நன்றி நேயர்களே!
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின் பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
அமெரிக்க மற்றும் ஆஃப்கன் அரசு அரசு படைகளால் இலக்கு வைத்து நடத்தப்படும் வான் தாக்குதலால் தாங்கள் அச்சமடைந்துள்ளதாக லஷ்கர் கா நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின் பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
தாலிபன்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் லஷ்கர் கா நகரில் வசிப்பவர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நகரம் ஹெல்மாண்ட் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். தாலிபன்கள் இந்நகரின் பெரும் பகுதியைக் கைப்பற்றி விட்டனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் நகரம் முழுவதும் தாலிபன்கள் வசம் வீழக்கூடாது என்று அரசு தரப்பு தீவிரமாகப் போராடி வருகிறது.
'ஒரு தாலிபனைக் கூட உயிருடன் விட மாட்டோம்' என ராணுவ நடவடிக்கைக்கு தலைமை தாங்கும் ஜெனெரல் சமி சதாத் அந்நகர மக்களிடம் கூறியுள்ளார்.
சண்டை காரணமாக அவர்கள் சில நாட்கள் வெளியேற நேர்ந்தால் அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மற்றும் ஆஃப்கன் அரசு அரசு படைகளால் இலக்கு வைத்து நடத்தப்படும் வான் தாக்குதலால் தாங்கள் அச்சமடைந்துள்ளதாக லஷ்கர் கா நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கள் கோரிக்கைகள் பலவற்றினையும் வலியுறுத்தி சமீபத்தில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட மாநில அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்றுக்கு மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் போராட்டம் குறித்து முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் கடும் அதிருப்தி அடைந்துள்ளார் என்று மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார்.
ஆனால், அரசு ஊழியர்களின் போராட்ட வழிமுறைகள் மீது கவனம் செலுத்தாமல் கோரிக்கைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூறியுள்ளது.
வரும் டிசம்பர் மாத வாக்கில் கோவிஷீல்டு தடுப்பூசியின் மாதாந்திர உற்பத்தி 12 கோடி டோஸ் அளவுக்கு இருக்கும் என்றும் கோவேக்சின் தடுப்பூசியின் மாதாந்திர உற்பத்தி 5.8 கோடி டோஸ் அளவுக்கு இருக்கும் இருக்கும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் தரவுகளின் அடிப்படையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆகஸ்டு - டிசம்பர் காலகட்டத்தில் தடுப்பூசி உற்பத்தித் திறன் குறித்த கேள்விக்கு இந்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் உக்கிரமாகப் பரவி வருகிறது என்றும் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து எத்தனை பேருக்கு பரவுகிறது என்பதைக் குறிக்கும் R எண் எட்டு மாநிலங்களில் அதிகரித்து வருகிறது என்றும் இந்திய அரசு தெரிவிக்கிறது.
இவற்றில் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களும் அடக்கம்.
இந்தியாவின் 44 மாவட்டங்களில் கொரோனா 'பாசிட்டிவிட்டி' விகிதம் அதிகரித்து வருவதுடன், டெல்டா திரிபால் அதிகரித்த பரவல் இன்னும் குறையவில்லை என்றும் இந்தியாவின் கோவிட் நடவடிக்கை குழுவின் தலைவர் வி.கே. பால் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
டோக்யோ ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் போட்டியில் வெண்கலம் வென்று விட்டு தாயகம் திரும்பிய பி.வி. சிந்துவுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை பதக்கங்கள் வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற புகழும் சிந்துவுக்கு சேர்ந்திருக்கிறது.
இதற்கு முன்பு 2012ஆம் ஆண்டில் பெய்ஜிங் போட்டியில் வெண்கல பதக்கத்தையும், 2012இல் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தையும் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் பெற்றிருந்தார்.
டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பி.வி. சிந்து, "நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். என்னை ஆதரித்து ஊக்குவித்த பேட்மின்டன் சங்கம் உட்பட அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். டோக்யோ ஒலிம்பிக், அதிக அழுத்தமும் மிகுந்த எதிர்பார்ப்பும் கொண்டதாக இருந்தது. ஒலிம்பிக் போட்டிகளில் அடுத்தடுத்து பதக்கங்கள் வெல்வது எளிதான விஷயமல்ல. 2016ல் ரியோவில் நடந்த ஒலிம்பிக் வித்தியாசமாக இருந்தது. அதை விட வித்தியாசமானதாக டோக்யோ ஒலிம்பிக் இருந்தது," என்று தெரிவித்தார்.
ஒரு இந்திய வீராங்கனையாக இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற செயல்பாடு, எனக்கு ஊக்கமும் அதிகமாக மேலும் உழைக்க வேண்டும் என்ற உற்சாகத்தையும் கொடுத்துள்ளது என்றும் பி.வி. சிந்து தெரிவித்தார்.
முன்பு இந்திய பிரதமர் ஒலிம்பிக் புறப்படும் இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடியபோது, போட்டியில் வென்று திரும்பியவுடன் அவருடன் ஐஸ் கிரீம் சாப்பிடுவேன் என்று கூறியிருந்தார். அது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பிரதமரை ஆகஸ்ட் 15ஆம் தேதி சந்திக்கவிருக்கிறேன் என்று சிந்து பதிலளித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3

பட மூலாதாரம், Pugazhendi
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆஜராகுமாறு அதிமு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அழைப்பானை அனுப்ப சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கிய அதிமுக தலைமை, கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் புகழேந்தி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறி சென்னை நீதிமன்றத்தில் புகழேந்தி மனு தாக்கல் செய்திருந்தார்.

