சென்னையில் கனமழை: இன்னொரு வெள்ளத்தை தலைநகர் தாங்கத் தயாராக உள்ளதா?

காணொளிக் குறிப்பு, சென்னையில் கனமழை: இன்னொரு வெள்ளத்தை தலைநகர் தாங்கத் தயாராக உள்ளதா?
பிரசுரிக்கப்பட்டது

கடந்த மே மாதம், தமிழ்நாடு நீர்வளத் துறைக்கு சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சுமார் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, நகரமெங்கும் மழைநீர் வடிகால் திட்டத்தைச் செயல்படுத்துவதில் நகராட்சி அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால், அதுவே சென்னை வெள்ளத்தைத் தாங்குவதற்குப் போதுமானதா? தமிழக தலைநகர் காலநிலை பாதிப்புகளைச் சமாளிப்பதில் திணறுவது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: