தாலிபன்களின் கெடு முடிகிறது: ஆபத்தில் அமெரிக்காவின் மீட்புப் பணி

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கான கெடு புதன்கிழமையுடன் முடிவடையும் நிலையில், ஆபத்தான கடைசி நேர மீட்புப் பணியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ஆகஸ்ட் 30 நேரலை நிறைவடைகிறது!

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. தாலிபன்களின் கெடு முடிகிறது: ஆபத்தில் அமெரிக்காவின் மீட்புப் பணி

    தாலிபன்

    பட மூலாதாரம், Getty Images

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கான கெடு புதன்கிழமையுடன் முடிவடையும் நிலையில், கடைசி நேர மீட்புப் பணியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கிர்பி, "இந்த மீட்புப் பணி எப்போதுமே அபாயகரமானதுதான். ஆனால் குறிப்பாக இப்போது மிக அதிக ஆபத்தானது" என்றார்.

    இதுவரை சுமார் 1.22 லட்சம் பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

    காபூல் விமான நிலையத்தில் எத்தனை வாயில்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

    இப்போதும் அமெரிக்கா முழு வீச்சிலான மீட்புப் பணிகளை நடத்தி முடிக்கும் திறனைப் பெற்றிருக்கிறது என்று கிர்பி கூறினார்.

    எனினும் கெடு முடிவடையும் புதன்கிழமையன்று எப்போது மீட்புப் பணிகளை முடிப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

  3. அமெரிக்காவுக்கு நாளை கெடு: ஆப்கானிஸ்தானில் கடைசி நேர பதற்றம்

    காபூல்

    பட மூலாதாரம், Getty Images

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கான கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில், குழப்பங்களும் பதற்றமும் நிறைந்த நிகழ்வுகள் அங்கு நடந்து கொண்டிருக்கின்றன.

    கெடு நெருங்கிவிட்டதால் எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

    இதனிடையே பயங்கரவாதியைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 குழந்தைகள் கொல்லப்பட்டதால் அமெரிக்காவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

    இன்று காபூல் விமான நிலையத்தை நோக்கி ஏராளமான ராக்கெட்டுகள் பறந்து வந்தன. அவற்றை அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது.

    இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.-கே இயக்கம் பொறுப்பேற்றிருக்கிறது.

    ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குப் பிறகு தாலிபன்களின் ஆட்சி நடக்க இருப்பதால், தங்களுக்கு சர்வதேசப் பாதுகாப்பு தேவை என்று ஆப்கானிஸ்தானில் உள்ள செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனிடையே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் நடக்க இருக்கும் கூட்டத்தில் காபூலிலில் இருந்து வெளியேற விரும்பும் மக்களைக் காக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட பகுதியை அறிவிக்க பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் வலியுறுத்தும் எனத் தெரிகிறது.

  4. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி

    குழந்தைகள்

    தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து அமெரிக்க நடத்திய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக உயிர் பிழைத்த உறவினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

    தங்களது வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியதில் அதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

    ஆனால், இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐஎஸ் அமைப்பின் ஆப்கானிய கிளையுடன் தொடர்புடைய ஒருவர் இருந்த வாகனத்தை குறிவைத்து தாக்கியதாக அமெரிக்கா ராணுவம் கூறியுள்ளது.

    தாக்குதலின்போது அருகேயிருந்த அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.

    கொல்லப்பட்டவர்களில் சிலர் சர்வதேச அமைப்புகளில் பணியாற்றியவர்கள். சிலரிடம் அமெரிக்கா செல்வதற்கான விசா இருந்திருக்கிறது.

    அமெரிக்காவின் மத்திய படைப் பிரிவு இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. எனினும் 10 பேர் எப்படி இறந்தார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

    ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து அடுத்தடுத்த சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்திருப்பதாக அமெரிக்காவின் மத்தியப் படைப்பிரிவு அளித்திருக்கும் அறிக்கையில் கூறியுள்ளது.

    தாக்குதல் நடத்தப்பட்ட வாகனத்தில் அதிக அளவில் வெடிபொருள்கள் இருந்திருக்கலாம், அது அடுத்தடுத்த வெடிப்புகளுக்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என்று அந்த அறிக்க குறிப்பிட்டுள்ளது.

