“காபூல் தாக்குதல் குறித்து மனமுடைந்துவிட்டேன்” – அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா
தாலிபன் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு அந்நாட்டிலிருந்து தப்பிச் செல்ல காபூல் விமான நிலையத்தில் காத்திருந்த மக்களை இலக்கு வைத்து நேற்றைய தாக்குதல் நடைபெற்றது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நன்றி நேயர்களே!
இன்றைய நேரலை பக்கம் இத்துடன் முடிவடைகிறது.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
`காபூல் தாக்குதல் குறித்து நான் மனமுடைந்துவிட்டேன்` - ஓபாமா
பட மூலாதாரம், Getty Images
காபூலில்
நடைபெற்ற கொடூர தாக்குதல் குறித்து தான் `மனமுடைந்துவிட்டதாக` அமெரிக்காவின்
முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தாலிபனுக்கு
எதிரான நடவடிக்கையை புஷ்ஷுக்கு பிறகு வழிநடத்திய ஒபாமா ஆயிரக்கணக்கான அமெரிக்க
துருப்புகளை ஆப்கானிஸ்தானில் பணியமர்த்தினார்.
“ஆபத்தான
பணியில் ஈடுபட்டு, பிறரின் உயிரை காப்பாற்றிய அமெரிக்க சிப்பாய்கள் கதாநாயகர்கள்” என
அவர் தெரிவித்துள்ளார்.
“அதிபராக, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின்
அன்புக்குரியவர்களுடன் துக்கத்தை பகிர்ந்து கொள்வது போன்ற வலி வேறு ஏதும் இல்லை” என ஒபாமா அறிக்கை ஒன்றில்
தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த
ஆப்கானியர்களின் குடும்பத்தினர் குறித்தும் தான் துயரப்படுவதாகவும், அவர்கள்
அமெரிக்காவின் பக்கம் நின்றவர்கள் என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
2001ஆம்
ஆண்டு சண்டை தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை அமெரிக்க படையை சேர்ந்த 2400
பேர் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து 550 பேர் மீட்பு – இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்
காபூல் அல்லது
தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயிலிருந்து 550 பேரை மீட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்
துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“ஆப்கானிஸ்தானின்
சூழலை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின்
செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பாக்சி தெரிவித்தார்.
தற்போதைய சூழலில்
ஆப்கானிஸ்தானில் எந்த அமைப்பு ஆட்சி அமைக்கும் என்பது தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
“களநிலவரம் குறித்து
தெளிவாக தெரியவில்லை. அங்குள்ள மக்களை வெளிக் கொண்டுவருவதே தலையாய கடமை.” என்று தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து
மக்களை மீட்கும் விமானத்தை இயக்குவது குறித்து பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை
நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
`ஆப்கானிஸ்தான் சம்பவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்`
பட மூலாதாரம், Getty Images
காபூல்
குண்டு வெடிப்பை தொடர்ந்து மேற்கத்திய நாடுகளை விமர்சித்துள்ளார் ரஷ்ய வெளியுறவுத்
துறை அமைச்சர் செர்கய் லாவ்ரோவ்.
“இதிலிருந்து
பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்: முற்றிலும் அந்நிய மதிப்புகளை புகுத்த நினைத்தால்
அது பேராபத்தாகதான் முடியும்.” என இத்தாலியின் வெளியுறவுத் துறை அமைச்சருடனான
சந்திப்புக்கு பிறகு தெரிவித்தார் செர்கய் லாவ்ரவ்.
“வெளிநாடுகளில் மேலும் நடவடிக்கைகளை தொடர
நினைக்கும் அரசியல்வாதிகள் இதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்,” என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
வெடிகுண்டு தாக்குதலுக்கு
கண்டனம் தெரிவித்துள்ள அவர், அனைத்து அரசியல் சக்திகளையும் அடக்கிய ஒரு அரசாங்கம்
ஆப்கானிஸ்தானில் அமைய வேண்டும் என தெரிவித்தார்.
அமெரிக்காவும்,
ஐரோப்பிய நாடுகளும் தங்களின் குடிமக்கள் மற்றும் தங்களுக்காக பணியாற்றியவர்கள்
ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கும் முயற்சியில் தீவிரம் காட்ட, தாலிபன் ஆப்கானிஸ்தானை
கைப்பற்றியது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதியாகவுள்ளது ரஷ்யா.
