"வெளிநாட்டினரை விரட்டிவிட்டோம்": முதல் செய்தியாளர் கூட்டத்தில் தாலிபன்கள் பெருமிதம்

"20 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகு நாங்கள் நாட்டை விடுவித்துள்ளோம். வெளிநாட்டினரை வெளியே விரட்டியுள்ளோம். நாடு முழுமைக்கும் பெருமிதமான தருணம் இது என்று குறிப்பிட்டார் தாலிபன் செய்தித் தொடர்பாளர்".

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே...

    இன்றைய இந்த நேரலையில் இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி.

    நாளை மீண்டும் வேறொரு நேரலையில் சந்திப்போம்.

    இந்த இரவு இனியதாகட்டும்.

  2. யாரும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியதில்லை - தாலிபன்

    தாலிபன்

    பட மூலாதாரம், Getty Images

    ஆப்கானிஸ்தானைப் பிடித்த பிறகு முதல் முறையாக காபூலில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹிதீன்

    "நாடு முழுவதும் பாதுகாப்பு உள்ளது. யாரும் நாட்டைவிட்டு வெளியேறவேண்டியதில்லை," என்றார்.

    தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கடத்தலும் கொலையும் நடப்பதாக கூறப்படுவது குறித்து கேட்டபோது "யாரும் யாரையும் கடத்தமுடியாது. ஒவ்வொரு நாளும் நாங்கள் பாதுகாப்பை அதிகப்படுத்துகிறோம். பொது மன்னிப்பு வழங்கப்படுமே அல்லாது, பகைமை இருக்காது" என்று அவர் தெரிவித்தார்.வேறொரு கேள்விக்குப் பதில் அளித்த அவர் "20 ஆண்டுகளுக்கு முன்போ, இப்போதோ எப்போதும் எங்கள் நாடு ஒரு முஸ்லிம் நாடு. ஆனால், அனுபவம், பக்குவம், பார்வை என்று வரும்போது இப்போதுள்ள எங்களுக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எங்களுக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நாங்கள் எடுக்கப் போகும் நடவடிக்கைகளிலும் வேறுபாடுகள் இருக்கும். இது ஒரு பரிணாம நடைமுறை" என்று அவர் கூறினார்.

    " நாங்கள் ஒரு அரசாங்கத்தை அமைக்க இருக்கிறோம். அதன் பிறகுதான் என்னவிதமான சட்டம் நாட்டுக்கு வழங்கப்படும் என்று தெரியும். அரசாங்கத்தை அமைத்தபிறகு அது பற்றி தெரிவிக்கப்படும்," என்று அவர் கூறினார்.

  3. ஆப்கானிஸ்தான் வந்த தாலிபன் அரசியல் பிரிவுத் தலைவர்

    தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில் அந்த அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும், அதன் அரசியல் பிரிவுத் தலைவருமான முல்லா பராதர் ஆப்கானிஸ்தான் வந்து இறங்கியுள்ளார்.

    கந்தஹார் பகுதிக்கு வந்த அவர் எங்கிருந்து வந்தார் என்பது தெரியவில்லை. ஆனால், பெரும்பாலான தாலிபன் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில்தான் தங்கியிருந்தனர். அங்கிருந்தே அவர்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் முடிவில்தான் அமெரிக்கா தனது துருப்புகள் முழுவதையும் திரும்பப் பெறுகிறது.

    • ஆப்கானிஸ்தான் போர்க்களமாக நீடிப்பதை விரும்பவில்லை: தாலிபன்

      "ஆப்கானிஸ்தான் மோதல்கள் நிகழும் போர்க்களமாக நீடிக்காது என்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்," என்று வெற்றிக்குப் பிந்தைய தங்கள் முதல் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார் தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித்.

      "எங்களுக்கு எதிராகப் போராடிய அனைவரையும் நாங்கள் மன்னித்துவிட்டோம். பகைமைகள் முடிவுக்கு வந்துவிட்டன. வெளிநாட்டிலோ, உள்நாட்டிலோ எங்களுக்கு எந்த எதிரிகளும் வேண்டாம்," என்று குறிப்பிட்டார் சபியுல்லா.

    • ஆப்கானிஸ்தானை பிடித்த பின் தாலிபன்களின் முதல் செய்தியாளர் சந்திப்பு

      ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு தாலிபன்கள் முதல் முறையாக அதிகாரபூர்வமான செய்தியாளர் சந்திப்பை நடத்திவருகின்றனர்.

      தாலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கேமிராக்கள் முன்பாக தோன்றி பேசுகிறார். "20 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகு நாங்கள் நாட்டை விடுவித்துள்ளோம். வெளிநாட்டினரை வெளியே விரட்டியுள்ளோம்".

      "நாடு முழுமைக்கும் பெருமிதமான தருணம் இது," என்றார் அவர்.

    • 9 வயது சிறுமி தந்தையுடன் சபரிமலை கோயிலுக்கு செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி

      9 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் சபரிமலை கோயிலுக்கு செல்ல கேரள உயர்நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட பெரியவர்கள் மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளிலும் சிறுவர்கள் அவர்களுடன் பங்கேற்கலாம் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. ஆகஸ்டு 23-ம் தேதி தமது தந்தை சபரிமலை கோயிலுக்கு செல்லும்போது தாமும் செல்ல அனுமதி வேண்டும் என்று அந்த சிறுமி கோரியிருந்தார்.

      X பதிவை கடந்து செல்ல
      X பதிவை அனுமதிக்கலாமா?

      இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

      எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

      X பதிவின் முடிவு

    • ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து ட்விட்டர் செயல்படும்

      ஆப்கானிஸ்தான்

      பட மூலாதாரம், TWITTER

      ஆப்கானிஸ்தானில் ட்விட்டர் சமூக ஊடகம் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

      ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் நடத்தி வந்த ஃபேஸ்புக் பக்கங்கள், இடுகைகள் முடக்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் இன்று அறிவித்தது. அமெரிக்க சட்டப்படி தங்களுடைய நிறுவனம் செயல்படுவதால், அந்த நாட்டால் தீவிரவாதிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ள தாலிபன்கள் தொடர்பான இடுகைகள், பக்கங்களை முடக்குகிறோம் என்று ஃபேஸ்புக் கூறியுள்ளது.

      இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் தமது சமூக ஊடகம் இயங்கும் என்ற அறிவிப்பை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

      விதி மீறல்கள் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் . ஆப்கனில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. எனவே மக்கள் ட்விட்டர் மூலம் உதவிகளை கோரி வருகிறார்கள். அங்குள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் மக்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • ஒருவருக்கு கொரோனா - நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தது நியூசிலாந்து

      நியூசிலாந்து

      பட மூலாதாரம், Getty Images

      படக்குறிப்பு, ஜெசிண்டா ஆர்டெர்ன், நியூசிலாந்து பிரதமர்

      நியூசிலாந்து நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து அந்த நாடு முழுவதும் பொது முடக்கத்தை அறிவித்திருக்கிறது அந்நாட்டு அரசு.

      அங்குள்ள ஆக்லாந்தில் ஒரு வாரத்துக்கு பொதுமுடக்கமும், நாட்டின் பிற பகுதிகளில் மூன்று நாட்களுக்கு பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

      இந்த புதிய பாதிப்பு டெல்டா திரிபு தானா என்பதை கண்டறிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக நியூசிலாந்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.

      நியூசிலாந்து நாட்டில் 20 சதவீத மக்கள்தொகைக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

      அங்குள்ள கோரமண்டல் என்ற கடலோர நகருக்கு கொரோனா பாதித்த நபர் வந்திருக்கிறார். இதனால், அந்த நகரில் ஒரு வாரத்துக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

      இது தொடர்பாக அந்நாட்டு தொலைக்காட்சியில் நியூலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் உரையாற்றினார். அப்போது அவர், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நான்காம் நிலை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் மூடப்படும். வெறும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும் என்று கூறினார்.

      "இதுபோன்ற நிகழ்வு வரலாம் என ஏற்கெனவே நாம் திட்டமிட்டிருந்தோம். முன்கூட்டியே கடுமையாக நடவடிக்கை எடுப்பது நமக்கு முன்பு பயன் கொடுத்துள்ளது என்ற உறுதியை உங்களுக்கு தருகிறேன்," என்று ஜெசிண்டா கூறினார்.

      கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நபரின் வயது 58. அவருக்கு பாதிப்பு அறிகுறி கடந்த வியாழக்கிழமை தெரிய வந்தது. அவர் மூலமாக மேலும் 23 பேருக்கு வைரஸ் பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 'தடமறிதல் பரிசோதனை' மேற்கொள்ளப்பட்டுள்ளன.

