைவராக எஸ். இக்பால் சிங் லால்புராவை, இந்திய அரசு முன்மொழிந்துள்ளது. அவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பார் என்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சாப் காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பாரதிய ஜனதா கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருபவர் இக்லாப் சிங் லால்புரா. இவர் அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளராகவும் இருக்கிறார்.

    புதிய பதவியில் தாம் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு இக்பால் சிங் பிரதமர் நரேந்திர மோதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    1978ஆம் ஆண்டில் பஞ்சாபில் நிரங்காரி மோதல் நடந்தபோது அந்த சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்தவர் இக்பால் சிங் லால்புரா.

    சீக்கிய சமயத் தலைவர் ஜர்னைல் சிங்கை 1981ஆம் ஆண்டில் கைது செய்த நடவடிக்கையிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

    இந்தியாவில் 2014ஆம் ஆண்டில் சிறுபான்மையினர் பட்டியலில் சமணர்கள் சேர்க்கப்படும்வரை தேசிய சிறுபான்மையினர் ஆணைய சட்டத்தின்படி முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், பெளத்தர்கள், பார்ஸிகள் ஆகிய ஐந்து சமூகத்தினர் மட்டுமே சிறுபான்மையினராக கருதப்பட்டனர்.

    தேசிய சிறுபான்மையினர் ஆணைய சட்டத்தின்படி முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், பெளத்தர்கள், பார்ஸிகள் ஆகிய ஐந்து சமூகத்தினர் மட்டுமே சிறுபான்மையினராக கருதப்பட்டனர்.

    அவர்களின் நலன்களைக் காக்க தேசிய அளவில் தனி ஆணையம் அமைக்கப்பட்டது போல மாநிலங்கள் அளவிலும் அத்தகைய மாநில ஆணையம் அமைக்க வேண்டும் என்று சிறுபான்மையினர் ஆணைய சட்டம் கூறியது.

    இதில் தேசிய ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தகுதிவாய்ந்த ஒருவரை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கு ஒன்றை விசாரித்தபோது அறிவுரை வழங்கியிருந்தது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இக்பால் சிங் லால்புராவை மத்திய அரசு நியமித்திருக்கிறது.

    பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவரான இக்பால் சிங் லால்புராவுக்கு தேசிய ஆணையம் ஒன்றின் தலைமை பதவி வழங்கப்பட்டிருப்பது அந்த மாநில அரசியலில் பரவலான கவனத்தை பெற்றிருக்கிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. 30 ஆயிரம் கோடி மதிப்புள்ள விமானப் படைத் திட்டங்களுக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல்

    ரூ. 30 ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்திய விமானப் படை திட்டங்கள் இரண்டுக்கு இந்தியாவின் பாதுகாப்புத் துறை தொடர்பான அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. 6 AEWC விமானங்கள், 56 C-295 வகை போக்குவரத்து விமானங்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    விமானம்

    பட மூலாதாரம், ANI

  12. தமிழ்நாட்டில் காலியாகவுள்ள மேலும் 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4இல் தேர்தல்

    இந்திய தேர்தல் ஆணையம்

    பட மூலாதாரம், ECI

    தமிழ்நாட்டில் காலியாகவுள்ள மேலும் 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு வரும் அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தங்களுடைய பதவிகளை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட காலி இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும். இதற்கான அறிவிக்கை செப்டம்பர் 15இல் வெளியாகும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 22, மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 27," என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மார்ச் மாதம் அதிமுக உறுப்பினர் முகம்மது ஜான் மாரடைப்பால் காலமானார்.

    மேலும், இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்களாக இருந்த முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியிலும், வைத்திலிங்கம் ஆகியோர் ஓரத்தநாடு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

    இதையடுத்து அவர்கள் எம்எல்ஏ பதவியை ஏற்க அவர்கள் இருவரும் முடிவெடுத்து தங்களுடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தனர்.

    தனித்தனியாக தேர்தல் நடத்த திமுக கோரிக்கை

    இந்த நிலையில், காலியான மூன்று தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் மாநிலத்தில் ஆளும் திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து முதலாவதாக முகம்மது ஜான் இடத்துக்கு போட்டியிருக்கும்பட்சத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததது.

    இதன்படி திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். சுயேச்சையாக 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் திமுக வேட்பாளர் அப்துல்லா தவிர மற்ற மூவரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    தமிழக சட்டபு்பேரவையில் மொத்தம் உள்ள 234 எம்எல்ஏக்களில் 118 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள்தான் அந்த தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது. அந்த வகையில் தி.மு.க.வுக்கு பெரும்பான்மைக்கும் அதிகமான 125 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் தி.மு.க வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி சீனிவாசன் கூறினார்.

    இந்த சூழலில் மீதமுள்ள இரண்டு காலியிடங்களுக்கான தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்படும் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையம்

    பட மூலாதாரம், ECI

  13. ஹரியாணா மினி செயலக வாயிலில் கூடாரம் அமைத்த விவசாயிகள் - இன்டர்நெட் சேவை முடக்கம்

    விவசாயிகள் போராட்டம்
    படக்குறிப்பு, கர்னால் பகுதியில் விவசாயிகள் தங்களுடைய குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஹரியாணா மாநிலத்தின் கர்னால் பகுதியில் உள்ள மினி தலைமைச் செயலக வளாகத்துக்கு வெளியே சாலையிலேயே விவசாயிகள் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஹரியாணா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய தடியடியில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் காயம் அடைந்தநர்களுக்கும் இழப்பீடு வழங்கக் கோரி கடந்த சில தினங்களாக ஹரியாணா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக விவசாயிகள் தரப்புடன் ஆலோசனை நடத்த 11 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. ஆனால், இரு முறை ஆலோசனை நடத்திய போதும் சமூக உடன்பாடு எட்டப்படாததால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று காலையில் மினி தலைமைச் செயலகம் முன்பாக திரண்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்னால் மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்களில் சிலர் கோஷமிட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு ஆயுஷ் சிங் உத்தரவிடும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வேளையில் அவருக்கு எதிராக விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

    ஆனால், உரிய விசாரணையின்றி எந்தவொரு அரசு அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று அரசு தரப்பு கூறி விட்டது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. பூமிக்கு அடியில் இருந்து எரிபொருளைத் தோண்டினால் உலகம் தாங்காது - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

    எரிபொருள்

    பட மூலாதாரம், EPA

    60 சதவிகிதம் அளவிலான எண்ணெய், எரிவாயுவும், 90 சதவிகிதம் அளவிலான நிலக்கரியும் பூமிக்கு அடியிலேயே இருந்தால்தான் பூமி வெப்பமாவதைத் கட்டுப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

    உலகின் எரிபொருள் தேவை மற்றும் விநியோகத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நேச்சர் இதழில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    வருங்காலத்தில் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் எரிபொருள்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு முன்பு கணித்ததைவிடக் குறைவாகவே இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

    உலகம் முழுவதும் தோண்டி எடுக்கப்படும் எரிபொருள்களின் அளவு 2020-ஆம் ஆண்டில் உச்சத்தை எட்டி, பின்னர் 2050-ஆம் ஆண்டு வரை படிப்படியாக ஆண்டுக்கு 3% என்ற அடிப்படையில் குறைய வேண்டும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தார்கள். ஆனால் அது அப்படி நடக்கவில்லை.

    "கோவிட் பெருந்தொற்று காரணமாக எரிபொருள்கள் தோண்டி எடுக்கப்படுவது குறைந்திருந்தது. ஆனால் அது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது" என்கிறார் எரிபொருள்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபடும் பேராசிரியரான ஸ்டீவ் பை.

  15. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பகுதியில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.