நேயர்களுக்கு வணக்கம்,
இன்று காலை முதல் பல முக்கிய செய்திகளை இந்த பக்கத்தில் வழங்கியிருந்தோம். இத்துடன் இந்த நேரலை நிறைவடைகிறது. இணைந்ததற்கு நன்றி
தீ விபத்து ஏற்பட்டபோது 37 பேர் தொழிற்சாலையில் பணியில் இருந்தனர்.. இதுவரை 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உள்ளே சிக்கியுள்ளவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்.
இன்று காலை முதல் பல முக்கிய செய்திகளை இந்த பக்கத்தில் வழங்கியிருந்தோம். இத்துடன் இந்த நேரலை நிறைவடைகிறது. இணைந்ததற்கு நன்றி

பட மூலாதாரம், BBC Marathi
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது 37 பேர் தொழிற்சாலையில் பணியில் இருந்தனர்.. இதுவரை 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உள்ளே சிக்கியுள்ளவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்.
தொழிற்சாலையின் இருபக்கச் சுவரையும் உடைத்து அதிகாரிகள் உள்ளே நுழைந்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பிரதமர் நரேந்திர மோதி 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் குறைவானதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான தரவுகள் குறிப்பில், ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை புதிதாக 19448 ஆக பதிவானதாகவும் சென்னையில் 1,530 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கோவையில் அதிகபட்சமாக 2,564 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரத்து 26 ஆக உள்ளது என்றும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
அமெசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், தனது சகோதரருடன் வரும் ஜூலை மாதம் விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.
இவர், ப்ளூ ஆரிஜின் என்ற பெயரிலான ஒரு விண்வெளி நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார்.
மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.
இந்த நிறுவன தயாரிப்பான நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலனின் முதலாவது பயணத்தில்தான் தனது சகோதரர் மார்க்குடன் பயணம் செய்யவிருப்பதாக ஜெஃப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.
இவர்களின் பயணத்தின்போது மேலும் ஒருவர் இணையலாம் என்பதால் அந்த இருக்கைக்கான ஏலத்தை விட தொடங்கியிருக்கிறது ப்ளூ ஆரிஜின் நிறுவனம்.
இந்த ஏலம் வரும் 12ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்நிலையில், மூன்றாவது இருக்கைக்கான ஏலத்தை இவரது நிறுவனம் கேட்கத் தொடங்கியவுடனேயே அதற்கு 2.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என ஏலம் கேட்டிருக்கிறார் ஒருவர்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் முக்கியமானவர் ஜெஃப் பெசோஸ்.ஃபோர்ப்ஸ் பத்திரிகை தகவலின்படி இவரது சொத்த மதிப்பு 186.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
அமெசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக இரு வாரங்களுக்கு முன்புதான் ஜெஃப் பெசோஸ் அறிவித்தார். இந்த நிலையில், விண்வெளி பயணம் தொடர்பான அவரது அறிவிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
இந்தியாவில் ஜூன் 21 முதல் 18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி கொரோனா வைரஸ் பரவல் நிலவரம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் தமது சமூக ஊடக பக்கங்கள் வாயிலாக உரையாற்றினார்.
அதன் முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்: "18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்"

