You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆந்திராவில் அதிசய கிராமம்: மின்சாரம், இணையம் அனைத்தையும் துறந்து வாழும் இந்த மக்களின் கதை தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது
இந்த கிராமத்தில் இணைய வசதி இல்லை. மொபைல் ஃபோன்களோ அல்லது தொலைக்காட்சியோ கூட இல்லை. அவ்வளவு ஏன் அங்கு மின்சாரமே கிடையாது. ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகாகுலம் மாவட்டத்தில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துள்ளது இந்த கூர்ம கிராமம்.
இங்கு 50 மண் வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்கள் இரும்பு மற்றும் சிமெண்டிற்கு பதிலாக மண்ணையும் சுண்ணாம்பையும் கொண்டு வீடு கட்டுகிறார்கள்.
காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை பயிரிடும் இவர்கள், கால்நடை மேய்ச்சலிலும் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கான கிணற்றிலிருந்து நீரை எடுத்து பயன்படுத்துகின்றனர். அவர்களின் துணிகளை அவர்களே தைத்துக் கொள்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: