கோவேக்சின் சர்ச்சை: பிரேசில் நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட பாரத் பயோடெக்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோவேக்சின் தடுப்பூசி
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி, உற்பத்தியும் செய்யும் கோவேக்சின் தடுப்பூசி கொள்முதல் விவகாரம், பிரேசில் நாட்டில் அரசியல் சர்ச்சையாக தீவிரம் அடைந்திருக்கிறது.
இதன் காரணமாக, அந்த நாட்டில் மருந்து தயாரிக்க இரண்டு நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான செய்தியை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்
தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ல் கருணாநிதி படம் திறப்பு - சபாநாயகர்
பட மூலாதாரம், APPAVU
படக்குறிப்பு, அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி திறந்து வைக்கப்படவுள்ளதாக மாநில சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சட்டப்பேரவை நூற்றாண்டு விழா வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதையொட்டி அன்று மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ள விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவில் ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுவர்," என்று தெரிவித்தார்.
பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், பிரபுராவ் ஆனந்தன், இராமநாதபுரம்
படக்குறிப்பு, பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையாவுக்கு எதிராக நெல்லையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரியின் பனைவிளை பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையா, பிரதமர் நரேந்திர மோதி தொடர்பாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி நெல்லை சந்திப்பு பகுதியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே 7 பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜார்ஜ் பொன்னையா: மதவெறியோடு பேசியதாக கன்னியாகுமரி பாதிரியார் கைது
பட மூலாதாரம், SOCIAL MEDIA
படக்குறிப்பு, ஜார்ஜ் பொன்னையா
பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை மோசமாகப் பேசியதோடு, பிற மதத்தினர் குறித்து வெறுப்பை விளைவிக்கும் கருத்துக்களையும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னைய்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 18ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் சிறுபான்மையினரின் உரிமை மீட்பு என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் பேசிய ஜனநாயக கிறிஸ்தவப் பேரவையைச் சேர்ந்த ஜார்ஜ் பொன்னையா என்ற பாதிரியார், தனது பேச்சில் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் குறித்து வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் பேசினார்.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்திருப்பதாகவும், அது தொடர்ந்து மேலும் அதிகரிக்குமென்றும் பேசினார். அங்கிருந்த அதிகாரிகளையும் சுட்டிக்காட்டி அவதூறாகப் பேசினார் என்று குற்றம்சாட்டப்பட்டது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி குறித்தும் மத நோக்கில் சில கருத்துகளை வெளியிட்டிருந்தார் அவர்.இது தொடர்பான செய்தியை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்
மகாராஷ்டிராவில் கன மழை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
பட மூலாதாரம், NDRF
படக்குறிப்பு, மகாராஷ்டிரா மாநிலத்தில் கன மழை பாதித்த பகுதிகளில் மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர்
மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை குறைந்தது 110 பேர் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல வீடுகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
மீட்புப் பணியினர் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்கள் மீட்டு வருகின்றனர். இருப்பினும் பலரைக் காணவில்லை.
ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீரர் விகாஸ் க்ரிஷண் தோல்வி
ஒலிம்பிக் குத்துச்சண்டை வெல்ட்டர்வெயிட் பிரிவில் இந்திய வீரர் விகாஸ் க்ரிஷண் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார். ஜப்பானியவீரர் ஒகசாவாவுடன் நடைபெற்ற ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் அவர் தோல்வி அடைந்தார்.
இரண்டாவது சுற்று முடிந்தபோது விகாஸ் க்ரிஷண் கண்மில் காயம் அடைந்து ரத்தம் வழிந்தது. இருந்தபோதும் சமாளித்துக் கொண்டு தொடர்ந்து ஆடியபோதும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி வெற்றி
பட மூலாதாரம், @Media_SAI Official
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த 25 வயது வீராங்கனையான சுதிர்தா முகர்ஜி, ஸ்வீடன் வீராங்கனை லிண்டா பெர்க்ஸ்ட்ரோமுடன் விளையாடினார். முதல் ரவுண்டில் 11க்கு 5 என்ற கணக்கில் சுதிர்தா ஆட்டத்தை இழந்தபோதும் அடுத்து நடந்த ஆட்டத்தில் இழந்த இடத்தை பிடிக்க கடுமையாக முயன்றார்.
இதைத்தொடர்ந்து, 5-11, 11-9, 10-12, 9-11, 11-3, 11-9, 11-5 என்ற செட் கணக்கில் பெர்க்ஸ்ட்ராமை வீழ்த்தி முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார் சுதிர்தா. இதன் மூலம் இரண்டாம் சுற்றுக்கு அவர் தகுதிபெற்றுள்ளார்.
இரட்டையர் பிரிவில் இந்தியா தோல்வி
இதற்கிடையே, டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான மனிகா பாத்ரா, ஷரத் கமல் இணை தோல்வி அடைந்தது.
இந்த இணை சீன தைபே கலப்பு இரட்டையர் ஜோடி லின் யுன் ஜு செங் சிங் கோடியிடம் தோல்வி அடைந்தது.
இந்திய ஜோடி 8-11, 6-11, 5-11, 4-11 என்ற செட் கணக்கில் 27 நிமிடங்கள் விளையாடி தோல்வியைத் தழுவியது. ஆடிய நான்கு செட்களிலும் இந்திய அணியால் வெல்ல முடியவில்லை.
தீபிகா - பிரவீன் ஜாதவ் தோல்வி
வில்வித்தை போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் கால் இறுதி போட்டியில் தென் கொரியாவிடம் 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர்.
பதக்கத்தை தவறவிட்ட செளரப் செளத்ரி
ஆண்கள் 10மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் செளரப் செளத்ரி 7ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
மீராபாய் சானுவுக்கு குவியும் வாழ்த்துகள்
இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ள மீராபாய் சானுவிற்கு இந்திய குடியரசு தலைவர் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
2020 டோக்யோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு 33 விளையாட்டுகளும் அவற்றில் 339 போட்டிகளும் நடக்கின்றன. ஜப்பானில் 42 இடங்களில் இந்தப் போட்டிகள் நடக்கும்.
இந்த லிங்கில் இடம் பெற்றுள்ள பதக்கப் பட்டியல் உடனுக்குடன் மேம்படுத்தப்படுவது. எனவே, தற்போதைய நிலவரத்தைக் காட்டும் வகையில் இது இருக்கும்.
ஒவ்வொரு நாடும் வெல்லும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களின் எண்ணிக்கை தாமாகவே இப்பக்கத்தில் புதுப்பிக்கப்படும்.
ஜூலை 24ம் தேதி வழங்கப்பட்ட முதல் தங்கப் பதக்கத்தை சீனா கைப்பற்றியது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவுக்கு முதல் பதக்கம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் பெண்கள் பளு தூக்கும் போட்டியில் 49 கிலோ எடை பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் மீராபாய் சானு.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ஆண்கள் 10மீட்டர் ரைஃபிள் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியா
ஆண்கள் 10மீட்டர் ரைஃபிள் துப்பாக்கிச் சூடு போட்டியில் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளார் இந்தியாவை சேர்ந்த செளரப் செளத்ரி. இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த முதல் இந்திய என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் செளரப் செளத்ரி.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற ஹாக்கி அணி
டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 3-2 என்ற கணக்கில் வென்றுள்ளது.
ஆட்டம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் ரூபிந்தர் பால் சிங் இந்திய அணியின் கணக்கதை தொடங்கி வைத்தார்.
ஹர்மன் ப்ரீத் சிங் 26ஆவது மற்றும் 33ஆவது நிமிடங்களில் மேலும் இரு கோல்களை அடித்து இந்திய அணியை வெற்றி பாதை நோக்கி அழைத்து சென்றார்.
அதன்பின் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார் கோல் கீப்பர் பிஆர். ஸ்ரீஜேஷ்.
நியூசிலாந்து இரு கோல்களை அடித்திருந்தது.
பட மூலாதாரம், Reuters
டோக்யோ ஒலிம்பிக் போட்டி: ஏமாற்றமும், நம்பிக்கையும்
நடைபெற்று வரும் டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் 10மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டனர் இந்தியாவை சேர்ந்த இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சந்திலா.
இருப்பினும் அம்பு எறிதல் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி மற்றும் ஃபிரவீன் ஜாதவ் ஆகியோர் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அடுத்த நம்பிக்கை தரும் செய்தியாக இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நியூசிலாந்து அணியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது.
இதை தவிர இந்திய வீரர்கள், பளுதூக்குதல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் மற்றும் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 2
வந்துகொண்டிருக்கும் செய்தி,
சீனாவின் யாங் சியான், பெண்களுக்கான 10 மீட்டர் ஃரைபிள் பிரிவில் வென்று டோக்யோ ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே!
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை இந்தப் பக்கத்தில் தொடர்ந்து நேரலையாக வழங்குகிறோம். இணைந்திருங்கள். இந்த நாள் இனிதாகட்டும்.