பட மூலாதாரம், INCOME TAX DEPT
இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் இனி புதிய இணையதள பக்கத்தில் வரி விவரங்களை சமர்ப்பிக்கும் வசதி திங்கட்கிழமை (ஜூன் 7) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய இணையதள பக்கத்தில் பயனர்களின் வசதிக்காக சில முக்கிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, http://www.incometaxindiaefiling.gov.in/ என்ற பழைய இணைய தள பக்கத்துக்கு பதிலாக புதிதாக http://www.incometaxgov.in/ என்ற இணையதள பக்கத்தை வருமான வரித்துறை உருவாக்கியிருக்கிறது.
இது தவிர செல்பேசி வாயிலாக வருமான வரி தாக்கல் செய்யும் வசதியையும் வரும் 18ஆம் தேதி வருமான வரித்துறை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
மேலும், வருமான வரி தாக்கலின்போது வரி செலுத்துவோருக்கு பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க வாடிக்கையாளர் சேவை மையமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், EPA
இன்டர்நெட் கிடையாது, சமூக வலைத்தளங்கள் இல்லை, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில தொலைக்காட்சிகளில் அரசு என்ன விரும்புகிறதோ அதை மட்டுமே பார்க்க முடியும்.
இப்படி எப்போதும் முழு முடக்கத்தில் இருப்பதைப் போன்ற நிலை எப்படியிருக்கும் என நினைத்துப் பாருங்கள். இப்போது அதிபர் கிம் ஜோங் உன் கட்டுப்பாடுகளை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறார்.
"பிற்போக்கு சிந்தனை" என்று அரசு கூறும் வெளிநாட்டு அடையாளங்களை முற்றாக அழிக்கும் வகையிலான கடுமையான சட்டத்தை கிம் ஜோங் உன் அறிமுகப்படுத்தியுள்ளார். தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் திரைப்படங்கள், நாடகங்கள் போன்றவற்றை யாராவது அதிக அளவில் வைத்திருந்தால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படும்.
அத்தகைய படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது பிடிபட்டால் 15 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும். இத்துடன் முடிந்துவிடவில்லை. அரசு ஊடகத்துக்கு கிம் ஜோங் உன் அண்மையில் கடிதம் ஒன்றை எழுதினார். இளைஞர்கள் மத்தியில் நிலவும் "விரும்பத்தகாத, தனித்துச் செயல்படுகிற, சோசலிச எதிர்ப்பு வழக்கங்களை" அழிக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், IPL Twitter
இந்திய ப்ரீமியர் லீக் போட்டிகளை வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடருவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து மீண்டும் தொடரும் போட்டியின் முதலாவது ஆட்டம் செப்டம்பர் 19ஆம் தேதியும் கடைசி போட்டி இந்தியாவில் தசரா பண்டிகை கொண்டாடப்படும் அக்டோபர் 15ஆம் தேதியும் நடைபெறும்.
புதிய போட்டி அட்டவணை தொடர்பான விவரங்களை நன்கு அறிந்த அதிகாரி ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், "பிசிசிஐ மற்றும் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேறம் காணப்பட்டுள்ளதால், துபை, ஷார்ஜா, அபு தாபி ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்படும் என்று பிசிசிஐ நம்புகிறது," என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் இந்தாண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 14674 மாணவர்கள் 2020-21ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு பாடத் திட்டத்தின் கீழ் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், தமிழக பாடத்திட்டத்தைப் பின்பற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் நலன் கருதி பொதுத்தேர்வு நடைபெறாது எனப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றுகிறார்.
பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில் அதுகுறித்த அறிவிப்பு எதையும் அவர் வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய பதிவுகளின்படி 1,00,636 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு ஒரு லட்சம் அளவுக்கு கொரோனா தொற்று குறைந்திருக்கிறது.
இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 23.28 கோடி. 36.63 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன.

பட மூலாதாரம், @ArvindKejriwal
வாக்களித்த இடத்திலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புதிய பரப்புரையை டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தொடங்கியிருக்கிறார்.
இதன்படி 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் எங்கு வாக்களித்தார்களோ அங்கேயே அவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டும். இந்த திட்டத்தின் அடிப்படையில் கூடிய விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
"பலர் இன்னும் தடுப்பூசி போடும் முகாம்களுக்கே வரவில்லை" என்று கூறிய கெஜ்ரிவால், அதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வரவேண்டிய நேரத்தை அவர்களிடம் வழங்குவார்கள் என்றார்.
தடுப்பூசி ஏன் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரைத்து, சம்மதிக்க வைப்பது தொடர்புடைய ஊழியரின் பொறுப்பாக இருக்கும் என்றும் கெஜ்ரிவால் கூறினார்.
டெல்லியின் 70 வார்டுகளில் இந்தத் திட்டம் தொடங்க இருக்கிறது.