பட மூலாதாரம், SOCIAL MEDIA
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்தில் எங்கேயுமே ஆண்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இதனால் ஏற்படும் இழப்பைச் சரிக்கட்ட பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களிடம் கூடுதல் கட்டணம்வசூல் செய்யப்படுவதாக எதிர்க்கட்சியான அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்திருந்த அறிக்கையில், "பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் சில பகுதிகளில் அந்த இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் குறைந்தபட்சக் கட்டணமாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன்பாக குறைந்தபட்சக் கட்டணமாக ஐந்து ரூபாய்தான் இருந்தது.
இது போன்ற விதிமீறல்கள், திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை, பெரிய பாளையம், ராமச்சேரி, காஞ்சிப்பாடி, திருவாலங்காடு, திருப்பெரும்புதூர் வழித்தடங்களில்சாதாரணமாக நடக்கிறது. இது அரசாங்கத்திற்கு, ஆட்சியாளர்களுக்கு தெரிந்து நடக்கிறதா, தெரியமல் நடக்கிறதா என்பதுதெரியவில்லை," என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், "முதலமைச்சருக்கு இருக்கும் நல்ல பெயரைக் கெடுப்பதற்காக தவறான தகவல்களைக் கொடுக்கிறார் ஓ.பி.எஸ். அவர் சொல்வதுபோன்ற கட்டண உயர்வு எங்கேயும் இல்லை. எந்த போக்குவரத்துக் கழகத்திலும்வசூலிக்கப்படவில்லை. இந்தத் துறையில் 1,22,000 பேர் இந்தத் துறையில் வேலை பார்க்கிறார்கள். யாராவது தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓ.பி.எஸ். தன் இருப்பைக் காண்பிப்பதற்கு அவ்வப்போது அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார். அது சரியானதல்ல. விழுப்புரத்தில் ஒரே ஒரு இடத்தில் இதுபோல தவறு நடந்தது. அந்த போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் அந்த நடத்துனரை இடைநீக்கம் செய்திருக்கிறார். இதை வைத்துக்கொண்டு, எல்லாப் போக்குவரத்துக் கழகங்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டதாகக் கூறுவது தவறு" என்று தெரிவித்துள்ளார்.
தன்னைப் பார்க்க வந்த திருமாவளன், சாதாரண இருக்கையில் உட்கார வைக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, தானும் அவரும் நீண்ட கால நண்பர்கள் என்றும் அவரேதான் அந்த இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்ததாகவும் ராஜ கண்ணப்பன் பதிலளித்தார்.

பட மூலாதாரம், LOK SABHA TV
தமிழ்நாட்டை இரண்டாகப்பிரிக்கும் திட்டமில்லை என்று மக்களவையில் தமிழக எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இந்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் பெரம்பலூர் தொகுதி திமுக உறுப்பினர் டி.ஆர். பாரிவேந்தர், மயிலாடுதுறை உறுப்பினர் எஸ். ராமலிங்கம் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாக உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்துள்ளார்.
அதன் முழு விவரத்தை அறிய இங்கே சொடுக்கவும்

