நேயர்களுக்கு வணக்கம்!
இன்றைய நேரலை பக்கத்தில் எங்களுடன் இணைந்திருந்தமைக்கு நன்றி. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த முக்கியச் செய்திகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்:
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம், முக்கிய நிகழ்வுகள், வெற்றி பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள், அதிக இடங்களை பெற்ற கட்சி உள்ளிட்ட தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலாம்.
இன்றைய நேரலை பக்கத்தில் எங்களுடன் இணைந்திருந்தமைக்கு நன்றி. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த முக்கியச் செய்திகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்:
தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்துள்ள நிலையில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோதியை ஆதரித்து, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெருமளவில் வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.
“இந்த முறை தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், மக்களின் ஆதரவைப் பெற எங்களது பணியை இரட்டிப்பாக்குவோம்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையவிருப்பதில் பெருமகிழ்ச்சி என்று தெரிவித்துள்ள அவர், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழக அரசியலில் தவிர்க்கவியலாத சக்தியாகத் தொடர தமிழக மக்கள் பெரும் ஆதரவளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அனைத்து பாஜக தலைவர்கள் மட்டும் தொண்டர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
இந்திய அளவில் 290க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில் மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.
இது தொடர்பாக பிரதமர் மோதி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “இந்த வெற்றியை வழங்கியுள்ள மக்களுக்கு தலைவணங்குகிறேன். இந்த வெற்றியை சாத்தியப்படுத்துவதற்காக உழைத்த அனைத்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றி” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், ஒடிஸாவில் பாஜக வெற்றி அடைந்ததற்கும், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றதற்கும் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார் பிரதமர் மோதி.
பிரதமர் நரேந்திர மோதி உடனடியாக பதவி விலக வேண்டும் என, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
தற்போது வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களிலும் மற்ற கட்சிகள் 18 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, “பிரதமர் மோதிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். எனவே, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஏனெனில், இந்த முறை (தேர்தலில்) 400 இடங்களை தாண்டி வெற்றி பெறுவோம் என அவர் கூறியிருந்தார்” என்றார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகளை பிபிசி தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனல் மூலமாகத் தகவல்களைப் பெறஇங்கே கிளிக் செய்யவும்.
தேர்தல் முடிவுகள் மோதியின் தார்மீக மற்றும் அரசியல் ரீதியான தோல்வி என, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி தலைமையகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
காங்கிரஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இது மோதியின் தார்மீக மற்றும் அரசியல் ரீதியான தோல்வி. அரசு எந்திரம் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வந்தது. பல தலைவர்களுக்கு எதிராக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மேற்கொண்ட இத்தகைய பிரசாரம் நீண்ட காலத்திற்கு நினைவில் கொள்ளப்படும். மோதி பரப்பிய பொய்களை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்” என்றார்.
“மோதிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் மீது அவருடைய தாக்குதல் இருக்கும் என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர்” என்றார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகளை பிபிசி தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனல் மூலமாகத் தகவல்களைப் பெறஇங்கே கிளிக் செய்யவும்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி தலைமையகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, “அரசியலமைப்பு சட்டத்தைக் காப்பாற்றுவதே எங்களின் போராட்டமாக இருந்தது. மக்கள், கூட்டணி கட்சியினர், காங்கிரஸ் தலைவர்கள், கட்சி தொண்டர்கள் ஆகியோருக்கு மனதின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
மேலும், “பங்குச்சந்தையில் அதானி நிறுவன பங்குகளை நீங்கள் கவனிக்க வேண்டும். மோதியை மக்கள் அதானியுடன் நேரடியாக இணைத்துப் பார்க்கின்றனர். இருவருக்கும் ஊழல்களில் நேரடி உறவு உள்ளது. எங்களுக்கு நரேந்திர மோதி, அமித் ஷா வேண்டாம் என மக்கள் கூறுவதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன” என்றார்.
“இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளை நாங்கள் மதிக்கிறோம். அவர்களின் விருப்பங்களை நாங்களை கருத்தில் கொண்டோம். நாங்கள் ஒருங்கிணைந்து தேர்தலில் போட்டியிட்டோம்.
