அமெரிக்காவின் மியாமி நகரில் 12 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது: பலரை காணவில்லை
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 12 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பலரை காணவில்லை.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
அமெரிக்காவின் மியாமி நகரில் 12 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது: பலரை காணவில்லை
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 12 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பலரை காணவில்லை.
இதுவரை 102 பேரை அடையாளம் கண்டு மீட்டுள்ளனர். 99 பேர் எங்குள்ளனர் என்பது தெரியவில்லை.
கட்டட இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை.
இதில் சில லத்தின் அமெரிக்க குடியேறிகளும் காணாவில்லை என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
பராகுவே நாட்டின் அதிபரின் மனைவி சில்வான லோபெஸ் மொரெய்ராவின் சகோதரி மற்றும் அவரின் குடும்பமும் இந்த இடிபாடிகளில் சிக்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ReplyForward
ஜம்மு-காஷ்மீரில் தேர்தலுக்கு முன்னுரிமை: ஆலோசனைக் கூட்டத்தில் மோதி
பட மூலாதாரம், ANI
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரேதசத் தலைவர்களுடன் பிரதமர் மோதி நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது. மூன்றரை மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜனநாயக நடைமுறைகள் தொடர்பாக வலியுறுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட ஜம்மு-காஷ்மீரின் 14 முக்கியத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒமர் அப்துல்லா, "ஜம்மு-காஷ்மீரின் மறுவரையறை நடைமுறைகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் கூறினார்" என்று தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் கூடிய விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என பிதமர் கூறியதாகவும், ஆனால் முதலில் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுத்துவிட்டு தேர்தலை நடத்தலாம் என குலாம் நபி ஆசாத் கூறியதாகவும் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து விவாதிக்கப்படவில்லை என முன்னாள் துணை முதல்வர் முஸாபர் பெய்க் கூறினார்.
காங்கிரஸ் சார்பில் 5 கோரிக்கைகள் வைக்கப்பட்டதாகத் தெரிவித்த குலாம் நபி ஆசாத், "மாநில அந்தஸ்து வழங்குவது, தேர்தல் நடத்துவது, அரசியல் கைதிகளை விடுவிப்பது, பண்டிட்களை திரும்ப அழைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம்" என்று கூறினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தற்போது அங்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டில் இன்று 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் இன்று 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,49,577.
தற்போது 49, 845 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 9,0 46 குணமடைந்துள்ளனர்.
இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 155 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 31,901.
மாநில சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த விவரங்கள் தரப்பட்டுள்ளன.
ட்விட்டர் மேலாண் இயக்குநரை கைது செய்ய இடைக்காலத் தடை
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
தடை
ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மணீஷ் மகேஸ்வரியை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முதியவர் ஒருவர் தாக்கப்படும் வீடியோ வைரலானது தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மணீஸ் மகேஸ்வரிக்கு எதிராக எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது.
"ட்விட்டர் மேலாண் இயக்குநரிடம் விசாரிக்க வேண்டுமெனில் வீடியோ மூலம் விசாரிக்கலாம்" எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
காஜியாபாத் காவல்துறை நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மணீஷ் மகேஸ்வரி ஆஜராகியிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றும் இந்திய அணிக்கான அதிகாரப்பூர்வ எழுச்சிப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் நாளையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு இந்தப் பாடலை வெளியிட்டார்.
"இந்தியாவை ஒருங்கிணைக்கும் பிரதமர் மோடியின் நோக்கத்தை இந்தப் பாடல் நிறைவேற்றுகிறது" என கிரண் ரிஜுஜு குறிப்பிட்டார்
இந்தியில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் பாடலை பாடகர் மோஹித் சவுகான் பாடியுள்ளார். பல்வேறு விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோதியும் இந்தப் பாடலுக்கான காணொளியில் தோன்றியுள்ளார்.
இந்தோனீசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 6 தமிழர்கள் - மீட்கக் கோரி உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை
இந்தோனேசீயாவில் தடுத்து வைக்கபட்டுள்ள 6 தமிழர்களை மீட்டு உடனடியாக தாயகம் அழைத்து வர வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த அக்ரமேசி கிராமத்தை சேர்ந்தவர் கவின் (32). இவருக்கு ரேவதி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும், நான்கு மாத பெண் குழந்தையும் உள்ளது.