ரஷ்யா கடந்த சில நாட்களில் தாலிபனுடன் தொடர்பை
ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. இதற்கு முன்னாள் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் இருந்த
ஆப்கன் அரசு ரஷ்ய அதிபர் தூதர் வெளிப்படையாக தாலிபனுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்தியது.
ஆனால் அதை ரஷ்யா மறுத்திருந்தது.
விவசாயி தாக்கப்பட்ட விவகாரம் - வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் கைது செய்து விடுவிப்பு
கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர்பாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் விவசாயி கோபால்சாமி தாக்கப்பட்ட விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 6ம் தேதி நில ஆவணங்கள் தொடர்பாக விவசாயி கோபால்சாமி ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம் சென்ற போது , கிராம நிர்வாக அலுவலருக்கும் கோபால்சாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது அங்கிருந்த கிராம உதவியாளர் முத்துச்சாமி குறுக்கிட்டதால், அவரை சாதியைக் குறிப்பிட்டு திட்டியதோடு காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, காவல்துறையினர் கோபால்சாமி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில்விவசாயி கோபால்சாமியை உதவியாளர் முத்துசாமி தாக்கும் வீடியோ வெளியாகி வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
அதில் உதவியாளர் முத்துச்சாமி, விவசாயி கோபால்சாமியை தாக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் உதவியாளர் முத்துச்சாமி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தனர்.மேலும் விவசாயி கோபால்சாமி கொடுத்த புகாரின் பேரில் கிராம உதவியாளர் முத்துச்சாமி மீதும், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மீதும் அன்னூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், இருவரையும் பிணையில் விடுவித்துள்ளனர்.
தந்தையால் கைவிடப்பட்ட குடும்பம்
காபூல்
விமான நிலையம் எங்கும் துயரம் நிறைந்ததாக இருக்கும் சூழலில் தந்தையால் கைவிடப்பட்ட
ஒரு குடும்பம் அங்கு தவித்து நிற்கிறது.
ஒரு
இளம் பத்திரிகையாளர், அவரின் தாய், ஏழு சகோதரர்கள், மூன்று சகோதரிகளை விட்டுவிட்டு
தனது தந்தை ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார் என்று தெரிவித்தார்.
சலாஷ்
(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அவர் பணிக்கு திரும்பினால் அவரை கொன்றுவிடுவதாக
தாலிபன்கள் மிரட்டியுள்ளனர்.
தற்போது
அவரும் அவரது குடும்பத்தினரும் தற்காலிக புகலிடம் ஒன்றில் அடைக்கலம்
அடைந்துள்ளனர்.
“என்னுடைய
குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். அவர்கள் பல்கலைக்கழகத்திற்கும் பள்ளிக்கும் செல்ல
விரும்புகிறார்கள். நாங்கள் ஏழைகள். ஒரே ஒரு பேனாதான் எங்களிடம் உள்ளது அதைதான்
குடும்பம் முழுக்கவும் பயன்படுத்துகிறோம்,” என அவர் தெரிவித்தார்.
18 வயதாகும் சலாஷ், தனது தந்தை தனது குடும்பத்திடம் விமான
நிலையத்திற்கு சென்று காத்திருக்க சொன்னதாகவும் ஆனால் 24 மணி நேரமாக அவர் வரவில்லை
என்றும் தெரிவிக்கிறார்.
“நான் சிறிதுகூட உறங்கவில்லை. இங்கு மிகவும்
கஷ்டமாக உள்ளது. வெய்யில் கொளுத்துகிறது. இந்த இடம் அசுத்தமாகவுள்ளது,”
“அதன்பிறகுதான்
படையினர் என்னுடைய தந்தை அவரின் இன்னொரு மனைவி மற்றும் குடும்பத்துடன் சென்றுவிட்டதாகவும்,
நாங்கள் வருவதை அவர் விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர்”
“எங்களுக்கு என்ன
செய்வதென்று தெரியவில்லை. கடவுள்தான் எங்களை காப்பாற்ற வேண்டும்.”
வந்துகொண்டிருக்கும் செய்தி, பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அத்துடன் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் அவர் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்றும் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
டோக்யோ பாராலிம்பிக்ஸ்: இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவானிபென் அரையிறுதியில்
டோக்யோ பேராலிம்பிக்ஸ் போட்டியின் பெண்கள் டேபிள் டென்னிஸ் பிரிவில், இந்திய வீராங்கனை பவானிபென் பட்டேல் அரையிறுதியில் நுழைந்தார்.