தொழிலாளர்கள், விவசாயிகள், தலித் மக்கள், பழங்குடியினர் இந்த நாட்டின் அரசியலமைப்பை காப்பாற்றியுள்ளனர்” என்றார் ராகுல் காந்தி.
மக்களவைத் தேர்தல் முடிவுகளை பிபிசி தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனல் மூலமாகத் தகவல்களைப் பெறஇங்கே கிளிக் செய்யவும்.
இந்தியாவிலேயே அதிக தேர்தல்களில் போட்டியிட்ட தமிழ்நாட்டை சேர்ந்த பத்மராஜன் இம்முறையும் தோல்வியை தழுவியுள்ளார்.
சேலம் மேட்டூரைச் சேர்ந்த கே.பத்மராஜன், 1988ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை 239 தேர்தல்களில் போட்டியிட்டு இந்தியாவில் அதிக தேர்தல்களில் போட்டியிட்டவர் என்ற சாதனையை படைத்தவர்.
பஞ்சாயத்து, சட்டமன்றம், நாடாளுமன்றம் தொடங்கி, குடியரசுத் தலைவர் தேர்தல் வரை 12 மாநிலங்களில் உள்ள பல்வேறு தொகுதிகளில் வேட்பாளராகக் களம் கண்டுள்ளார் பத்மராஜன். ஆனால், இதுவரை இதில் எந்தத் தேர்தலிலும் இவர் வெற்றி பெற்றதே இல்லை.
240வது தேர்தலாக தற்போது நடைபெற்ற 18வது மக்களவைத் தேர்தலிலும் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பத்மராஜன், இந்த முறையும் தோல்வியை தழுவியுள்ளார்.
மாலை 5 மணிநேர நிலவரப்படி அவர் மட்டுமே சுமார் 560 வாக்குகள் பெற்றுள்ளார்.
அந்த தொகுதியின் பிரதான வேட்பாளர்களான திமுகவைச் சேர்ந்த மணி 359,415 வாக்குகளும், பாமகவின் சௌமியா அன்புமணி 354,464 வாக்குகளும், அதிமுகவின் அசோகன் 240,101 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இந்த தொகுதியில் பதிவான நோட்டா வாக்குகளின் எண்ணிக்கை 7629 என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல் முடிவுகளை பிபிசி தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனல் மூலமாகத் தகவல்களைப் பெறஇங்கே கிளிக் செய்யவும்.
பல பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடகா மாநிலத்தின் ஹசன் தொகுதியில் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சி வேட்பாளரிடம் 43,738 வாக்குகள் வித்தியாசத்தில் ரேவண்ணா தோல்வியடைந்தார்.
முன்னாள் பிரதமர் தேவே கௌடவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பாக ஹசன் தொகுதியில் போட்டியிட்டார்.
இந்நிலையில், அவர் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.
ஏப்ரல் 28 அன்று, ரேவண்ணாவின் குடும்பத்திற்கு சமையல்காரராகப் பணிபுரிந்த 47 வயதான பெண் ஒருவர், பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தன்னை ரேவண்ணாவின் தாயின் உறவினர் என்று கூறிக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட மற்ற பெண்களின் வீடியோக்களை ஆன்லைனில் பார்த்த பிறகு தான் புகாரளிக்க முடிவு செய்ததாக அந்தப் பெண் கூறினார்.
மேலும், பிரஜ்வல் ரேவண்ணா தனது மகளையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா தங்களைப் பின்தொடர்ந்து, கிரிமினல் மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். இப்புகாரைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அவரை காவல்துறையினர் பல நாட்களாக தேடி வந்த நிலையில், மே 30 அன்று, ஜெர்மனியிலிருந்து கர்நாடகா திரும்பிய அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
மக்களவைத் தேர்தல் முடிவுகளை பிபிசி தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனல் மூலமாகத் தகவல்களைப் பெறஇங்கே கிளிக் செய்யவும்.
2024 மக்களவைத் தேர்தலில், காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் 2019 முதல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் 1,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
‘பொறியாளர் ரஷீத்’ என்று அழைக்கப்படும் ஷேக் அப்துல் ரஷீத், காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ‘ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியைச்’ சேர்ந்த முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை அவர் தோற்கடித்துள்ளார்.
