கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு DRDO தயாரித்துள்ள மருந்து விலை பாக்கெட் ரூ.990

சமீத்தில் நடந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரிக்க ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்துள்ளன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு; தூக்க மாத்திரை சாப்பிட்ட பயிற்சியாளர்

    சென்னையில் தடகள பயிற்சியாளர் ஒருவர் தன்னிடம் பயிற்சிபெற வந்த வீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததால் அவர் மீது காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்தது. இதனால் அந்த நபர் தூக்க மாத்திரையை சாப்பிட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    சென்னையில் தனியார் பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் ஆசிரியர் ஒருவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில், வேறு சில பள்ளிகள், பயிற்சிக் கூடங்களில் இருந்து இதுபோன்ற பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த தடகளப் பயிற்சியாளர் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக தன்னிடம் பயிற்சிபெற வந்த சிறுமியை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிவந்த நிலையில், அந்தப் பெண் தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

    சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்படி, தற்போது 19 வயதாகும் இந்தப் பெண் 2013ஆம் ஆண்டில் நாகராஜன் என்பவரிடம் தடகள பயிற்சி பெறுவதற்காக இணைந்துள்ளார். இவர் மத்திய அரசின் ஜிஎஸ்டி துறையில் கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். பயிற்சி முடிந்த பிறகு பிற பெண்களை அனுப்பிவிட்டு, இவருக்கு பிசியோதெரபி தருவதாகக் கூறி வளாகத்தில் உள்ள தனியறைக்கு அழைத்துச் சென்று, பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். தன்னுடன் ஒத்துழைத்தால் போட்டிகளில் சிறப்பாக உயர்த்தி விடுவேன் என்றும் கூறியிருக்கிறார். இந்தப் பெண் மட்டுமல்லாது,வேறு சில பெண்களிடமும் இதேபோல அவர் நடந்துகொண்டதாக புகார் தெரிவித்த பெண் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

    இந்தப் பெண் இதற்கு மறுப்புத் தெரிவித்ததால், பயிற்சியை நிறுத்திய நாகராஜன் இதனை யாரிடமாவது சொன்னால் கொலைசெய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணின் பெற்றோர், அந்தப் பெண்ணை வேறு ஊருக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

    இப்போது அந்தப் பெண் பூக்கடை அனைத்து மகள் காவல் நிலையத்தில், நாகராஜன் மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது போக்சோ சட்டம், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

    இதனைக் கேள்விப்பட்ட நாகராஜன் தூக்க மாத்திரையைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். அவர் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இந்தப் பயிற்சியாளரால் வேறு யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் புகார் அளிக்கலாம் என காவல்துறை தெரிவித்திருக்கிறது.

  2. DRDO தயாரித்துள்ள கோவிட் மருந்து, விலை ரூ.990

    இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தயாரித்த கொரோனா வைரஸ் மருந்தான 2DG மருந்து ஒன்றின் விலை ரூ990/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய இந்த மருந்தை அவசரகால தேவைக்கு பயன்படுத்த இந்தியாவின் முதன்மை மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தது.

    2-டியாக்சி-டி-குளுக்கோஸ் என்று பெயரிப்பட்டுள்ள இந்த மருந்து, ஹைதராபாதில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒரு பிரிவும் இணைந்து உருவாக்கியதாகும்.

    இந்த மருந்தை கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து சோதனை செய்த போது, இதில் உள்ள மூலக்கூறு, அவர்கள் விரைவில் குணமடையவும், அவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்துவதற்கான தேவை குறையவும் பயன்படுகிறது என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

    இந்த மருந்தின் ஒரு பொட்டலம் விலை தற்போது ரூ990/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொடி வடிவில் வரும் இந்த மருந்தை நோய் தொற்று உள்ளவர்கள் தண்ணீரில் கலந்து குடிக்கவேண்டும்.

    இந்த மருந்து, அரசு மருத்துவமனைகள், மத்திய, மாநில அரசுகளுக்கு, தள்ளுபடி விலையில் அளிக்கப்படும் என்று பெயர் குறிப்பிடப்படாத அரசு அதிகாரிகள் தெரிவிப்பதாக ஏன்.என்.ஐ செய்தி முகமை கூறியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்கள் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக பெறுவதில் என்ன சிக்கல்?

    இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்துவது குறைந்து வருகிறது. சர்வதேச அளவிலான ஒப்பந்தத்தை நம்பி மாநிலங்கள் இருந்தாலும், அந்த நம்பிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது.

    18 வயதிற்கு மேலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதுடன், மாநில அரசுகள் தடுப்பூசிகளை தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய மாநிலங்கள், உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு உற்பத்தியாளர்களையும் அணுக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் இத்தகைய ஒப்பந்தங்கள் குறித்து பேசியதோடு, அவற்றை உருவாக்கவும் செய்தன என்றாலும், எந்த மாநிலத்தாலும் இதுவரை அதை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியவில்லை.

    பல சர்வதேச ஏலங்களுக்கு, மாநில அரசுகளுக்கு பதிலே கிடைக்கவில்லை. தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்துகளை மாநில அரசிடம் விற்பனை செய்ய முடியாது என்றும், மத்திய அரசுடன் மட்டுமே இது குறித்துப் பேச முடியும் என்றும் நேரடியாக கூறிவிட்டன.

    அதனால், தற்போது பல மாநிலங்களும், தடுப்பூசிகளுக்கான சர்வதேச ஏலத்தை மத்திய அரசு கொண்டுவந்து, மருந்துகளை வாங்கி, மாநிலங்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கேட்கின்றன. இந்த முயற்சியை மத்திய அரசு எடுக்குமா, எடுக்காதா என்பது தெளிவாக தெரியவில்லை. அதே நேரத்தில், மற்ற நாடுகளின் தேவையையும், தடுப்பூசி நிறுவனங்கள் பூர்த்தி செய்தாக வேண்டும். அப்படியென்றால், இந்த ஆண்டின் இறுதிக்குள் 218 கோடி தடுப்பூசிகள் தயாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறிய திட்டத்தை நிறைவேற்றுவது எப்படி? முழுமையாக படிக்க

    கொரோனா தடுப்பூசி

    பட மூலாதாரம், Getty Images

  4. பாலத்தீனத்திற்கு நிதி உதவி வழங்கும் சீனா

    பாலத்தீனத்திற்கான உடனடி உதவியாக பத்து லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்கவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

    மேலும் பாலத்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி முகமைக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்களையும், இரண்டு லட்சம் கோவிட் தடுப்பூசிகளையும் வழங்குவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. “கிராம புறங்களிலும் வேகமாக நோய் பரவி வருகிறது.” – எடப்பாடி பழனிசாமி

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி மருத்துவமனையில்இன்றுஆய்வு மேற்கொண்டார்.

    இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்துபேசிய அவர்,

    “சேலம் மாவட்டம் முழுவதும் மூச்சுத்திணறல் காரணமாக பலர் உயிரிழந்திருக்கின்றனர்.சேலம், ஆத்தூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ளICU-ஐசேர்த்துஅனைத்துஆக்ஸிஜன் படுக்கைகளும் நிரம்பிவிட்டன. எவரேனும் டிஸ்சாரஜ் ஆனால்தான் புதிதாக தொற்று ஏற்படுவோருக்கு படுக்கை கிடைக்கிறது.ஏற்கனவே எங்கள் ஆட்சியில் இருந்த படுக்கைகள் மட்டுமே தற்போது வரை உள்ளன.

    சேலம் மாவட்டம்முழுவதும்3800கோவிட் படுக்கைள் மட்டுமே உள்ள நிலையில்11,700கோவிட் படுக்கைகள் உள்ளதாக தவறான எண்ணிக்கையை கொடுக்கிறார்கள்.

    தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட 267பரிசோதனை மையங்கள் மட்டுமே தற்போது வரை உள்ளன. கூடுதலாக உருவாக்கப்படவில்லை. உடனடியாக பரிசோதனை மையங்களை அதிகரித்துRTPCRபரிசோதனைகளையும் அதிகரிக்க வேண்டும்.

    எந்தெந்த மருத்துவமனைகளில் படுக்ககள் காலியாக உள்ளது என்பதை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் . மேலும் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் தங்கு தடையின்றி வழங்க வேண்டும். இறப்பை குறைத்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

    இறப்பு விவரங்களை வெளிப்படைத்தன்மையோடு வெளியிட வேண்டும்.இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதோடு சடலங்கள் பல நேரம் காத்திருந்து அடக்கம் செய்ய வேண்டி உள்ள நிலையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊரடங்கு அறிவித்த பின்னர் மீண்டும் ஒரு ஊரடங்கு அறிவித்து அதற்கு முன்னர் தளர்வு கொடுத்ததால்6லட்சம் பேர் நகர் புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு வந்துள்ளனர். இவர்களை முறையாக கண்காணிக்கவில்லை .அதனால் கிராம புறங்களிலும் வேகமாகப் நோய் பரவி வருகிறது.