அவர் உலகில் இரண்டாமிடத்தில் உள்ள செர்பியாவின் போரிஸ்லாவ்னா பெரிக்-ரான்கோவிக் என்பவரை காலிறுதிப் போட்டியில் வென்று தற்போது அரையிறுதியில் நுழைந்துள்ளார்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, பவானிபென் பட்டேல்.
காபூலில் தாலிபன்களுக்கு மத்தியில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ்.(கே) - யார் இவர்கள்?
பள்ளிகளில் பயிலும் மாணவிகள், மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர் என பெண்களைக் குறிவைத்து மிகக் கொடூரமான தாக்குதல் நடத்தும் இயக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே.
இப்போது காபூல் விமான நிலையத்தில் நடைபெற்றிருக்கும் இரட்டைக் குண்டுவெடிப்புகளுக்குப் பொறுப்பேற்றிருக்கும் இந்த இயக்கம் மத்திய கிழக்கில் செல்வாக்குப் பெற்றிருக்கும் ஐ.எஸ். இயக்கத்தின் ஆப்கானிய கிளை.
இதன் மிகச் சரியான பெயர் கோரேசன் மாகாண இஸ்லாமிக் ஸ்டேட் (Islamic State Khorasan Province) என்பதாகும்.
ஆப்கானிஸ்தானில் இருநது இயங்கும் மிகக் கொடூரமான பயங்கரவாத இயக்கம் இது என அறியப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
காபூல் தாக்குதல்கள் - இதுவரை நமக்கு தெரிந்த தகவல்கள்
நேற்று காபூல் விமான நிலையத்திற்கு அருகே நடைபெற்ற இரு தாக்குதல்களில் இதுவரை சுமார் 90 பேர் பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள்.
அமெரிக்க துருப்புகளை சேர்ந்த 13 பேரும் நேற்றைய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
தாலிபன் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு அந்நாட்டிலிருந்து தப்பிச் செல்ல காபூல் விமான நிலையத்தில் காத்திருந்த மக்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடைபெற்றது.
நேற்றை தாக்குதலை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் அமெரிக்காவின் பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களைக் குறிவைத்து வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
வெளிநாட்டு படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு ஆகஸ்டு 31ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேதியை தாண்டி கெடு நீட்டிக்கப்படாது என்றும் தாலிபன் தெரிவித்துள்ளது.
`ஆப்கானிஸ்தானுக்கு அதிகளவில் மருத்துவ உதவிகள் தேவை` - உலக சுகாதார நிறுவனம்
ஆப்கானிஸ்தானில்
அதிகளவிலான மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவ
உதவிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம்
தெரிவித்துள்ளது.
மேலும்
பாகிஸ்தான் அரசு உதவியுடன் ஓரிரு தினங்களில் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில்
உள்ள மசார்-இ-ஷெரிஃப் நகருக்குள் வான் வழி மூலம் செல்லவிருப்பதாகவும் உலக சுகாதார
நிறுவனம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களுக்கு
சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ வசதிகள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான
மருந்துகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என உலக சுகாதார நிறுவனத்தின்
பிராந்திய அவசரநிலை இயக்குநர் ஜெனிவாவில் தெரிவித்தார்.
தற்போதைய
சூழலில், பாதுகாப்பு காரணங்கள் கருதி காபூல் விமான நிலையத்தை பயன்படுத்த இயலாது
எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்குத் தடை இல்லை - உயர் நீதிமன்றம்
பட மூலாதாரம், Kodanadu estate
கொடநாட்டில்
நடந்த கொலை, கொள்ளை வழக்கில் கூடுதலாக விசாரணை நடத்தத் தடை
இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு எதிராகத் தொடரப்பட்ட
வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள்
முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓய்வில்லமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை விவகாரத்தில் கூடுதல் விசாரணை நடத்தத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, அந்த வழக்கில் சாட்சிகளில் ஒருவரான அனுபவ் ரவி என்பவர் சென்னை உயர்
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில்
ஏற்கனவே விசாரணை முடிந்துவிட்ட நிலையில், மீண்டும் இதில்
விசாரணை நடத்துவது உள் நோக்கமுடையது என அவர் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை
உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமாரால் விசாரிக்கப்பட்டுவந்தது. இந்த வழக்கில், ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கில்
விசாரணை கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை
நடத்துவது அரசியல் உள்நோக்கமுடையது. ஆகவேகூடுதல் விசாரணை
நடத்தக்கூடாது என வாதிட்டனர்.
