கொரோனா வைரஸ்: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 போட்டிகளின் புதிய தேதிகள் அறிவிப்பு

உலகை தொடர்ந்து அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால், உலக அளவில் இதுவரை 7,22,289 பேர் பாதிப்படைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், கொரோனா வைரஸ் தொற்றால் தற்போது வரை உலக அளவில் 34,005 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. எப்போது ஒலிம்பிக் போட்டிகள்?

    Olympic

    பட மூலாதாரம், Reuters

    ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 8ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு ஆகஸ்டு 25ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பார ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஆகஸ்டு 24ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெறும்.

    இந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு நடைபெறும் என்ற போதிலும் டோக்கியோ 2020 போட்டிகள் என்றே அழைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நவீனக்கால வரலாற்றில் கடந்த 124 வருடங்களில் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிப் போவது இதுவே முதன்முறை. இதற்கு முன்பு முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் சமயத்தில்தான் இந்த ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  2. தனிமையிலிருந்து வெளியே வந்த இளவரசர் சார்லஸ்

    Charles

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாகத் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த இளவரசர் சார்லஸ், தனிமைப்படுத்துதலை முடித்துக் கொண்டார்.

    கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு 71 வயது.

    இளவரசர் சார்லஸுக்கு கொரோனாவின் லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் மற்றபடி அவர் ஆரோக்கியமாகவே இருப்பதாகவும், சார்லஸின் செய்தித் தொடர்பாளர் அப்போது தெரிவித்து இருந்தார்.

    இதனை அடுத்து இளவரசர் சார்லஸ் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

    சீமாட்டி கமிலாவுக்கு கொரோனா தொற்று இல்லாத போதும் அவரும் சார்லஸுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

    அரசாங்கம் மற்றும் மருத்துவ அறிவுறுத்தலின்படி, இளவரசரும் சீமாட்டியும் ஸ்காட்லாண்டில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

    இப்படியான சூழலில் இளவரசர் சார்லஸைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நல்ல உடல் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டதிலிருந்து வெளியே வந்தார் சார்லஸ்

  3. கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?

    உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?

    பட மூலாதாரம், Getty Images

    உலகையே புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு மருத்துவமனைகளுக்கு தேவையான வென்டிலேட்டர்கள் எனப்படும் செயற்கை சுவாச கருவிகளை ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் அரசுகள் வாங்கி வருகின்றன.

    கோவிட்-19 நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை இந்த செயற்கை சுவாச கருவிகளே வழங்குகின்றன.

    விரிவாகப் படிக்க:

  4. கொரோமாவும் சமூக ஊடகமும் பின்னே சமுத்திர கனியும், #Pray_for_Nesamani போன்று ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Pray_for_Samuthirakani

    Samuthirakani Memes

    பட மூலாதாரம், Facebook

    ஃபேஸ்புக்கில் உள்ள Civil Engineers Learners என்ற பக்கத்தில், கடந்த வருடம் மே 27ஆம் தேதியன்று சுத்தியல் ஒன்றின் படத்தை வெளியிட்டு, இதை உங்கள் நாட்டில் எப்படி அழைப்பீர்கள் எனக் கேட்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தின் கீழ், துபாயில் வசிக்கும் தமிழரான விக்னேஷ் பிரபாகர் என்பவர், "இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம்.

    இதை எதன் மீதாவது அடித்தால் டங், டங் என சத்தம் வரும். ஜமீன் பங்களாவில் வேலை பார்க்கும்போது பெயிண்ட்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையை அவரது அண்ணன் மகன் இதை வைத்து உடைத்துவிட்டார். பாவம்." எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்தடுத்த கமென்ட்களில், நேசமணிக்காக பிரார்த்தனை செய்யவும் என்ற பொருளில், #Pray_for_Nesamani என்ற ஹாஷ்டாகையும் பயன்படுத்தியிருந்தார்.

    சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்த ஃப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் கட்டட வேலைகளைச் செய்யும் கான்ட்ராக்டராக வரும் வடிவேலுவின் தலையில் ரமேஷ் கண்ணா சுத்தியலைப்போடும் காட்சியையே விக்னேஷ் பிரபாகர் வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் படத்தில் வடிவேலுவின் பெயர் நேசமணி. ரமேஷ் கண்ணாவின் பெயர் கிருஷ்ணமூர்த்தி.

