அமெரிக்க ஆயுதங்களுடன் காபூல் விமான நிலையத்துக்கு தாலிபன் பாதுகாப்பு
அமெரிக்க படையினர் பயன்படுத்திய சீருடை, அவர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்கள், கனரக வாகனங்கள் போன்றவற்றை பயன்படுத்தும் தாலிபன் ஆயுதக்குழுவினர், காபூல் விமான நிலையத்தின் முழு கட்டுப்பாட்டையும் கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஆகஸ்ட் 31 நேரலை நிறைவடைகிறது
வணக்கம் நேயர்களே,
இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
தாலிபன் புதிய ஆளுகை: மூத்த தலைவர்களுடன் 3 நாட்களாக நடந்த நடந்த ஆலோசனை நிறைவு
ஆப்கானிஸ்தானில் புதிய தாலிபன் ஆளுகை தொடர்பாக தங்களின் மூத்த தலைவர்களுடன் கடந்த மூன்று நாட்களாக நடந்த ஆலோசனை கூட்டம் நிறைவடைந்துள்ளதாக தாலிபன் தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசியல் சூழ்நிலை, பாதுகாப்பு, சமூக பிரச்னைகள் குறித்து தாலிபன் தலைவர்களுடன் மூத்த தலைவர் முல்லா ஹிபதுல்லா அகுந்த்ஸாதா ஆலோசனை நடத்தியதாக தாலிபன் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆளுகையில் யாரெல்லாம் இடம்பெறக்கூடும் என்ற ஊகம ்கடந்த சில நாட்களாக நிலவினாலும், அது குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
எனினும், தாலிபன் அமைப்பின் தற்போதைய அமைப்பில் யாரெல்லாம் முக்கிய நபர்களாக கருதப்படுகிறார்கள் என்பதை இந்த வரைபடம் மூலம் விளக்க முற்பட்டிருக்கிறது பிபிசி.
மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார் மாரியப்பன். 2016இல் நடந்த ரியோ பாராலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கம் வென்றிருந்தார். மற்றொரு வீரர் சரத் குமார் தமது முதல் முயற்சியில் 1.83 மீட்டர் உயரம் தாண்டிய நிலையில், மூன்று முறை தோல்விக்குப் பிறகு 1.86 மீட்டர் உயரத்தை தாண்டியிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
அதிமுக ஆட்சி கால திட்டங்களை முடக்குவதே ஸ்டாலின் அரசின் நூறு நாள் சாதனை: சி.வி. சண்முகம், நடராஜன் சுந்தர்
படக்குறிப்பு, விழுப்புரம் மாவட்டத்தில் கைதாகி விடுவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்.
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முடக்குவதே திமுக அரசின் நூறு நாள் சாதனை என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம்சாட்டியிருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் நிறுவப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, இந்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டித்து அவையில் இருந்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் சென்னை வாலாஜா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு கைதானார்கள். அவர்கள் அனைவரும் சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பேரவை அலுவலில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், விழுப்புரம் புதுச்சேரி சாலையில் தமது ஆதரவாளர்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து மாலையில் செய்தியாளர்களை சந்தித்த சி.வி..சண்முகம் ஆளும் திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
"அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவந்த திட்டங்களை முடக்குவதே ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் நூறு நாள் சாதனை. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்படும். மக்களுக்கான திட்டங்களை முடக்குவதன் மூலம் மக்கள் விரோத அரசாக ஆளும் திமுக அரசு செயல்படுவதுடன், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத முடியாத அரசாகவும் உள்ளது, என்றார் சி.வி. சண்முகம்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய தினம் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் சுமார் 600 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி சபாநாயகர் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம்
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம் இன்று காலை நெஞ்சு வலி காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு மருத்துவர்கள் ஆலோசனைக்கு இணங்க மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சபாநாயகர் செல்வம் உடல்நிலை குறித்து அவர் சிகிச்சை பெற்று வரும் சென்னை அப்பல்லோ தனியார் மருத்துமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சபாநாயகர் செல்வத்தின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அடுத்த 3 தினங்களில் மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், APOLLO HOSPITAL, CHENNAI
அமெரிக்க ஆயுதங்களுடன் காபூல் விமான நிலையத்தில் தாலிபன் ஆயுதக்குழு
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 1
ஆப்கானிஸ்தானை விட்டு வெளிநாட்டினர் மற்றும் கடைசி வெளிநாட்டுப் படையினருடன் அமெரிக்க ராணுவ விமானம் இன்று புறப்பட்ட பிறகு காபூல் விமான நிலைய பாதுகாப்பை தாலிபன் ஆயுதக்குழு தமது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
அங்குள்ள கள நிலவரத்தை பிபிசியின் லீஸ் டூசெட் தமது குழுவினருடன் பார்வையிட்டு காட்சிகளை பதிவு செய்தார்.