இந்த வழக்கில்
கூடுதல் ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் கூடுதல் விசாரணை அவசியம் என அரசுத் தரப்பில் வாதிட்டனர்.
இந்த வழக்கில்
தீர்ப்பளித்த நீதிபதி, வழக்கின் எந்தக் கட்டத்திலும் கூடுதல் விசாரணை
நடத்த காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது எனத் தீர்ப்பளித்தனர். மேலும், வழக்குத் தொடர்ந்திருப்பவர் இந்த வழக்கில் வாதியோ, பிரதிவாதியோ அல்ல; வெறும் சாட்சி மட்டுமே என்று கூறி ரவி தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்தனர்.
முன்னதாக, இந்த வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட அமர்வு
நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கி வழக்கின் விசாரணையை
செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஆப்கானிஸ்தானில் இருந்து ஆட்களை வெளியேற்றும் பிரிட்டன் நடவடிக்கை இறுதி கட்டத்தில்
காபூல் விமான நிலையத்தில் இருந்து ஆட்களை வெளியேற்றும் பணியில் பிரிட்டிஷ் படையினர் கடைசி கட்டத்தை எட்டிவிட்டதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் நாட்டினர் மற்றும் வெளியேற்றத்துக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டவர்கள், விமான நிலையத்தில் உள்ளவர்கள் தொடர்பாக மட்டுமே கவனம் செலுத்தப்படும். புதிதாக யாரும் வெளியேற்றுவதற்காக அழைக்கப்படமாட்டார்கள்.
"(விரும்புகிற) எல்லோரையும் வெளியேற்ற முடியவில்லை என்ற வருத்தத்துடனே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது," என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வேலஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்கை நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் பிறகு அளித்த பேட்டி ஒன்றில், காபூல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் தங்கள் வெளியேறும் திட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்திருந்தார்.
கொடநாடு கொலை வழக்கு விசாரணை செப்டம்பர் 2க்கு ஒத்திவைப்பு
பட மூலாதாரம், kodanadu estate
நீலகிரி மாவட்ட
அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்த கொடநாடு கொலை வழக்கு விசாரணை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்
நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கொடநாடு வழக்கில்
புதிதாக ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென
கடந்த 13ஆம் தேதி நீதிமன்றத்தில் காவல்துறை
தெரிவித்தது. அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து சயான் உள்ளிட்டவர்களிடம்
காவல்துறை மீண்டும் விசாரணை நடத்திவந்தது.அ.தி.மு.கவைச்
சேர்ந்த ரவி என்பவர், தான் இந்த வழக்குத் தொடர்பாக தெரிவிக்க வேண்டிய
அனைத்தையும்தான் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும் தன்னை மீண்டும் விசாரணைக்கு
அழைக்கக்கூடாது என்றும் சொல்லிவந்தார். அவர் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் ஒரு
வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில்தான்
அந்த வழக்கின் விசாரணை இன்று நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் துவங்கியது.
முக்கியக் குற்றவாளியாகச் சொல்லப்பட்ட சயான் காலை ஒன்பதே முக்கால் மணிக்கே
நீதிமன்றத்திற்கு வந்தார். சுமார் பத்து மணியளவில் விசாரணை துவங்கியது.
மற்றொரு
குற்றவாளியான வாளையார் மனோஜ் ஆஜராகவில்லை. சுமார் 20 நிமிடங்கள் வாதப்
பிரதிவாதங்கள் நடைபெற்றன. அந்தத் தருணத்தில் ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்
அனந்தகிருஷ்ணன், பால நந்தகுமார் உள்ளிட்டோர் ஒரு மனுவைத்
தாக்கல் செய்தனர். அதில், ரவியை விசாரணைக்கு அழைக்கக்கூடாது என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து ரவி
தரப்பு வழக்கறிஞர்களுக்கும் அரசுத் தரப்பு, சயான் தரப்பு
வழக்கறிஞர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதி தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கின் விசாரணை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு
ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம், தடயவியல் நிபுணர்
ராஜ்மோகன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், கோத்தகிரி மின்சாரத் துறை துணைப் பொறியாளர் ஆகியோர் ஆஜராக
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காபூல் விமான நிலைய வெளிப்புற பாதுகாப்புக்கு தாலிபனை நம்பியதற்கு விமர்சிக்கப்படும் அமெரிக்கா
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையம் அமெரிக்கப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆனால், அதன் வெளிப்புறப் பாதுகாப்பு தாலிபன்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
காபூல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலை அடுத்து விமான நிலைய வெளிப்புறப் பாதுகாப்புக்கு தாலிபன்களை நம்பி இருந்ததற்காக அமெரிக்கா விமர்சனங்களை எதிர்கொள்கிறது.