பட மூலாதாரம், BJP
நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் எதிர்கட்சிகள் செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக டெல்லியில் இன்று காலையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் நரேந்திர மோதி பேசினார்.
அப்போது அவர், மழைக்கால கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெறவும் அந்த மசோதாக்களை நிறைவேற்றவும் தடங்கலாக எதிர்கட்சிகள் செயல்படுகின்றன என்று கூறினார்.
அவையில் அலுவலர்களை நடத்தவிடாமல் தொடர் அமளியில் எதிர்கட்சியினர் ஈடுபடுவது, அரசியலமைப்புக்கும் ஜனநாயகத்துக்கும் இழைக்கப்படும் அவமதிப்பு என்று அவர் குறிப்பிட்டார்.
இரு அவைகளிலும் எதிர்கட்சிகளின் செயல்பாடுகளால் நாடாளுமன்றம் அவமதிக்கப்படுகிறது. அவையில் ஆளும் கட்சி அமைச்சர் பேசும்போது அவர் வைத்திருக்கும் ஆவணத்தைப் பிடுங்கிக் கிழிப்பது எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடவடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.
சமீபத்தில் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெகாசஸ் வேவு பார்க்கும் மென்பொருள் தொடர்பாக பேசும்போது அவர் வைத்திருந்த காகிதத்தை திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் ஷாந்தனு பிடித்துக் கிழித்து எறிந்தார்.
அந்த நிகழ்வை குறிப்பிட்டே பிரதமர் இந்த கருத்தை தெரிவித்ததாக கருதப்படுகிறது.
இதேபோல, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி டெரக் ஓ ப்ரெய்ன், அவசரகதியில் நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாகவும் இந்த அரசு சட்டம் இயற்றுகிறதா அல்லது பாப்டி சாட் செய்கிறதா என்றும் கடுமையாக விமர்சித்து ட்விட்டர ்பக்கத்தில் பகிர்ந்த விவகாரத்தையும் பிரதமர் குறிப்பிட்டுப் பேசினார்.
தனது செயலுக்காக டெரெக் ஓ ப்ரெயின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி, மாநிலங்களவை துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி வலியுறுத்தினர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், AICC
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்பி வரும் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம், முக்கிய மசோதாக்களை எதிர்கட்சிகள் ஆதரவின்றி நிறைவேற்றும் போக்கு போன்றவை தொடர்பாக விவாதிக்க டெல்லியில் 15 எதிர்கட்சிகளின் தலைவர்கள் இன்று கூடினார்கள்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனை, இடதுசாரி கட்சிகள், ஐயுஎம்எல், ஆர்எஸ்பி, கேரள மணி காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசிய மாநாடு, திரிணமூல் காங்கிரஸ், லோக்தந்த்ரிக் ஜனதா தளம் ஆகிய 15 கட்சிகளின் நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றுள்ள பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் விவகாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து இந்த தலைவர்கள் விவாதித்ததாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பட மூலாதாரம், Getty Images
டோக்யோ ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் வலிமையான பெல்ஜியம் அணியிடம் இந்திய ஆண்கள் அணி தோல்வியடைந்தது.
ஆட்ட நேர இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது.
41- ஆண்டுகளுக்கு முன் மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிறகு இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்குக்கூடத் தகுதி பெறவில்லை.
அதனால் டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் களமிறங்கினர்
ரியோ ஒலிம்பிக் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் மோதி 1-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெளியேறியது. இன்றைய போட்டி அதற்குப் பழிதீர்க்கும் வகையில் அமையுமா என்ற எதிர்பார்ப்பு இந்தியாவில் எழுந்திருந்தது.
ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே பெல்ஜியம் அணி தனது முதல் கோலை அடித்தது. சில நிமிடங்களிலேயே அடுத்தடுத்து பெனால்ட்டி கார்னர் வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்தது.
7-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்ட்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே ரோஹிதாஸ் அற்புதமாகக் கடத்திக் கொடுத்த பந்தை துல்லியமாகத் தடுத்து கோலுக்குள் திருப்பினார் மந்தீப் சிங். இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
முதல் கால்பகுதி நேரத்தில் கிடைத்த மற்றொரு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது. இரண்டாவது கால் பகுதியில் அடுத்தடுத்து மூன்று பெனால்ட்டி கார்னர் பெல்ஜியத்துக்கு கிடைத்தன. ஆனால் அனைத்தையும் இந்திய வீரர்கள் தடுத்தனர். ஆனால் 19-ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி கார்னர் மூலம் பெல்ஜியம் அணி தனது இரண்டாவது கோலை அடித்தது. அப்போது 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
மூன்றாவது கால்பகுதி ஆட்டத்தில் இரு அணிகளுமே எவ்வளவோ முயன்றும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
நான்காவது கால்பகுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தது. இறுதி நிமிடத்தில் மேலும் ஒரு கோலை அடித்து 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது. வரும் வியாழக்கிழமை இதற்கான போட்டி நடக்கிறது

பட மூலாதாரம், Getty Images
கட்டாயப்படுத்தி நாட்டுக்கு அனுப்புவதாக புகார் கூறிய பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனைக்கு போலந்து மனிதாபிமான விசா வழங்கியிருக்கிறது.
ஜப்பானிய காவல்துறையின் பாதுகாப்பில் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த 24 வயதான கிறிஸ்டினா டிமனோவ்ஸ்கயா, டோக்யோவில் உள்ள போலந்து நாட்டு தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
பயிற்சியாளர்களை விமர்சித்ததால் தன்னை வலுக்கட்டாயமாக விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக அவர் புகார் கூறியிருந்தார்.
தனது பாதுகாப்பு குறித்தும் அவர் அச்சம் தெரிவித்திருந்தார். உணர்ச்சி வயப்படும்நிலை காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக பெலாரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
நேற்று பிபிசியிடம் பேசிய அவர் அவர் தாம் பாதுகாப்பாக இருப்பதாக கூறினார். ஆனால் கூடுதல் விவரங்களை கொடுக்க வேண்டாம் என்று தனக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
டோக்யோ ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் வலிமையான பெல்ஜியம் அணியை வென்று இறுதிப் போட்டிக்குச் செல்லும் முனைப்பில் ஆடி வருகிறது
இந்திய ஆண்கள் அணி. 41- ஆண்டுகளுக்கு முன் மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிறகு இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்குக்கூடத் தகுதி பெறவில்லை.
அதனால் டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
ரியோ ஒலிம்பிக் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் மோதில 1-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெளியேறியது. இன்றைய போட்டி அதற்குப் பழிதீர்க்கும் வகையில் அமையுமா என்ற எதிர்பார்ப்பு இந்தியாவில் எழுந்திருக்கிறது.
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை நேரலைப் பகுதியில் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.