துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் 33,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட மோசமான நிலநடுக்கங்களால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புப் பணியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இரு நாடுகளிலும் சேர்த்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,000க்கும் மேல் உயர்ந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்கும் வாய்ப்புகள் சுருங்கிக்கொண்டே இருக்கும் நிலையில், இரு நாடுகளிலும் 33,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது. 1939ஆம் ஆண்டுக்குப் பிறகு துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்