      இதன் காரணமாக ஆக்லாந்தில் பொது முடக்கம் அறிவிக்கப்படலாம் என்று ஏற்கெனவே ஊகித்திருந்த மக்கள், பொருட்களை வாங்க பல்பொருள் அங்காடிகளுக்கும் காய்கறி சந்தைகளுக்கும் சென்றதால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. எனினும், புதிய பாதிப்புக்கும் எல்லையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் உள்ளவர்களுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

      கொரோனா பாதிப்பு தொடர்பாக கடந்த திங்கட்கிழமை நியூசிலாந்து அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி அங்கு நாட்டின் எல்லை பகுதியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பலருக்கும் டெல்டா திரிபு வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது.

      "இப்போது இங்கு நடப்பது வேறு எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அது தீவிரமாகும் முன்பு நாம் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். நமக்கு ஒரேயொரு வாய்ப்பு மட்டுமே உள்ளது," என்று இந்த பாதிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையின்போது பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் தெரிவித்தார்.

      நியூசிலாந்து நாட்டில் அதன் எல்லைக்குட்பட்ட இடங்களில் கொரோனா வைரஸை முழுமையாக விரட்டியடிப்பதில் அந்நாட்டு அரசு வெற்றி பெற்றிருந்தது. ஆனாலும் அதன் சர்வதேச எல்லைகள் திறந்தே இருந்தன.

      எனினும், கொரோனா தடுப்பூசிபோடும் பணிகள் அங்கு மிகவும் தொய்வான போக்கிலேயே நடந்தன. மொத்த மக்கள்தொகையில் 20 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியை போட்டிருக்கிறார்கள். 33 சதவீதம் பேருக்கு ஒரு டோஸ் மருந்து மட்டுமே போடப்பட்டுள்ளது என்கிறது ஓர் சர்வதேச தரவு.

    • ஆப்கனில் அனைத்து தரப்பினருடன் துருக்கி பேச்சுவார்த்தை

      ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமை தொடர்பாக தாலிபன்கள் உள்பட அனைத்து தரப்பினருடன் பேசி வருவதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

      இது தொடர்பாக ஜோர்டான் தலைநகர் அம்மானில் துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லூட் கேவசோக்லு செய்தியாளர்களிடம் பேசினார்.

      ஆப்கனில் உள்ள துருக்கிய தூதரகம் மற்றும் அதன் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக தாலிபன்கள் பேசியிருப்பதை வரவேற்பதாக கேவசோக்லு தெரிவித்தார்.

      ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி, ஸ்திரத்தன்மை, அமைதி ஆகியவற்றை தாலிபன்கள் பேணுவதற்கு துருக்கி தமது ஆதரவை வழங்கும் என்று கேவசோக்லு கூறினார்.

    • ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை நிறுத்தியது ஜெர்மனி

      ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு தமது தரப்பில் வழங்கப்பட்டு வந்த மனிதாபிமான உதவிகளை ஜெர்மனி அரசு நிறுத்தியுள்ளது.

      இது தொடர்பாக அந்நாட்டின் வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெர்க் முல்லர் ஊடகங்களிடம் பேசுகையில், "ஜெர்மனியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஜெர்மன் அரசு வளர்ச்சித்துறை அமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி விட்டனர்," என்று கூறினார்.

      "ஜிஎஎஸ் அமைப்பில் பணியாற்றி வரும் உள்ளூர் நபர்கள் தாயகத்தை விட்டு வெளியேற விரும்பினால், அவர்களை ஆப்கனில் இருந்து வெளிக்கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்," என்று அவர் தெரிவித்தார்.

      ஜெர்மன் ஊடக செய்திகளின்படி, ஆப்கானிஸ்தானுக்கு அதிக உதவிகளை வழங்கி வந்த நாடுகளில் ஜெர்மனி முதன்மையானதாக இருந்துள்ளது.