    காபூல் விமான நிலையத்துக்கு ஐஎஸ்-கே பயங்கரவாத இயக்கத்தால் ஏற்பட்டிருந்த ஆபத்தை ஒழிப்பதில் தங்களது ஆளில்லா விமானத் தாக்குதல் வெற்றிகரமாக இருந்ததாக அமெரிக்காவின் மத்தியப் படைப்பிரிவு முன்னர் கூறியிருந்தது.

    காபூல்
  5. பாராலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு இரண்டாவது பதக்கம், ரஞ்சன் அருண் பிரசாத், இலங்கை

    பாராலிம்பிக் போட்டியில் இலங்கை இன்று ஒரே நாளில் இரண்டு தங்கத்தை வென்றுள்ளது.

    எப் 64 பிரிவின் கீழ் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேப்ப துலான் கொடித்துவக்கு, வெண்கல பதக்கம் கிடைத்தது. அவர் 65.61 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து, வெண்கல பதக்கத்தை வெற்றி கொண்டுள்ளார்.

    2020ம் ஆண்டு டோக்யோ பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.

    இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஏ.எப்..46 பிரிவில் போட்டியிட்ட தினேஷ் பிரியந்த ஹேரத், ஈட்டி எறிதல் போட்டியில் இன்று புதிய உலக சாதனையை நிலைநாட்டினார்.

    67.79 மீட்டருக்கு ஈட்டியை எறிந்து அவர் இன்று சாதனையை நிலைநாட்டி தங்கப்பதக்கத்தை வெற்றிக் கொண்டார்.

  6. டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்

    டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்றிருக்கிறார்.

    23 வயதாகும் சுமித், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். நான்கு முயற்சிகளுக்குப் பிறகு ஐந்தாவது முயற்சியில் அவர் 68.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. நியூசிலாந்தில் ஃபைசர் தடுப்பூசி போட்ட பெண் மரணம்

    நியூசிலாந்து

    பட மூலாதாரம், Getty Images

    நியூசிலாந்தில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் உயிரிழந்தார். இது தடுப்பூசியின் தொடர்புடைய மரணம் எனக் கருதப்படுகிறது.

    தடுப்பூசியால் இதயத் தசையில் வீக்கம் ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என்று தடுப்பூசி கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

    ஏற்கெனவே இருந்த உடல் பிரச்னைகளும் தடுப்பூசி போடப்பட்டதால் தூண்டப்பட்டிருக்கலாம் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

    தடுப்பூசியால் இதயத் தசையில் வீக்கம் ஏற்படுவது மிகவும் அரிதானது என்று ஐரோப்பிய தடுப்பூசி ஒழுங்கமைப்புகள் கூறுகின்றன.

    தடுப்பூசியால் ஏற்படும் பலன்களைப் பார்க்கும்போது அதனால் ஏற்படும் அபாயம் ஒன்றுமில்லை என்றும் அவை கூறுகின்றன.

    நியூசிலாந்தில் தடுப்பூசியால் உயிரிழப்பு ஏற்படுவது இதுவே முதல் முறையாகும்.

  8. அவனி லெகரா: இந்திய பாராலிம்பிக் வரலாற்றில் முதல் தங்கம் வென்ற பெண்

    பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா இந்தியாவுக்காக இன்று தங்கம் வென்றுள்ளார்.

    இதுவரை ஏழு பெண்கள் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் தங்கம் வென்றதில்லை. இந்த ஏழு பேரில் ஐவர் வெண்கலமும், இருவர் வெள்ளியும் வென்றுள்ளனர்.

    ஒலிம்பிக், பாராலிம்பிக் இரண்டிலும் இதுவரை இந்தியா, மகளிர் பிரிவில் தங்கம் வென்றதில்லை. அவனியின் தங்கமே இப்பிரிவில் முதல் தங்கமாகும்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  9. அணு உலையை மீண்டும் இயக்கும் வடகொரியா: ஐ.நா கவலை

    வடகொரிய அரசு அந்த நாட்டில் உள்ள யங்பியன் எனும் இடத்திலுள்ள அணு உலையை மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளது போல தெரிகிறது என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அணுசக்தி முகமை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படும் புளூட்டோனியம் அந்த அணு உலையில் தயாரிக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

    சர்வதேச அணுசக்தி முகமையின் உறுப்பினராக இருந்த வட கொரிய அரசு 2009ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.

