வண்டலூர் சிங்கங்களைத் தாக்கிய டெல்டா வைரஸ்! - ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் மீண்டு அதிகரிக்க தொடங்கியதால் ஜப்பானில் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒலிம்பிக் போட்டிக்காக அந்த அவசரநிலை வரும் ஞாயிறன்று திரும்பப் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. வண்டலூர் சிங்கங்களைத் தாக்கிய டெல்டா வைரஸ்! - ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல், விஜயானந்த், பிபிசி தமிழுக்காக

    சிங்கங்கள்

    பட மூலாதாரம், Getty Images

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களை தாக்கிய வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டது. விலங்குகள் மற்றும் பறவைகளின் பராமரிப்புக்காக ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதில் நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சிடைந்த பூங்கா நிர்வாகம், இதர சிங்கங்களை தனிமைப்படுத்தி தீவிரமாகக் கண்காணித்து வந்தது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களின் மாதிரிகளை இதர சிங்கங்களின் மாதிரிகளை உத்தரபிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (IVRI) அனுப்பியது. பெண் சிங்கம் உயிரிழந்த தகவலைக் கேள்விப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பூங்காவில் ஆய்வை மேற்கொண்டார்.

    மேலும், இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட பரிசோதனை முடிவில், சிங்கங்களை கேனைன் டிஸ்டம்பர் வைரஸ் (CDV) தொற்றும் பாதித்துள்ளது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2 தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக ஆண் சிங்கம் ஒன்று உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.இந்நிலையில், விலங்குகளின் உடலில் உருவாகும் புதிய நோய்க் கிருமிகளைப் பற்றி ஆராயும் போபாலில் உள்ள நிசாத் நிறுவனத்துக்கு பூங்கா நிர்வாகம் மாதிரிகளை அனுப்பியுள்ளது.

    இதுதொடர்பாக கிடைத்த தகவல்களை அறிஞர் அண்ணா உயிரியில் பூங்கா துணை இயக்குநர் நாக சதீஷ் கிடிஜாலா அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

    அதில், `சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த 24.5.2021 அன்று 4 சிங்கங்களும் 29.5.2021 அன்று 7 சிங்கங்கள் என மொத்தம் 11 சிங்கங்களின் மாதிரிகள் சார்ஸ் கோவிட் 2 (SARS COV-2) சோதனைக்காக தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் பகுப்பாய்வு நிறுவனத்துக்கு (ICAR) அனுப்பப்பட்டது.போபாலில் உள்ள NISHAD நிறுவனம், நம் நாட்டில் விலங்குகளில் புதிதாக உருவாக்கும் நோய்க் கிருமிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சார்ஸ் கோவிட் தொற்றுக்காக பூங்காவில் உள்ள விலங்குகளின் மாதிரிகளை பரிசோதிக்க நம் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 4 நிறுவனங்களில் இதுவும் ஒன்று.கடந்த 3.6.2021 அன்று நிசாத் நிறுவனம் தெரிவித்த அறிக்கையின்படி, 9 சிங்கங்களின் மாதிரிகளில் சார்ஸ் கோவிட் தொற்று உறுதியானதையடுத்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றன.இதனைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு தொற்று ஏற்படுத்திய சார்ஸ் கோவிட் வைரஸின் மரபணு வரிசைப்படுத்துதலின் முடிவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு உயிரியல் பூங்கா அதிகாரிகள் அந்நிறுவனத்திடம் கோரியிருந்தனர். இந்தநிலையில் ICAR-NISHAD நிறுவனத்தின் இயக்குநர் தற்போது முடிவை தெரிவித்துள்ளார்.அதில், `4 சிங்க மாதிரிகளின் மரபணு வரிசைப்படுத்தல் ஆய்வு போபாலில் உள்ள நிசாட் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டது. மரபணு வரிசைப்படுத்துதல் பகுப்பாய்வில் 4 சிங்கங்களின் மாதிரிகள் பாங்கோலின் பரம்பரை B.1.617.2 வகையைச் சேர்ந்தவை என்பதையும் அவை உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்திய டெல்டா வகையைச் சேர்ந்தது' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11.05.2021 அன்று உலக சுகாதார அமைப்பானது, B.1.617.2 மரபணு பரம்பரை வரிசைப்படுத்துதலில் இது மாறுபட்ட வகை எனக் கூறி வகைப்படுத்தியுள்ளது. இது வேகமாகப் பரவும் தன்மை கொண்டதோடு நடுநிலைத்தன்மைக்கு குறைவானது எனவும் தெரிவித்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

  2. யூ டியூப் மதன் கைது - என்ன சொல்கிறார்கள் உள்ளூர்வாசிகள், ஏ.எம். சுதாகர், பிபிசி தமிழுக்காக

    யூ டியூப் மதன் இன்று தர்மபுரியில் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் போலீசார் மதனை சேலம் தாதகாப்பட்டி ஸ்ரீரங்கன் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து வந்து விசாரிக்கப் போவதாக சேலத்தில்தகவல் பரவியது.

    இதை தொடர்ந்து சேலத்தில் உள்ள மதன் வீட்டு முன்பு சிறுவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் திரண்டனர். மதன் கைது தொடர்பாக நாம் உள்ளூர் மக்களிடம் பேசினோம்.

    அங்கிருந்த கல்லூரி மாணவன் ஐயப்பன் கூறுகையில், “மதன் மேலுள்ள பாசத்தால்தான் பப்ஜி கேம் விளையாட ஆரம்பித்தேன். நான் காலேஜ் படிக்கும் நிலையில் மனதளவில் சோர்வாக உணர்வேன். அப்போது அவருடைய வார்த்தைதான் எனக்கு புத்துரணர்வாக இருக்கும். நிறைய புத்திமதி சொல்வார். அதோடு அவர் நிறைய மாணவர்களுக்கு கல்லூரி படிப்புக்கான பணம் கட்டி உதவி செய்து இருக்கிறார். அரசாங்கத்திடமும், போலீசாரிடமும் ஒரு வேண்டுகோள்… மதனை விட்டு விடுங்கள் அவர் சேலத்தை சேர்ந்தவர் என்பதால் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அவருக்கு நாங்கள் கடைசிவரை ஆதரவு தருவோம். நாங்கள் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று கூட நினைத்தோம். ஆனால் கொரோனா காரணமாக அதைகைவிட்டு விட்டோம்” என்றார்.

    பின்னர் போலீசார் மதனை சேலம் அழைத்து வரவில்லை என்பதால் அனைவரும்கலைந்து சென்றனர்

    அப்போது பெற்றோர் சிலர் அங்கு வந்து மதன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    மதன் வீட்டின் அருகே குடியிருக்கும் விமலா என்பவரிடம் பேசினோம். “இந்தப் பசங்க நாலு மணி நேரம்5 மணி நேரம் ஏன் நாள் முழுவதுமே விளையாடுகிறார்கள். இங்கே உள்ளவர்கள் எப்போதாவது ஒரு முறை தான் மதனை பார்த்திருக்கிறார்கள். நான்கூட ஜனவரி மாதம் ஒரு முறை அவரை பார்த்து இருக்கிறேன். அந்தப் பெண்ணை மதனின் மனைவி என்கிறார்கள் காதலி என்கிறார்கள் தற்போது குழந்தை பிறந்திருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். அந்தபெண் எப்போதும் வீட்டுக்குள் தான் இருப்பார் கல்லூரிக்கு போவார் வருவார் மற்றபடி இருக்கிற இடமே தெரியாது. அந்த பெண் இப்படி செய்வார் என்று நாங்கள் நினைக்கவில்லை. அந்த கேமை தடை செய்தது போல யூடியூபில் உள்ள மதன் போட்ட அவ்வளவு வீடியோக்களையும் தடை செய்ய வேண்டும்” என்றார்

    ஐயப்பன்
    படக்குறிப்பு, ஐயப்பன்
    விமலா
    படக்குறிப்பு, விமலா
  3. தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் இன்று மேலும் 8,633 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஒரே நாளில் 287 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சென்னையில் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500க்கு கீழ் குறைந்து 492 ஆக உள்ளது.

