தேசிய விளையாட்டு நாளன்று டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் 3 பதக்கம் வென்ற இந்தியா

முன்னாள் ஹாக்கி கேப்டன் தயான் சந்த் பிறந்தநாளான இன்று (ஆகஸ்டு 29) இந்தியாவில் தேசிய விளையாட்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

    உங்களுக்கு இந்த இரவு இனிதாகட்டும்.

  2. தாலிபன்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?

    தாலிபன்கள் 1996லிருந்து 2001வரை இவர்கள் ஆஃப்கானிஸ்தானை ஆட்சி செய்தார்கள். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த அமெரிக்க ராணுவம் இவர்களைப் பதவியிறக்கியது. அதைத் தொடர்ந்து 20 வருடங்கள் பிரச்னை நடந்தது.

    பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தாலிபன்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனாலும் சமீபகாலமாக இந்தக் குழுவின் ஆதிக்கமும் ராணுவ பலமும் அதிகரித்திருக்கிறது. 2021ல் இவர்களின் மொத்த எண்ணிக்கை 70,000 முதல் 1 லட்சம் பேர் வரை. பத்து வருடங்களுக்கு முன்பு தாலிபனில் 30,000 பேர் மட்டுமே இருந்ததாக அமெரிக்கா கணித்திருந்தது.

    இந்த அளவுக்கு பிரம்மாண்டமான குழுவை வைத்துக்கொண்டு கிளர்ச்சி செய்வதற்கு ஆப்கானிஸ்தானுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் இவர்களுக்கு நிதியுதவி வந்திருக்கிறது.

    அதை விளக்கும் பிபிசி காணொளி.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  3. குழந்தையை அடித்து சித்திரவதை - தாய் கைது

    விழுப்புரத்தில் தாயே தனது குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது தொடர்பாக விழுப்புரம் போலீசார் குழந்தையின் தாய் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    ஞாயிறன்று (ஆகஸ்டு 29) தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படை அப்பெண்ணை ஆந்திர மாநிலம் சித்தூரில் வைத்துக் கைது செய்துள்ளது. கணவரையும் குழந்தைகளையும் சில மாதங்களுக்கு முன்னரே பிரிந்த அவர் தமது தாயின் வீட்டில் இருந்துள்ளார்.

    அப்பெண் இனி தமிழ்நாடு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.

    mother abuse child
  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஆப்கனில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் - தகவல்கள் வெளியாகின

    ஆப்கனில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஆளில்லா விமானம் ஒன்றிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதல் காபூல் விமான நிலையத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டிருந்த தற்கொலைதாரி ஒருவரை இலக்குவைத்து நடத்தப்பட்டது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அவர் ஒரு வாகனத்தில் அப்பொழுது பயணித்துக்கொண்டிருந்தார். "நாங்கள் இலக்கு வைத்த நபரை தாக்கி விட்டதாகவே நம்புகிறோம்," என்று அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தியிடம் தெரிவித்துள்ளது.

    இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் இறந்ததாகவோ, காயமடைந்ததாகவோ ஆரம்பகட்ட செய்திகள் எதுவும் தெரிவிக்கவில்லை. இலக்கு வைத்து தாக்கப்பட்ட வாகனத்தில் தாக்குதலின் பின்பு நடந்த வெடிப்பு அந்த வாகனத்தில் கணிசமான அளவு வெடிபொருட்கள் இருந்ததை குறிக்கின்றது என்றும் அந்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

    குண்டு வைக்க திட்டமிட்ட இருந்தவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் மீது அமெரிக்காவின் வான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று தாலிபன் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார் என்று ஏபி செய்தி முகமை கூறுகிறது.

    வியாழனன்று காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 170 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 13 அமெரிக்க படையினரும் அடக்கம்.

    தாக்குதலுக்கு பின் உண்டான புகை

    பட மூலாதாரம், epa

    படக்குறிப்பு, தாக்குதலுக்கு பின் உண்டான புகை
  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகளை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்கா ராணுவ தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

    இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் ஆப்கானிஸ்தான் பிரிவான ஐ.எஸ் - கே அமைப்பின் உறுப்பினர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்தனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.

