ஆப்கானிஸ்தான் நெருக்கடிக்கு நடுவே கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகளுக்கு பயணம்

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நெருக்கடியான சூழலில் ஆசிய நாடுகளுக்கான தமது பயணத்தைக் தொடங்கியுள்ளார் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இன்றைய இந்த நேரலையில் இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி. மீண்டும் நாளை வேறொரு நேரலையில் சந்திப்போம்.

    இந்த இரவு இனியதாகட்டும்.

  2. ஆப்கானிஸ்தானில் இருந்த மேலும் 146 இந்தியர்கள் மீட்பு

    தாலிபன்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் வந்த நிலையில் அந்நாட்டில் சிக்கிக்கொண்ட மேலும் 146 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

    இவர்கள் மீட்கப்படும் இரண்டாவது இந்தியக் குழுவினர்.

    இவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து தோஹா கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் இன்று இந்தியா அழைத்துவரப்படுவதாக, தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. மீட்பு விமானத்தில் குழந்தை பெற்ற ஆஃப்கன் பெண்

    ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு முகமைகளுக்காகப் பணியாற்றிய ஆப்கானியர்களை மீட்பதற்கான விமானம் ஒன்றினுள் குழந்தையை பிரசவித்துள்ளார் ஆஃப்கன் பெண் ஒருவர்.

    ஆப்கானிஸ்தானிலிருந்து ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டைன் விமானப்படை தளத்துக்கு அந்த விமானம் சென்றடைந்த பொழுது இந்த ஆப்கானிய பெண் குழந்தையை பிரசவித்தார் என்று அமெரிக்க விமானப் படையின் ஏர் மொபிலிட்டி கமாண்ட் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    அந்த விமானம் தரை இறங்கிய பின்பு அதற்குள் சென்ற மருத்துவ ஊழியர்கள் விமானத்தின் சரக்கு வைக்கும் பகுதிக்குள் வைத்து அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.

    அந்த விமானத் தளத்திற்கு அருகே இருக்கும் மருத்துவமனை ஒன்றில் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. தாலிபன்களின் சில அறிவிப்புகளுக்கு இலங்கை அரசு மகிழ்ச்சி

    தாலிபன்களின் சில அறிவிப்புக்களுக்கு இலங்கை அரசாங்கம் தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது. அந்த உறுதிப்பாட்டை தொடர்ந்தும் மதிக்குமாறும் தாலிபன்களை இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது.

    இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாலிபன்கள் பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதுடன், எந்த வெளிநாட்டினருக்கும் தீங்கு செய்ய மாட்டோம் என உறுதியளித்துள்ளமை குறித்து இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சியை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்து ஓரிரு தினங்களில் இலங்கை அரசாங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

    afghanistan sri lanka

    பட மூலாதாரம், Getty Images

  5. கமலா ஹாரிஸ் ஆசிய பயணம்

    தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நெருக்கடியான சூழலில் ஆசிய நாடுகளுக்கான தமது பயணத்தைக் தொடங்கியுள்ளார் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்.

    இன்று சிங்கப்பூர் சென்றடைந்துள்ள கமலா ஹாரிஸ், அடுத்ததாக வியட்நாம் செல்லவுள்ளார். ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில் தென்கிழக்காசிய நாடுகளுக்கு கமலாவின் இந்தப் பயணம் நிகழ்கிறது.

    தென்கிழக்கு ஆசியாவும், இந்தோ - பசிஃபிக் பிராந்தியமும் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு முக்கியம் என்று அவரது அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. காபூல் விமான நிலைய நெரிசல் - 7 பேர் பலி

    காபூல் விமான நிலையத்தில் உண்டான கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு ஆப்கானியர்கள் உயிரிழந்துள்ளதாக பிரிட்டன் வெளியுறவுத் துறை இன்று தெரிவித்துள்ளது.

    இந்த மாத இறுதிக்குள் பெரும்பாலான வெளிநாட்டவர்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனும் அமெரிக்க அரசின் இலக்குக்கும் பிரிட்டன் ஆதரவு தெரிவித்துள்ளது.

    தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் காபூல் விமான நிலையம் அமெரிக்கா தலைமையிலான படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

  7. மாநிலங்களவைக்கு திமுக சார்பில் எம் எம் அப்துல்லா போட்டி

    எம் எம் அப்துல்லா

    பட மூலாதாரம், M.m. Abdulla, Facebook

    வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நடக்கவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் அப்துல்லா போட்டியிடுவார் என மு க ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எம் எம் அப்துல்லா வெளிநாடு வாழ் தமிழர் நல அணியில் இணைச் செயலாளராக பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  8. மணிப்பூர் ஆளுநராக இல கணேசன் நியமனம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல. கணேசன், மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக, இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டு இருக்கிறார் என பிடிஐ முகமையில் செய்தி வெளியாகி உள்ளது.

    இவர் 2016 - 18 ஆண்டு காலத்தில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாஜகவின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் நெருக்கமான அரசியல் வட்டாரத்திலும் இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

  9. இந்தியாவில் பூஸ்டர் டோஸ் இப்போது தேவை இல்லை - எய்ம்ஸ் இயக்குநர்

    கொரோனா தடுப்பூசி

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியர்களுக்கு பூஸ்டர் ஷாட் எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்குவது குறித்து இந்தியாவிடம் போதுமான தரவுகள் இல்லை.

    அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இது குறித்து போதுமான தரவுகள் கிடைக்கலாம் என எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா நேற்று (ஆகஸ்ட் 21, சனிக்கிழமை) கூறினார்.

    மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பாதுகாப்பு எதிர்பான்களின் அளவு அதிகரிப்பதாக வெளியான பல்வேறு ஆய்வுகளைத் தொடர்ந்து, அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உட்பட பல நாடுகளும் பூஸ்டர் ஷாட்களை வழங்க திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

    தற்போது இந்தியாவுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவை என தரவுகள் குறிப்பிடவில்லை எனவும் கூறியுள்ளார் குலேரியா.

  10. காபூலுக்கு வராதீர்கள் - அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை

    அமெரிக்க படையினர்

    பட மூலாதாரம், US MARINE CORPS/REUTERS

    காபூல் விமன நிலையத்தில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஐஎஸ் அமைப்பால் தாக்குதல் நடத்தப்படலாம் என்கிற அச்சத்தில், அமெரிக்க மக்கள் காபூல் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என எச்சரித்துள்ளது அமெரிக்கா.

    காபூல் விமான நிலையத்துக்கு வெளியே பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால், அங்கு வர வேண்டாம் என அமெரிக்கா சனிக்கிழமையே எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க அரசு தரப்பிலிருந்து, பயணம் மேற்கொள்ளுமாறு கூறுபவர்கள் மட்டும் காபூல் வந்தால் போதும் எனக் கூறியுள்ளது அமெரிக்கா.

    அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளோ ஆஃப்கனில் சூழலை கண்காணித்து வருவதாகவும், மாற்று வழிகளைக் குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

  11. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு மீட்கப்பட்டவர்கள்

    காபூல் விமான நிலையத்தில் இருந்து 168 பேருடன் கிளம்பிய இந்திய விமானப் படையின் C-17 ரக விமானம் காசியாபாத் விமானத் தளத்துக்கு வந்து சேர்ந்தது. இவர்களில் 107 பேர் இந்தியர்கள்.

    காபூலில் இருந்து வெளியேறி தஜிகிஸ்தான் மற்றும் கத்தார் சென்ற இந்தியர்களை அழைத்துக் கொண்டு ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் விஸ்தாரா ஆகிய நிறுவனங்களின் விமானங்களும் இன்று டெல்லி வந்தடைந்துள்ளன.

    காபூலில் இருந்து இந்தியர்களை அழைத்து வர தினமும் இரண்டு விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று இந்திய அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குவோர் செய்தியாளர்கள் விக்னேஷ் மற்றும் கௌதமன் முராரி..