நன்றி நேயர்களே!
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
சீனாவின் வூஹான் நகரில் மருத்துவம் படித்து வந்த மருத்துவ, கேரள மாணவியான இவருக்கு 2020 ஜனவரியில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
நீட் தேர்வு குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவை எதிர்த்து பா.ஜ.க.வின் மாநிலச் செயலாளர் கரு. நாகராஜன் தாக்கல்செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மருத்துவக் கல்லூரிச் சேர்க்கைக்கென தேசிய அளவில் நடத்தப்படும் தகுதித் தேர்வான 'நீட்' தேர்வால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒன்பது பேர் அடங்கிய ஒரு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் 10ஆம்தேதி உத்தரவிட்டது.
நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துவிட்டதால், இந்தக் குழு அமைத்தது செல்லாது என உத்தரவிடக்கோரி பாரதீய ஜனதா கட்சியின் மாநிலச் செயலர் கரு. நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்துவந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கரு.நாகராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகவாச்சாரி, "நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைநீட் மூலம் மட்டுமே நடத்தப்படுகிறது” எனக் கூறி இந்தக் குழுவை அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்துசெய்யும்படி கோரினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், "நீட் தேர்வு எந்தப் பிரிவினருக்காவது பாதிப்பை ஏற்படுத்துகிறதா என ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமித்தது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணானதல்ல" எனத் தெரிவித்தனர். தேர்வால் பாதிப்பு ஏற்படுகிறதா என்று ஆய்வுசெய்து தகவல்களைச் சேகரித்தால் மட்டுமேஅதனை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து, தம் தரப்பைச் சொல்ல முடியுமென்றும் இப்படி ஒரு குழுவே அமைக்கக் கூடாது என்று சொல்வதற்கு நாம் யார் என்றும் நீதிபதிகள் கூறினர்.
மேலும், வழக்கு தொடர்ந்தவர்கள் அனைவருக்கும் நல்ல விளம்பரம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இந்தக் குழுவுக்கு எதிராக துவக்கத்திலிருந்தே நாகராஜன் தரப்பு வலுவான வாதங்களை வைக்கவில்லை என்பதால், மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரத்தின் கருத்தைக் கேட்குமளவுக்குக்கூட நீதிபதிகள் செல்லவில்லை.
இந்த வழக்கில் இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்த திராவிடர் கழகம், ம.தி.மு.க., பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர்கள் பெற்றோர் நலச் சங்கம் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள், தனி நபர்களுடைய வழக்கறிஞர்களின் வாதத்தையும் நீதிபதிகள்கேட்கவில்லை.
நாகராஜன் தரப்பு வழக்கறிஞரின் வாதம், மத்திய அரசு வழக்கறிஞரான ஆர். சங்கரநாராயணனின் வாதம் ஆகியவற்றைக் கேட்டபிறகு, உடனடியாக இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
தீர்ப்புக்கு முதலமைச்சர் வரவேற்பு
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பா.ஜ.கவின் இரட்டை வேடம், அ.தி.மு.கவின் அடிமைச் சேவகம் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து, தனது தீர்ப்பின் மூலம் நெத்தியடி கொடுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். தமிழ்நாட்டு மாணவக் கண்மணிகளின் கண்களைக் குத்தும் பா.ஜ.கவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பாணைக்கும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை எனக்கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, “நீட் பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு மக்கள் கருத்தைக்கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார்?” என மனுதாரருக்குக்கேள்வி எழுப்பியதோடு; விளம்பரத்திற்காக இதுபோன்ற வழக்குகள் தொடரப்படுவதாக கருத்து தெரிவித்தார்கள்.
நீட் தேர்வுக்கு எதிரான நமது போராட்டத்தில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும். மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் இது தொடக்கப் புள்ளியாகும்.
