ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி: மகனின் சிகிச்சைக்கு ரூ.17.5 கோடி நிதி திரட்டும் பெற்றோர்

பிரசுரிக்கப்பட்டது

அமித் மற்றும் கரிமா தம்பதிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தங்கள் முதல் குழந்தையின் முதல் பிறந்தநாளை அவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் இந்தப் பெற்றோர் முழு மகிழ்ச்சியில் இல்லை. ஏனெனில், கனவ் ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி நோயால் அவதிப்படுகிறார்.

சுருக்கமாக எஸ்எம்ஏ என அழைக்கப்படும் ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி ஒரு மரபணு நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தசைகள் பலவீனமாக இருக்கும். இந்த நோய்க்கான சிகிச்சைக்கு ரூ.17.5 கோடி தேவைப்படும் நிலையில், பொதுமக்களிடம் அந்த நிதியைத் திரட்டிவருகிறது அமித்-கரிமா தம்பதி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: