நன்றி நேயர்களே!
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும். பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
எச்.ராஜா மீது முன்வைக்கப்பட்ட புகார்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் விசாரணையில் முடிவு செய்த பிறகு புகார் கூறியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும். பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

பட மூலாதாரம், Getty Images
மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ பதிவு நடைமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜுலை 5 ஆம் தேதி காலை 6 மணிக்கு முடிவடையும் நிலையில், ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
உணவகங்கள், விடுதிகள், பேக்கரிகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை, உரிய காற்றோட்ட வசதியுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்த அனுமதிக்கப்படுவர்.
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நேரத்தில் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கணிசமாக உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. `மூன்றாம் அலையின் தொடக்கமாகவும் இது இருக்கலாம்' என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். என்ன நடக்கிறது?
"சமையல் எரிவாயு விலையுயர்வு எல்லையைத் தாண்டுகிறது. தனது சாதனையைத் தானே முறியடிக்கிறது. நேரடியாக மக்கள் வயிற்றில் அடிக்கிறோம் எனும் ஓர்மை மத்திய அரசுக்குத் துளியும் இல்லை. எப்போது இதற்கெல்லாம் விடிவு வரப்போகிறது?" என கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஜம்முவின் புல்வாமா மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 5 பேர் எண்கவுன்டரில் சுட்டுத்தள்ளப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர் என்று பிடிஐ முகமை செய்தி வெளியிட்டிருக்கிறது.
இதில் மாவட்ட கமாண்டர் மற்றும் இந்திய ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், Getty Images
வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் மனுத்தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் வகையில், கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதனை சட்டசபையில் அறிவித்த அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ` இது தற்காலிகமானதுதான் . சாதிவாரி கணக்கெடுப்பு நிறைவடைந்த பிறகு மாற்றியமைக்கப்படும்' என்றார்.

கோவை ராஜவீதியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்துவதற்கான மையம் செயல்படுகிறது.இன்று காலை தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் இங்கு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் பள்ளி முகப்பில், உக்கடம் பாஜக உறுப்பினர்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பேனர் வைக்கப்பட்டிருந்தது.தடுப்பூசி மையத்திற்கு வந்த திமுகவினர் பேனரை அகற்றக் கோரி பாஜக தொண்டர்களிடம் வலியுறுத்தினர். இதனையடுத்து, இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரிய கடைவீதி காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறிது நேரம் தடைபட்டது.பின்னர், காவல்துறையினரின் பாதுகாப்போடு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. பேனரை அகற்றக் கோரி திமுகவினர் காவல்துறையினரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் அடுத்த உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படைத் தளத்தை சுற்றி ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறிப் பறக்கும் ட்ரோன்கள் சுட்டுத் தகர்க்கப்படும் என இந்தியக் கடற்படை எச்சரித்துள்ளது.
இந்த தளத்தை சுற்றி 3 கி.மீ. சுற்றவுக்குள் ட்ரோன்கள் உள்ளிட்ட எந்த பறக்கும் சாதனங்களும் அனுமதியின்றி வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு விமானப் படைத் தளத்தில் ஹெலிகாப்டர்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக்கூடும் என பாதுகாப்பு படையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் உச்சிப்புளி ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்தை சுற்றி ஆளில்லா விமானம் அல்லது ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கபட்டுள்ளது.
தடையை மீறீ ட்ரோன்கள் பறந்தால் அவை தகர்க்கப்படும் என கடற்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அப்படிப் பறக்கும் சாதனங்கள் தகர்க்கப்படும், அல்லது பறிமுதல் செய்யப்படும் என்றும், இதற்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த பாஜக நிர்வாகி எச்.ராஜவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த காரைக்குடி தொகுதி நிர்வாகிகள் மூவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கருத்து தெரிவித்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார் ராஜா.
இந்நிலையில் பாஜகவின் காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன், மாவட்ட தலைமைக்கு கடந்த 21ம் தேதி அளித்த விலகல் கடிதத்தில், எச்.ராஜா, தான் செய்த தவறுகளை மறைக்க தோல்விக்கு தங்கள் மீது குற்றம் சாட்டுவதாகக் கூறி இருந்தார்.எச்.ராஜா மீது பாஜக நகர நிர்வாகிகள் தெரிவித்த குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியிருந்தார்.
இதையடுத்து, எச்.ராஜா மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகளிடம் காரைக்குடியில் வைத்து விசாரணை நடத்தினார் மாநில பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம். எச் ராஜா மீது தெரிவித்த குற்ற சாட்டுகளில் உண்மை இல்லை என்றும், நிர்வாகிகள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கருத்து தெரிவித்தாகவும் இந்த விசாரணையில் முடிவுக்கு வந்தனர். இதையடுத்து, காரைக்குடி மண்டல் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு மண்டல் தலைவர் பாலமுருகன், கண்ணங்குடி மண்டல் தலைவர் பிரபு ஆகியோர் பாஜக கட்சிப் பொறுப்புகள் மட்டுமில்லாமல், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக மாநிலப் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், ANI
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்தது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 33 காசுகள் உயர்ந்து, ரூ.100.13-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றுவரை பெட்ரோல் விலை ரூ.99.80 க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில வாரங்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனைை செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே சமையல் எரிவாயு விலையும் ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், ANI
சீனா அணு ஆயுதங்களைக் குவித்து வருவது கவலை தருவதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார்.
"சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களைக் குவித்து வருவதை சில செய்திகளும் வேறு சில நடவடிக்கைகளும் காட்டுகின்றன" என்று அவர் கூறினார்.
சீனா 100-க்கும் மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணைக் கிடங்குகளை வைத்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் இதழில் அண்மையில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்தே அமெரிக்காவின் எதிர்வினை வந்திருக்கிறது.
"இதுபோன்ற ஆயுதக் குவிப்பை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது" என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
சீனாவின் மேற்கு பாலைவனப் பகுதியில் ஏவுகணைக் கிடங்குகள் அமைக்கப்பட்டிருப்பதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நிகழ்வுகளை சுருக்கமாகவும் விரைவாகவும் இந்தப் பகுதியில் வழங்குகிறோம். இணைந்திருங்கள்.