    • ராஜீவ் கொலை வழக்கில் ரவிச்சந்திரன் மனு: முடிவு எடுக்க முடியாது என வழக்கை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம், பிரபுராவ் ஆனந்தன்

      ரவிச்சந்திரன்

      பட மூலாதாரம், PTI

      படக்குறிப்பு, ரவிச்சந்திரன் (கோப்புப்படம்)

      ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதியாக 29 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் தன்னை விடுதலை செய்ய உத்தரவிட கோரி ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தால் தற்போது எந்த முடிவையும் எடுக்க இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

      இது தொடர்பாக ரவிச்சந்திரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். 14 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் பலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நான் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை." "29 ஆண்டுகளாக தொடர்ந்து சிறையில் இருக்கும் நிலையில் மன உளைச்சல் ஏற்படுவதோடு, உடல் நலம் பாதிக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது. இதுகுறித்து விரைவில் முடிவெடுக்க கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை."

      "1600 ஆயுள் தண்டனைக் கைதிகளின் முன்கூட்டிய விடுதலைக்கான மனு பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில் எங்களது மனு காத்திருப்பில் உள்ளது. ஆகவே 29 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் என்னை விரைவாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்," என மனுவில் கூறியிருந்தார்.

      இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில்," இதே வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆகவே இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் 7பேரின் விடுதலை தொடர்பான முடிவு குடியரசுத் தலைவரின் முடிவுக்காக தற்போது காத்திருப்பில் உள்ளது " என தெரிவிக்கப்பட்டது.

      இதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தால் தற்போதைக்கு எத்தகைய முடிவையும் எடுக்க இயலாது. முடிவுகள் எடுக்கப்படும் நிலையில், மனுதாரர் அவற்றை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனக்கூறி வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

    • காபூலில் உள்ள தூதரகம் இயங்குகிறது: இரான்

      காபூலில் உள்ள தமது ஆப்கானிஸ்தான் தூதரகம் முழுமையாக இயங்குகிறது என்று இரான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

      ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் தூதரகங்கள் மட்டுமே காபூலில் இயங்குவதாக வெளியான செய்திகளை இரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயீது காடிப்சாதே மறுத்தார். அரசு சார்பு ஐ.எஸ்.என்.ஏ. செய்தி முகமையிடம் பேசிய அவர் தங்கள் தூதரகம் முழுமையாக செயல்படுவதாகத் தெரிவித்தார். அத்துடன், ஹெராட் நகரில் உள்ள துணைத் தூதரகமும் முழுமையாக செயல்படுவதாக அவர் கூறியுள்ளார்.

      ஆப்கானிஸ்தானில் உள்ள 5 துணைத் தூதரகங்களில் மூன்றினை ரகசியமாக மூடிவிட்டதாகவும், தூதரக அதிகாரிகளை காபூலுக்கு மாற்றிவிட்டதாகவும், சிலரை நாட்டுக்கு திருப்பி அழைத்துக்கொண்டதாகவும் கடந்த வார இறுதியில் வெளிப்படுத்தியிருந்தது இரான்.

    • தாலிபன் ஆதரவு பதிவுகளுக்கு தடைவிதித்த ஃபேஸ்புக்

      தாலிபன் அமைப்பை தடை செய்திருப்பதாகவும், அனைத்து தாலிபன் ஆதரவு உள்ளடக்கங்களையும் தடை செய்வதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

      தாலிபன் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கருவதால் இந்த முடிவு என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

      தாலிபன் தொடர்புடைய பதிவுகளை கண்காணிக்கவும், அகற்றவும் ஆப்கானிஸ்தான் வல்லுநர் குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் ஃபேஸ்புக் கூறியுள்ளது.

      பல ஆண்டுகளாக தகவல் பறிமாற்றத்துக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்திவந்தது தாலிபன்.

      அதிவிரைவாக அந்த அமைப்பு ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் அந்த அமைப்பு தொடர்பான உள்ளடக்கங்களை எப்படி கையாள்வது என்பது தொடர்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய சவால்களை எதிர்கொள்கின்றன.

      "அமெரிக்கச் சட்டப்படி தாலிபன் ஒரு பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எங்களுடைய அபாயகரமான அமைப்பு கொள்கைப்படி எங்கள் சேவைகளில் இருந்து அவர்களைத் தடை செய்துள்ளோம். அந்த அமைப்பின், அந்த அமைப்பின் சார்பிலான கணக்குகள் அகற்றப்படும்; அந்த அமைப்பை புகழ்வதோ, அதற்கு ஆதரவு தருவதோ, அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதோ தடை செய்யப்படும் என்பது இதன் பொருள்," என்று ஒரு ஃபேஸ்புக் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

      கையில் மொபைல் வைத்துள்ள ஓர் ஆப்கன் இளைஞர்.