"புறக்கணிக்க முடியாத ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய தருணம் இது என்று நான் நினைக்கிறேன். வடக்கு காஷ்மீரில் வெற்றி பெற்ற பொறியாளர் ரஷீத்துக்கு எனது வாழ்த்துகள்" என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் உமர் அப்துல்லா.
ஒரு தனித்துவமான தலைவர் என்று விவரிக்கப்படும் ரஷீத், அவரது சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துகளுக்காகவும் அறியப்படுகிறார்.
அவர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே அவரது மகன் தான் அவர் சார்பாக பிரசாரம் செய்தார். பிராந்தியத்தின் இளைஞர்களை ஒருங்கிணைத்து அவரது மகன் நடத்திய ரோட்ஷோக்கள் ஆயிரக்கணக்கான மக்களை ரஷீத்தின் பக்கம் ஈர்த்தது.
மக்களவைத் தேர்தல் முடிவுகளை பிபிசி தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனல் மூலமாகத் தகவல்களைப் பெறஇங்கே கிளிக் செய்யவும்.
பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி, கேரளாவின் திருச்சூர் தொகுதியில் சுமார் 75,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம், கேரள மாநிலத்தில் முதன்முறையாக மக்களவை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தை பொறுத்தவரையில், உள்ளாட்சி தேர்தல் துவங்கி மக்களவைத் தேர்தல் வரையிலும், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கடந்த முறை நடந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட பா.ஜ.க வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதுவரை உள்ளாட்சி, சட்டப்பேரவை தேர்தல்களில் சொற்ப அளவில் மட்டுமே பா.ஜ.க தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.
20 தொகுதிகளை கொண்ட கேரள மக்களவைத் தேர்தலில், சுதந்திரம் பெற்றது முதல் இதுவரையில் நடந்த எந்தவொரு மக்களவைத் தேர்தலிலும், பா.ஜ.க ஒரு இடத்தில் கூட வெற்றியை பெற முடியாத நிலையே நீடித்து வந்தது.
தற்போதைய மக்களவை தேர்தலை பொறுத்தவரையில், கடந்த ஜனவரி முதல் தேர்தல் வாக்குப்பதிவு வரையில், பிரதமர் நரேந்திர மோதி நான்கு முறை கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
பா.ஜ.கவில் உள்ள மலையாள திரையுலகின் பிரபல நடிகரான சுரேஷ் கோபிக்கு திருச்சூர் பகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
இன்று வாக்கு எண்ணிக்கையில் துவக்கத்தில் சில சுற்றுக்கள் முன்னிலையிலும் பின்பு பின்னடைவையும் சந்தித்த சுரேஷ் கோபி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுனில்குமாரை விட,சுமார் 75,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை திருச்சூர் பா.ஜ.க அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தொண்டர்கள் கொண்டாடினர்.
மக்களவைத் தேர்தல் முடிவுகளை பிபிசி தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனல் மூலமாகத் தகவல்களைப் பெறஇங்கே கிளிக் செய்யவும்.
ஓராண்டுக்கும் மேலாக பெரும்பான்மை மெய்தேய் இன மக்களுக்கும் சிறுபான்மை குக்கி இன மக்களுக்கும் இடையே வன்முறை நடைபெற்று வந்த மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இரு மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மெய்தேய் இனத்தைச் சேர்ந்த ஆண்கள், குக்கி இனத்தைச் சேர்ந்த இரு பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்ற வீடியோ வெளியானதை தொடர்ந்து, உலகம் முழுவதும் மணிப்பூர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.
இரு இனங்களுக்கிடையேயான வன்முறையை கட்டுப்படுத்த அம்மாநிலத்தை ஆளும் பாஜக தவறி விட்டதாகவும் பிரதமர் மோதி அங்கு நேரில் செல்லாததற்கும் காங்கிரஸ் தொடர்ச்சியாக பாஜகவை விமர்சித்து வந்தது.
மேலும், இந்தாண்டின் ஆரம்பத்தில் தன்னுடைய தேசிய அளவிலான ‘நியாய யாத்திரையை’ மணிப்பூரிலிருந்து ராகுல் காந்தி தொடங்கினார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகளை பிபிசி தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனல் மூலமாகத் தகவல்களைப் பெறஇங்கே கிளிக் செய்யவும்.
