கேரளாவில் 'தடுப்பு மருந்து இல்லாத' ஸிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு
கேரளாவில் கர்ப்பிணி ஒருவருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு முதல்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
கொரோனாவின் 'லேம்டா' திரிபு: இந்தியாவுக்கு ஆபத்தா? - உண்மை என்ன?
பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸின் டெல்டா திரிபால் இந்தியாவிலும் தொற்றுகள் பரவியிருக்கும் நிலையில் அச்சுறுத்தும் வகையில் லேம்டா என்ற மற்றொரு திரிபின் பெயர் அண்மைக் காலமாக பேசப்பட்டு வருகிறது.
இது ஆபத்தானதா, வேகமாகப் பரவக்கூடியதா, இறப்பு விகிதம் எப்படியிருக்கும், எங்கெல்லாம் பரவியிருக்கிறது, இந்தியா அஞ்ச வேண்டுமா என்பன போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
ஃபைசர் தடுப்பூசி - மூன்றாவது டோசுக்கு அனுமதி கோரி விண்ணப்பம்
பட மூலாதாரம், Getty Images
ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு மூன்றாவது டோஸ் விண்ணப்பம்
கொரோனா வைரஸின் டெல்டா பரவலின் தீவிரம் உலகெங்கும் அதிரித்துள்ள நிலையில், தாங்கள் தாயாரித்த தடுப்பூசியை மூன்றாவது டோஸாகவும் வழங்க அனுமதி வேண்டும் என்றும் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்துள்ளன.
உடலில் செலுத்தப்பட்டபின் தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க மூன்றாவது டோஸுக்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.
இப்போது உலகெங்கும் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகள் ஒன்று அல்லது இரண்டு டோஸ்களாக மட்டுமே வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் இருவருக்கு கப்பா திரிபு கொரோனா வைரஸ்
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில்
இரண்டு நபர்களுக்கு கொரோனா வைரசின் கப்பா திரிபு கண்டறிப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை
அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த திரிபு கடந்த பிப்ரவரி மற்றும்
மார்ச் மாதமும் பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் குறையும் தினசரி கொரோனா பாதிப்பு - ஆனாலும் எச்சரிக்கை தேவை
இந்தியாவில் தினசரி
கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் தினசரி
கொரோனா பாதிப்பு விகிதம் 8 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 சதவீத புதிய
பாதிப்புகள் 90 மாவட்டங்களில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாம்
அலை பாதிப்பு இன்னும் இந்தியாவில் இருப்பதாகவும், தொடர்ந்து பாதுகாப்பு நெறிமுறைகளை
மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன், ரஷ்யா,
வங்கதேசம் ஆகிய நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகமாகி இருப்பதையும் மத்திய சுகாதாரத்துறை
அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
புதிய ஐ.டி விதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகளுக்கு தடை விதிக்க இந்திய உச்சநீதிமன்றம் மறுப்பு
பட மூலாதாரம், Getty Images
தகவல் தொழில்நுட்ப
விதிகள் 2021 அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி இந்தியாவின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில்
தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஓடிடி தளத்தில்
வெளியாகும் படங்ளை ஒழுங்குமுறை படுத்தவேண்டும் என்ற விதிக்கு எதிராக பல்வேறு உயர் நீதிமன்றங்களில்
நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிய
மத்திய அரசின் வழக்கு நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர் மற்றும் சஞ்சய் கண்ணா ஆகியோர் முன்பு
விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயர்நீதிமன்றங்களில்
இதுதொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சொலிசிட்டர்
ஜெனரல் துஷர் மேத்தா கோரிக்கை விடுக்க, அதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
மத்திள அரசு இதுதொடர்பாக
தொடர்ந்திருக்கும் வழக்கில், டெல்லி, மும்பை, மெட்ராஸ் மற்றும் கேரளா உயர்நீதிமன்றங்கள்
இந்த வழக்கை கையில் எடுத்திருப்பதாகவும், இது உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்
என்றும் கூறியிருந்தது.
சமீபத்தில் திருத்தம்
செய்யப்பட்ட ஐ.டி விதிகளில், ஆன்லைன் ஊடக தளங்கள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக
ஊடக தளங்கள் மற்றும் ஒடிடி தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதுதொடர்பாக பல்வேறு
தரப்பினரும், இந்த புதிய ஐடி விதிகளுக்கு தடை விதிக்குமாறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
விவசாயிகள் தடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு
இந்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெறும் போராட்டங்களில் கலந்து கொள்வதற்காக டெல்லி - உத்தரப் பிரதேச எல்லையை நோக்கி வரும் விவசாயிகளை உத்தரப் பிரதேச காவல்துறையால் தடுத்து நிறுத்துகின்றனர் என்று பாரதிய கிசான் யூனியனின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 2020 முதல் இந்திய அரசுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் ஸிகா வைரஸ் பாதிப்பு: தடுப்பு மருந்து இல்லாததால் அச்சம்
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, கோப்பு
கேரளாவில் கர்ப்பிணி ஒருவருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அறிகுறிகள் தென்பட்ட சுமார் 13 பேரின் ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய கிருமியியல் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவர்களில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 24 வயதுக் கர்ப்பிணிக்கு ஸிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் ஸிகா வைரஸ் பரவுகிறது.காய்ச்சல், தோலில் சொறி, மூட்டு வலி, தலைவலி உள்ளிட்டவை ஸிகா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாகும்.
1947-ஆம் ஆண்டு உகாண்டா காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஸிகா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
நேரலைக்கு வரவேற்கிறோம்!
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகள் சுருக்கமாகவும் விரைவாகவும் இந்தப் பகுதியில் வழங்குகிறோம். இணைந்திருங்கள்!