40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் பெண் உறுப்பினர்

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 12 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பலரை காணவில்லை.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. புதுச்சேரியின் புதிய அமைச்சரவைக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

    புதுச்சேரி
    புதுச்சேரி

    புதுச்சேரியின் புதிய அமைச்சரவைக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்அளித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் உறுப்பினர் ஒருவருக்கும் அமைச்சரவையில் வாய்ப்புகிடைத்துள்ளது.

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேசிய ஜனநாயக சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் ஆட்சி அமைந்துள்ளது. முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பொறுப்பேற்றார்.

    குறிப்பாக முதல்வர் பதவியேற்று 40 நாட்கள் மேலாகியும்அமைச்சரவையை இறுதி செய்வதில் இழுபறி நீடித்தது. குறிப்பாக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே அமைச்சர் பதவி யாருக்கு ஒதுக்குவது என்ற குழப்பம் நிலவியது.

    இதற்கு காரணம் கூட்டணி கட்சிக்குள் இருந்த குழப்பம் எனச் சொல்லப்பட்டது. பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து புதிய அமைச்சரவை பட்டியலை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கடந்த 23ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

    இதில் 5 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலில், பாஜகவிற்கு 2 அமைச்சர்களும் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 3 அமைச்சர்களும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் ரங்கசாமி வழங்கிய அமைச்சரவை பட்டியலை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தார்.

    இந்த நிலையில் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டபுதிய அமைச்சரவை பட்டியலுக்குக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மாலை ஒப்புதல் வழங்கினார். இதையடுத்துபுதிதாக நியமிக்கவுள்ள 5 அமைச்சர்கள் யார் என்று புதுச்சேரி மாநில அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்துள்ளது.

    5 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திர பிரியங்கா, லட்சுமி நாராயணன் மற்றும் தேனி ஜெயக்குமார் உள்ளிட்ட மூவர் இடம் பெற்றுள்ளனர். இவர்களை அடுத்து பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணக்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    புதிய அமைச்சரவைக்கான பதவியேற்பு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் என புதுச்சேரி தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் தெரிவித்துள்ளார்.

    40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் பெண் உறுப்பினருக்கு வாய்ப்பு.

    புதுச்சேரி அமைச்சரவையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகுகாரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த பெண் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளான இவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

    1980ஆம் ஆண்டு காங்கிரஸ் திமுக கூட்டணியில் ஆட்சி நடைபெற்ற போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேணுகா அப்பாதுரை என்பவர் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்தார். அவரை தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் அமைச்சர் ஒருவரை என்‌.ஆர்.காங்கிரஸ் கட்சிஅமைச்சராக நியமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரைத் தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை ராஜ்பவன் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சேர்ந்த லட்சுமி நாராயணன் மற்றும் மங்கலம் தொகுதியைச் சேர்ந்த தேனி ஜெயக்குமார் உள்ளிட்டோர் இரண்டாவது முறையாக அமைச்சராகவுள்ளனர்.

    இவர்களைத் தொடர்ந்து பாஜகவை சேர்ந்த மண்ணாடிப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் நமச்சிவாயம் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். இவர் நான்காவது முறையாக மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்க உள்ளார். இவரையடுத்து பாஜகவை சேர்ந்த ஊசுடு சட்டமன்ற உறுப்பினர் சாய் சரவணக்குமார் முதல் முறையாக அமைச்சராகிறார்.

    5 பேர் கொண்ட இந்த அமைச்சரவை பட்டியலில், காரைக்கால் நெடுங்காடு தொகுதியை சந்திர பிரியங்கா மற்றும் ஊசுடு தொகுதியை சேர்ந்த சாய் சரவணக்குமார் ஆகிய இருவரும் தனித் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு

    தமிழகத்தில் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு

    பட மூலாதாரம், Getty Images

    தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஜுலை 5ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கனவே வகை 1, 2, 3 என கொரோனா தொற்று பாதிப்பு வீரியம் வாரியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  3. கிஷோர் கே சாமி குண்டர் சட்டத்தில் கைது

    சமூக வலைதளப் பதிவரான கிஷோர் கே சாமி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் ஏற்கனவே மூன்று வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

    ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் தொடர்ந்து எழுதி வந்த கிஷோர் கே சுவாமி, பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் அரசியல் தலைவர்கள் குறித்தும் ஆபாசமாகவும் அவதூறாகவும் எழுதிவந்த நிலையில், அவர் மீது பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் பெண்கள் புகார்களை அளித்தனர். இவற்றில் சில வழக்குகளில் கைது செய்யப்பட்ட கிஷோர் கே. சுவாமி, ஜாமீனில் விடப்பட்டார்.

    இந்த நிலையில், தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை குறித்து சில நாட்களுக்கு முன்பாக அவதூறான கருத்து ஒன்றைப் பதிவுசெய்தார். இது தொடர்பாக புகார்கள் வந்த நிலையில், அவரை சென்னை சங்கர் நகர் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்குப் பிறகு, பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஏற்கனவே அளித்திருந்த புகாரில் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் அவரை மீண்டும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜூன் 30ஆம் தேதிவரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

    சில நாட்களுக்கு முன்பாக, திரைக்கலைஞர் ரோகிணி ஆன்லைன் மூலம் சென்னை நகரக் காவல் துறையிடம் ஆன்லைனில் புகார் ஒன்றைப் பதிவுசெய்தார். அதில், தன்னைப் பற்றியும் மறைந்த தனது கணவர் ரகுவரன் குறித்தும் ஃபேஸ்புக்கில் அவதூறாக கிஷோர் கே சாமி எழுதியுள்ளதாக ரோகிணி புகார் அளித்தார்.

    இதற்குப் பின், பத்திரிகையாளர் ஒருவரை மிரட்டியதாக ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த புகார் தொடர்பாக ஜூன் 24ஆம் தேதி கிஷோர் கே சாமி மீண்டும் கைதுசெய்யப்பட்டார். அவர் மீது பத்துக்கும் மேற்பட்ட புகார்களும் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, அவர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்படுபவர்கள், சாதாரணமாக ஜாமீனில் வெளிவர இயலாது. இதற்கென உள்ள குழுமத்தில் முறையிட்டே வெளிவர வேண்டும்.

  4. இந்தியாவில் குழந்தைகளுக்கு எப்போது தடுப்பூசி செலுத்தப்படும்?

    “தற்போது உலகளவில் குழந்தைகளுக்கு ஒரே ஒரு நாடு மட்டுமே தடுப்பூசி செலுத்தி வருகிறது. சிறிய குழந்தைகளுக்கு தடுப்பூசி வேண்டுமா, வேண்டாமா என்பது இப்போதும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து போதுமான தரவுகள் கிடைக்காத வரை, அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது இந்தியாவில் சாத்தியமில்லை” என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குநர் ஜெனரல் பல்ராம் பார்கவா குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் 2-18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசிபரிசோதனை சிறியளவில் தொடங்கியுள்ளதாகவும், செப்டம்பர்மாதத்தில் அதன் முடிவுகள் கிடைக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்க நெறிமுறைகள் வெளியீடு

    இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்க மத்திய அரசு நெறிமுறைகளை வழங்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குநர் ஜெனரல் மருத்துவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

    கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

    கொரோனா வைரசின் ஆல்பா, பீட்டா மற்றும் காமா ஆகிய திரிபுகளுக்கு எதிராக இந்தியாவில் செலுத்தப்படும் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டும் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. இந்தியாவில் இதுவரை மொத்தம் 48 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று

    இந்தியாவில் முதலில் காணப்பட்ட டெல்டா கொரோனா திரிபு, வைரஸ் பரவலில் இன்னும் முன்னேறி இருக்கிறது.தற்போது டெல்டா ப்ளஸ் என்ற அதன் திரிபும் இந்தியாவில் பரவி வருகிறது.

    நாட்டில் இதுவரை 48 பேருக்கு டெல்டா பிளஸ் திரிபு கொண்ட தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் மருத்துவர் எஸ்.கே. சிங் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 பேருக்கும், தமிழகத்தில் 9 பேருக்கும் டெல்டா பிளஸ் திரிபு கொண்ட தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. கோயில்களை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

    கோயில்களை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

    தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் திறக்கக் கோரி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் மேற்கு வாசல் முன்பாக இந்து முன்னணியினர் சூடம் ஏற்றி, தோப்பு கரணம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொரோனா காலத்தில் கோவிலை மூடிவிட்டு மதுகடைகளை திறந்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை கோஷங்களை எழுப்பினர்.

  8. இன்றைய நிலவரம்

    இந்தியாவில் புதியதாக 51 ஆயிரத்து 667 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,329 பேர் உயிரிழந்துள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. அமெரிக்காவின் மியாமி நகரில் 12 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது

    அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 12 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பலரை காணவில்லை.

    இதுவரை 102 பேரை அடையாளம் கண்டு மீட்டுள்ளனர். 99 பேர் எங்குள்ளனர் என்பது தெரியவில்லை.

    கட்டட இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை.

    இதில் சில லத்தின் அமெரிக்க குடியேறிகளும் காணாவில்லை என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

    பராகுவே நாட்டின் அதிபரின் மனைவி சில்வான லோபெஸ் மொரெய்ராவின் சகோதரி மற்றும் அவரின் குடும்பமும் இந்த இடிபாடிகளில் சிக்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  10. பிபிசி நேயர்களுக்கு வணக்கம்!

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலக அளவிலான செய்திகளை இந்தப் பக்கத்தில் நேரலையாக வழங்குகிறோம் தொடர்ந்து இணைந்திருங்கள்.