You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாக்க வந்த நபரை தைரியத்துடன் சோர்வடையும் வரை திருப்பி தாக்கிய பெண் பாடிபில்டர்
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள ஜிம் ஒன்றில் தன்னைத் தாக்கிய நபரை தைரியத்துடன் கடுமையாக எதிர்த்து சண்டையிடுகிறார் நஷாலி என்ற 24 வயதான இந்தப் பெண்.
தனது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஜிம்மில் நஷாலி உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த நிலையில், அந்த நபர் உள்ளே வந்தார். அவரும் உடற்பயிற்சி செய்ய வருவதாக நஷாலி நினைத்திருக்கிறார்.
ஆனால், அந்த நபர் திடீரென நஷாலியை தாக்க ஆரம்பித்தார். உதவிக்கு யாரையும் அழைப்பதற்குள் அந்த நபர் கடுமையாகத் தாக்கவே, அவரை எதிர்த்து தைரியத்துடன் நஷாலி சண்டையிட்டு அவரிடமிருந்து தப்பித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்