    எனினும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் வடகொரிய அணு உலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    UN says North Korea appears to restart nuclear reactor

    பட மூலாதாரம், Getty Images

  10. பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

    தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பங்கேற்க மாணவர்களை நேரில் பள்ளிகளுக்கு வர அனுமதிக்க அரசு உத்தேசித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் எத்தகைய வழிகாட்டுதல்களை அரசு கடைப்பிடிக்க வேண்டும் என முடிவு செய்வதற்காக தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அரசுத்துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

  11. குழந்தையை இழுத்துச் சென்ற மலைச் சிங்கம்; போராடி மீட்ட தாய்

    தமது ஐந்து வயது மகனைத் தாக்கிய மலைச் சிங்கத்திடம் போராடி குழந்தையை மீட்டுள்ளார் அமெரிக்கத் தாயொருவர், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இது நிகழ்ந்துள்ளது.

    லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேற்கே உள்ள சாண்டா மோனிகா மலைப் பகுதியில் உள்ள கலாபசஸ் எனுமிடத்தில் தமது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த அந்த ஐந்து வயது சிறுவனை மலைச் சிங்கம் தாக்கியது.

    பின்னர் அந்தச் சிறுவனைப் பிடித்து புல்வெளியில் தரதரவென்று இழுத்துச் சென்றது. அந்த மலைச் சிங்கத்தை நோக்கி நோக்கி ஓடிய குழந்தையின் தாய் அந்தச் சிங்கம் குழந்தையைத் அதன் பிடியிலிருந்து விடும் வரை வெறும் கையாலேயே அதை அடித்தார்.

    அதன் பின்னர் குழந்தையை விட்டுவிட்டு அந்தச் சிங்கம் ஓடிவிட்டது. வனவிலங்கு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அந்த மலை சிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டது.

  12. பாராலிம்பிக் போட்டியில் முதல் தங்கத்தை வென்றது இலங்கை, ரஞ்சன் அருண் பிரசாத், இலங்கை

    2020 டோக்யோ பராலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு முதலாவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

    பாராலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய தினேஷ் பிரியந்த ஹேரத், தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

    ஈட்டி எறிதல் போட்டியில் அவர் 67.79 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து, தமது சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

    இலங்கைக்கு முதலாவது தங்கப்பதக்கத்தை வென்றுக்கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, , விளையாட்டுத்துறை அமைச்சர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. இந்தியாவில் புதிதாக 42,909 பேருக்கு கொரோனா பாதிப்பு

    கொரோனா

    பட மூலாதாரம், EPA

    படக்குறிப்பு, இந்தியாவில் இதுநாள்வரை கொரோனா தடுப்பூசி மருந்து 63.43 கோடி டோஸ் போடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,909 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 309 கொரோனா உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

    புதிய கொரோனா பாதிப்பில் பெரும்பாலானவை கேரள மாநிலத்திலேயே கண்டறியப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 29,836 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை 75 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

    இந்தியாவில் நேற்று மட்டும் 34,763 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் இதுநாள்வரை 63.43 கோடி கொரோனா டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

  14. காபூல் விமான நிலையத்தை நோக்கி வீசப்பட்ட ராக்கெட் குண்டுகள் சேதம் இல்லை என தகவல்

    ஆப்கானிஸ்தான்

    பட மூலாதாரம், EPA

    படக்குறிப்பு, காபூலில் ஐ.எஸ் தற்கொலை குண்டுதாரியை கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா கொன்றதாக தெரிவித்தது.

    காபூல் விமான நிலையத்தை நோக்கு ஐந்து ராக்கெட் குண்டுகள் இலக்கு வைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எனினும் அந்த முயற்சியை அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு சாதனம் முறியடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

    இந்த ராக்கெட்டுகளை ஏவியது யார் என்பது தெரியவில்லை.

    ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டினர் மற்றும் அந்த நாட்டை விட்டு வெளியேற விரும்பும் ஆப்கானியர்களை வெளியேற்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தாலிபன்கள் கெடு விதித்துள்ளனர்.