  5. பிரிட்டனில்படரும்அச்சம்-இதுதான்காரணம்

    பிரிட்டனில்உள்ளசிலஊழியர்கள்அங்குள்ளநிறுவனங்களில்சமூகவிலகல்மேற்கொள்ளப்படுவதில்லைஎன்அச்சம்கொள்கிறார்கள்.அதாவதுமக்கள்வரிசையில்நிற்கும்போதும்,பணியிடங்களிலும்குறைந்தபட்சம்2மீட்டர்கள்இடைவெளிவிட்டுத்தள்ளிஇருக்குமாறுவலியுறுத்தப்பட்டிருக்கிறது.

    ஆனால்,பலநிறுவனங்கள்இதனைக்கடைப்பிடிப்பதில்லைஎனஊழியர்கள்குற்றஞ்சாட்டுகிறார்கள்..

    ஏறத்தாழ1000ஊழியர்கள்பிபிசியிடம்இதனைத்தெரிவித்துள்ளனர்.

    நிறுவனங்கள்சட்டவிதிமுறைகளைப்பின்பற்றவில்லைஎன்றால்எங்களுக்குஉடனடியாகதகவல்தெரிவிக்கலாம்எனகிரேட்டர்மான்சிஸ்டரின்மேயர்அண்டிபுர்ஹாம்தெரிவித்துள்ளார்.

  6. கொரோனாவைரஸ்: கோவிட் - 19 பற்றிநமக்குதெரியாதவிஷயங்கள்என்ன?

    கொரோனாவைரஸ்: கோவிட் - 19 பற்றிநமக்குதெரியாதவிஷயங்கள்என்ன?

    பட மூலாதாரம், Getty images

    உலகம்முழுக்கஅறிவியலாளர்கள்வியக்கத்தக்கஅளவில்முயற்சிகள்மேற்கொண்டுள்ளபோதிலும், நாம்இன்னும்நிறையவிஷயங்களைப்புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. பலகேள்விகளுக்கானவிடைகளைக்கண்டறியும்முயற்சிகள்நடைபெற்றுக்கொண்டிருக்கும்நிலையில்நாம்இருக்கிறோம்.

    சிலமுக்கியமானகேள்விகள்இங்கேதரப்பட்டுள்ளன.

    விரிவாகப் படிக்க:

  7. தெற்காசியாவில் என்ன நிலை?

    கொரோனா வைரஸ் தொற்றால் தெற்காசியாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது.

    பாகிஸ்தானில் 1500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து அந்நாட்டின் முக்கிய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா தொற்றால் பாகிஸ்தானில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற போதிலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தார்.

    இலங்கையில் கொரோனா தொற்றால் கடந்த சனிக்கிழமையன்று முதல் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது அங்கு பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 113-ஆக உள்ளது. நாட்டின் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

    கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வங்கதேசத்தில் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும் என அந்நாட்டின் சாலைகளில் தாங்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப் போவதாக வங்கதேச ராணுவம் தெரிவித்துள்ளது.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  8. நைஜீரியாவின் முக்கிய நகரங்கள் இரண்டு வாரங்களுக்கு முடக்கம்

    லாகோஸ் மற்றும் அபுஜா உள்ளிட்ட நகரங்களை நைஜீரியா நாட்டு அதிபர் முஹம்மது புஹாரி, முழுமையாக முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது அறிவிக்கப்பட்ட தடை காலம் 14 நாட்களுக்கு மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    வர்த்தக இடங்கள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களையும் மூட வேண்டும், மருத்துவமனைகள் மற்றும் உணவு கடைகள் மட்டுமே இயங்கும் என்றும் புஹாரி கூறியுள்ளார்.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  9. சீனாவில் தொடர்ந்து சரியும் கொரோனா பரவல்

    தொடர்ந்து நான்காவது நாளாக சீனாவில் கொரோனா வைரஸால் புதியதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.

    இன்று (திங்கட்கிழமை) சீனாவில் புதியதாக 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளநிலையில், அவர்களில் 30 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்களாவர்.

    நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சீனாவில் புதிதாக 45 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகஅந்த நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்திருந்தது.