கவின் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் DEE4BRICH என்ற கப்பலில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 8-ஆம் தேதி சொந்த ஊர் திரும்புவதற்காக கப்பலில் இருந்து தமிழ்நாட்டை சேர்ந்த கவின் உட்பட 6 பேர் இந்தோனேசீயாவில் இறங்கியுள்ளனர்.பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு வருவதற்காக இந்தோனேசீயா விமான நிலையம் சென்ற போது 6 பேரும் கடவுச்சீட்டு சரிபார்க்கும் மையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பின்னர் இந்தோனேசீயாவில் உள்ள பாட்டாம் என்ற இடத்தில் உள்ள சிறப்பு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இந்தோனேசீயா அரசால் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 6 தமிழர்களையும் உடனடியாக தாயகம் அழைத்து வர தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கவின் உறவினர் நாகராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், கடந்த 8ம் தேதி பணிகளை முடித்துக் கொண்டு இந்தோனேசியாவில் இருந்து புறப்பட இருப்பதாக கவின் தனது மனைவி ரேவதியிடம்; கூறியுள்ளார்.
இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட தனது கணவர் சொந்த ஊருக்கு வந்து சேரவில்லை என கவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது தொடர்ந்து செல்போன் இணைப்பு துண்டிக்கபட்டிருந்துள்ளது.
உடனடியாக கவின் வேலை செய்த நிறுவனத்தை ரேவதிதொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு நிர்வாகம் தரப்பில் கொரோனா காரணமாக கவின்; தனிமைப்படுத்தப்பட்டு இந்தோனேசீயாவில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் கவின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை கவின் செல்போனில் இருந்து வீடியோ கால் மூலமாக மனைவி ரேவதியை தொடர்பு கொண்டு 'என்னை காப்பாற்றுங்கள், முகாமில் உணவு அளிக்காமல் சித்ரவதை செய்கிறார்கள்' என பேசிக் கொண்டிருந்த போது சிறை அதிகாரி ஒருவர் கவினிடம் இருந்த செல்போனை பறித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அச்சம் அடைந்த கவினின் உறவினர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவிடம் கவினை மீட்டுத் தரும்படி மனு அளித்துள்ளனர்.
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆகியோருக்கு ட்விட்டர் மூலமாக தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்கிறார் கவினின் உறவினர் நாகராஜன்.
டெல்டா கொரோனா வைரஸ் திரிபு - உலக சுகாதார அமைப்பு புதிய எச்சரிக்கை
பட மூலாதாரம், Getty Images
தற்போதைய போக்கே தொடர்ந்தால், கொரோனா வைரஸ் திரிபுகளிலேயே மிகவும் வேகமாக பரவக்கூடிய தன்மை உடைய டெல்டா திரிபு மிகவும் 'ஆதிக்கம் செலுத்தும் பரம்பரை' உடைய திரிபாக மாற வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.இதுவரை இந்தத் திரிபு 85 உலக நாடுகளில் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களிலும் இந்தத் திரிபின் பரவல் இருப்பது தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.ஆல்ஃபா திரிபு 170 நாடுகள், பிராந்தியங்கள் அல்லது பகுதிகளில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பீட்டா திரிபு 119 நாடுகளிலும், காமா திரிபு 71 நாடுகளிலும் பரவியுள்ளது தெரியவந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
மெக்கஃபி ஆன்டி வைரஸ் நிறுவனர் ஜான் மெக்கஃபி உயிரிழப்பு
பட மூலாதாரம், Reuters
மெக்கஃபி ஆன்டி வைரஸ் மென்பொருளை உருவாக்கிய
ஜான் மெக்கஃபி பார்சிலோனா சிறையில் உயிரிழந்துள்ளார்.
வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு
சுமத்தப்பட்ட ஜான் மெக்கஃபியை அமெரிக்காவுக்கு அனுப்ப ஸ்பெயின் நீதிமன்றம் ஒப்புக்
கொண்ட சில மணிநேரங்களில் அவர் உயிரிழந்துள்ளார்.