தமிழகத்தில் பாஜகவின் நம்பிக்கையாக கருதப்பட்ட அக்கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை 23,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
கோவை தொகுதியில் திமுகவின் சார்பில் போட்டியிட்ட கோவை முன்னாள் மேயர் பி. ராஜ்குமார் தற்போதுவரை 1,43,833 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். பாஜகவின் அண்ணாமலை 1,17,092 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட சிங்கை ராமச்சந்திரன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோவை தொகுதி அரசியல் களத்தில் மிகவும் கவனிக்கப்படும் தொகுதியாக உள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில், 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளதால், பாஜக தலைமையகம் வெறிச்சோடி காணப்பட்டது.
கர்நாடகா வாக்காளர்கள் 1984 மக்களவை தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த நிலையில், அதற்கு மூன்று மாதங்கள் கழித்து நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் ஜனதா கட்சியின் ராமகிருஷ்ண ஹெக்டேவை ஆட்சியமைக்க தேர்ந்தெடுத்தனர்.
மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமாரின் சகோதரர் டி.கே. சுரேஷ் பிரபல இருதய மருத்துவரான பாஜக வேட்பாளர் சி.என். மஞ்சுநாத்திடம் பின்னடவை சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அலுவலகமும் களையிழந்து காணப்பட்டது.
காங்கிரஸ் கட்சி குறைந்தது 15 தொகுதிகளில் வெற்றியை எதிர்பார்த்திருந்த நிலையில், பெங்களூரு ஊரக மக்களவை தொகுதியில் மஞ்சுநாத் முன்னிலை வகிப்பது, காங்கிரஸ் கட்சியின் மனச்சோர்வை பிரதிபலிப்பதாக உள்ளது.
கடந்தாண்டு மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க காரணமாக இருந்த ஐந்து வாக்குறுதிகளை செயல்படுத்தியதை முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொண்டதால் காங்கிரஸ் மிகுந்த நம்பிக்கையில் இருந்தது.
சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. பாஜக 63 தொகுதிகளை மட்டுமே பிடித்தது.
2019 மக்களவை தேர்தலில் 28 மக்களவை தொகுதிகளில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
தேசிய அளவில் தேர்தல் முடிவுகளின் போக்கு குறித்து பாஜக தலைமையகத்தில் உள்ள தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் ‘இந்தியா’ கூட்டணி மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் சுமார் 50 தொகுதிகளில் முன்னிலை வகிப்பது அவர்களை கவலையடையச் செய்துள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகளை பிபிசி தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனல் மூலமாகத் தகவல்களைப் பெறஇங்கே கிளிக் செய்யவும்.
தற்போதைய நரேந்திர மோதி அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ள ஸ்மிருதி இரானி, தான் போட்டியிட்ட உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் கட்சி மற்றும் காந்தி குடும்பத்தின் வலுவான தொகுதியாக அமேதி நீண்ட காலமாக கருதப்பட்டு வருகிறது.
2004-ம் ஆண்டு அரசியலில் நுழைந்த ராகுல் காந்தி அமேதி தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். ஆனால், 2019 மக்களவை தேர்தலில் ஸ்மிருதி இரானி அவரை 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை தோற்கடித்தார். இந்த முறை, அமேதி தொகுதியில் காந்தி குடும்பத்தின் விசுவாசியான கே.எல். ஷர்மாவை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியது.
தற்போதுவரை உள்ள நிலவரத்தின்படி, 50,700 வாக்குகள் வித்தியாசத்தில் கே.எல். ஷர்மாவை விட, ஸ்மிருதி இரானி பின்னடைவில் உள்ளார். இது பாஜகவுக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
உலகளவில் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்த, பெண்களுக்கு எதிரான பல்வேறு வன்முறை சம்பவங்களில் அமைதியாக இருந்ததாக ஸ்மிருதி இரானி மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பாஜக தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எழுந்த குற்றச்சாட்டு குறித்து ஸ்மிருதி இரானி கருத்து தெரிவிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது. ஆனால், பிரிஜ் பூஷன் இக்குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகளை பிபிசி தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனல் மூலமாகத் தகவல்களைப் பெறஇங்கே கிளிக் செய்யவும்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியில் 1.91 லட்சம் வாக்குகளுடன் நோட்டா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்ஷய் காந்தி பாம், தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்தார். இதனால், அத்தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் யாரும் போட்டியிடாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இந்தூர் தொகுதியில் மக்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிரசாரம் செய்தன.
இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், தேர்தல் ஆணையத்தின் இணையதள தகவலின்படி, இந்தூர் மக்களவைத் தொகுதியில் நோட்டா 1,91,317 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி சுமார் 10,76,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதனால் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.
தேர்தல் ஆணைய இணையதள தகவல்களின் அடிப்படையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அதன்படி, தாரகை கத்பட் 13,155 வாக்குகளையும் பாஜக வேட்பாளர் நந்தினி 5,066 வாக்குகளையும் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ராணி 941 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகளை பிபிசி தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனல் மூலமாகத் தகவல்களைப் பெறஇங்கே கிளிக் செய்யவும்.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் விஜய பிரபாகரன் முன்னிலையில் உள்ளார். பாஜக கூட்டணியில் தருமபுரி தொகுதியில் பாமக சார்பாக போட்டியிட்ட சௌமியா அன்புமணி முன்னிலையில் உள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பலமுறை பிரதமர் மோதி தமிழ்நாட்டில் தொடர் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையிலும் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. பாஜக சார்பில் பல நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்ட நிலையில், அனைத்து தொகுதிகளிலும் அவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தென்சென்னையில் தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நீலகிரியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கோவை தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விருதுநகர் தொகுதியில் ராதிகா என நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கினாலும் அவர்கள் பின்னடைவில் உள்ளனர்.
இதனால், சென்னை தியகாராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயம் தொண்டர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மக்களவைத் தேர்தல் முடிவுகளை பிபிசி தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனல் மூலமாகத் தகவல்களைப் பெறஇங்கே கிளிக் செய்யவும்.
சீக்கியர்களுக்கு தனிநாடு வேண்டும் என வலியுறுத்தி, இந்திய அதிகாரிகளை கொந்தளிக்க வைத்த அம்ரித்பால் சிங், பஞ்சாப் மாநிலத்தின் காதூர் சாஹிப் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
கடந்த 2023, ஏப்ரல் மாதம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர், தற்போது அசாம் மாநிலத்தில் தீவிர பாதுகாப்புடன் கூடிய திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சட்டத்தின் கீழ் ஒருவரை குற்றச்சாட்டு இல்லாமலேயே ஓராண்டு வரை சிறையில் அடைக்க முடியும்.
இவர் காதூர் சாஹிப் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.
பிப்ரவரி, 2023-ல் அவருடைய நெருங்கிய உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, நூற்றுக்கணக்கான தன் ஆதரவாளர்களுடன் அம்ரித்பால் சிங் காவல் நிலையத்தில் திரண்டதையடுத்து அவர் பலராலும் அறியப்பட்டார். ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த அவரை கடந்தாண்டு ஏப்ரல் மாதம் காவல்துறையினர் கைது செய்தனர்.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிஷா மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
ஆந்திராவில் மொத்தம் 175 தொகுதிகள் உள்ளன. இதில், தெலுங்கு தேசம் கட்சி 128 தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. தெலுங்குதேசத்தின் கூட்டணி கட்சியான ஜனசேனா 20 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 7 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
முக்கிய வேட்பாளர்களான தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தான் போட்டியிட்ட குப்பம் தொகுதியில் முன்னிலையில் உள்ளார். ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
ஒடிஷாவில் மொத்தம் 147 தொகுதிகள் உள்ளன. இதில், பாஜக 56 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் பிஜு ஜனதா தளம் 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் 7 இடங்களிலும் மற்றவை இரண்டு இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் முன்னிலையில் உள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, விஜய பிரபாகரன் இதுவரை 64,332 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 59,498 வாக்குகள் பெற்றுள்ளார். 4,834 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய பிரபாகரன் முன்னிலையில் உள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் தற்போது மூன்றாம் இடத்தில் உள்ளார்.