அமெரிக்க ராணுவ சீருடையில் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களை ஏந்தியவாறு தாலிபன் ஆயுதக்குழுவினர் விமான நிலைய பாதுகாப்பை கவனித்து வருவதாக லீஸ் டூசெட் தெரிவிக்கிறார்.
அமெரிக்கர்கள் காபூலை விட்டு புறப்படும்போது தங்களுக்குச் சொந்தமான ஏராளமான ஆயுதங்கள், வாகனங்கள், கனரக ஆயுதங்கள் பலவற்றை அந்த விமான நிலைய வளாகத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர். அவற்றை தாலிபன் போராளிகள் பயன்படுத்தி வருவதாகக் கூறுகிறார் லீஸ் டூசெட்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தங்கவேலு, T63 பிரிவில் 2020 டோக்யோ பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.
இந்தியாவைச் சேர்ந்த சரத் குமாரும் அதே பிரிவில் வெண்கலம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2016 ரியோ பாராலிம்பிக்கில் இவர் தங்கம் வென்றது நினைவுகூரத்தக்கது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக டோக்யோ பாராலிம்பிக்கிலும் பதக்கம் வென்றுள்ளார் மாரியப்பன் தங்கவேலு.
ஜாலியன்வாலா பாக் நினைவிடம்: ராகுல் காந்தி கடும் கண்டனம்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 1
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை புனரமைப்பது "தியாகிகளுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு" என்று குற்றம்சாட்டியிருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
தியாகியின் பொருள் தெரியாத ஒருவரால் மட்டுமே இதுபோன்ற அவமதிப்பை செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில், "சுதந்திரத்திற்காக போராடாதவர்களால், அதற்காகப் போராடியவர்களைப் புரிந்து கொள்ள முடியாது," என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோதி கடந்த வாரம் சனிக்கிழமை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதையொட்டி ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நிகழ்வுகள் காட்டப்படும் ஒலி மற்றும் ஒளி நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோதி, வரலாற்றைப் பாதுகாப்பது நாட்டின் கடமை என்று கூறினார்.
கடந்த கால நிகழ்வுகள் "படிப்பினையையும் முன்னேறுவதற்கான வழியையும் கொடுத்துள்ளன," என்று அவர் தெரிவித்தார்.
ஜாலியன் வாலா பாக் படுகொலை என்பது என்ன?
ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் நடந்த 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி ரவுலட் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் மீது அப்போதைய ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், 1,100க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
அந்த சம்பவத்தின் நினைவாக இருந்த சுவடுகளை புனரமைத்து நிர்மாணிக்கப்பட்ட புதிய நினைவிடம் தற்போது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
"தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்தவரின் மகன் என்ற முறையில் தியாகிகளுக்கு இழைக்கப்படும் அவமதிப்பை என்னால் சகித்துக் கொள்ள முடியாது," என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அநாகரிகமான இந்த கொடூரத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 2
பொதுமக்களுக்கு மரியாதை கொடுங்கள், நாம் அவர்களின் சேவகர்கள் - அறிவுரை வழங்கும் தாலிபன் தலைவர்கள்
பட மூலாதாரம், ReutersCopyright
படக்குறிப்பு, காபூல் விமான நிலையத்தில் ஆயுதமேந்திய தமது போராளிகளிடம் பேசும் தாலிபன் தலைவர்கள்
ஆப்கானிஸ்தானில் வாழும் பொதுமக்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும். நாம் அவர்களின் சேவகர்கள் என்று ஆயுதமேந்திய தங்களுடைய போராளிகளிடம் தாலிபன் தலைவர்கள் பேசும் காணொளி தற்போது வெளியாகியிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை விட்டு அமெரிக்காவின் கடைசி விமானம் இன்று புறப்பட்ட நிலையில், அந்த நாட்டில் வெளிநாட்டுப் படைகளின் ஆக்கிரமிப்பு பூண்டோடு வெளியேறியிருக்கிறது.
இதையடுத்து அந்த விமான நிலைய பாதுகாப்பை முழுமையாக தாலிபன்கள் ஏற்றுள்ளனர்.
முழு சீரூடையில் தோற்றமளிக்கும் தாலிபன் போராளிகளிடையே தாலிபன் தலைவர்கள் இன்று பேசினார்கள்.
அப்போது, அமெரிக்க தலைமையிலான வெளிநாட்டுப்படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய செயலுக்காக அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தாலிபன் செய்தித்தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் பேசும்போது, "உங்களுடைய தியாகங்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். நீங்களும் உங்களுடைய தலைமைகளும் அனுபவித்த கடுமையான இன்னல்களாலேயே இதை சாதிக்க முடிந்திருக்கிறது. நமது நேர்மை மற்றும் பொறுமையால்தான் இந்த நாடு இன்று அன்னிய சக்திகளிடம் இருந்து விடுபட்டுள்ளது," என்றார்.
"நம் நாடு மீது இனியும் ஒரு தாக்குதலை அன்னிய சக்திகள் நடத்தக்கூடாது. நமக்கு மகிழ்ச்சியும் வளமும் உண்மையான இஸ்லாமிய ஒழுங்கும் தேவை."
"ஆப்கானிஸ்தானில் வாழும் மக்கள் மதிப்புடன் நடத்தப்பட வேண்டும். அதை உறுதிப்படுத்துங்கள். அதில் மிகவும் கவனமாக இருங்கள். இந்த நாடு ஏராளமான துயரத்தை அனுபவித்து விட்டது. ஆப்கன் மக்கள் அவர்களுக்கு உரிய அன்பையும் அனுதாபத்தையும் பெற உகந்தவர்கள். எனவே அவர்களை மதிப்புடன் நடத்துங்கள். நாம் அவர்களுடைய சேவகர்கள். நாம் அவர்களை கட்டுப்படுத்துபவர்கள் அல்ல," என்றார் முஜாஹித்.
இதேவேளை விமான நிலையத்தில் மற்றொரு தாலிபன் தலைவர் ஹன்ஸ் ஹக்கானி பேசும்போது, "மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இங்கு பலரும் அமைதி திரும்ப விரும்பவில்லை. அமெரிக்க ஆக்கிரமிப்பே நீடிக்க வேண்டும் என அவர்கள் கருதினர்," என்று கூறினார்.
"நான் ஒரு மருத்துவரிடம் பேசினேன். அவர் முன்பு இங்குள்ள மருத்துவ நிலையங்களில் குண்டடிபட்டவர்கள் நிறைந்திருந்தனர். இப்போது நிலைமை அப்படியில்லை என்றார். எப்போதெல்லாம் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சவால்கள் முதலாவதாக நம் முன் வந்து நிற்கும். வீடுகளை மாற்றும்போது சில இழப்புகள் வரும். அத்தகைய மாற்றமே இப்போது ஏற்பட்டுள்ளது," என்றார் ஹக்கானி.
தாலிபன்களிடம் ஹக்கானி குழுவின் தலைவர் பேசும் காணொளியை தாரிக் கஸ்னிவாலா என்ற அவர்களின் ஊடக பொறுப்பாளர் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த காணொளி, சமூக ஊடகங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் விடுவிப்பு
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்டத்திருத்த முன்வடிவை எதிர்த்து சென்னையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் கலைவாணர் அரங்குக்கு வெளியே சாலையில் மறியலில் ஈடுபட்டதால் கைதான அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, பொது போக்குவரத்துக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம்: சாலை மறியல் செய்த அதிமுக எம்எல்ஏக்கள் தடுத்து வைப்பு, முரளிதரன் காசிவிஸ்வநாதன், சென்னை; நடராஜன் சுந்தர், விழுப்புரம்
படக்குறிப்பு, விழுப்புரத்தில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்
தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் சட்டத்தை நீக்க அரசு கொண்டு வந்த 2021ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்தம் மற்றும் நீக்கறவு சட்ட முன்வடிவுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக இந்த சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்டத்தை ஆரம்பநிலையிலே எதிர்க்கிறோம் என்று கூறினார். பின்னர் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து அவர்கள் பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சென்னை கலைவாணர் அரங்கம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான சி.வி. சண்முகம் சாலை மறியலில் ஈடுபட்டார். அவரையும் காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகருக்கு நெஞ்சுவலி, நடராஜன் சுந்தர், புதுவையில் இருந்து
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம் நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 4வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதனிடையே இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ள சபாநாயகர் சட்டப்பேரவைக்கு வரும் போது லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை அருகில் உள்ள சட்டப்பேரவை அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சட்டப்பேரவை கூட்டத்தை துணை சபாநாயகர் ராஜவேலு நடத்தி வருகிறார்.
நெஞ்சுவலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி சபாநாயகர் செல்வத்தை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு செல்வம் அழைத்துச் செல்லப்பட்டார்.
படக்குறிப்பு, புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம்
ஆன்லைன் வீடியோகேம் - சீன அரசு புதிய விதிமுறை
பள்ளி செல்லும் குழந்தைகள் அளவுக்கு அதிகமாக ஆன்லைன் வீடியோகேம் விளையாடுவதை கட்டுப்படுத்தும் வகையில் சீன அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
இதன்படி இனிமேல் 18 வயதுக்கும் குறைவான குழந்தைகள் வெள்ளிக்கிழமைகள், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் கேம் விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.
பற நாட்களில் அவர்களால் விளையாட இயலாது.
அனுமதிக்கப்படும் நாட்களில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை அவர்களால் விளையாட முடியும்.
முன்னதாக இருந்த விதிமுறைகளின்படி நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 90 நிமிடம் வரை ஆன்லைன் கேம் விளையாட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதுவே விடுமுறை நாட்களில் மூன்று மணி நேரம் ஆக இருந்தது. தற்போது அந்த நேரமும் குறைக்கப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
பட மூலாதாரம், Getty Images
தாலிபன்கள் கைகளில் சிக்கிய போர் விமானங்கள், ராட்சத ஹெலிகாப்டர்கள், இயந்திர துப்பாக்கிகள்
கந்தஹார் விமான நிலையத்தில் அமெரிக்காவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பறப்பதை தாலிபன்கள் பார்த்துக்கொண்டிருப்பதை சமூக ஊடகங்களில் வெளியான காணொளி ஒன்று காட்டுகிறது.
அது நான்கு இறக்கைகளை உடைய ப்ளேக் ஹாக் ஹெலிகாப்டர்.
தாலிபன்கள் இனியும் வெறுமனே ஏகே ரக துப்பாக்கிகளை கையில் வைத்துக் கொண்டு டிரக்குகளில் வலம் வரும் ஒரு சாதாரண குழுவல்ல என்கிற செய்தியை, அது உலகுக்கு உணர்த்துகிறது.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி காபூல் தாலிபன்களிடம் வீழ்ந்ததில் இருந்து தாலிபன்கள் அமெரிக்காவின் ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை படமெடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவில் இருந்து வருவோர்க்கு வேண்டுகோள்
அமெரிக்காவில் இருந்து வருபவர்களுக்கு புதிய பயண விதிகளை ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளது.
மிகவும் அவசியமான பயணங்களைத் பிற பயணங்களை நிறுத்தி வைக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை ஆகும்.
பல மாதங்களுக்கு பின்னர் அமெரிக்காவில் தினசரி எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
டெல்டா திரிபால் உண்டாகியுள்ளது இந்த கொரோனா அலை.
காபூலில் தாலிபன்கள் கொண்டாட்டம்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறியதை தாலிபன்கள் கொண்டாடி வருகின்றனர்.
தாலிபன்களை நாட்டைக் கைப்பற்றிய பின்னரும் வெளியேற்ற நடவடிக்கைகளுக்காக காபூல் சர்வதேச விமான நிலையம் அமெரிக்கா தலைமையிலான படைகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இப்போது அதுவும் தாலிபன்கள் வசம் வந்துள்ளது.
அங்கு தாலிபன்கள் இருப்பதைக் காட்டும் சில காணொளிகள் வெளியாகியுள்ளன. எனினும், அவற்றை பிபிசியால் சுயாதீனமாக உறுதிசெய்ய இயலவில்லை.
காபூலில் உள்ள ஹமீது கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் கொண்டாடும் வகையிலான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் நகர தெருக்களிலும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பட மூலாதாரம், Getty Images
வணக்கம் நேயர்களே!
பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் பிற உலக நாடுகள் தொடர்பான நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குவது விக்னேஷ். அ. உடனடிச் செய்திகளுக்கு இப்பக்கத்தில் இணைந்திருங்கள்.