டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் தீ
பிரசுரிக்கப்பட்டது
டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு நேற்றிரவு புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் இன்ஜின் கோளாறால் தீப்பொறி கிளம்பிய நிலையில் உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
டேக் ஆஃப் ஆவதற்காக விமானம் ஓடு பாதையில் இயங்கியபோது, இந்த பிரச்னை கண்டறியப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் தீப்பொறிகள் ஏற்படும் காட்சியைப் பயணி ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டதாக இண்டிகொ விமான நிறுவனம் தெவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்