    கோவையில் 1,089 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது

    தமிழகத்தில் மேலும் ஊரடங்கு தளர்த்தப்படுமா என்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

  4. ஜெகமே தந்திரம் - சினிமா விமர்சனம்

    "பேட்ட" படத்திற்குப் பிறகு தனுஷுடன் கார்த்திக் சுப்புராஜ் இணைகிறார் என்று அறிவிக்கப்பட்டபோது எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறியது. அந்த எதிர்பார்ப்பை 'ஜெகமே தந்திரம்' ஈடுசெய்கிறதா?

    ஜெகமே தந்திரம் - சினிமா விமர்சனம்

    பட மூலாதாரம், NETFLIX

  5. ‘பாபா கா தாபா’ கடை நடத்திய முதியவர் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதி

    முதியவர்

    பட மூலாதாரம், ANADOLU AGENCY

    டெல்லி மால்வியா நகரில் ‘பாபா கா தாபா’ கடை மூலம் பிரபலமான முதியவர் கன்டா பிரசாத், மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வியாழக்கிழமை இரவு அவர் டெல்லியின் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தென் டெல்லி டிசிபி அடுல் தாகூர் கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    “மயக்க நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். இது தொடர்பாக அவரது மகனிடம் விசாரிக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாக” அவர் தெரிவித்தார்.

    தூக்க மாத்திரையுடன் சேர்த்து கன்டா பிரசாத், மது அருந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இந்த முதியவர்களின் விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. கொரோனா ஊரடங்கால் தான் வாழ்வாதாரத்தை இழந்தது குறித்து அவர் படும் துன்பங்களை விவரித்திருந்தார்.

  6. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மருத்துவமனையில் சேரும் வாய்ப்பு குறைவு

    தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கொரோனாவால் மருத்துவமனையில் சேர்வதற்கான வாய்ப்பு 75 – 80 சதவீதம் குறைவாக இருப்பதாகவும், ஆக்சிஜன் தேவைப்படும் அளவு 8 சதவீதமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு 6 சதவீதமாக இருப்பதாகவும் நிதி ஆயோகின் சுகாதார உறுப்பினர் மருத்துவர் வி.கே பால் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் இதுவரை சுமார் 26 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. இன்னும் 3 நாளில் 20 லட்சம் டோஸ் தடுப்பூசி விநியோகம் - இந்திய அரசு

    இந்தியாவில் மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் இன்னும் 2.58 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதற்காக கையிருப்பில் இருப்பதாகவும், இன்னும் 3 நாள்களில் மேலும் 20 லட்சம் டோஸ் விநியோகம் செய்யப்படும் என்றும் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. சோனியாவுக்கு ஸ்டாலின் பரிசளித்த நூல் என்ன தெரியுமா?

    ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய நாகரிகத்தின் பயணம் - சிந்து முதல் வைகை வரை (Journey of Civilisation - Indus to Vaigai) என்ற நூலை தனது சந்திப்பின்போது சோனியா காந்திக்கு பரிசளித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்திய ஆட்சிப் பணி அலுவலராக ஒரிசாவில் பணியாற்றிய இந்த நூலின் ஆசிரியர் பாலகிருஷ்ணன், தமது தொல்லியல் ஆய்வுகளுக்குப் பெயர் பெற்றவர்.

    சோனியாவுக்கு புத்தகம் பரிசளித்த மு.க.ஸ்டாலின்
  9. சோனியா காந்தியை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்

    தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை டெல்லியில் இன்று சந்தித்தார்.

    இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ”வலுவான மற்றும் வளமான அரசை கட்டமைக்க திமுகவுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்,” என்று தெரிவித்திருந்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. கோவை சின்னாம்பதி பழங்குடி கிராமத்தை சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி சந்தியா கொரோனா காலத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகிறார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, "பப்ஜி" மதன் தனிப்படைக் காவல்துறையினரால் தர்மபுரியில் கைது

    தடைசெய்யப்பட்ட விளையாட்டை ஆபாச வர்ணனையுடன் யு டியூபில் நேரலை செய்த "பப்ஜி" மதன் தனிப்படையினரால் தருமபுரியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

    இந்தியாவில் தடைசெய்யப்பட்ட "பிளேயர்ஸ் அன்நோன் பேட்டில்கிரவுண்ட்" என்ற விளையாட்டை மிக ஆபாசமான வர்ணனையுடன் யு டியூபில் நேரலை செய்துவந்த புகாரில் பப்ஜி மதன் என்ற நபர் காவல்துறையினரால் தேடப்பட்டுவந்தார். அவருடைய மனைவி கிருத்திகா ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ளார்.மதன் மீது 159 புகார்கள் பதிவாகியுள்ளன. அதில் ஒரு புகாரின் பேரில் பெண்களை அபாசமாகப் பேசுதல், ஆபாசமாகத் திட்டுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், தடைசெய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.இதுதவிர, தன்னுடைய விளையாட்டை நேரலையாகப் பார்ப்பவர்களிடம் இருந்து பெரும் அளவில் பணம் வாங்கிய குற்றச்சாட்டுகளும் உள்ளன.

    மதன் எப்படிக் கைதுசெய்யப்பட்டார் என்ற விவரத்தை காவல்துறை இதுவரை வெளியிடவில்லை. அவர் விரைவில் சென்னை கொண்டுவரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

  12. “அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை, மோதல் என இரண்டுக்கும் தயாராக வேண்டும்” - கிம்

    kim

    பட மூலாதாரம், EPA

    அமெரிக்காவுடன் `பேச்சுவார்த்தை, மோதல்` என இரண்டுக்கும் தயாராக இருக்க வேண்டும் என வட கொரிய அதிபர் கிம் தெரிவித்துள்ளார். குறிப்பாக மோதலுக்கு அதிகம் தயாராக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னர் ராஜீய பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எடுத்த முயற்சிகளுக்கு அதிபர் கிம் செவி சாய்க்கவில்லை.

    வட கொரிய தலைநகர் பியாங்யாங்கில் மூத்த தலைவர்களுடனான சந்திப்பில்தான் கிம் இதனை தெரிவித்துள்ளார்.

    மேலும் ஜோ பைடனின் நிர்வாகம் குறித்து முதன்முறையாக கிம் இப்போது பேசியுள்ளார்.

    இந்த வாரம் தொடங்கிய ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டி சந்திப்பில் முதன்முறையாக நாட்டில் உணவுப் பற்றாக்குறை இருப்பதை கிம் ஒப்புக் கொண்டார்.

  13. ஒலிம்பிக் போட்டிகளுக்காக திரும்பப் பெறப்படும் அவசரநிலை

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஐந்து வாரங்களுக்கு முன்னதாக அவசர நிலை அறிவிப்பு திருப்பப் பெறப்படும்.

    ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் மீண்டு அதிகரிக்க தொடங்கியதால் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ மற்றும் பிற பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அவசரநிலை வரும் ஞாயிறன்று திரும்பப் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் ஜூலை 11ஆம் தேதிவரை சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் நிலவும். பெரிய நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுவர்.

    ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 24 தேதி தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவலை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இதன் விளைவாக ஜப்பான் பிரதமர், மக்களை தொலைக்காட்சியில் போட்டிகளை கண்டு களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சர்வதேச பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை.

    உள்ளூர் மக்கள் அனுமதிக்கப்படுவது குறித்தும் இன்னும் முடிவாகவில்லை.

  14. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!

    தமிழகம்,இந்தியா,இலங்கைமற்றும்உலகஅளவிலானசெய்திகளைநேரலையாகஇந்தபக்கத்தில்தொகுத்திவழங்குகிறோம்.தொடர்ந்து இணைந்திருங்கள்