மாணவர்களின் உரிமை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமையும் இந்தத் தீர்ப்பின் மூலமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. முதல் வெற்றியே, முழு வெற்றியாக மாறும் என்ற நம்பிக்கையை தமிழ்நாடு அரசுக்கு இந்தத் தீர்ப்பு அளித்துள்ளது.
நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை, அதன் மூலமாக தமிழ்நாடு அரசு எடுக்கும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் ஆகியவை அடுத்தடுத்த காலங்களில் வரிசையாக நடக்க இருக்கின்றன. இந்த ஆண்டுக்கான தேர்வுத் தேதி அதற்குள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் இந்த நடவடிக்கைகள் அதற்குள்முடிவடைய இயலாத சூழல் உள்ளது.
தமிழ்நாடு அரசு, சட்டபூர்வ நடவடிக்கையில் இருக்கும் இந்த நேரத்தில் நடக்கும் இந்த ஆண்டுக்கான தேர்வை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது உண்மையில் வருந்தத்தக்கதே.ஆனாலும் இறுதியில், நீட் தேர்வினால் நமது மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்குமுற்றுப்புள்ளி வைத்தோம் என்ற நிலையை நிச்சயம் உருவாக்குவோம்" எனக் கூறியுள்ளார்.
ஜூலை 23ஆம் தேதியன்று தொடங்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி இன்று காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.
"நீங்கள்தான் புதிய இந்தியாவின் பிரதிபலிப்பு. விரைவில் வெற்றி பெறுவது என்பது புதிய இந்தியாவிற்கு ஒரு பழக்கம் ஆகிவிடும்," என்று அவர்களிடம் தெரிவித்தார் நரேந்திர மோதி.
அழுத்தங்களுக்கு அடிபணியாமல், ஆழ் மனதில் இருந்து விளையாட வேண்டும் என்று விளையாட்டு வீரர்களிடம் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் கொரோனா தொற்றாளருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது உறுதியாகியுள்ளது என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
சீனாவின் வூஹான் நகரில் மருத்துவம் படித்து வந்த மருத்துவ, கேரள மாணவியான இவருக்கு 2020 ஜனவரியில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
"அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவு அவருக்கு கொரோனா இருப்பதாக காட்டுகிறது. அவருக்கு அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை (asymptomatic) " என்று திருச்சூர் மாவட்ட மருத்துவ அலுவலர் கே.ஜே. ரீனா பிடிஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
படிப்புக்காக அவர் டெல்லி கிளம்பும் முன் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தமது வீட்டில் இருக்கும் அவருக்கு தற்போது எந்தப் பிரச்னையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்குகான 'நீட்' நுழைவுத் தேர்வு செப்டம்பர் 11ஆம் தேதி நடத்தப்படும் என்று இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவர் மாணவர்களுக்கு தமது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் இந்திய தேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியை இன்று சந்தித்தார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பஞ்சாபில் ஆளும் காங்கிரசின் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் அவரது உள்கட்சி போட்டியாளர் நவஜோத் சிங் சித்து ஆகியோர் இடையே உள்ள மோதல் தொடர்பாக அவர்கள் விவாதித்தனர் என்று தெரிகிறது.
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ஏற்கனவே இவர்கள் இருவரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசித்தனர்.
பிரஷாந்த் கிஷோர் 2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் கேப்டன் அமரீந்தர் சிங்கின் உத்தியாளராக இருந்தார். அதன் பின்பு அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சரான சித்து முதல்வர் உடனான மோதலால் பதவி விலகினார்.

பட மூலாதாரம், sanjay das / bbc

பட மூலாதாரம், Reuters
இராக்கில் உள்ள மருத்துவமனையில் 60க்கும் அதிகமானாோர் பலியான தீ விபத்து சம்பவத்தில், அந்த மருத்துவமனையின் தலைமை அதிகாரியை கைது செய்ய பிரதமர் முஸ்தஃபா அல்-கதீமி உத்தரவிட்டுள்ளார்.