    அந்த காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்று அந்த நாட்டின் ஆளுகையை கடந்த 15ஆம் தேதி தன்வசமாக்கிக் கொண்டுள்ள தாலிபன் அமைப்பு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், அங்கு கடந்த வாரம் வியாழக்கிழமை, ஐஎஸ்ஐஎஸ் கே என்ற தீவிரவாத அமைப்பு இரட்டை தாக்குதல்களை விமான நிலையம் அருகே நடத்தின. அதில் 170க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து அந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலை குண்டுதாரியொருவரை இலக்கு வைத்து நேற்று டிரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.

  15. இமாச்சல பிரதேசத்தில் 100% முதல் டோஸ்

    இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த மாநில அரசு கூறுகிறது.

    இமாச்சலப் பிரதேசம் 18 வயதை கடந்து அனைவருக்கும் முதல் வழங்கிய இந்தியாவின் முதல் மாநிலமாகயுள்ளது என்று அந்த மாநில சுகாதார அமைச்சர் ராஜீவ் சைஜால் தெரிவித்துள்ளார் என ஏ.என் .ஐ செய்தி முகமை கூறுகிறது.

    நவம்பர் 30-ஆம் தேதிக்குள் மாநிலத்தில் 18 வயதை கடந்த அனைவருக்கும் இரண்டாவது டோஸ் வழங்க இலக்கு வைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    corona vaccine
  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, தேவேந்திர ஜஜாரியா வெள்ளி வென்றார்

    டோக்யோவில் நடக்கும் பாராலிம்பிக் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா வெள்ளி வென்றார்.

    இது அவருக்கு பாராலிம்பிக் போட்டிகளில் மூன்றாவது பதக்கம் ஆகும்.

    இன்று அவர் வீசிய 64.35 மீட்டர் தூரமே அவரது அதிகபட்ச தூரமாகும்.

    இப்போது அவருக்கு 40 வயதாகிறது. ஏதென்ஸ் பாரலிம்பிக் போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றபோது அவருக்கு வயது 23. அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கப் பதக்கம் வென்றார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, இன்று இந்தியாவுக்கு 3வது பாராலிம்பிக் பதக்கம்

    பாராலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான F46 ஈட்டி எறிதல் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார் இந்தியாவின் சுந்தர் சிங்.

    இன்று நடந்த இறுதிப்போட்டியில் 64.01 மீட்டர் வீசி அவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவுக்கு இன்று 2வது பாராலிம்பிக் பதக்கம்

    டோக்யோவில் நடக்கும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இன்று மேலும் ஒரு பதக்கம் வென்றுள்ளது. ஆண்களுக்கான F56 வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

    இன்று நடந்த இறுதிப்போட்டியில் 24 வயதாகும் யோகேஷ் 44.38 மீட்டர் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  19. வந்துகொண்டிருக்கும் செய்தி, பாராலிம்பிக் தங்கம் வென்றார் அவனி

    டோக்யோவில் நடக்கும் பாராலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா தங்கம் வென்றுள்ளார்.

    ஒலிம்பிக், பாராலிம்பிக் இரண்டிலும் இதுவரை இந்தியா மகளிர் பிரிவில் தங்கம் வென்றதில்லை. அவனியின் தங்கமே இப்பிரிவில் முதல் தங்கமாகும்.

    10 மீட்டர் ஏர் ரைஃபிள் SH1 இறுதிப்போட்டியில் இவர் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்துள்ளார் 19 வயதாகும் அவனி லெகரா.

    இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

    .

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. காபூலில் அமெரிக்கா திடீர் தாக்குதல்

    காபூலில் நேற்று அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலால் காபூல் விமான நிலையத்துக்கு இருந்த தவிர்க்க முடியாத அச்சுறுத்தல் ஒழிக்கப்பட்டது என்று அந்நாட்டு பாதுகாப்புத் துறை கூறியுள்ளது.

    இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் இறந்ததாகவோ, காயமடைந்ததாகவோ ஆரம்பகட்ட செய்திகள் எதுவும் தெரிவிக்கவில்லை. இலக்கு வைத்து தாக்கப்பட்ட வாகனத்தில் தாக்குதலின் பின்பு நடந்த வெடிப்பு அந்த வாகனத்தில் கணிசமான அளவு வெடிபொருட்கள் இருந்ததை குறிக்கின்றது என்றும் அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.