நன்றி நேயர்களே!
இன்று காலை முதல் பல முக்கிய செய்திகளை இந்த பக்கத்தில் வழங்கியிருந்தோம். இத்துடன் இந்த நேரலை நிறைவடைகிறது. இணைந்திருந்ததற்கு நன்றி.
பல்வேறு முக்கியச் செய்திகளைப் படிக்க பிபிசி தமிழின் முகப்புப் பக்கத்துக்கு வாருங்கள்:
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு தேவையில்லை என மாநில அரசு வலியுறுத்தி வரும் விவகாரம், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை மாநில அரசு ஏற்று நடத்த அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளுடன் டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்துள்ளார் தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
இன்று காலை முதல் பல முக்கிய செய்திகளை இந்த பக்கத்தில் வழங்கியிருந்தோம். இத்துடன் இந்த நேரலை நிறைவடைகிறது. இணைந்திருந்ததற்கு நன்றி.
பல்வேறு முக்கியச் செய்திகளைப் படிக்க பிபிசி தமிழின் முகப்புப் பக்கத்துக்கு வாருங்கள்:
கர்நாடகா அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவதை எதிர்த்து, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த, தமிழ்நாட்டில் இருந்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் டெல்லி வந்தடைந்தனர். அவர்களை தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ்.விஜயன் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் வரவேற்றார்.
டெல்லி வத்துள்ள தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் விவரம்: 1. ஆர்.எஸ்.பாரதி - திமுக,2. கோபண்ணா - காங்கிரஸ் 3. ஜி.கே.மணி - பாமக 4. வைகோ - மதிமுக 5. பால்கனகராஜ் - பாஜக 6. என்.பெரியசாமி - சிபிஐ 7. கே.பாலகிருஷ்ணன் - சிபிஎம் 8. ஜவாஹிருல்லாஹ் - மமக 9. வேல்முருகன் - தவாக 10. சின்னராஜ் - கொமக 11. ஜகன்மூர்த்தி - புரட்சி பாரதம் இவர்களோடு மேலும் அதிமுக சார்பாக டி.ஜெயகுமார் மற்றும் விசிக சார்பாக திருமாவளவன் ஆகியோர் நாளை காலை டெல்லி வருகின்றனர்.
இதனிடையே, காவிரி மேகேதாட்டு தடுப்பணை விவகாரத்தில் தேவைப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்படவும் முடிவு செய்துள்ளதாக புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்திய பள்ளி கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுகாதார அமைச்சர் மன்சூக் மாண்டவியா ஆகியோரை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சந்தித்துப் பேசினார்.
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் ஜூலை 16 முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த முடிவு தள்ளிவைக்கப்படுவதாகக் கூறியிருக்கிறார் அதன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்.
புதுச்சேரியில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் டூ ஆகிய வகுப்புகளுக்காக பள்ளிகள் ஜூலை 16ல் திறக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு மாணவர்களின் பெற்றோர் தரப்பில் இருந்து கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமியுடன் பள்ளி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுவதாக தெரிவித்தார். கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையை கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இரு இந்திய வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அறிகுறி ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்ட இருவரில் ஒருவருக்கு இப்போது கொரோனா தொற்று நீங்கியதாக பரிசோதனையில் தெரியவந்திருப்பதாக ஏஎன்ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்றொரு வீரருக்கு வரும் 18-ஆம் தேதி மீண்டும் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. முதல் பரிசோதனை நடந்தபோது இரு வீரர்களுக்கும் லேசான இருமலும் சளியும் இருந்ததாக ஏஎன்ஐயின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அந்த இருவீரர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கு உதவியாக இருந்த மொழிபெயர்ப்பாளர்கள் ஆபத்தில் இருப்பதால் அவர்களை மீட்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது.
இம்மாத இறுதி வாரத்தில் இதற்கான "Operation Allies Refuge" என்ற மீட்பு நடவடிக்கை தொடங்கப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த சில வாரங்களில் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் பல்வேறு முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர். பல இடங்களில் முன்னேறி வருகின்றனர்.
மொழிபெயர்ப்பாளர்கள் மீட்கும் நடவடிக்கை குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி செய்தியாளர்களிடம் விளக்கினார்.
"அவர்கள் துணிச்சலானவர்கள். கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் செய்த மதிப்புமிக்க பணியை அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம்" என்றார் அவர்.
இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அதிகாரி ஒருவர், "முதற்கட்டமாக விசா விண்ணப்பங்கள் அனுமதிக்கப்படும்வரை, மீட்கப்படும் சுமார் 2,500 பேர் அமெரிக்காவிலோ அல்லது வேறு நாட்டிலோ உள்ள அமெரிக்காவின் படைத்தளத்தில் தங்க வைக்கப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை இந்தப் பக்கத்தில் சுருக்கமாகவும் விரைவாகவும் வழங்குகிறோம். இணைந்திருங்கள்!