"இது தாலிபன்கள் மீது வைத்த நம்பிக்கை அல்ல. பரஸ்பர சுயநலம். ஆனால், குண்டுவெடிப்பை நிகழ்த்திய ஐ.எஸ்.ஐ.எஸ். பிரிவுக்கும், தாலிபன்களுக்கும் இடையில் குண்டு வைப்பது தொடர்பாக எந்த கூட்டுறவும் இருப்பதாக களத்தில் இருக்கும் அமெரிக்க ராணுவத்திடம் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை," என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் சட்டப்படி ஓர் அரசு அமைக்கப்படாத நிலையில், தாலிபன்கள் சொல்வதை ஏன் அமெரிக்கா கேட்கவேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் சொன்ன பதில், "நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பெருமளவு நாடு தாலிபன்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. நிச்சயமாக காபூல் நகரம் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, வெளியேற விரும்புகிறவர்களை வெளியேற்ற தேவையானவற்றை செய்ய அவர்களோடு இணைந்து செயல்படுவது முக்கியமானது".
அமெரிக்கப்படைகள் முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு என்ன நடக்கும் என்பது தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்து தாலிபன்களோடு பேசிவருவதாகவும் பிளிங்கன் தெரிவித்தார்.
காபூல் தாக்குதலில் 90 பேர் பலி: நடந்தது என்ன?
பட மூலாதாரம், Getty Images
பட மூலாதாரம், Getty Images
காபூலின் விமான நிலையத்தில் நேற்று மாலை நேரத்தில் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் அமெரிக்க மீட்புப் படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 90-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். மேலும் 150 பேர் காயமடைந்தனர்.
மெரைன்ஸ் எனப்படும் அமெரிக்காவின் சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 11 பேரும் ஒரு கடற்படை மருத்துவர் ஒருவரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்கள். கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்படுவது இதுவே முதல்முறையாகும்.
பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.
தாலிபன்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி வரும் 31-ஆம் தேதிக்குள் படைகள் அனைத்தும் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும்.
இதற்கான காலக்கெடு நெருங்குவதால் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூடியிருக்கிறார்கள்.
உள்ளூர் நேரப்படி மாலை ஆறு மணியளவில் விமான நிலையத்தின் அப்பி நுழைவு வாயில் அருகே முதல் குண்டு வெடித்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு ஆப்கானியரை மீட்பதற்காக பிரிட்டன் அதிகாரிகள் பயன்படுத்திவந்த ஹோட்டலில் மற்றொரு குண்டு வெடித்தது.
இரண்டு குண்டுகளுமே விமான நிலையத்துக்கு வெளியே வெடித்துள்ளன.
தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்று ஐஸ்எஸ்ஐஎஸ்-கே என்ற பயங்கரவாத இயக்கம் கூறியுள்ளது.
குண்டுகள் வெடித்திருக்கும் நிலையிலும் "மீட்புப் பணிகளை நிறுத்தப் போவதில்லை. தொடர்ந்து செய்வோம்" அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
காபூலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். கே இயக்கத்தினரால் இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் மேலும் தாக்குதல்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து தாலிபன்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் அமெரிக்க மத்தியப் படைப்பிரிவின் தலைவர் பிராங்க் மெக்கென்சி கூறினார்.
காபூல் விமான நிலையத்தில் தற்போது 5,800 அமெரிக்க வீரர்களும் சுமார் 1000 பிரிட்டன் வீரர்களும் உள்ளனர்.
இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து 104,000 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 66,000 பேர் அமெரிக்கா மூலமாகவும் மேலும் 37,000 பேர் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மூலமாகவும் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கனடா, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் உட்பட பல நாடுகள் ஏற்கனவே தங்களது மீட்பு நடவடிக்கைகளை நிறுத்திவிட்டன.
விமான நிலையத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக பாதுகாப்பு அளித்து வந்த துருக்கி தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
வியாழக்கிழமை மூத்த அதிகாரிகளுடன் நடந்த அவசரக் கூட்டத்தில் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தங்களது மீட்பு நடவடிக்கைகள் தொடரும் என்று குறிப்பிட்டார்.
காபூல் தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நேரலைக்கு வரவேற்கிறோம்!
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.