கேட்டலோனியாவின் நீதித்துறை,
மெக்கஃபி தனது உயிரை தானே மாய்த்து கொண்டது போல தெரிகிறது என தெரிவித்துள்ளது.
முதல் வர்த்தக ஆன்டி வைரஸ்
மென்பொருளை உருவாக்கிய மேக்கஃபியின் நிறுவனம் பல கோடி வர்த்தகத்தை பெற்று தந்தது. அதன்பின்
மெக்கஃபி ஆன் டி வைரஸ் நிறுவனம் இன்டல் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.
பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியும் மெக்கஃபி
நான்கு வருடமாக வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டில் ஸ்பெயினில் கைது செய்யப்பட்டார்.
வேறு ஒருவரின் பெயரில் வங்கி கணக்குகளை உருவாக்கி
அதில் வருவாயை செலுத்தி கொண்டு வரி ஏய்ப்பு செய்ததாக அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியது.
புதன்கிழமையன்று ஸ்பெயினின்
தேசிய நீதிமன்றம் அமெரிக்காவிற்கு அவரை அனுப்பி வைக்க அனுமதி வழங்கியது.
ஜான் மெக்கஃபி தனது குற்றச்சாட்டுகளை
தொடர்ந்து மறுத்து வந்தார். இது ஒரு சதி எனவும் தெரிவித்திருந்தார்.
"மோதி குறித்து அவதூறு" - ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர்
மோதி எனும் கடைசிப் பெரியர் உடையவர்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக கூறி, பூர்ணேஷ் மோதி என்பவரால் 2019இல் தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில் இன்று ஆஜரானார் ராகுல் காந்தி."நீரவ் மோதி, லலித் மோதி, நரேந்திர மோதி... எப்படி பொதுவான கடைசி பெயர் உள்ளது? அனைத்துத் திருடர்களுக்கும் எவ்வாறு கடைசி பேர் ஒன்றாக உள்ளது?" என்று 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.2019 மக்களவைத் தேர்தல் நடந்த காலகட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்தார்.
தென் ஆப்ரிக்க பெண்ணுக்கு 10 குழந்தைகள் செய்தியில் உண்மை இல்லை
பட மூலாதாரம், AFRICAN NEWS AGENCY (ANA)
தென் ஆப்ரிக்காவில்
கோசியாமே சிதோல் என்ற பெண் ஒருவர் பத்து குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற செய்தியில்
உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது.
குவாண்டெங்
என்னும் அந்த மாகாணத்தில் எந்த மருத்துவமனையிலும் 10 குழந்தைகள் பிறக்கவில்லை என மாகாண
நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிதோல் சமீபத்தில்
கர்ப்பமாக இல்லை என்றும் மருத்துவ பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.
சிதோலுக்கு
37 வயது. அவரின் மன நலம் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு ஆதரவு அளிக்கப்படும்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் தூங்கிய சீன வீரர்கள்: புதிய வீடியோ வெளியீடு
சீனா தனது
சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியை மேற்கொள்ள மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு
அனுப்பியது.
நேற்று விண்வெளியில்
அவர்களின் 24 மணி நேரம் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் ஒரு காணொளியை வெளியிட்டது
சீனா.
அதில் அவர்களை
சுற்றி பெட்டிகள் சுழலும் நிலையில், டியூ பூமிங், டாங் ஹாங்போ, நீ ஹெய்ஷெங் ஆகிய மூன்று
விண்வெளி வீரர்களும் உணவு உட்கொண்டனர். மதிய நேர உறக்கத்திற்கு அவர்கள் தயாராகினர்.
சீனா ஐந்து
வருடங்களுக்கு பிறகு விண்வெளி திட்டம் ஒன்றிற்காக வீரர்களை அனுப்பியுள்ளது. அவர்கள்
நீண்ட நாட்கள் விண்வெளியில் இருப்பர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பிபிசி நேயர்களுக்கு வணக்கம்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலக அளவிலான செய்திகளை இந்தப்பக்கத்தில் நேரலையாக வழங்குகிறோம் தொடர்ந்து இணைந்திருங்கள்.