“கொரோனா இறப்புகளுக்கு இழப்பீடாக 4 லட்சம் தர இயலாது” – உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு

கடந்த 2020ஆம் ஆண்டு, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களுக்கு, தலா நான்கு லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிப்பு

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு வரும் 21ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், தளர்வுகளுடன் கூடிய புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்தபுதியகட்டுப்பாடுகள்வரும்28ஆம்தேதிவரைஅமலில்இருக்கும்.

    இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தொற்று பரவலின் அடிப்படையில் மாவட்டங்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் என கொரோனா தொற்று அதிகம் இருக்கும் 11 மாவட்டங்கள் ஒன்றாம் வகை மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

    இரண்டாம் வகையில் கடலூர், அரியலூர், தருமபுரி என 23 மாவட்ட்டங்கள் சேர்க்கப்ப்ட்டுள்ளன.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் வகை மூன்றாகும்.

  2. “கொரோனாவால் இறந்தவர்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க இயலாது” - மத்திய அரசு

    இந்தியா

    பட மூலாதாரம், Getty Images

    கடந்த 2020ஆம் ஆண்டு, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களுக்கு, தலா நான்கு லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

    ஆனால் மத்திய அரசு குறிப்பிட்ட படி, நிவாரணத் தொகை பணத்தைக் கொடுக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கு விளக்கமளிக்கும் விதத்தில் மத்திய அரசு தன் தரப்பிலிருந்து பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்திருக்கிறது.

    அப்பத்திரத்தில் “மத்திய அரசு மீதிருக்கும் கடுமையான நிதிச் சுமை காரணமாகவும், பல்வேறு காரணிகளாலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையான நான்கு லட்சம் ரூபாயைக் கொடுக்க முடியது” என தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறது.

    மேலும் “ஏற்கனவே கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது, ஏழை எளிய மக்களுக்குத் தேவையான பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறது” எனவும் அப்பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறது மத்திய அரசு.

    ”பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் படி 12 பேரழிவுகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணத் தொகை கொடுக்க வழி வகை செய்யப்பட்டு இருக்கிறது. மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு 2020 - 21 நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டு இருக்கும் மொத்த தொகையே 22,184 கோடி ரூபாய் தான்.

    எனவே, கொரோனாவால் மரணமடைந்தவர்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கினால், ஒட்டுமொத்த மாநில பேரிடர் நிவாரண நிதியும், நிவாரண நிதிக்கு மட்டுமே தீரும் வாய்ப்பு இருக்கிறது”

    “கொரோனாவால் இறந்தவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க மட்டுமே இந்த முழு தொகையையும் செலவழித்து விட்டால், மேற்கொண்டு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளுக்கு செலவழிக்க மாநிலங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படலாம். எதிர்காலத்தில் வரும் புயல், வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கு நிதி போதாமல் போகலாம்” என உச்ச நீதிமன்றத்திடம் சமர்பித்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறது மத்திய அரசு.

  3. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது: நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் நடவடிக்கை

    நடோடிகள் படத்தில் நடித்த சாந்தினி என்பவர் அளித்த பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஞாயிற்றுக் கிழமை காலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நடோடிகள் என்ற படத்தில் நடித்துள்ள திரைக்கலைஞர் சாந்தினி சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த மே 28ஆம் தேதியன்று சென்னை நகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் ஒன்றை அளித்தார்.

    அந்த புகாரில், மணிகண்டனும் தானும் கணவன் - மனைவியைப் போல ஐந்து ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் அவர் மூலம் மூன்று முறை கர்ப்பமடைந்ததாகவும் ஆனால், அவரது மிரட்டலால் அந்த கருக்களைக் கலைத்ததாகவும் கூறியிருந்தார்.

    அவர் தன்னைத் திருமணம் செய்துகொள்வார் என்ற நம்பிக்கையிலேயே இவற்றைச் செய்ததாகவும் ஆனால், மணிகண்டன் தற்போது அதற்கு மறுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். தன்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

    இந்த புகார் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு, இ.பி.கோ. 313 - பெண்ணின் அனுமதியின்றி கருவைக் கலைத்தல், 323 - அடித்து காயம் ஏற்படுத்துதல், 417- நம்பிக்கை மோசடி, 376 - பாலியல் வன்கொடுமை, 506 (1) - கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதையடுத்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவரைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    இந்த நிலையில் மணிகண்டனை இன்று காலையில் காவல்துறையினர் கைது செய்தனர். எங்கு வைத்து அவர் கைதுசெய்யப்பட்டார், எங்கே வைத்து வசாரிக்கப்பட்டு வருகிறார் என்ற விவரங்களைக் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை.

    விசாரணை முடிந்த பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக அவருடைய ஓட்டுனர், உதவியாளர், அவர் அமைச்சராக இருந்தபோது பணியிலிருந்த காவலர் ஆகியோரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

    தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பதவி வகித்த மணிகண்டன், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

  4. பிரேசிலில் 5,00,000-ஐக் கடந்த கொரோனா மரணங்கள்

    உலகம் முழுக்க பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் அதிக மரணங்களை எதிர்கொண்டிருக்கும் இரண்டாவது நாடாக இருக்கிறது பிரேசில்.ஆறு லட்சம் மரணங்களைக் கடந்து அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. ஐந்து லட்சம் மரணங்களோடு பிரேசில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் சுமார் 3.80 லட்சம் பேர் மரணித்து இருக்கிறார்கள்.பிரேசிலில் 15 சதவீத பெரியவர்களுக்கு மட்டுமே முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என ஃபியோக்ரஸ் என்கிற சுகாதார அமைப்பு கூறுகிறது.பிரேசிலில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதால், குளிர் காலத்தில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்.

  5. பிபிசி நேயர்களுக்கு வணக்கம்

    தமிழ்நாடு,இந்தியா,இலங்கைமற்றும்உலகஅளவிலானசெய்திகளைஇந்தப்பக்கத்தில்நேரலையாகவழங்குகிறோம்.தொடர்ந்து இணைந்திருங்கள்.