    மேலும், நான்கு பேர் இந்த நோய்த்தொற்றின் காரணமாக உயிரிழந்ததையும் சேர்த்து சீனாவில் இதுவரைமொத்தம் 3,304 பேர் கோவிட்-19 தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

  10. “பொருளாதாரத்துக்கு உயிர்நாடி அளிக்கப்படும்” - ஆஸ்திரேலிய பிரதமர் உறுதி

    இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 60 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் அடுத்த ஆறு மாதத்துக்கு அரசு 79 பில்லியன் டாலர்களை ஒதுக்குவதாக அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

    “கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு அரசு நேரடியாக பணம் வழங்கும். இதன் மூலம், வழக்கம்போல் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடமிருந்து பணியாளர்கள் ஊதியம் பெறுவது உறுதிசெய்யப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  11. பனாமா கால்வாயில் தத்தளிக்கும் பயணிகள் கப்பல்

    சுமார் 1,800க்கும் மேற்பட்டபயணிகளை கொண்ட ஜாண்டாம் என்னும் கப்பல், கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக பனாமா கால்வாயில் தத்தளித்து வருகிறது. அந்த கப்பலிலுள்ள சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அந்த கப்பலிலுள்ள பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    அர்ஜெண்டினாவிலிருந்துசிலிக்கு பயணத்தை தொடங்கிய ஒரு வாரத்தில், அதாவது கடந்த மார்ச் 14ஆம் தேதி இந்த கப்பலிலுள்ள பயணிகள் சிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து, தென் அமெரிக்காவில்உள்ள பல்வேறு துறைமுகங்களுக்கு இந்த கப்பலை உள்ளே அனுமதிப்பதற்கு மறுக்க தொடங்கியது. இருப்பினும், அந்த கப்பலில் இருந்த நோய்த்தாக்கம் ஏற்படாத பயணிகள் மற்றொரு கப்பலுக்கு மாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து, பிரதானகப்பலுக்கு கரீபியன் கடற்கரையை கடப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாலும், கடைசியில் அது சென்றடைவதாக திட்டமிடப்பட்ட துறைமுகத்தின் அனுமதியும் மறுக்கப்பட்டது.

    பெரும்பாலும் பிரிட்டன்மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் இருக்கும் அந்த கப்பலின் பயணிகள் தங்களுக்கு உதவ கோரி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Reuters

  12. உலக அளவில் பாதிப்புகள் - அண்மைய தகவல் என்ன?

    உலகை தொடர்ந்து அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால், உலக அளவில் இதுவரை 7,22,289 பேர் பாதிப்படைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், கொரோனா வைரஸ் தொற்றால் தற்போது வரை உலக அளவில் 34,005 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இத்தாலியில் தான் மிக அதிகமாக 10,779 பேர் இறந்துள்ளனர். ஸ்பெயினில் 6803 பேரும், சீனாவில் 3308 பேரும், இரானில் 2640 பேரும், பிரான்ஸில் 2611 பேரும் இறந்துள்ளனர்.

  13. பிபிசி தமிழின் நேரலை பக்கத்திற்கு வரவேற்கிறோம்

    பிபிசி தமிழின் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

    கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உலகளவில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம். இந்தியா மற்றும் தமிழகத்தின் சமீபத்திய நிலவரங்களும் இங்கே வழங்கப்படும்.

    கோப்புப்படம்
  14. டோக்கியோவில் தீவிரமாகும் கொரோனா பரவல்

    கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில்இருந்து அதிகபட்ச ஒரு நாள் நோய்த்தொற்று பாதிப்பை ஜப்பான் தலைநகர் டோக்கியோ பதிவு செய்துள்ளதாக அந்த நாட்டின் அரசு ஊடகமான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் டோக்கியோவில் 68 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    தற்போதைய நிலைமையை பொறுத்தவரை, ஜப்பானில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவை விட குறைந்த அளவிலேயே கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கும்போதிலும், இது வரும் காலங்களில் அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தில் அதிகாரிகள் உள்ளனர்.

    ஒட்டுமொத்தமாக ஜப்பானில்இதுவரை 1,800க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

    டோக்கியோ அருகே கடந்த மாதம்நிறுத்தப்பட்டிருந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 700க்கும் மேற்பட்டோர் மாற்றும் உயிரிழந்த பத்து பேர் இதில் சேர்க்கப்படவில்லை என்று என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images