பட மூலாதாரம், Reuters
பாகிஸ்தானில் இரு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 40-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தஹார்கி என்ற பகுதியில் சர் சையஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் மில்லட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் மோதிக்கொண்டன.
இன்று அதிகாலையில் விபத்து நடந்ததாகவும் ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மில்லட் எக்ஸ்பிரஸ் ரயில் கராச்சியில் இருந்து சர்கோதா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் ராவல்பிண்டியில் இருந்து கராச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
மில்லட் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் தரம்புரண்டு அருகேயுள்ள தண்டவாளத்தில் விழுந்து கிடந்ததாகவும், அந்த வழியாக வந்த சர் சையது எக்ஸ்பிரஸ் பெட்டிகள் மீது மோதியதாகவும் ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.
இந்த விபத்து தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சியைப் பதிவு செய்திருக்கும் பிரதமர் இம்ரான் கான், சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல அமைச்சருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் இம்ரான்கான் குறிப்பிட்டிருக்கிறார்.
விபத்து நடந்தபோது சையது அகமது எக்ஸ்பிரஸ் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்ததாக அதில் பயணம் செய்த அப்துல் ரகுமான் என்பவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.
விபத்து நடந்ததும் எங்கும் அழுகுரல்களும், கதறல்களும் கேட்டதாக அப்துல் ரகுமான் கூறியிருக்கிறார். சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அந்த வெளிச்சத்தில் காயமடைந்தவர்கள் மீட்டார்கள் என்று அவர் கூறுகிறார்.
கடந்த சில ஆண்டுகளில் பல ரயில் விபத்துகள் பாகிஸ்தானில் நடந்திருக்கின்றன. கடந்த மார்ச் மாதம் கராச்சி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
2019-ஆம் ஆண்டு நவம்பரில் டெஸ்காம் எக்ஸ்பிரஸில் ஏற்பட்ட தீவிபத்தில் 74 பேர் உயிரிழந்தனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், tnega
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் நடமாட்டத்துக்காக கட்டாயமாக்கப்பட்ட இ-பதிவு சேவை வழங்கும் இணையதளம் கடந்த 3 மணி நேரமாக முடங்கியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி காலை 6 மணி வரை பொது முடக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜூன் 14ஆம் தேதிவரை தமிழக அரசு நீட்டித்தது. இது தொடர்பான அரசு உத்தரவில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதால் குறிப்பிட்ட சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு ஏதுவாக, மக்களின் நடமாட்டம் தொடர்பான தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்ய கட்டாயமாக்கப்பட்டுள்ள இ-பதிவுக்கான இணைய பக்கத்தில் மேலும் சில தொழில்களில் ஈடுபடுவோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனால், மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்குள் பயணம் செய்யும் ஏராளமானோர் திங்கட்கிழமை காலை முதல் இ-பதிவு இன்டர்நெட் பக்கத்தில் விவரங்களை பதிவு செய்ய முற்பட்டதால் அந்த இணையதளம் காலை 10.15 மணி முதல் முடங்கியுள்ளது.
இதனால் பலரும் இ-பதிவு செய்ய முடியாமல் உள்ளனர். இதற்கிடையே, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், சென்னை நகர சாலைகளில் வாகனங்களின் நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளதன் அடையாளமாக மெட்ரோ ரயில் சேவை பயணிகள் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
டெல்லி மெட்ரோ ரயில் சேவை கடந்த மே 10ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதையடுத்து இன்று முதல் 50 சதவீத பயணிகளுடனும், 10 முதல் 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடைகள் திறக்கப்பட அனுமதிக்கப்பட்டாலும், அவற்றின் கதவு எண், ஒற்றை இலக்கத்தில் முடிந்தால் ஒற்றை இலக்க தேதிகளிலும் இரட்டை இலக்கத்தில் முடிந்தால், இரட்டை இலக்க தேதியிலும் திறக்க நகர அரசு அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லியில் சில தொழில் நடவடிக்கைகளை தொடங்க அனுமதி வழங்கியிருந்தாலும், அனைவரும் கொரோனா வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லியில் கொரோனா பாதிப்புகளின் அன்றாட எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆயிரத்தைக் கடந்த வேளையில், ஞாயிற்றுக்கிழமை புதிய பாதிப்பு எண்ணிக்கை 381 ஆக குறைந்திருக்கிறது. தொடர்ச்சியாக பாதிப்பு அளவு சரிந்து வருவதையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அரசு வழங்கியிருக்கிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2

பட மூலாதாரம், NARINDER NANU
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 1,00,636 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
1.74 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,89,09,975.குணமடைந்தவர்கள் 2,71,59,180.
இறப்பு எண்ணிக்கை 3,49,186. 14 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 23.28 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தஹார்கி என்ற பகுதியில் சர் சையஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் மில்லட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் மோதிக்கொண்டன.
இன்று அதிகாலையில் விபத்து நடந்ததாகவும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பெட்டிகளுக்கு இடையே சிக்கியிருப்பவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதாகவும், மீட்கப்பட்டவர்கள் அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.
மில்லட் எக்ஸ்பிரஸ் ரயில் கராச்சியில் இருந்து சர்கோதா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் ராவல்பிண்டியில் இருந்து கராச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து முதல்கட்ட தளர்வுகள் இன்று முதல் வழங்கப்படுகின்றன.
தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களைத் தவிர 27 மாவட்டங்களுக்கு இந்தத் தளர்வுகள் அளிக்கப்படுகின்றன.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று அதிகமாக இருப்பதால் அந்த மாவட்டங்களுக்கு பொதுமுடக்கத் தளர்வுகள் இல்லை.
தளர்வுகள் அளிக்கப்பட்ட மாவட்டங்களில் தனியாகச் செயல்படும் காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். மீன் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கூடங்களில் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்கலாம். டாக்சிக்களில் 3 பேர் பயணிக்கலாம், ஆட்டோக்களில் 2 பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 10-ஆம் தேதியில் இருந்து தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் இந்தப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.