You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"தப்பு செஞ்சா முகத்தை காட்டுவாங்களா?" - கோவை சம்பவத்தில் கைதானவர்களின் குடும்பங்கள்
ஜமேஷா முபினின் வீட்டில் உள்ள சிலிண்டர் மற்றும் சில பொருட்களை காரில் ஏற்ற உதவியதாக கூறப்படுவோரில் இஸ்மாயில் சகோதர்கள் முக்கியமானவர்கள் என்று காவல்துறை தரப்பு கூறுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் தமது பிள்ளைகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என்கிறார் அவர்களின் தாயாரான மைமூன் பேகம்.
""என்னுடைய கடைசி பையனுக்கு பள்ளி புத்தகம் வாங்குவது தொடர்பாக ஜமேஷா முபினுடன் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. வீட்டை காலி செய்ய வேண்டும் என்று முபின் சொன்னதால் என் பிள்ளைகளை உதவிக்காக அனுப்பி வைத்தேன்," என்று மைமூன் கூறினார்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான ஆறு பேரின் குடும்பங்கள் தங்களுடைய உறவுகளுக்கும் உயிரிழந்த ஜமேஷா முபினுக்கும் இடையிலான உறவு குறித்து பிபிசி தமிழுக்கு பேட்டியளித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்