"ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு வர அரசாங்கம் மறுக்கிறது"

பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டின் அரசு பேருந்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பில் ஞாயிறன்று ஆரம்பித்திருந்த வேலைநிறுத்தம் திங்களன்றும் நீடிக்க தமிழகத்தில் பரவாலாகவும் குறிப்பாக சென்னையிலும் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

ஆளும் அதிமுக கட்சியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கப் பேரவை தவிர மற்ற எதிர்க்கட்சிகள் சார்பான 11 தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதன் காரணங்கள் குறித்து திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலர் மு.சண்முகம் தெரிவிக்கும் கருத்துகள்.