தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும்?

இந்த மாதத் தொடக்கத்தில் யோகி ஆதித்யநாத் டெல்லியில் நரேந்திர மோதி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் அமித் ஷா ஆகியோரை சந்தித்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வது எப்படி?

    கொரோனாவை தடுக்க மஞ்சள் நல்லது, மிளகு நல்லது. இதெல்லாம் சாப்பிட்டால் கொரோனா வராது, அல்லது நோய்த் தொற்று வந்து இதையெல்லாம் சாப்பிட்டால் நல்லது என்று பல கட்டுரைகளை படித்திருப்பீர்கள். ஆனால், அதற்கு பின் உள்ள அறிவியல் என்ன, இதெல்லாம் ஏன் நல்லது என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  2. கோயம்புத்தூர் குழந்தைக்கு கிடைத்த ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி

    கோயம்புத்தூர் குழந்தைக்கு கிடைத்த ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி

    தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாநகரைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை ஜூஹா ஜைனப்பிற்கு, முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு நோய் (Spinal Muscular Atrophy) சிகிச்சைக்காக ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி இன்று செலுத்தப்பட்டுள்ளது.

    கோவையில் வசித்து வரும் அப்துல்லா - ஆயிஷா தம்பதியினரின் குழந்தை ஜூஹா ஜைனப்பிற்கு முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு எனும் அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஜூஹாவை காப்பாற்ற அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ரூ.16 கோடி விலை மதிப்பிலான ஊசி தேவைப்பட்டது.

  3. மநீம புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

    கமல்

    பட மூலாதாரம், @maiamofficial

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக மட்டுமல்லாது அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்ற இருப்பதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

    இத்துடன் புதிய நிர்வாகிகளும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    அந்தப் பட்டியல் பின்வருமாறு.

    1. பழ.கருப்பையா - அரசியல் ஆலோசகர்

    2. பொன்ராஜ் வெள்ளைச்சாமி - அரசியல் ஆலோசகர்

    3. ஏ.ஜி.மவுரியா - துணைத் தலைவர் - கட்டமைப்பு

    4. தங்கவேலு - துணைத் தலைவர் - களப்பணி மற்றும் செயல்படுத்துதல்

    5. செந்தில் ஆறுமுகம் - மாநிலச் செயலாளர் - தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு

    6. சிவ.இளங்கோ - மாநிலச் செயலாளர் - கட்டமைப்பு

    7. சரத்பாபு - மாநிலச் செயலாளர் - தலைமை நிலையம்

    8. ஸ்ரீப்ரியா சேதுபதி - நிர்வாகக் குழு உறுப்பினர்

    9. ஜி.நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்

    புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள கட்சி அறிக்கையில், கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம் என்றும் உறுப்பினர்களுடன் நடந்த இணைய வழி உரையாடலில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

  4. பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தாத்தா கைது

    பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தாத்தா கைது

    பட மூலாதாரம், Getty Images

    சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாத்தா, உடந்தையாக இருந்த ஓரு பெண் உள்ளிட்ட 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகளுக்கு 11 மற்றும் 13 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மகளின் கணவர் இறந்துவிட்டதால், மகள் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு தேவகோட்டை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார். இதனால் குழந்தைகள் இருவரும் தாத்தா செல்வத்தின் பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் குழந்தைகள் அவரது தாய்க்கு போனில், தாத்தா செல்வம் மற்றும் சிலர் தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக கூறியுள்ளனர். இதனால் குழந்தைகளின் தாய் 1098 எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் விசாரணை நடத்தி காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் அடிப்படையில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், சிறுமிகளின் தாத்தா செல்வம், மேலும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், மணி, மற்றும் உதவியாக இருந்த தெரசாள் புனிதாஆகிய நான்கு பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர் ஒருவர், தொடர்ந்து சிறுமிகளுக்கு தாத்தா செல்வம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் ஒருவர் மீது சந்தேகம் உள்ளது. ஆனால் அவர் தற்போது வெளியூரில் உள்ளதால் அவர் குறித்தும் விசாரனை நடத்தப்பட்டு வருகிறது.

    அக்கம் பக்கத்தினர் சிறுமிகளின் தாயாரிடம் உன் அப்பாவால் உன் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக கூறியும் அதை அந்த தாய் நம்பவில்லை.தொடர்ந்து செல்வம் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். பின்னர் சிறுமிகளே அவர் அம்மாவிடம் கூறியதால் புகார் அளிக்க முன்வந்துள்ளதாக காவலர் தெரிவித்தார்.

  5. பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு மதிப்பிடப்படும்?

    ஸ்டாலின்

    பட மூலாதாரம், FB / MK STALIN

    பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு மதிப்பிடப்படும் என்ற கணக்கீடு முறையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு (அதிக மதிப்பெண்கள் பெற்ற 3 பாடங்களின் சராசரி) 50 சதவீதம், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (எழுத்துமுறை மதிப்பெண் மட்டும்) 20 சதவீதம் மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு 30 சதவீதம் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பீட்டு முறை மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாக நினைக்கும் மாணவர்கள், அவர்கள் விரும்பினால் பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்என்றும் தனித்தேர்வு எழுத விண்னப்பித்தவர்களுக்கு கொரோனா தொற்று சீரானதும் தேர்வு நடத்தப்படும்என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  6. கொரோனா மூன்றாம் அலை வந்தால்..

    கொரோனா மூன்றாம் அலை வந்தால் அது இரண்டாம் அலையை போல மிகவும் மோசமானதாக இருக்காது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி ஆகியவற்றின் அறிவியலாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவில் வேகமாக செயல்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் வருங்காலங்களில் கொரோனா அலைகள் உண்டாவதை கட்டுப்படுத்த உதவும் என்று இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கி உள்ளதாக கூறும் இந்த ஆய்வு அதற்கு பல காரணங்கள் உள்ளது என்று தெரிவிக்கிறது.

  7. அயோத்தி: நரேந்திர மோதி, யோகி ஆதித்யநாத் சந்திப்பு

    ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் அயோத்தி நகரில் மேற்கொள்ளவுள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மறு ஆய்வு செய்வதற்காக உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று காணொலிக் காட்சி வாயிலாக சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

    இந்த மாதத் தொடக்கத்தில் யோகி ஆதித்யநாத் டெல்லியில் நரேந்திர மோதி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் அமித் ஷா ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று பிப்ரவரி மாதம் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.

    இன்றைய சந்திப்பின் போது நரேந்திர மோதியிடம் சாலைகள், உள்கட்டமைப்பு, ரயில் நிலையம் உள்ளிட்டவற்றின் மேம்பாடு குறித்து யோகி ஆதித்யநாத் விளக்கினார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    yogi modi ayodhya

    பட மூலாதாரம், Getty Images

  8. குடியேறிகள் பிரச்னை - எல்லைக்கு சென்ற கமலா ஹாரிஸ்

    அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்ற பின்பு அந்நாட்டின் தெற்கு எல்லைக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார் கமலா ஹாரிஸ்.

    லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் தஞ்சம் கோரி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல் பாசோவுக்கு அவர் பயணம் மேற்கொண்டார்.

    வறுமை, ஊழல், வன்முறை ஆகியவற்றின் காரணமாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் குடியேறிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து.

    குடியேற்ற ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைய பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

    Kamala Harris visits US border amid migrant crisis

    பட மூலாதாரம், EPA

  9. மியாமி நகரில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 159 பேரை காணவில்லை

    அமெரிக்காவின் மியாமி நகரில் 12 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 150 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

    கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலும் கட்டடம் இடிந்த விழுந்த போது எத்தனை பேர் அதில் இருந்தனர் என்ற தகவலும் தெரியவில்லை. இடிபாடிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மியாமி டேட் கவுன்டியின் மேயர், நம்பிக்கையுடன் சிக்கியுள்ளவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடி வருவதாக தெரிவித்தார்.

    கட்டடம் இடிந்து விழுந்த காரணத்தை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு என்று தெரிவித்துள்ள ஃபுளோரிடா மாகாண ஆளுநர், தற்சமயம் சிக்கியுள்ளவர்களை மீட்பதே முதன்மை பணி என்று தெரிவித்துள்ளார்.

  10. பெட்ரோல் விலை - கிரிக்கெட் சதம்

    "உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது! தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ100-ஐத் தாண்டியது. கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும் போது ஏன் இந்த நிலை?" - காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கு: காவல்துறை அதிகாரிக்கு 22 வருட சிறை

    அமெரிக்க ஆப்ரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்டை 2020ஆம் ஆண்டு மே மாதம் கொலை செய்த குற்றத்தில் அமெரிக்கவை சேர்ந்த வெள்ளை இன முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு 22 வருடங்கள் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    48 வயது ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தின் மீது, டெரெக் சாவின் என்ற வெள்ளை இன காவல்துறை அதிகாரி முட்டியை மடக்கி அழுத்தி 9 நிமிடங்கள் மூச்சு விடாமல் செய்ததில் உயிரிழந்தார்.

    ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இனவெறி மற்றும் காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக பல போராட்டங்கள் வெடித்தன.

    45 வயது செளவின் மீது கொலை குற்றமும், பிற குற்றங்களும் சுமத்தப்பட்டிருந்தன. செளவின் வாழ்நாள் முழுவதும் துப்பாக்கியை வைத்திருப்பதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது ஜார்ஜ் ஃப்ளாய்டின் சிவில் உரிமையை மீறிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

    இந்த தீர்ப்பை ஜார்ஜின் குடும்பத்தினரும் அவரின் ஆதரவாளர்களும் வரவேற்றுள்ளனர்.

  12. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!

    தமிழகம், இந்தியா, இலங்கை மற்றும் உலக அளவிலான செய்திகளை நேரலையாக இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம் தொடர்ந்து இணைந்திருங்கள்