டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் முதல் கொரோனா தொற்று உறுதி

டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி தொடங்க ஆறு நாட்களே உள்ள நிலையில், அங்குள்ள 'ஒலிம்பிக் கிராமத்தில்' முதல் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. சரத் பவார் - நரேந்திர மோதி சந்திப்பு

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை இன்று சந்தித்துள்ளார்.

    இந்தச் சந்திப்பு சுமார் 50 நிமிடம் நீடித்தது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டுறவு அமைச்சகம், வேளாண் பிரச்னை உள்ளிட்டவை குறித்து அவர்கள் பேசியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. போலிச் செய்திகள் - பைடன் விமர்சனம்

    சமூக ஊடகங்களில் வரும் தவறான தகவல்கள் மக்களைக் கொல்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    இந்தப் பெருந்தொற்று காலத்தில் 'ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில்' தடுப்பூசிகள் குறித்த தவறான செய்திகள் பகிரப்படுவது பற்றி செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலுரைத்தார்.

    சமூக ஊடகங்களில் வரும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளது.

    பொதுமக்கள் உடல்நலனைக் காக்க தங்கள் தளத்தில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஃபேஸ்புக் கூறுகிறது.

    fake news facebook

    பட மூலாதாரம், Reuters

  3. 'அடுத்த 100-125 நாட்கள்' - இந்திய அரசின் அபாய மணி

    கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போரில் அடுத்த 100-125 நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இந்திய அரசு கூறுகிறது.

    இரண்டு மாதங்களுக்கு முன்பு உண்டான கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று 'நிடி ஆயோக்' உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால் கூறியுள்ளார்.

    ஜூலை இறுதிக்குள்ள 50 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

  4. ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் கொரோனா

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி தொடங்க ஆறு நாட்களே உள்ள நிலையில், அங்குள்ள 'ஒலிம்பிக் கிராமத்தில்' முதல் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    இங்குதான் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களும், விளையாட்டு அணிகளின் நிர்வாகிகளும் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் ஒரு விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று ஏற்பாட்டுக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மசா டகாயா தெரிவித்துள்ளார்.

    கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020இல் நடக்க இருந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    japan tokyo olympics news bbc tamil

    பட மூலாதாரம், Photoshot

    படக்குறிப்பு, இப்போதும் ஒலிம்பிக்ஸ் நடத்த ஜப்பானில் எதிர்ப்பு உள்ளது.
  5. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்தை உங்களுக்காகத் தொகுத்து வழங்குவோர் செய்தியாளர்கள் விக்னேஷ். அ மற்றும் அ. தா. பாலசுப்ரமணியன்.

    இந்தியா, இலங்கை, தமிழ்நாடு மற்றும் சர்வதேச அளவிலான செய்திகளை இந்த நேரலைப் பக்கத்தில் பிபிசி தமிழ் உங்களுக்காக வழங்குகிறது.