இராக்கின் நசிரியா நகரில் உள்ள அல்-ஹுசேன் எனும் மருத்துவமனையின் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் வார்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவிக்கிறது. சுமார் 70 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆக்சிஜன் டேங்க் ஒன்று வெடித்த பின் இந்தத் தீவிபத்து உண்டானது.
பல்லாண்டு கால சண்டைக்கு பிறகு இராக்கின் மருத்துவ கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தீவிபத்து நடந்த மருத்துவமனைக்கு வெளியே இறந்தவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வீட்டுக்கு ஜன்னல் கதவு எதுவும் கிடையாது, மும்பை நகரத்துக்கே உரிய கடும் இரைச்சல், இருப்பினும் கல்வி கற்கும் அஸ்மா.இந்த காணொளியை பார்க்க

பட மூலாதாரம், VIJAY
பிரிட்டன் இறக்குமதி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராத தொகையுடன் காருக்கு உரிய வரியை இரண்டு வாரங்களில் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2012ல் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்து வாங்கியிருந்தார். அந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததோடு, வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் அவர் பதிவு செய்யவில்லை. இந்த நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு உரிய வரியைச் செலுத்தும்படி வணிக வரித் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அந்த கார் பதிவு செய்யப்படவில்லை என்பதால், அது பயன்படுத்தப்படுவதில்லை என்று கூறிய நடிகர் விஜய், அந்தக் காருக்கான வரியை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்தக் காருக்கு உரிய வரியை செலுத்தாவிட்டால், அதைப் பதிவு செய்ய முடியாது என வட்டார போக்குவரத்து அலுவலகம் தெரிவித்தது. இதை எதிர்த்தே நடிகர் விஜய் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், ஒரு காரை இறக்குமதி செய்வதற்கு முன்பாக, உரிய வரியைச் செலுத்தியிருக்க வேண்டும் என வணிகவரித் துறை வாதிட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த அபராதத்தை இரண்டு வாரத்திற்குள் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்குச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த செய்தியை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

பட மூலாதாரம், Soumya Swaminathan
கொரோனா தடுப்பூசி போடும்போது இரு வேறு தயாரிப்பு மருந்துகளை போடுவது ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸை தடுக்கும் நோக்குடன் உலக அளவில் பல்வேறு நாடுகளில் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் மற்றும் உள்நாட்டில் மருத்துவ அமைப்பால் ஒப்புதல் தரப்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சில இடங்களில் இரு வகை தடுப்பூசி மருந்துகளை போட்டுக் கொண்டால் கொரோனா எதிர்ப்புத்திறன் பெருகுவதாக தகவல் வெளியானது.
சமீபத்தில் தாய்லாந்து அரசு கூட தமது குடிமக்களுக்கு இரு வேறு தயாரிப்பு கொரோனா தடுப்பூசி போட ஏதுவாக அதன் தடுப்பூசி கொள்கையில் மாற்றம் செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள செளமியா சுவாமிநாதன், "இப்படி போடப்படும் தடுப்பூசிகளால் ஏற்படும் தாக்கம் பற்றி மிகவும் சொற்ப அளவிலேயே தரவு கிடைத்துள்ளது," என்றார். இது மிகவும் ஆபத்தான போக்கு.
இரு வேறு வகை கொரோனா தடுப்பூசியை போடுவது நிச்சயம் கவலை தரக்கூடிய விஷமே. இதை தொடர்படுத்த நம்மிடம் வலுவான அறிவியல்பூர்வ தரவு கிடையாது என்று தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசியில் எந்த வகையை எப்படி போடுவது, எதை போடுவது என்பதையும் தீர்மானிப்பது சாதாரண மக்களாக இருந்தால் அது நிச்சயம் குழப்பமான சூழ்நிலைக்கே வழிவகுக்கும் என்று செளமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகேயுள்ள குப்பகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த நபர் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிக்கு சிறுமிக்கு அந்த நபர் தொல்லை கொடுக்க முயன்றபோது அவர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி சிறுமி கூச்சலிடவே அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் ஓடிச்சென்று அவரை மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் சகோதரர் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும் அந்த சிறுமியின் பெற்றோரிடம் காவல்துறையினர் சமரசம் பேச முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, சம்பந்தப்பட்ட நபருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கை நகலை கேட்டு சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் குப்பகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சீவலப்பேரி சாலையில் திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு போராட்டம் நடத்தினர்.