    அமெரிக்காவின் இந்த தாக்குதல் நடவடிக்கை குறித்த மேலதிக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

    வியாழனன்று காபூல் விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் சுமார் 170 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் - கே அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அப்போது கூறியிருந்தார்.

    விமான நிலையம் அருகே இருந்த கட்டடம் மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதலும் அமெரிக்கா நடத்திய தாக்குதலும் ஒன்றுதானா என்பது குறித்து தகவல்கள் இன்னும் தெளிவாக வெளியிடப்படவில்லை.

    காபூல் விமான நிலையம் அருகே இன்று பல வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.

    இந்த ராக்கெட் தாக்குதல், வெடிப்புக்கு பிந்தைய காணொளிகள் வெளியாகியுள்ளன. இவற்றை பிபிசியால் சுயாதீனமாக உறுதிசெய்ய இயலவில்லை.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. டோக்யோ பாராலிம்பிக் - ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள்

    டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வினோத்குமார் ஆண்களுக்கான வட்டு எறிதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இது ஒரே நாளில் இந்தியா வென்ற மூன்றாவது பதக்கம் ஆகும்.

    முன்னாள் ஹாக்கி கேப்டன் தயான் சந்த் பிறந்தநாளான இன்று (ஆகஸ்டு 29) இந்தியாவில் தேசிய விளையாட்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

    இன்று நடந்த இறுதிப்போட்டியில் 19.9 1 மீட்டர் தூரம் வீசி அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

    முன்னதாக இன்று மகளிருக்கான டேபிள் டென்னிசில் பவினாபென் பட்டேலும் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் நிஷாத் குமாரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. டோக்யோ பாராலிம்பிக் - ஆண்கள் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளி

    டோக்யோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய தடகள வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2.06 மீட்டர் உயரம் தாண்டி அவர் தமது ஆசிய சாதனையை சமன் செய்தார்.

    அமெரிக்காவைச் சேர்ந்த டேலஸ் வைஸ் என்னும் தடகள வீரர் இதே அளவு உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். இன்னொரு அமெரிக்கரான ரோட்ரிக் டௌன்சென்ட் 2.15 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. சுருக்குமடி: மீனவ கிராமங்கள் இடையே மோதல் - 600 பேர் மீது வழக்கு

    மீனவர்கள் மோதல். போலீஸ் துப்பாக்கிச் சூடு.
    படக்குறிப்பு, மீனவர்கள் மோதல். போலீஸ் துப்பாக்கிச் சூடு.

    சுருக்குமடி வலையை பயன்படுத்தும் விஷயத்தில் மீனவ கிராமங்களிடையே மோதலை தடுக்க போலீசார் 15 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுமார் 600 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

    புதுச்சேரியில் நல்லவாடு மற்றும் வீராம்பட்டினம் மீனவர்களுக்கு இடையே சுருக்குமடி வலை பயன்படுத்தும் விஷயத்தில் மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நல்லவாடு மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தியதாக கூறி வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களும் நடுக்கடலில் தாக்கிக் கொண்டனர்.

    கடலில் ஏற்பட்ட சம்பவத்தை அறிந்த கரையிலிருந்த இரு மீனவ கிராம மக்களும் சின்ன வீராம்பட்டினம் கடற்கரை அருகே சுளுக்கு குத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்கக்கொள்ள முயன்றனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அரியாங்குப்பம், தவளக்குப்பம் காவல் துறையினர் மீனவர்களை மோதல் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.‌ மீனவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போகவே, போலீசார் வானத்தை நோக்கி ஒரு முறை துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரம் ஏற்படாமல் கூட்டத்தைக் கலைத்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

    பிறகு நேற்று மாலை வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் 14 பெரிய படகுகள் மற்றும் 5 ஃபைபர் படகுகளில் நல்லவாடு அருகே உள்ள நடுக்கடலில் வட்டமிட்டு வானவெடி வெடித்து எச்சரிக்கை தெரிவித்தனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினர் பலமுறை எச்சரித்தும் திரும்பிச் செல்லாமல் நடுக்கடலில் தொடர்ந்து வெடி வெடித்து படகுகளில் சுற்றினர்.

    பிறகு நல்லவாடு மீனவர்களுக்கு ஆதரவாக வம்பா கீரப்பாளையத்தை சார்ந்த மீனவர்கள் ஒன்று திரண்டு நடுக்கடலில் வட்டமிட்டு எச்சரிக்கை தெரிவித்த வீராம்பட்டினம் மீனவ படகுகளைத் தாக்க முற்பட்டனர். இதனால் வம்பா கீரப்பாளையம் மற்றும் வீராம்பட்டினம் மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    இதனைத் தடுக்க முற்பட்ட காவல் துறையினர் கடலிலிருந்து வீராம்பட்டினம் மீனவர்களை திரும்பிச் செல்லும் படி எச்சரித்தனர். இதனிடையே வீராம்பட்டினம் மற்றும் வம்பா கீரப்பாளையம் மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தடுக்கும் நோக்கில் காவல் துறையினர் வானத்தை நோக்கி 14 முறை துப்பாக்கிச் சூடு நடத்திக் கூட்டத்தைக் கலைய செய்தனர். இதனால் தேங்காய்த்திட்டு முகத்துவாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் தட்சணாமூர்த்தி, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், காவல் கண்காணிப்பாளர் ரட்சனாசிங் உள்ளிட்டோர் மீனவ கிராம மக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தினர்.

    வம்பா கீரப்பாளையம், வீராம்பட்டினம், நல்லவாடு ஆகிய மூன்று மீனவ கிராமங்களில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்தது.

    மோதல் தொடர்பாக மூன்று மீனவ கிராமங்களிலும் தலா 200 பேர் வீதம் சுமார் 600 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

  9. காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு

    காபூல் விமான நிலையத்தில் மீண்டும் ஒரு தாக்குதல் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் அதுவும் இன்றே நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கமாண்டர்கள் தன்னிடம் தெரிவித்திருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  10. ஆஸ்திரேலியத் தெருவுக்கு தமிழ் பெயர்

    தமிழ்க் கவிதையின் அழுத்தமான அடையாளமாக உள்ள கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக ஆஸ்திரேலிய நாட்டில் ஒரு தெருவுக்கு பெயர் சூட்டப்படுகிறது.

    மெல்பர்ன் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு 'கவிக்கோ' தெரு என்று பெயர் சூட்டப்படுவதாகவும், அப்துல் ரகுமான் நினைவாகவே இந்தப் பெயர் வைக்கப்பட்டதாகவும் சிங்கப்பூர் தொழிலதிபர் எம்.ஏ.முஸ்தபா தெரிவித்துள்ளார்.

    கவிக்கோ அப்துல் ரகுமான்

    பட மூலாதாரம், photo - M.A. முஸ்தபா

    படக்குறிப்பு, கவிக்கோ அப்துல் ரகுமான்
  11. தமது எதிர்காலத்தைக் கணிக்கும் பிரேசில் அதிபர்

    தாம் கொல்லப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று தமது எதிர்காலம் குறித்து மூன்று கணிப்புகளை வெளியிட்டுள்ளார் பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ.

    முன்னாள் அதிபரான இடதுசாரி அரசியல்வாதி லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவை விட இவருக்கு வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

    எனினும் தாம் சிறைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் பொல்சனாரூ குறிப்பிட்டுள்ளார். "பூமியிலுள்ள யாராலும் என்னை அச்சுறுத்த முடியாது," என்றும் அவர் கூறியுள்ளார்.

    2018ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு பரப்புரையில் ஈடுபட்டு இருந்த சயீர் பொல்சனாரூ கத்தியால் குத்தப்பட்டார்.

    பிரேசிலின் மின்னணு வாக்குப்பதிவு முறை குறித்து கேள்வி எழுப்பியுள்ள இவர் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

    பிரேசிலின் தலைமை தேர்தல் நீதிமன்றம் அந்நாட்டின் வாக்குப்பதிவு முறையில் எந்த கோளாறும் இல்லை என்று புதன்கிழமையன்று கூறியிருந்தது.

    Brazil's Jair Bolsonaro

    பட மூலாதாரம், AFP

  12. வண்டியில் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட பழங்குடி இளைஞர் பலி - மத்தியப் பிரதேச கொடூரம்

    மத்தியப் பிரதேசத்தில் ஒரு சிறிய பிரச்சனைக்காக பழங்குடி இளைஞர் ஒருவர் மிகக் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டு, வாகனத்தோடு கட்டி இழுத்துச் செல்லப்பட்டார்.

    இதனால் ஏற்பட்ட பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது சம்பந்தப்பட்ட காணொளி ஆகஸ்ட் 28ஆம் தேதி பரவத் தொடங்கியது.

    வண்டியில் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட பழங்குடி இளைஞர்.
  13. 30 ஆயிரம் அடி உயரத்தில் குழந்தை பெற்ற ஆப்கன் அகதி

    விமானத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்.

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, விமானத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண் மற்றும் அவரது குடும்பம்.

    ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர், பிரிட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்தில், சுமார் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து இருக்கிறார்.

    சொமன் நூரி என்கிற 26 வயதான பெண், துபாய் நகரத்தில் இருந்து, பிரிட்டனில் இருக்கும் பர்மிங்ஹாம் நகரத்துக்கு மக்களை மீட்டு வரும் விமானம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது என துருக்கி ஏர்லைன்ஸ் கூறியது. இவர் முன்பே ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி துபாய் சென்றிருந்தார்.சரி... அவருக்கு யார் பிரசவம் பார்த்தது?

  14. காபூல் விமான நிலையத்தின் மீது மற்றொரு தாக்குதல் நடக்க வாய்ப்பு - ஜோ பைடன்

    தாலிபன்கள்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு காபூல் விமான நிலையத்துக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தாலிபன்கள்.

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே கடந்த வியாழக்கிழமை இரட்டை தற்கொலைத் தாக்குதல் நடந்தது.

    இதில் 13 அமெரிக்கப் படையினர் உள்பட 170 பேர் உயிரிழந்தனர்.

    கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படையினர் பெருமளவில் தங்கள் படைகளை விலக்கிக் கொண்ட நிலையில், தாலிபன்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை 10 நாள்களில் கைப்பற்றினர். காபூல் அவர்கள் கையில் வந்தவுடன் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

    பல ஆப்கானியர்களும் நாட்டை விட்டு வெளியேறத் துடித்தனர். அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தில் இருந்தே இவர்கள் அனைவரும் வெளியேறி வந்தனர். இந்நிலையில் இந்த தற்கொலைத் தாக்குதல் நடந்தது.

    இப்போது மீண்டும் அத்தகைய ஒரு தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், அது ஞாயிற்றுக்கிழமையே நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் களத்தில் உள்ள கமாண்டர்கள் கூறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்கக் குடிமக்கள் விமான நிலையத்துக்கு அருகில் இருந்து அகல வேண்டும். ஏனெனில் தாக்குதல் குறித்து குறிப்பான, நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

  15. டோக்யோ பாராலிம்பிக் - வெள்ளிப் பதக்கம் வென்றார் பவினா பட்டேல்

    பவினா

    பட மூலாதாரம், ANI

    டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் பெண்கள் டேபிள் டென்னிசில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் பவினா பட்டேல். இன்று நடந்த இறுதிப் போட்டியில் சீனாவின் ஜோவ் யிங் வெற்றி பெற்றார். பவினா பட்டேல் தோல்வி அடைந்தார். இதன் மூலம் அவர் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடையவேண்டியதாயிற்று.

    ஆனால், இந்த விளையாட்டில் தன்னைவிட தரவரிசையில் மேலே உள்ள பல வீராங்கனைகளை வென்று இந்த இடத்தை பவினா அடைந்ததே இன்ப அதிர்ச்சி.

    பவினா வெள்ளிப் பதக்கம் வென்ற தகவல் கிடைத்தவுடன், அவரது சொந்த ஊரான குஜராத் மாநிலம் மெஹ்சனா-வில் அவரது உறவினர்களும் நண்பர்களும் 'கர்பா' நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. வணக்கம் நேயர்களே!

    தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகள் அளவில் நடக்கும் நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் பகிர்ந்துகொள்கிறோம். எங்களோடு இணைந்திருங்கள்.