    அரசு விழிப்போடு இருந்து கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்தார்.

  6. மீண்டும் சிரியாவின் அதிபராகிறார் பஷார் அல் அசாத்

    சிரியாவின் அதிபர் தேர்தல் நான்காவது முறையாக வெற்றி பெற்று பஷார்அல்அசாத் மீண்டும் அந்நாட்டின் அதிபராகிறார்.

    பதிவான 78.6 சதவீத வாக்குகளில் அசாத் 95.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஹமூடாசபாக் நேரலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

    அசாத்தை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா சலோம் அப்துல்லா மற்றும் மகமோத்அகமத் மாரி ஆகிய இருவரும் முறையே 1.5% மற்றும் 3.3% வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

    அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இது நியாயமாக நடத்தப்பட்ட தேர்தல் இல்லை என்று தெரிவித்துள்ளன.

    ஆனால் வாக்களிக்க வந்த சிரியாவின் அதிபர் அசாத், மேற்கத்திய நாடுகளின் கூற்றை யாரும் கருத்தில் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

    கடந்த பத்து வருடங்களாக நடக்கும் உள்நாட்டு போரில் நிலைகுலைந்து நிற்கிறது சிரியா.

    ஜனநாயகத்துக்கு எதிரான அமைதியான போராட்டத்தை மோசமான படைகளை கொண்டு அதிபர் அசாத் ஒடுக்கியதற்கு எதிராக அங்கு போர் தொடங்கியது.

  7. சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதா? அமெரிக்க ஆய்வுக்கு சீனா எதிர்ப்பு

    கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலிருந்து உருவானதா என்பதை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது குறித்த புலானாய்வு அறிக்கையை வெளியிட முடியும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    ஆனால் இது அரசியல் ரீதியாக திரித்து கூறப்படுவதாகவும், சீனா மீது பழிபோடும் செயல் என்றும் கூறி சீன வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

    சீனாவின் வூஹான் மாகாணத்தில் உள்ள வைரஸ் ஆய்வகத்திற்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சீனா தெரிவித்துள்ளது.முழுமையாக படிக்க

    சீன ஆய்வகம்.

    பட மூலாதாரம், Getty Images

  8. இஸ்ரேல் - காசா வன்முறை பற்றி ஐ.நா. மனித உரிமை கவுன்சில் விசாரிக்கும்

    இஸ்ரேல் - காசா மோதல்.

    பட மூலாதாரம், Reuters

    இஸ்ரேல் - காசா இடையே சமீபத்தில் நடந்த மோதலில் நிகழ்ந்த வன்முறை குறித்து புலன்விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    இஸ்லாமிய நாடுகள் குழு ஒன்று கொண்டுவந்த இந்த தீர்மானம் 24 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றது.

    ஆனால், இந்தப் பகுதியில் அமைதியைக் கொண்டுவருவதற்கான முயற்சி முன்னேற்றமடைவதற்கு இந்த தீர்மானம் அச்சுறுத்தலாக இருக்கும் என்று அமெரிக்கா கருத்துத் தெரிவித்துள்ளது.

    11 நாள்கள் நடந்த இந்த மோதலில் பாலத்தீனர்கள் வாழும் காசாவில் 242 பேரும், இஸ்ரேலில் 13 பேரும் கொல்லப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை எகிப்து எடுத்த முன்முயற்சியால் இந்த மோதல் முடிவுக்கு வந்தது.

  9. நேயர்களுக்கு காலை வணக்கம்...!

    இன்றைய தமிழ்நாடு, இந்தியா தொடர்பான செய்திகளையும், உலகச் செய்திகளையும் இந்த நேரலைப் பக்கத்தில் தொடர்ந்து வழங்குகிறோம். நம்மைச் சுற்றியுள்ள உலகில் இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலைப் பக்கத்தில் இணைந்திருக்கும்படி நேயர்களை வேண்டுகிறோம். - பிபிசி தமிழ்