You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆட்டிசத்தால் பேச இயலா குழந்தைகளுக்காக இலவச செயலியை உருவாக்கிய பெண் எழுத்தாளர்
இந்தியாவில் 125 சிறாரில் ஒருவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சென்னையை சேர்ந்த எழுந்தாளரான லக்ஷ்மி பாலகிருஷ்ணன், தனது குழந்தை மட்டுமல்லாது பிற குழந்தைகளுக்கு உதவும் வகையில் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இவர்களில் பேசக்கூடிய குழந்தைகள், பேச இயலாத குழந்தைகள் என இருவகை உண்டு. ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் இந்த செயலியின் மூலம் தங்களின் தேவைகளை அருகில் இருப்பவர்களுக்கு புரிய வைக்க முடியும்.
இந்த செயலியின் உதவியுடன் அவர்களின் கற்றல் திறன், பேசுவதற்கான உந்துதல் ஏற்படும் என்று கூறுகிறார், இந்த செயலியை உருவாக்கிய லக்ஷ்மி பாலகிருஷ்ணன்.
தயாரிப்பு : ஹேமா ராகேஷ்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு : ஜனார்த்தனன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்