      பட மூலாதாரம், Getty Images

      படக்குறிப்பு, கையில் மொபைல் வைத்துள்ள ஓர் ஆப்கன் இளைஞர்.
    • பெகாசஸ் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

      பெகாசஸ்

      பட மூலாதாரம், Getty Images

      படக்குறிப்பு, என்எஸ்ஓ என்ற இஸ்ரேலி நிறுவனத்தின் தயாரிப்பான பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி இந்தியா முக்கிய நபர்களை உளவு பார்த்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

      பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தி உளவு பார்த்ததாக இந்திய அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

      முன்னதாக, இந்த விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமிக்க உத்தரவிடும்படி சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

      அவற்றை நேற்று விசாரித்த இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அடங்கிய அமர்விடம், இதுபோன்ற தகவல்களை பொதுவெளியில் வெளியிடுவது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.

      வேண்டுமானால் இந்த விவகாரத்தில் தவறான தகவல்கள் பரவுவதை தவிர்க்கும் விதமாக சிறப்புக் குழுவை மத்திய அரசு நியமிக்க தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற விவகாரத்தில் தேச நலனுக்கு எது தேவையோ அதை மட்டுமே அரசு செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

      ஆனால், விசாரணையின் கடைசிவரை பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி சாமானியர்களையும் முக்கிய பிரமுகர்களையும் அரசு வேவு பார்த்ததாக என்ற விவரத்தை அவர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தவில்லை.

      இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அரசு ஏன் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யாமல் தவிர்க்கிறது? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யாவிட்டால், அடுத்ததாக இந்த விவகாரத்தில் குழுவை அமைக்க மனுதாரர்கள் விடுக்கும் கோரிக்கை மீது மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

      இதைத்தொடர்ந்து இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மனுதாரர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். ஆட்சியில் இருப்பவர்கள் மனுக்களில் கோரியுள்ளது போல எந்த அளவுக்கு தகவல்களை நீதிமன்றத்தில் பகிர்ந்து கொள்ள முடிவெடுக்கிறார்கள் என்பதை அந்த பதிலை வைத்துப் பார்க்கலாம் என்று தலைமை நீதிபதி கூறினார்.

      அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல், "இதுபோன்ற தகவல்களை பொதுவெளியில் தெரிவிக்க முடியாது. வேண்டுமானால் ஒரு குழு நியமிக்கப்பட்டால் அதன் முன்பு சில தகவல்களை வரம்புக்கு உட்பட்டு தெரிவிக்கிறோம்," என்று கூறினார்.

      இதையடுத்து தலைமை நீதிபதி, "நாங்களும் உங்களிடம் எல்லா நுட்பமான தகவல்களையும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு உங்களை நாங்கள் கட்டாயப்படுத்தவும் இல்லை. நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். உங்களுடைய பதிலை அதில் தெரிவியுங்கள்," என்று கூறினார்.

      அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான கபில் சிபல், "தேச பாதுகாப்பு தொடர்பான தகவல்களை மனுதாரர்களும் கோரவில்லை. பெகாசஸ் என்ற தொழில்நுட்பத்தை இந்திய அரசு பயன்படுத்தியதா என்பதை அறியவே விரும்புகிறோம்," என்று தெரிவித்தார்.

      இதைத்தொடர்ந்து இரு தரப்பு வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி, "சிறப்புக் குழு அமைப்பதா வேண்டாமா என்பதை பின்னர் முடிவு செய்கிறோம். இப்போது மனுக்களை விசாரணைக்கு ஏற்பது பற்றியே விவாதிக்கிறோம். அரசு தரப்பு தனது நிலைப்பாட்டை மனு மூலமாக தெளிவுபடுத்தட்டும். அடுத்த 10 நாட்களில் மீண்டும் இந்த மனுக்களை விசாரிக்கிறோம். அவற்றை ஏற்பது பற்றி அப்போது முடிவெடுக்கிறோம்," என்று குறிப்பிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

    • காபூலில் இருந்து இந்திய தூதரக ஊழியர்களுடன் வந்த விமானம் குஜராத்தில் தரையிறங்கியது

      ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பணியாற்றி வந்த இந்தியர் தூதர் உள்ளிட்ட தூதரக ஊழியர்களுடன் புறப்பட்ட சிறப்பு விமானம், இந்தியாவி்ன் குஜராத்தில் சற்று முன்னர் தரையிறங்கியிருக்கிறது.

      முன்னதாக, காபூலில் உள்ள இந்திய தூதர் உள்ளிட்டோர் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவர் என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனிந்தம் பக்சி கூறியிருந்தார்.

      X பதிவை கடந்து செல்ல
      X பதிவை அனுமதிக்கலாமா?

      இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

      எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

      X பதிவின் முடிவு

    • தமிழ்நாட்டில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் : இந்திய தேர்தல் ஆணையம்

      தேர்தல் ஆணையம்

      பட மூலாதாரம், ECI

      தமிழ்நாட்டில் காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

      இதற்கான அறிவிக்கை ஆகஸ்ட் 14 வெளியிடப்படும். வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் 31வரை பெறப்படும்.

      யார் இந்த மொஹமதுஜான்?

      அதிமுகவைச் சேர்ந்த மொஹம்மதுஜான் (74) கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானதையடுத்து, அவர் வகித்து வந்த எம்.பி பதவிக்கான இடம் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

      அதிமுகவில் 1996 முதல் 2001ஆம் ஆண்டுவரை ராணிப்பேட்டை முனிசிபாலிட்டி தலைவராகவும் 2011 சட்டப்பேரவை தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் இருந்து எம்எல்ஏ ஆகவும் ஆனார் மாஹம்மத்ஜான்.

      2019ஆம் ஆண்டில் தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட அவர், அதே ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வானார். அவரது பதவிக்காலம் ஜூலை 24, 2025ஆம் ஆண்டு வரை இருந்தது.

      தமிழக அரசுக்கு உத்தரவு

      இந்த தேர்தலை கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

      கொரோனா தடுப்பு வழிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த தனி அலுவலரை நியமிக்கும்படியும் தமிழக தலைமைச் செயலாளரை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

      தமிழ்நாட்டில் மொஹம்மத்ஜான் மறைவைத் தொடர்ந்து ஒரு இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

      இது தவிர, அதிமுகவைச் சேர்ந்த கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அவர்கள் ஏற்கெனவே வகித்து வந்த எம்.பி பதவியை கடந்த மேத மாதம் ராஜிநாமா செய்தனர்.

      இதில் முனுசாமியின் பதவிக்காலம் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் வரையும், வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையும் இருந்தது. மாநிலங்களவையில் தற்போது அதிமுகவுக்கு தமிழ்நாட்டில் இருந்து ஐந்து பேரும், புதுச்சேரியில் இருந்து என். கோகுலகிருஷ்ணனும் உறுப்பினர்களாக உள்ளனர்.

      இந்திய தேர்தல் ஆணையம்

      பட மூலாதாரம், ECI

    • ஆப்கன் செய்தி தொலைக்காட்சியில் மீண்டும் பெண் தொகுப்பாளர்கள்

      ஆப்கானிஸ்தானில் கடந்த இரு தினங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த பெண் தொகுப்பாளர்கள் செய்தி வழங்கும் சேவை இன்று மீண்டும் தொடர்ந்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டில் பிரபலமான டோலோ டிவி செய்திப்பிரிவு தலைமை நிர்வாகி தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக பகிர்ந்துள்ளார்.

      அதில், தாலிபன் ஊடகப்பிரிவு உறுப்பினர் ஒருவருடன் நேரலையில் பெண் தொகுப்பாளர் நேர்காணல் செய்யும் காட்சியின் படம் பகிரப்பட்டுள்ளது. இது தவிர செய்தி அறையின் காலை கூட்டத்தில், பெண் செய்தியாளர்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு பங்கேற்கும் படத்தையும் தனியாக அவர் பகிர்ந்துள்ளார்.

      X பதிவை கடந்து செல்ல
      X பதிவை அனுமதிக்கலாமா?

      இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

      எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

      X பதிவின் முடிவு

    • அமெரிக்க போர் விமானத்தில் புறப்பட்ட ஆப்கானியர்கள் - அதிர்ச்சிப்படம்

      ஆப்கன் தாலிபன்கள்

      பட மூலாதாரம், Defense One/Handout via Reuters

      பொதுவாக ஏறக்குறைய 150 ராணுவ வீரர்களை சுமந்துச் செல்லும் அமெரிக்க விமானப்படையின் இந்த சி-17 விமானத்தில், தாலிபன்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால், கடந்த ஞாயிறன்று சுமார் 640 பேர் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

      தாயகத்தை விட்டு வெளியேறினால் போதும் என்ற விரக்தியில் இந்த விமானத்தில் இருந்தவர்கள் காணப்பட்டனர். காபூலில் இருந்து நூற்றுக்கணக்கானோரை ஏற்றிக் கொண்டு இந்த அமெரிக்க போர் விமானம் கத்தார் நோக்கிப் புறப்பட்டது.

      கடந்த திங்கட்கிழமை காபூல் விமான நிலைய ஓடுபாதையில் ஆப்கானியர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க விமானம் புறப்பட்டபோது, அதன் பக்கவாட்டில் சிலர் தொங்கிக் கொண்டிருந்தனர்.

      அதில் இரண்டு பேரை தரைப்பகுதியில் இருந்த அமெரிக்க வீரர்கள் சுட்டனர். ஆனாலும், விமானம் பறந்தபோது மூன்று வீரர்கள் அதனுடன் தொங்கியபடி சென்றனர். அதில் மூன்று விமானம் மேலே பறந்தபோது, கீழே விழுந்தனர். இதில் அவர்கள் மூவரும் தரையில் விழுந்து இறந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    • வந்துகொண்டிருக்கும் செய்தி, ஆப்கன் அரசு அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு: தாலிபன், ஆயிஷா பெரேரா

      தாலிபன்

      ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வந்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்குவதாக தாலிபன் அமைப்பு அறிவித்துள்ளது.

      மேலும், தங்களுடைய ஆளுகை மீது முழு நம்பிக்கை வைத்து பணிகளுக்கு திரும்புமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். "அனைவருக்கும் பொது மன்னிப்பை அறிவிக்கிறோம். எனவே, உங்களுடைய வழக்கமான பணிகளை முழு நம்பிக்கையுடன் தொடருங்கள்," என்று தாலிபன் அறிக்கையை மேற்கோள்காட்டி ஏஃஎப்பி செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

      ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆளுகையில் என்ன நடக்குமோ என மக்கள் அஞ்சிய வேளையில் இத்தகைய ஓர் அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

      ஆப்கானிஸ்தானில் அரசுத்துறைகள் அல்லது மேற்கு நாடுகளின் ஆதரவு பெற்ற அமைப்புகளுக்கு ஏராளமான ஆப்கானியர்கள் வேலை செய்தனர். சிலர் அமெரிக்க துருப்புகளின் மொழி பெயர்ப்பாளர்களாகவும் இருந்தனர். அவர்கள் எல்லாம் ஆப்கன் தாலிபன்களால் பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் நீடித்தது.

      கொடூரமான தண்டனைகள் வழங்கலுக்கு பிரபமானவர்களாக தாலிபன்கள் அறியப்பட்டு வந்தனர். பல போர் குற்றங்களை புரிந்ததாக இப்போதும் அவர்கள் மீது சர்வதேச அமைப்புகளில் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், அவற்றை எல்லாம் தாலிபன்கள் மறுத்து வந்தனர்.

    • இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை : அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

      பைடன்

      பட மூலாதாரம், Getty Images

      தாலிபன்கள் இவ்வளவு வேகமாக முன்னேறுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

      ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபன்கள் கைப்பற்றியது தொடர்பாக அவர் ஆற்றிய உரையின்போது இதைக் குறிப்பிட்டார்.

      ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டது விவகாரத்தில் தாம் தொடர்ந்து உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த அவர், ஐந்தாவது அதிபர் ஒரு ஒரு போர் தொடரக்கூடாது என்று குறிப்பிட்டார்.

      தேசத்தைக் கட்டமைப்பது, ஜனநாயகத்தை மேம்படுத்துவது என்பதெல்லாம் தங்களது போரின் நோக்கமல்ல என்று கூறிய அவர், அமெரிக்க மண்ணில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுப்பது மட்டும்தான் தங்களது நோக்கம் என்று கூறினார்.

      எதிர்பார்த்ததைவிட நிகழ்வுகள் மிக வேகமாக நடந்துவிட்டன என்பதை பைடன் ஒப்புக் கொண்டார்.

      அமெரிக்கப் படைகளை தாலிபன்கள் தாக்கினார், கடுமையான பதிலடி இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்