சிறுமிக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்ததால் சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசியதைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சீவலப்பேரி காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு பிபிசி தமிழுக்காக பேசினோம்.
“நேற்று முன்தினம் நடந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்துள்ளோம். அந்த நபரால் தங்களுடைய குடும்பத்தினருக்கு ஏதாவது பிரச்னை வருமோ என்ற அச்சத்தாலேயே கிராமமக்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பையும் அழைத்துப் பேசவிருக்கிறோம். சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை தொடருகிறது,” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
கியூபாவில் நெடுங்காலத்துக்குப் பிறகு கம்யூனிஸ அரசுக்கு எதிராக நடந்த மிகப் பெரிய போராட்டத்தில் பங்கேற்ற பலர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களும் எதிர்க்கட்சியினரும் தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரச் சரிவு, உணவு மற்றும் மருந்துகள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகியவை காரணமாக அரசின் மீது மக்கள் கோபத்தில் இருந்தனர்.
இப்போது கொரோனாவை கையாண்ட விதமும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கியூபாவில் அரசுக்கு எதிராகப் பேசுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்பதால் அங்கு நடந்திருக்கும் போராட்டங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
போராட்டங்களுக்கு எதிராகச் சண்டையிடும்படி கியூபாவின் அதிபர் தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். "இங்கு உணவு இல்லை, மருந்து இல்லை, சுதந்திரமும் இல்லை" என போராட்டத்தில் ஈடுபட்ட அலெஜான்ட்ரோ என்பவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.
"சர்வாதிகாரம் ஒழியட்டும்", "விடுதலை வேண்டும்" என்பன போன்ற முழக்கங்கள் ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தின்போது எழுப்பப்பட்டன. "எங்களுக்குப் பயமில்லை. எங்களுக்கு மாற்றம் தேவை. சர்வாதிகாரம் இனி எங்களுக்கு வேண்டாம்" என சான் அன்டோனியாவில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கற்றவர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களுக்கு சீரூடையில்லாத அதிகாரிகள் பலர் உதவி செய்தனர் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள மேகேதாட்டுவில் அணை கட்டும் அந்த மாநில அரசின் முயற்சியை தடுக்க, தமிழக வழியில் புதுச்சேரி அரசும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நினைவேற்ற வேண்டும் என்று அதன் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் வலியுறுத்தியிருக்கிறார் விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் ரவிக்குமார்.
இது தொடர்பாக அவர் அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் மனு அளித்துள்ளார். அதன் விவரம்:
"புதுச்சேரி மாநிலத்தின் பிரத்யேகமான புவியியல் சூழல் இங்கு தண்ணீரை சேமித்து வைக்கும் நீர்த்தேக்கம் எதையும் கட்டுவதற்கு உகந்ததாக இல்லை. இங்குள்ள நிலம் களிமண் நிலமாக இருப்பதால் நெல்லைத்தவிர வேறு பயிர் எதையும் சாகுபடி செய்ய முடியாது.
புதுச்சேரியில் சாகுபடி செய்யப்படும் மொத்த நிலப்பரப்பான 27 ஆயிரம் ஏக்கர் என்பது நீண்டகாலமாக நிலையானதாக மாறாமல் உள்ளது. இங்குள்ள விவசாயம் பெரிதும் வடகிழக்குப் பருவமழையைத்தான் நம்பியுள்ளது. அதுமட்டுமின்றி கடலோரப் பகுதி முழுவதும் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. எனவே புதுச்சேரி மாநில விவசாயிகள் காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ளனர்.
