You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

"தமிழை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்க திமுக பாடுபடும்" - முதல்வர் மு.க. ஸ்டாலின்

இந்த வன்முறைக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் சமீப காலமாக, குறிப்பாக எல்லைப் பகுதிகளில் இஸ்லாமிய குழுக்களின் தாக்குதல் அதிகமாகி வருகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு வணக்கம்!

    வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் இந்தப் பகத்தில் காணலாம்.

  2. நேயர்களுக்குவணக்கம்,

    இன்று காலை முதல் பல முக்கிய செய்திகளை இந்த பக்கத்தில் வழங்கியிருந்தோம். இத்துடன் இந்த நேரலை நிறைவடைகிறது. இணைந்ததற்கு நன்றி

  3. இளவரசர் ஹாரி மற்றும் மேகனுக்கு இரண்டாம் குழந்தை பிறந்துள்ளது

    சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹாரி மற்றும் அவரது மனைவியும் சீமாட்டியுமான மேகன் மார்க்கலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

    தாய் மற்றும் சேய் இருவரும் நலமாக இருப்பதாக இளவரசர் ஹாரி மற்றும் மேகன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பாரா மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

    குழந்தையின் புகைப்படத்தை இதுவரை வெளியிடவில்லை.

  4. பிளஸ் டூ தேர்வு ரத்து: மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்படும்?

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கருத்திற்கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை போன்று தமிழ்நாட்டிலும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது

    இந்நிலையில் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்?

  5. "தமிழை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்க திமுக பாடுபடும்"

    இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி - அலுவல் மொழியாக்கிட தி.மு.க. அரசு உறுதியுடன் பாடுபடும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  6. தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு - துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் நியமனம்

    தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பேராசிரியர் இராம. சீனிவாசன் நிரந்தர உறுப்பினராகவும், மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப், மருத்துவர் கு. சிவராமன், நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்படுவதாக தமிழ அரசு அறிவித்துள்ளது.

  7. ஃபேமிலி மேன் 2 சீரீஸ் திரையிடுவதை நிறுத்த வேண்டும் : சீமான் வலியுறுத்தல்

    ஃபேமிலி மேன் 2 சீரீஸ் ஒளிபரப்பை நிறுத்தவில்லை என்றால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ப்ரைம் வீடியோ உள்ளிட்ட அனைத்து அமேசான் சேவைகளையும் புறக்கணிப்போம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    அதில் ஈழ விடுதலை போராட்டம் தவறான முறையில் காட்டப்பட்டுள்ளதாகவும், தமிழர்கள் மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    12 கோடி தமிழ் தேசியவாதிகளை புண்படுத்தும் வகையில் இந்த சீரீஸ் எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  8. கொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா?, விஷ்ணுப்ரியா ராஜசேகர், பிபிசி தமிழ்

    கொரோனா தடுப்பூசி குறித்து நேயர்கள் பிபிசியின் சமூக வலைதள பக்கங்களில் கேட்ட கேள்விகளுக்கான நிபுணர்களின் பதில்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். இருபாகங்களாக வெளியாகும் தொகுப்பின் இரண்டாம் பாகம் இது.

    கேள்விகளுக்கான பதில்களை வழங்குகிறார் வேலூர் சிஎம்சியின் கிளினிக்கல் வைராலஜி துறையின் ஓய்வுப் பெற்ற பேராசிரியர் டி. ஜேகப் ஜான்.

  9. இந்தியா கொரோனா நிலவரம்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 14 ஆயிரத்து 460 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 2677 மரணங்கள் பதிவாகியுள்ளன. சுமார் 1,89,232 பேர் தொற்றில் இருந்து குணமாகி உள்ளனர்.

    இதுவரை இந்தியாவில் சுமார் 23 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

  10. புர்கினா ஃபசோ கிராமத்தில் நடந்த தாக்குதலில் 132 பேர் பலி

    ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபசோவின் வட பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 132க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    சமீப காலத்தில் நடந்த மோசமான தாக்குதல் இது என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பல வீடுகள் மற்றும் உள்ளூர் சந்தை எரிக்கப்பட்டது.

    இந்த வன்முறைக்கு எந்தக் குழுவும் பொறுப்பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் சமீப காலமாக, குறிப்பாக எல்லைப் பகுதிகளில் இஸ்லாமிய குழுக்களின் தாக்குதல் அதிகமாகி வருகிறது.

    இந்த சம்பவம் தன்னை சீற்றமடைய செய்துள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

  11. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!

    இன்று உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை இந்தப் பக்கத்தில் நேரலையாகத் தருகிறோம்.