காவிரிப் பிரச்னை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் நம்பியார், புதுச்சேரிக்கு 9 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என வாதாடினார். ஆனால் நடுவர் மன்றத்தால் ஒதுக்கப்பட்ட 7 டிஎம்சி தண்ணீரைத்தான் உச்சநீதிமன்றமும் ஒதுக்கியது .
நடுவர் மன்றம் புதுச்சேரியில் குறுவை மற்றும் சம்பா இணைந்த முதல்போக சாகுபடி 27,145 ஏக்கரில் நடப்பதாகவும், தாளடி என்னும் இரண்டாம் போக சாகுபடி 15,388 ஏக்கரில் நடப்பதாகவும் உறுதிசெய்தது. புதுச்சேரியின் பிரத்யேகமான புவியியல் நிலையை கருத்தில்கொண்டு அங்குள்ள விவசாயிகள் இரண்டு போகம் சாகுபடிசெய்வதற்கான உரிமையை உச்சநீதிமன்றமும் தனது இறுதித் தீர்ப்பில் அங்கீகரித்துள்ளது. அதற்காக ஒதுக்கப்பட்ட 7 டிஎம்சி நீரை தமிழ்நாட்டின் வழியாக நந்தலாறு, நட்டாறு, வஞ்சி ஆறு, நூலாறு, அரசலாறு, திருமலைராஜன் ஆறு, பிரவிடையான் ஆறு ஆகிய 7 ஆறுகளின் மூலம் புதுச்சேரி பெற வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தற்போது காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்னாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் கிடைக்காது. அதனால் புதுச்சேரிக்கும் காவிரி நீர் கிடைக்காத நிலை உருவாகும். மேகேதாட்டு அணையைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதோடு அரசியல் ரீதியில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர 12.07.2021 அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியுள்ளது. அதில் 3 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
புதுச்சேரி அரசும் உடனடியாக இந்தப் பிரச்னையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காரைக்கால் பகுதியில் நடைபெற்று வரும் விவசாயம் முற்றாக அழியும் நிலை ஏற்படும். எனவே சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் காவிரிநீர் உரிமையை நிலைநாட்ட புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கென அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாடு அரசுடன் இணைந்து புதுச்சேரியின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்டத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்,” என ரவிக்குமார் மனுவில் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசித்து விட்டு முடிவெடுப்பதாக தன்னிடம் அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளதாக ரவிக்குமார் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் உயர் தளபதி தன்னுடைய பதவியில் இருந்து விலகி, பொறுப்புகளை கீழ்நிலை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்திருக்கும் நிலையில், அதன் ஒருபகுதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஜெனரல் ஆஸ்டின் "ஸ்காட்" மில்லர் பதவியில்இருந்து விலகியதன் மூலம் பிராந்தியக் கட்டுப்பாடுகள் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் வசம் சென்றிருக்கின்றன.
பிரிட்டன் உள்ளிட்ட பிற நேட்டோ நாடுகளின் படைகளும் பைடன் விதித்த காலக்கெடுவுக்கு முன்னரே தங்களது படைகளை திரும்பப் பெற்றுவிட்டன.
மேற்கத்திய நாடுகளின் படைகள் வெளியேறியிருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளில் தாலிபன் படையினர் முன்னேறி வருகின்றனர்.
திங்கள்கிழமை நடந்த எளிமையான நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய பொறுப்புகளை இரு அமெரிக்க ஜெனரல்களிடம் ஒப்படைத்தார். அவர்களில் ஒருவர் புளோரிடாவில் இருந்தபடி வெளிநாட்டில் அமெரிக்கப் படைகளை வழிநடத்துபவர். மற்றொருவர் படை விலக்கலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருக்கப்போகும் சுமார் 650 வீரர்களுக்கு தளபதியாக இருப்பவர்.
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாகவும் விரைவாகவும் இந்தப் பகுதியில் வழங்குறோம். இணைந்திருங்கள்!